Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

ஞாயிறு, 6 ஏப்ரல், 2014

தன்முனைப்பின் விளைவு

ஒரு ஆணுக்கோ பெண்ணுக்கோ அடிக்கடி தலைவலி வருகிறது என்று சொன்னால் அதுவும் திருமணம் ஆன பிறகு வருகிறது என்றால், கணவன் மனைவிக்கு இடையில் அவமதிப்பு மூலம் பிணக்கு (Conflict through insulting incidents) எவ்வளவுக்கெவ்வளவு ஒரு நாளைக்கு வருகின்றதோ அதுவெல்லாம் கட்டாயமாக நரம்பு சம்பத்தப்பட்ட நோயில் தான் கொண்டு வந்துவிடும். பக்கவாத நோயில் கூட (Paralytic Stroke) கொண்டு வந்து விடும். கணவன் மனைவி உறவிலே இரண்டு பேருக்கும் ஒற்றுமை இல்லாது ஒரு வித வெறுப்பு, இருவரை ஒருவர் சபித்துக் கொள்ளும் நிலை இருப்பின், அது நேரடியாக வியாதியை உண்டாக்கலாம். இன்னும் அழுத்தமாக வேதனை இருக்குமேயானால் பிரதிபலிப்பு விபத்துக்கள் (reflection-accident) உண்டாகலாம். ஆகையினால் நலமே எண்ணி நலமே செய்ய வேண்டும் என்ற சிந்தனையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

உதாரணமாக, இன்னும் சமையல் ஆகவில்லை, மணியாகிவிட்டது, இதற்கு மேல் போனால் பஸ் கிடைக்காது. "அம்மா நான் இன்று காண்டீனில் சாப்பிட்டுக் கொள்கிறேன்; நீங்கள் சிரமப்பட வேண்டாம்" என்று மகிழ்ச்சியாகச் சொல்லிவிட்டுப் புறப்பட வேண்டும். அந்தப் பண்பாடு வர வர மறுநாள் கொஞ்சம் சீக்கிரமாக எழுந்து செய்ய வேண்டும் என்ற கருத்து அவர்களுக்கு வந்துவிடும். அதை விட்டுவிட்டு இங்கே சீறி விழ, அலுவலகம் போய் அங்கேயும் சிடுசிடுக்க, திரும்பி வந்தபோது குழந்தையையும் இந்தச் சச்சரவில் இழுத்துவிட இது எல்லாம் குடும்பத்தில் நடக்கின்ற தன்முனைப்பு (Ego) நாடகம் என்றுதான் சொல்ல வேண்டும்.

எல்லாம் வல்ல இறைவன், கணவன், மனைவி உறவுக்கு இடையில் எத்தனை ஆயிரம் மகிழ்ச்சியை வைத்திருக்கிறான். அதைப் புரிந்து கொள்ளாததனால், உயிருக்கு மதிப்பு கொடுக்க தெரியாததனால், மகிழ்ச்சியை அனுபவிக்கத் தெரியாததனால், மனோதத்துவம் (Psychology) இன்னது என்று தெரியாமல், அதுனுடைய விளைவை அறியாததனால் துன்பச் சுழலில் வாழ்கின்றோம்.

சிந்தனையை ஊட்டி, அந்தச் சிந்தனையின் மூலமாக நான் செய்ய வேண்டியது என்ன? செய்யக்கூடாதது என்ன? தவறான செய்கையாலும், தவறான எண்ணத்தாலும் என்ன என்ன விளைவுகள் வருகின்றன என்று தெரிந்து கொண்டு பொதுவாக மனிதன் வாழத் தொடங்க வேண்டும். சிறப்பாக கணவன் மனைவி இருவரும் தெரிந்து கொண்டு வாழவேண்டும். இந்த உலகத்தில் ஒவ்வொருவரும் தனக்கு இருக்கின்ற தகுதி, வாய்ப்பு, வசதி இவற்றைக் கொண்டு பிறருக்கு இயன்ற வரை உதவி செய்வது என்று ஆரம்பிப்பதாக இருந்தால் இந்த உலகம் எவ்வளவு நன்றாக இருக்கும் !

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி


 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக