Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

ஞாயிறு, 12 ஜனவரி, 2014

எதிர்பார்த்தல்

எல்லாவிதமான துன்பங்களும் கவலைகளும் ஏமாற்றம் என்பதிலிருந்து தான் உருவாகி வரும். "எதிர்பார்த்தல்"என்பதானது ஏமாற்றத்தில் கொண்டு நிறுத்துகிறது. உறவினரிடமோ அல்லது ஒருவரிடம் நட்பு, தொடர்பு வைத்திருந்தால், "அவர் எனக்கு இன்னின்ன செய்ய வேண்டும் அவர் மூலமாக எனக்கு இது வரவேண்டும், அவை இப்படித்தான் நடந்து கொள்ள வேண்டும்" என நினைந்து, நினைந்து எதிபார்ர்க்கப் பழகிக் கொள்ளுகிறோம். இத்தகைய எதிபார்ப்பு முழு அளவிலே ஈடேறி வருமா என்றால் வரவே வராது. ஏனென்றால் இந்த எதிபார்த்தல் என்பதில் நான்கு அளவைகள் உள்ளன. நீ ஒன்று தேவை என்று எந்த அளவிலே வைக்கிறாயோ அந்த அளவிலே அவர் ஒப்புக் கொள்ள இயலாது. தேவை என்பதையே முதலில் அவர் ஏற்றுக் கொண்டாலும், தேவை அதன் அளவு இரண்டையும் ஒப்புக் கொண்டாலும் நீ கற்பனை கொண்டுள்ள முறையையோ, காலக்கெடுவையோ அவர் ஒப்புக் கொள்ளாத நிலை இருக்கும்.
இதைத்தான் ஆங்கிலத்தில் " Judgement of need, judgement of quality, judgement of quantity and judgement of time" என்று சொல்லுகிறேன். இந்த நான்கு அளவைகள் ஒவ்வொருவரோடு, அவ்வப்போது மாறிக் கொண்டே இருக்கும். எனவே நீ எதிர்பார்த்தது, எதிபார்த்தபடி அவர்கள் மூலமாகக் கிடைக்காது. ஒவ்வொரு மாற்றத்திலும் பிணக்குற்று, பிணக்குற்று எமாற்றத்திற்கு ஆட்பட்டு ஆட்பட்டு அதனாலே துன்பமானது பெருகி கொண்டே போகிறது. இந்த அடிப்படை தெரிந்து கொண்ட பின்னர் "எதிர்பார்த்தல்" என்பதை விட்டுவிடுவது நல்லது எனத் தெரிகிறதல்லவா?. விளைவு நிச்சயமாக உண்டு. நீ எதிர்பார்த்தாலும், எதிர்பார்க்காவிட்டாலும் நீ என்ன செயல் செய்கிறாயோ அந்தச் செயலுக்குத் தக்க விளைவு வந்துதான் ஆக வேண்டும். நல்லதை எண்ணி, நல்லதை விளங்கிக் கொண்டு, பயனை உணர்ந்து கொண்டு எதிர்பாராது செய்ய வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக