வயிறானது எப்பொழுதுமே நிறைந்திருக்க வேண்டுமென்பது தவறான எண்ணம். இந்தப் பழக்கத்தினால் என்ன ஆகும் என்றால் உணவு கொஞ்சம் குறைந்து விட்டால் எதையோ இழந்து விட்டது மாதிரி இருக்கும். அதைப் போட்டு நிரப்பி விட்டுத் தவிக்கிற வரைக்கும் மனதுக்...குத் திருப்தி இருக்காது.
உணவிற்கு முன் ஒரு மணி நேரப் பசி வேண்டும். அந்த ஒரு மணி நேரத்தில் உணவில் இருந்து ஜீவகாந்த சக்தியை இழுக்க முடியவில்லை என்றால் உடல் தானாகவே மற்ற மூலங்களிலிருந்து (காற்று, பூமியின் கதிரியக்கம், கோள்களின் அலைவீச்சு) ஆற்றலை எடுத்துக் கொள்ள முடியும். அப்பொழுது தான் அறிவுக்கு விருந்தாக, சிந்தனைக்கு ஏற்ற விருந்தாக நல்ல சக்தி நமக்குக் கிடைக்கும்.
வயிற்றை மட்டும் நாம் நிரப்பிக் கொண்டிருந்தால் உலக விவகாரங்களில் உழல்கிறது என்ற வரைக்கும் தான் வரும். அதற்கு மேலே சிந்தனை ஆற்றல் நமக்குப் பெருகுவது சிரமம்.
- அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி -
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக