Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

புதன், 15 ஜனவரி, 2014

செயல்விளைவுத் தத்துவத்தை மனிதன் உணர வேண்டிய அவசியம் என்ன?

1) கேள்வி : சுவாமிஜி, சமுதாய வினைக்கு ஒன்றுமறியாத தனிமனிதன் பாதிக்கப்படுகிறானே அது ஏன்? செயல்விளைவுத் தத்துவத்தை மனிதன் உணர வேண்டிய அவசியம் என்ன?

சுவாமிஜியின் பதில் : சமுதாயத்தினுடைய கூட்டு உழைப்பான உணவு, உடை, உற்பத்திப் பொருட்கள் அனைத்தையும் தனிமனிதன் அனுபவிக்கிறான். அதனால் தனிமனித வினை சமுதாய வினைக்கு உட்பட்டே செயல்படும். அதன் பாதிப்பைக் குறைக்க தனிமனிதன் சமுதாயத்தை வாழ்த்த வேண்டும் என்பதற்காகத்தான் "வாழ்க வையகம்" என்ற உலக நல வாழ்த்தை அமைத்துக் கொடுத்தேன். செயல் - விளைவுத் தத்துவத்தை உணரும் பொழுது மனித வாழ்வில் பொறுப்புணர்வு அதிகமாகிறது. இறைவனே செயலுக்கு விளைவாக வருவதால், இறைவனைத் தனியே தேடுகின்ற காலமும் மிச்சமாகிறது. நாம் செயல்களை ஒழுங்குபடுத்தும் பொழுது எத்தனை தேவையற்ற சடங்குகள் ஒழிகின்றன ! உயிர்களை மதித்து வாழும் பண்பு வளர்கிறது. இதை உலகிற்கு உணர்த்த வேண்டியது சிந்தனையாளர் கடமையாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக