உடலோ பல அணுக்களால் கட்டப்பட்ட ஒரு தோற்றம். அணுவோ எல்லாம் வல்ல அருட்பேராற்றலின் நுண்ணிய சுழலலை. அணுவினால் கட்டப்பட்ட தோற்றம் இந்த உடல். உடலுக்குள் அந்த நுண்ணிய பொருளாக உள்ள அணுவோ உயிர். அணுதிரட்சியில் உடலாகவும் இருக்கிறது. உயிருக்கு மத்தியில் தொடங்கி பேரியக்க மண்டலம் முழுவதும் விரிந்து எல்லையற்ற விரிவு உடைய ஒரு அரூபநிலையே அறிவு....
நீ உன் உடலை நினைத்துப் பார். நீ புலன்கள் வரையில் உன்னை எல்லை கட்டிக் கொண்டு உடலே நான் என்று எண்ணுகிறாய். உடலில் உள்ள உயிரை நினைத்து பார். உலகிலுள்ள எல்லா உயிர்களோடும் பேரியக்க மண்டலத்தில் ஆற்றல் களமாக நிறைந்துள்ள பரமாணு மண்டலத்தோடு ஒன்றுபட்டிருக்கிறாய். இந்த நினைவில் நீ ஆன்மாவாய் பேரியக்க மண்டலம் முழுவதும் பரவியுள்ள சக்தியாக உணர்கிறாய்.
அதற்கும் மேலாக நுணுகி நின்று உன் அறிவை நோக்கு. உயிராற்றலின் மையத்தில் தொடங்கி, உடலிலே பரவி பேரியக்க மண்டலம் முழுவதும் பரவி அதற்கு அப்பாலும் உள்ள பிரம்ம நிலையாய், சுத்தவெளியாய் உள்ளதை உணர்வாய். உனது அறிவின் உண்மை நிலையை உணர்ந்த பின் உனது அறிவின் விரிவே அன்பாக மலர்ந்து உயிர்கட்கு உதவி செய்து, உயிர்த் துன்பம் போக்கவும், எந்த உயிருக்கும் துன்பம் தராமல் செயலை ஒழுங்குபடுத்திக் கொள்ளவேண்டும், என்ற விழிப்பு நிலையும் வந்துவிடும்.
இந்த அறிவு நிலையிலேயே உன்னை உடலாகவும், உயிராகவும், அறிவாகவும் உணர்வாய். உனது அறிவு எல்லையற்றது, விரிந்து அரூபமாக உணரும் நிலையில் அறிவேதான் பிரம்மம் என்ற உண்மையை உணர்வாய்.
இந்த உள்ளொளியில் தன் முனைப்பு என்ற இருள் மறைந்துவிடும். ஒரு தலைப்பட்சம், வெறுப்புணர்ச்சி, பொறாமை, கடும்சொல் நீக்கி நீ உன்னை உத்தமப் பொருளான இறைவனாகவே காண்பாய். உன் அறிவை அறிந்த பேரறிவால் எந்த ஒன்றையும் குறிப்பால் உணர்ந்து தக்கபடி கடமையாற்ற முடியும்.
உன்னுடைய நிலையை உனக்கு உட்பொருளாக உள்ள ஆன்மாவை உணர்ந்து கொண்டால் உடல், உயிர், மனம் என்ற மூன்றையும் அறிந்து கொள்ளும் அறிவு உண்டாகும். அந்த அறிவைக் கொண்டு எவருள்ளத்தும் எழும் எண்ணங்களையும் செயல்களையும் உணர்ந்து தக்கபடி வெற்றியோடு உன் கடமையாற்றலாம். அகம் என்பது ஆன்மாவைக் குறிப்பதாகும். அது மனிதனுடைய கருமையத்தில் இறைநிலையையும் அதன் அளவற்ற ஆற்றலையும் சுருக்கி வைத்திருக்கும் தெய்வீக நிலையம்.
ஆன்மாவை உணர்ந்தவர் ஆன்மாவில் இயங்கும் அறிவை தெய்வமாக உணர்வார். ஆகையால் ஆன்மாவை அதன் இருப்பு, இயக்கம், விளைவு இவைகளை சிறிது கூட சந்தேகமின்றி உணர்ந்து கொள்ள வல்லவர் இறைவனாகவே மதிக்கப்படத்தக்கவர்.
-தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக