வான்காந்தம் , சீவகாந்தம் என்ற இரண்டு ஆற்றல்களை விஞ்ஞான காலத்திலேயே உணர்ந்து கொள்ள முடியாது என்று சொல்வதற்கில்லை. எல்லாக் காலத்தையும் கடந்து இப்பொழுது மனிதன் கணிணி காலத்தில் வாழ்ந்து வருகிறான். இங்கே நிகழக்கூடிய எல்லா இயக்கங்களையும் ஆராய்ந்தால் காந்த ஆற்றலின் தத்துவம் நன்றாக புரியும்.
காந்த ஆற்றலைத்தான் பிரணவ சொரூபம் என்றும், அர்த்தநாரி என்றும், ஓம்காரம் என்றும் பலவிதமாகக் கூறியிருக்கின்றார்கள். எங்குமே நிறைந்திருக்கக்கூடிய இறைநிலை ஒவ்வொரு உயிரிலேயும் மனமாக, அறிவாக எவ்வாறு இயங்கிக் கொண்டிருக்கிறது என்றால் காந்தமாக....
மனித சமுதாயத்திற்கும் ,இறைநிலைக்கும் இடையே மறைபொருளாக உள்ளது காந்த ஆற்றல். காணும் பிரபஞ்சத்திற்கும் , காணாத கடவுள் நிலைக்கும் இடையில் உள்ளது காந்த ஆற்றலை உணரும் காலம் வந்து விட்டது. இந்த ஆற்றல் மூலம் மனிதன் தன்னை உணரலாம், அறிவை உணரலாம், உயிரை உணரலாம், இறைநிலையை உணரலாம்.
--வேதாத்திரி மகரிஷி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக