Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

செவ்வாய், 21 ஜனவரி, 2014

அறிவே தெய்வம் எவ்வாறு ?

சுவாமிஜி :

தெய்வத்தை எந்த உருவத்தில் யார் வணங்கினாலும் தன்னுடைய எண்ணத்தைத்தான் --மனத்தைதான் அறிவைத்தான் வணங்குகின்றாரே அன்றி வேறு இல்லை....
அறிவை விரித்து , ஒருவர் ஒன்றை வழிபடுகின்ற போது , அவர் வழிபடுகிற அந்த ஒன்றின் வடிவத்தையும், குணத்தையும் தன்னுள்ளேயே பதிய வைத்துக் , கொண்டு தானே அதுவாக வழிபடுகிறவர் மாறிவிடுகிறார்.

கடவுள் வணக்கமாக மனதைத்தான் வணங்குகிறார்களேயொழிய வேறு ஒன்றும் இல்லை. எல்லாம் வல்ல இறை சக்தியே ஊடுருவி இயங்கிக் கொண்டு இருக்கிற முறையிலே மனிதனிடத்தில் மனமாக இருக்கிறது.

"கடவுளை வணங்கும் போது கருத்தினை உற்றுப்பார் நீ
கடவுளைக் கருத்தே நிற்கும் காட்சியைக் காண்பாய் அங்கே ".

யார் எந்த வகையில் கடவுளை வணங்கினாலும், எது நிற்கிறது என்று பார்த்தால் தன்னுடைய மனம் தான் அந்த வடிவம் எடுக்கிறது. சிலைகளையோ, சக்தியையோ, அகண்டாகாரமாக இருக்கக் கூடியதையோ, வேறு எந்தப் பொருளையோ கடவுள் என்று வணங்கினாலும் மனம் தான் அந்த வடிவம் எடுக்கிறது. எல்லாம் வல்ல பரம்பொருள் , அறிவு என்ற நிலையிலே அணு முதற்கொண்டு அண்டம் ஈறாக உள்ள எல்லாப் பொருட்களிலும் தன்மை, துல்லியம், ஒழுங்கு என்ற மூன்று அம்சங்களோடு இயக்க ஒழுங்காக அமைந்து இயங்கிக் கொண்டும் மனிதனிடம் ஆராயும் திறன் கூடியதாகவும் இருக்கிறது. எது சுத்தவெளியாக இருக்கிறதோ , எது "கடவுள்" என்று பேசப்படுகிறதோ , அதுவே தான் ஜீவன்களிடம் , உயிர்களிடம் அறிவு எனப் பேசப்படுகிறது .

பிரபஞ்ச அளவில் ஒருங்கிணைபபாற்றலாகவும் , ஆறாவது அறிவாகவும் விளங்குகின்ற "அறிவே தான் தெய்வம்".
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக