Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

வியாழன், 9 ஜனவரி, 2014

எண்ணம் தோன்றும் விதம் :




எண்ணம் இல்லாத மனிதனே இல்லை . ஏதேனும் எண்ணம் மனதில் தோன்றிய வண்ணம் உள்ளது.எண்ணம் எழுவதை அறிந்திருந்த போதிலும், ஏன் எழுகிறது? எண்ணத்தின் பிறப்பிடம் எது?
எண்ணத்தின் விளைவு யாது? அதன் முடிவு என்ன? என்பனவற்றை அறிந்தவர் இல்லை .
...
மனிதனிடம் நீண்ட காலமாக பல குணங்கள், பல எழுச்சிகள் எல்லாம் உண்டாகிப் பழக்கம் ஆகிவிட்டன. உயிர்ச்சுழலிலிந்து அந்த அழுத்தம் வெளியாகிக் கொண்டே இருக்கிறது . அவ்வாறு வெளியாகும் போது அந்த உயிர்ச்சக்தியில் பதிவாகி இருக்கிறதோ அப்பதிவுகள் எண்ணங்களாக வெளியே வந்து கொண்டு தான் இருக்கும். ஏற்கனவே பதிவாகிய குணம், தன்மை ஆகியன உயிர்ச்சக்தியிலிருந்து ஓர் அலையாக வெளிப்பட்டுக் கொண்டேதான் இருக்கும். அவ்வாறு வெளிப்படுவதைக் கொண்டு, ஒருவர் தன்னிடத்தில் என்னனென்ன பதிவுகள் இருக்கிறது என்பதை உணர்ந்து கொள்ள முடியும்.


முன்பு மனதை இயக்கிப் பதிவுகளைப் பெற்று ஒரு தன்மையை நாம் கொண்டுள்ளோம். அதை மாற்றி மனத்தை நம்முடைய விருப்பப்படி நடத்தி நாம் அடைய வேண்டிய எல்லா இலட்சியங்களையும் அடைய அதற்கென முறையான ஒரு உளப்பயிற்சி (Systemic Psychic Practice) எல்லோருக்கும் அவசியம் வேண்டும். பழக்கத்திற்கும், விளக்கத்திற்கும் இடையே போராடிக் கொண்டிருக்கக்கூடிய மனதின் பழக்கத்தை முறையாக மாற்றிக் கொண்டு விளக்கத்தை 'நல் விளக்கமாக' பெற்று அதன் வழியே வாழ்க்கையை அமைத்துக் கொள்ள உதவும் உன்னத கலை தான் 'உலக சமுதாய சேவா சங்கத்தின்' "குண்டலினி யோக" (Simplified Kundalini Yoga) பயிற்சி ஆகும்."

"செயல்களால் சிந்தனையும் அதன் உயர்வும்
சிந்தனையால் செயல் பலவும் ஒன்றால் ஒன்றாம்;
செயல் எண்ணப் பதிவுகளே மனிதன் தன்மை
சிந்திப்பீர்! இதனைவிடவேறு நீயார்?,
செயல் எண்ணம் பழக்கவழி ஓடும் மட்டும்
சிற்றறிவாய் துன்புற்று வருந்தும் சீவன்
செயல் எண்ணம் இரண்டினிலும் விழிப்பு கொண்டால்
சிவத்தன்மை சீவனில் பேரறிவாய் ஓங்கும்."

.
வாய்மை:
"தூய்மையாம் விளைவுதரும் சொற்கள் அனைத்துமேவாய்மையாம் அவைவாழ்வின் வளம்காத்துச் சிறப்பளிக்கும்".

 

 
" எண்ணத்தை எண்ணத்தால் எண்ணி எண்ணி
எண்ணத்தின் இருப்பிடமும் இயல்பும் கண்டு
எண்ணத்தை எண்ணத்தில் நிலைத்திருக்கச் செய்தால்,
எண்ணமே பழக்கத்தால் தெளிந்து போகும்."

----அருள் தந்தை
 





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக