ஜீவசமாதி என்பது என்ன? அது பற்றிய விவரத்தைக் கூறுமாறு கேட்டுக்கொள்கிறேன்..
...
சுவாமிஜி அவர்களின் விளக்கம்..
ஒருவர் தவத்தின் மூலமாகவும்,தற்சோதனையின் மூலமாகவும் தன்னுடைய உயிரைத் தூய்மைசெய்து முழுமைபெறு நிலையடைந்தும்,காயகல்பத்தின் மூலமாகத் தன வித்துவைக் கெட்டிபடுத்தியும்,உலக வாழ்க்கையில் தன செய்ய வேண்டிய கடமையெல்லாம் செய்து நிறைவு பெற்றும்,இனிமேல் நான் இவ்வுலகில் சாதிப்பதற்கு ஒன்றுமில்லை என்ற எண்ணத்தைப் பெற்றும் விட்டால்,மனதை இறைநிலையோடு இணைத்துவிட்டு லம்பிகா யோகத்தின் மூலம் உயிரை உடலோடு சுவரச் செய்து விடுவார்கள்.
முன்னமே செய்துருந்த ஏற்பாட்டின்படி சீடர்கள் உடலைப் புதைத்துவிடுவார்கள்.மனஇயக்கம்,
இதுபோலத் தமிழ்நாட்டில் மகான்கள் அடக்கமான பதினெட்டு ஸ்தலங்கள் உள்ளன.பழனி,திருப்பதி,சிதம்பரம்
அந்த இடத்தின் மேல் நம் முன்னோர்கள் சிலையை வைத்து கோவில் கட்டி வழிபாட்டுக்குரியதாக அமைத்துள்ளனர்.என்றைக்கும் அந்த மகானுடைய ஆற்றல் அவருடையவிட்டுப் பிரியாதிருக்கும்.
அவர்கள் உலக நன்மைக்காக உடலடக்கம் பெற்றபோது எண்ணிய எண்ணங்கள் எல்லாம் அங்கேயே இருப்பதால் அதை மக்கள் சுற்றிவர சுற்றிவர,அந்த மகானுடைய எண்ணங்கள் மக்களை வழிநடத்தும்.
சித்தர்கள் அடக்கமான கோவில்களுக்குக் குடமுழுக்குத் தேவையில்லை.ஜீவன் என்றால் உயிர். சமாதி என்றால் சமன் - ஆதி.ஆதிக்குச் சமமான மனம் நிலைபேறு அடையும் நிலையே ஜீவசமாதி.
-அருட்தந்தை வேதாத்திரிமகரிஷி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக