பெரியவர்கள், அறிவில் தெளிந்தவர்கள் சொற்படி அவர்கள் வழியில் செயல் புரிந்து தன்னை ஆன்மீக வாழ்வுக்குத் தகுதியாக்கிக் கொள்ளும் பகுதி "பக்தியோகம்", தனக்கு எல்லா வசதிகளையும் அளித்துக் காக்கும் சமுதாயத்திற்குத் தன் கடனாற்ற, அறிவாலோ உடலாலோ உழைப்பது "கர்மயோகமாகும்". புலன் மயக்க நிலையிலிருந்து தெளிந்து புலன்களை அடக்கி ஆளும் ஆட்சி வல்லமை பெற "மனவளக்கலை" குண்டலினி...யோகம் பயிலும் பிரிவு "ராஜயோகம்". முற்றும் உணர்ந்த பின் ஒரு சிறு குடும்பத்திற்குத் தன் கடமையை ஆற்றுவதற்குப் பதிலாக உலக சமுதாயத்தையே ஒரு குடும்பமாகக் கொண்டு கடமையாற்றி வாழும் பெரும் பேறு "ஞானயோகம்" ஆகும்.
இவற்றை சுருக்கமாகக் "கர்மயோகம், ஞானயோகம்" என்று இரண்டாகப் பிரித்துக் கொள்ளலாம். கர்மயோகத்திற்கு ஒரு உதவி நிலை அல்லது தயாரிப்பு நிலை பக்தியோகம். ஞான யோகத்திற்குத் தயாரிப்பு நிலை ராஜயோகம். "கர்மயோகத்தால்" தான் பொருள்வளம் காக்க முடியும். "இராஜயோகத்தால்" தான் "மெய்யறிவு" பெற முடியும்.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக