Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

வியாழன், 23 மே, 2013

உலக அமைதி :



1) ஒரு நாட்டுக்கு நாடு அரசியல் முறை வேறுபட்டிருக்கும் வரைக்கும்;


2) இயற்கையின் மூலதனமான பூமியைத் தனி மனிதனோ அல்லது குழுவினரோ தங்களுக்குச் சொந்தம் என்று எல்லைக் கட்டிக் கொண்டிருக்கும் வரைக்கும்;

3) ஒரு மனிதன் முயற்சியினால் விளைவிக்கும் எந்தப் பொருள் எனினும் அது அவனுக்கோ, அவனுடைய வாரிசுகள் எனப்பட்ட குறிப்பிட்ட நபர்களுக்கோ தான் உரிமையானது என்ற கற்பனை முறை நீடித்திருக்கும் வரைக்கும்;

4) குழந்தை வளர்ப்பு, முதியோர் பராமரிப்பு, என்ற இருவகையும் பெற்றோர்கள் மக்கள் இவர்கள் பொறுப்பிலிருந்து விடுபட்டுச் சமுதாயப் பொதுவாக நடைபெறும் காலம் வரைக்கும்;

5) வாலிபப் பருவமும், உடல் வலிவும் உடைய அனைவருக்கும் அறிவிற்கும் உடலுக்கும் தகுந்தபடி ஆக்கத் தொழில் புரியும் வாய்ப்பு சமுதாயத்தில் கிடைக்கும் ஒரு அமைப்பு ஏற்படும் வரைக்கும்;

6) உலகில் ஒரு மனிதனேனும் உணவு கிடைக்கவில்லை என்ற காரணத்தால் பட்டினி கிடக்க நேரிடும் முறையில் நிர்வாகம் நடைபெறும் வரைக்கும்;

7) உணவிற்காக வேறு ஒரு ஜீவனைக் கொல்லும் பழக்கமும் அவசியமும் மனிதனுக்கு இருக்கும் வரைக்கும்.

உலக மக்கள் வாழ்வில் நிரந்தரமாக அமைதி என்பது ஏற்பட முடியுமா?

* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
.
"வாழ்நாள் முழுதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமானால்
நேர்மையை மட்டும் பின்பற்று".
.
"ஆறாவது அறிவின் கூர்மை தான் சிந்தனை,
சிந்தனை தான் அறியாமையை அகற்றி
அறிவை முழுமையாக்க வல்லது".
.
"தனி மனிதனால் சமுதாயமும் சமுதாயத்தினால்
தனி மனிதனும் ஆக்கவும் காக்கவும் படுகிறார்கள்".
.
இலட்சிய வாழ்வை அடைய முயலுவோம் :-
"உலக சமாதானம் என்ற எல்லை தன்னை,
ஒவ்வொருவருக்கும் இப்போ காட்டிவிட்டேன்;
நில உலகில் இன்றைய வாழ்க்கை முறைக்கும்
நினைவாக உள்ள அந்த உலகத்திற்கும்,
பலவாறு எண்ணிறந்த பேதமுண்டு.
படிப்படியாய் அவை குறைய திட்டமிட்டு,
கலகமெழும் சூழ்நிலைகள் அனைத்தும் மாற்றும்,
கருத்துடனும், கொள்கையோடும், இனி நாம் வாழ்வோம்."
.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
 
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக