உடம்பினுள் உத்தமன் கோயில் கொண்டானென்று, உடம்பினையானிருந்து ஓம்புகின்றேனே" என்பது அறிஞர் திருமூலர் வாக்கு. பெரு மதிப்புடைய மனித உடல் இறையாற்றளால் மிகச் சீர்மையோடு வடிவமைக்கப்பட்டுள்ளது என்பதையறிகிறோம். எனினும், ஓரறிவு முதல் ஆறறிவு வரையில் பலகோடி தலைமுறைகளில், அறியாமை, அலட்சியம், உணர்ச்சிவயம் இவற்றால் உடலும் மனமும் அமைப்பிலும் இயக்கத்திலும் சிலபல சீர்கேடுகள் அடைந்துள்ளன. அதனால் மனிதனின் உடலிலும், மனதிலும் நோய்கள பெருகிக் கொண்டிருக்கின்றன. மனிதகுல வாழ்வைச் சீரமைக்க வேண்டுமானால் ஐவகைச் சிறப்புத் திருத்தங்கள் வேண்டியுள்ளன. அவை:
1) உடல் நலச் சீர்மை
2) மன வளச்சீர்மை
3) நட்புநலம் காக்கும் அறநெறி
4) கருமையத் தூய்மை (தீயவினைப்பதிவு தூய்மை)
5) இறையுணர்வு (பிரம்மஞானம்)
என்பனவாகும். இந்த ஐவகைச் சீரமைப்புப் பயிற்சிகள் ஒன்றிணைந்த வாழ்க்கைவள விஞ்ஞானம் தான் "மனவளக்கலை" பயிற்சி முறையாகும்.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
1) உடல் நலச் சீர்மை
2) மன வளச்சீர்மை
3) நட்புநலம் காக்கும் அறநெறி
4) கருமையத் தூய்மை (தீயவினைப்பதிவு தூய்மை)
5) இறையுணர்வு (பிரம்மஞானம்)
என்பனவாகும். இந்த ஐவகைச் சீரமைப்புப் பயிற்சிகள் ஒன்றிணைந்த வாழ்க்கைவள விஞ்ஞானம் தான் "மனவளக்கலை" பயிற்சி முறையாகும்.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக