கேள்வி: சுவாமிஜி, "நான் கண்டு கொண்டேன்; நாராயண எனும் நாமம்" என்று பெரியவர்கள் கூறுகிறார்களே, அதன் உட்பொருள் என்ன?
வேதாத்திரி மகரிஷியின் விடை: இறைநிலை என்ற பிரம்மமே எழுச்சி பெற்று சுழச்சி நிலையில் விண் என்ற நுண்துகளானது. விண்துகள்கள் மோதி இணைந்து, இயங்குகின்ற தன்மைக்கு ஏற்ப மூலகங்கள் தோன்றின.
விண்ணின் அடர்த்தி நிலையே காற்று. அவ்வடர்த்தி வேறுபாட்டில் தோன்றும் ஹைட்ரஜன் வாயுவோடு ஆக்ஸிஜன் வாயுவும் சேரும் போது நீர்மப் பொருள் தோன்றுகிறது. அந்நிலைக்கு அடுத்த கெட்டிப் பொருளாக உள்ள எல்லாப் பொருளும், உயிர்களும், நீர்மப் பொருளில் இருந்து தான் தோன்றின. நீர்மப் பொருளின் சுழற்சி வேகம் மேலும் குறைந்து நெருங்கி இயங்க திடப்பொருளாக மாறுகிறது....
மண்ணில் ஒரு தாவர விதையைப் போட்டு அதற்குத் தண்ணீர் ஊற்றுகிறோம். அந்தத் தண்ணீரில் உள்ள ஹைட்ரஜன் அணு, அந்த விதையில் அமைத்துள்ள நுண் பதிவுக்கேட்ப சுழற்சி பெற்று, பஞ்சபூதத்தையும் இணைத்து அந்தந்த இரசாயணங்களாக்கி முளை, தண்டு, இலை, கிளை, அரும்பு, மொட்டு, பூ, காய் என்றெல்லாம் மாற்றம் பெறுகிறது. தாவர இனம் ஆக்ஸிஜனைப் பிரித்து மனிதன் சுவாசிக்க உதவுகிறது. அதனால் உயிர்கள் அனைத்தும் நீர்மப் பொருளின் தன்மாற்றத்தாலே தான் தோன்றி வந்தன.
நாரம் + அயனம் = நாராயணம்.
'நாரம்' என்றால் நீர்.
'அயனம்' என்றால் மாற்றம்.
'நாராயணம் என்றால் உயிர்கள் அனைத்தும் நீரின் மாற்றத்தால் தோன்றியது எனப்பொருள்.
திடப் பொருளாக உள்ள அனைத்திற்கும் மூலப் பொருளாக உள்ளது நீர்மப்பொருள் தான். நீருக்கு மூலமாக இருப்பது, எல்லாம் வல்ல இறைவனான 'நீயே தான்'. அவ்வாரன நாரா-அயணமான உன்னை நான் கண்டு கொண்டேன்.
பிரணவப் பொருளான மெய்ப்பொருளின் குணம் மௌனம். அதனால் இறைவனைக் குறிக்க 'அம்' என்ற மகர மெய்யால் அழைத்தார்கள். நானும் 'அதுவாக' - இறைவனாகவே இருக்கிறேன் என்பது தான் "நாம் + அம் = நாமம்".
நமது நெற்றியில் U வடிவில் இரண்டு நரம்புகள் மேல் நோக்கியுள்ளன. அது சிலருக்கு வெளிப்படையாகவே தோன்றும். அந்த நரம்புகளைத் தட்பவெட்ப நிலையிலிருந்து பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக இராமக் கட்டியை இழைத்து அதன் மேல் போட்டு விட்டார்கள். புருவ மையத்தில் இருந்து உயிர் சக்தியை மேலே கொண்டு போய் 'பிரம்மரந்திரம்' என்ற துரிய நிலையில் வைக்க வேண்டும் என்பதைக் காட்ட மையத்தில் சிவப்பு நிறத்தில் மேல் நோக்கி ஒரு கோடு இழுத்து விட்டார்கள். இதைப் புலன்களுக்கு காட்ட அமைத்த சடங்கு முறை நாமமாகும். மொழி வழக்கில் 'நாமம் போட்டான்' என்றால் இன்று வேறு பொருளாகி விட்டது.
எல்லாம் வல்ல இறைவன் எழுச்சி நிலையில் பஞ்சபூதங்களாகி, நீர் வழியே பரிமாண மாற்றம் பெற்று உயிர்களாகத் தோன்றி நாமாகவும் வந்துள்ளான் என்பதை அறிந்த பெரியோர்கள் குறிப்பாக உணர்த்த அவ்வாறு கூறியுள்ளார்கள்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக