செயலுக்கு விளைவு உடனடியாக வரலாம். ஒரு நாளில் வரலாம் ,ஒரு மாதத்தில் வரலாம், ஒரு வருடத்திற்குப் பின்னும் வரலாம் , 10 வருடங்களுக்குப் பின் வரலாம். மிகவும் நீண்ட காலத்திற்குப் பின்னும் வரலாம். அடுத்த தலைமுறைக்கும் வரலாம்.ஆனால் விளைவு என்பது நிச்சயம். என்றோ செய்த செயலுக்கு இன்று விளைவு வரலாம். Mஇன்று செய்த gசெயலுக்கு இன்றே விளைவு வரலாம் .காலையில் செய்த செயலுக்கு மாலையில் விளைவு வரலாம் . இப்போது செய்த செயலுக்கு இப்போதே விளைவு வரலாம்.
ஒருவர் செய்த செயலுக்கு விளைவு அவரது வாழ்நாளிலேயே வெளிப்படாதிருக்கலாம் .ஆனால் அது இருப்பாக இருந்து , மகனுக்கோ அவரது பேரனுக்கோ வரலாம். விளைவை மகனோ,பேரனோ அனுபவிக்கலாம். ஆனால் மகனோ, பேரனோ செயல் செய்யவில்லை. இருந்தபோதிலும் விளைவை அனுபவிக்கிறார்கள் என்றால் செயலுக்கான விளைவு வெளிப்படுவதற்கான காலநீளம் அதிகமாயிற்று என்பதே பொருள். ஒரு செயலுக்கான பதிவு தொ டர்ந்து இருக்குமேயானால் ஏழாவது தலைமுறையிலும் அதற்கான விளைவு வரும்.
தந்தையினுடைய செயலை மேல் போக்காக பார்த்து விட்டு, விளைவு இல்லை என்று கருதக் கூடாது . மகனோ, பேரனோ விளைவை அனுபவிக்கும் போது இந்த விளைவுக்குச் செயல் இல்லையே என்று கருதக்கூடாது . செயல் இல்லாத விளைவு இல்லை. அனுபவிக்கும் விளைவு எங்கிருந்து வந்திருக்கும் என்று அடிப்படையை ஆராய்ந்து பார்த்தால் உண்மை புரியவரும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக