"மனவளக்கலை" வெறும் யோகம் மட்டும் இல்லை. "மனம் என்றால் என்ன?", மனத்தின் மகத்துவம் என்ன? மனமாக இருப்பது எது? எனத் தெரிந்து கொள்கிறோம். நாம் வாழ்ந்து வரும் மனித சமுதாயத்தைப் பற்றியும், அதற்கு நாம் ஒவ்வொருவரும் ஆற்ற வேண்டிய ...கடமைகளைப் பற்றியும் தேவையான அறிவினைப் பெற்றுக் கொள்கிறோம். நாம் எதனுடைய ஓர் அங்கமாக இருக்கிறோமோ அந்த இயற்கையைப் பற்றிய தெளிவான விளக்கங்களைப் பெற்றுக் கொள்கிறோம். இயற்கையோ மாற்றப்பட முடியாதது. அதனை மனம் அறிந்து மதிக்கும் அளவில்தான் மனதிற்கு உயர்வு கிடைக்கும். மனம், உயிர், மெய்(Truth) என்ற மூன்று மறைபொருட்களைப் பற்றி தெளிவாக தெரிந்துகொள்கிறோம். இது போதனை முறை மாத்திரம் அல்ல. இது மனதை பண்படுத்தி பக்குவப்படுத்தும் "சாதனை" முறை. தனி மனிதன் இந்த ஆன்மீக நெறியில் பக்குவப்பட்டு பண்பட்டுவிட்டால், அது குடும்ப வாழ்வை வளப்படுத்தும். நல்ல குழந்தைகள் உற்பத்தியாகும். வளரும் சமுதாயம் வளமும் அமைதியும் பெரும். உலகமும் நலமுறும்.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக