Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

ஞாயிறு, 27 ஏப்ரல், 2014

அகத்தவமும் அறநெறியும்

இயற்கையின் ஒழுங்கமைப்பால் மனிதனிடம் அமைந்த 'ஆறாவது அறிவு' சிறப்புற்று விளங்க மேலும் மேலும் உயர்ந்து, இயற்கையின் முழுமையை உணர்ந்து பிறவிப் பயனை எய்த மனிதனுக்கு "மன அமைதி" தேவை. துன்ப உணர்வுகள் அமைதியை குலைக்கின்றன. அறிவின் வளர்ச்சியைத் தடுக்கின்றன. எனவே துன்பமற்ற முறையிலே மனிதன் வாழ வழிகாண வேண்டும். மனிதனிடம் தன்முனைப்பு, பழிச்செயல் பதிவுகள், மயக்கம் எனும் மூன்று களங்கங்கள் உள்ளன என்று முற்காலத்தியப் பேரறிஞர்கள் ஓர் உண்மையை உணர்ந்தார்கள். இயற்கையின் முழுத்தன்மையால் மனிதனிடம் எழுச்சி பெற்றுள்ள ஆறாம்நிலை அறிவானது தான் வளர்ச்சி பெற்று இயற்கையின் முழுநிலைமையை உணர்ந்து அமைதி பெற ஓங்கி எழும் விரைவினை தன்முனைப்பு தடை செய்கிறது. இம்மூன்று களங்கங்களைப் போக்கி மனித மனதைத் தூய்மை செய்வதற்கு அறிவிலே சிறந்த முன்னோர்கள் கண்டுபிடித்த எண்ணம், சொல், செயல் என்ற மூன்றையும் சீர்திருத்திக் கொள்ளும் பயிற்சி முறை அகத்தவமும் அறநெறியுமாகும்.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக