Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

செவ்வாய், 7 ஜனவரி, 2014

காலில் விழுந்து வணங்குவது சரியா

சுவாமிஜி பதில் :

"அன்பர்கள் காலில் விழுந்து வணங்கும்போது எனக்குப் பொருந்தா உணர்வாக இருக்கிறது. ஒருவருக்கொருவர் இதனை அறிவித்துக் காலில் விழுந்து வணங்குவதைத் தவர்க்கவும். ...

கீழே விழுந்து வணங்கி வாழ்த்துப் பெறுவது ஆண்டான்-அடிமை முறையை வகுத்து அதன் மூலம் மனநிறைவு பெற்ற பழக்கம் . மிகப் பழங்காலத்தியது . வணங்குபவன் யார்? வணக்கத்துக்குரியவர் யார்? அதன் பலன் இதுவரை என்ன? .

அறிவு நிலையை உயர்த்துவதற்காக முற்காலத்தில் அறிஞர்கள் வழிகாட்ட அறியாதோர் பின்பற்றினார்கள்.அக்காலத்தில் அறிவில் ஏற்றத் தாழ்வு இருந்தது.

எந்தப் பெரும் அகண்டாகார அரூப சக்தி எங்கும் நிறைந்துள்ளதோ அது எல்லோரிடத்திலும் நிறைந்து தானே இருக்க வேண்டும்? அப்படியாயின் எல்லோரும் சமநிலையில் உள்ளவர்கள்தானே?.

எனவே காலில் விழுந்து பதிலாக நேர்நிறையுணர்வை உணர்த்தும் வகையில் நின்ற நிலையில் கை கூப்பி வணங்குவதும் வாழ்த்துவதும் நல்லது . இதனையே எதிர் காலத்தில் அமுல் நடத்துதல் வேண்டும்.இது வேதாத்திரியாரின் அன்பான வேண்டுகோள்" .

----வேதாத்திரி மகரிஷி .
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக