Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

புதன், 9 ஏப்ரல், 2014

யோகம், லயம், சம்யம், தவம்,

யோகம், லயம், சம்யம், தவம், இவையெல்லாம் ஒரே பொருளைத் தான் குறிக்கும் :

நமது நாட்டிலே, இன்னும் மேல் நாட்டிலே கூட யோகம் என்ற சொல்லுக்குச் சரியான விளக்கம் பெற முடியவில்லை. பெரும்பாலோர் உடற்பயிற்சியைத்தான் யோகம் என்று எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். முக்கியமாகச் சிரசாசனம், சர்வாங்க ஆசனம் போன்ற பயிற்சிகளை யோகப் பயிற்சி என்றும், அதோடு இணைந்த உடற்பயிற்சிகளை யோகம் என்றும் நினைக்கிறார்கள். ஆனால் அப்படியல்ல.... "யோகம்" என்ற பயிற்சியில் இதெல்லாம் ஒரு கட்டம் தான். "உடலையும் - உள்ளத்தையும்" சரியாக வைத்துக் கொண்டு, பிறவியின் நோக்கத்தை முடிக்க வேண்டிய அளவுக்கு, மனிதன் அறிவிலே உயர்ந்து கொண்டு வருவது தான் 'யோகம்'.

யோகம், லயம், சம்யம் இவையெல்லாம் ஒரே பொருளைத் தான் குறிக்கும். 'இயற்கை இருக்கிறது. அறிவு இருக்கிறது'. மனித வாழ்க்கையில் இவ்விரண்டும் தெளிவுபட வேண்டும். இயற்கையை உணர்ந்து, இயற்கையோடு ஒன்றி, இயற்கைக்கு முரண்படாது, இயற்கையின் வளங்களை வாழ்வின் வளமாக மாற்றி துய்த்து, இயற்கை அளவுக்குத் தன்னை உயர்த்திக் கொண்டு, இயற்கையோடு ஒன்றி, உறைந்து, உறவாகிவிடக்கூடிய ஒரு நெறி தான் "யோகம்"

யோகத்தை பற்றி திருமூலர் அருளியுள்ள கவியை இங்கு நினைவு கூர்வோம் :

திளைக்கும் வினைகடல் தீர்வுறு தோணி
இளைப்பினை நீக்க இருவழி உண்டு
கிளைக்கும் தனக்கும்அக் கேடில் முதல்வன்
விளைக்கும் தவம் அறம் மேற்றுணை யாமே !

"யோகம்" என்றால் இறையாற்றலின் இயக்க நியதியோடு மன ஆற்றலையும் உடல் ஆற்றலையும் இணைத்து, விளைவறிந்த விழிப்போடு செயலாற்றி வாழ்வதாகும். இவ்வாழ்வு தான் பெருமதிப்போடு "இறைவழிபாடு" என்று போற்றப்படுகின்றது.
================================

வாழ்க்கை நெறியே யோகம் :
தீயவினைப் பதிவுகளைத் திருத்திப் போக்கித்
தெளிந்த அறிவின் விழிப்பில் நிலைத்து என்றும்
தூயவினை, தேர்ந்தாற்றித் துன்பம் நீக்கும்
தொழில்களையே கடமையெனத் தேர்ந்து செய்து
மாயமெனும் மறைபொருளாம் அறிவறிந்து
மண்ணுலகில் உயிர்கட்குத் துன்பம் நீக்க
நேயமுடன் தொண்டாற்றி இன்பம் துய்க்கும்
நிறைவாழ்வாம் நெறியதுவே யோகமாகும்.

தெளிவுக்கு வழி :
தனையறியும் பெருநோக்கில் உயர்ந்தமக்கள்
தரணியில் ஆயிரமாயிரங்களாகும்
தனையறிய முயன்றோர்கள் அறிந்தபேர்கள்
தந்துள்ள விளக்கங்கள் எண்ணிறந்த;
தனையறிய துடிதுடிப்பும் விளக்கமில்லாத்
தன்மையிலும் எழுதிய நூல் பல படித்து
தனையறிய ஆர்வமுள்ளோர் மனம் குழம்பி
தத்தளிக்கும் நிலை தெளிய வழிதவம் ஆகும்.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
See more

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக