இறைநிலையும் அதன் அலையும் சேர்ந்ததுதான் காந்தம் என்ற பேராற்றல். காந்தத்தின் தள்ளும் சக்தியும், தன்மாற்ற விளைவுகளும்தான் இப்பேரியக்க மண்டலத்தில் நிகழுகின்ற எல்லா நிகழ்ச்சிகளும் விளைவுகளும் ஆகும். 'குண்டலினியோகம்' பயின்று, மனம் என்னும் அலையின் சுழல் விரைவைக் குறைத்து விட்டால் மீதம் இறைநிலையேதான். இதனால் தெய்வமென்ற நிலையை உணருகின்ற போது அதுவே அறிவாக, மனதின் உட்பொருளாக இயங்குவதையும் அறிந்து கொள்ளலாம். இங்குதான் இறையுணர்வும், அறிவறியும் பேறும் மனிதனுக்குக் கிட்டுகின்றன். ஒரு உயிரின் உடலுக்குள் இயங்கிக் கொண்டிருக்கின்ற எல்லா ஆற்றலும், மனமாக இயங்கும் அலையாற்றலும் காந்தமேயாகும். இதைப் பற்றி எதிர்காலத்தில் விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்து உலக மக்களுக்கு உணர்த்தும் காலம் அதிகத் தொலைவில் இல்லை. காந்த ஞானம் மக்களிடையே ஏற்பட்டுவிட்டால் அதன் மூலம் அறிவிலும், செயலிலும், உணர்வுகளிலும் மனித குலம் ஒன்றுபட்டு விடும். இந்த நிலையை நோக்கியே நாம் முன்னேறிக் கொண்டிருக்கிறோம். முழுமை பெறுவோம்.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக