Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

ஞாயிறு, 27 ஏப்ரல், 2014

உலகம்

இறைநிலைக்கு எதுவுமாகும் சிறப்பாற்றல் இயல்பாக இருக்கிறது. அதற்குக் காரணம் இறைநிலை என்றால் சுத்தவெளியே அன்றி வேறு இல்லை. சுத்தவெளி என்பது ஒன்றுமில்லாத சூன்யம் என்று புலனளவில் மனித இனம் முதன் முதலில் கணித்துக் கொண்டது. ஆயினும் உண்மையில் அது நான்கு வளங்களையும் ஒன்றிணைத்த அருட்பேராற்றலாகும். அவ்வளங்கள் 1) வற்றாயிருப்பு 2) பேராற்றல், 3) பேரறிவு 4)காலம். இந்த நான்கு வளங்களையும் ஒன்றிலிருந்து மற்றதைப் பிரிக்கவும் முடியாது. இறைநிலையிலிருந்து வேறுபடுத்திக் காணவும் முடியாது.

ஒரு தண்ணீர் குழாய் அடியில் ஒரு தொட்டியை வைத்து குழாயைத் திறக்கிறோம். தண்ணீர் தொட்டியில் நிரம்புகிறது. தொட்டி நிரம்பி விட்டால், தொட்டியிலிருந்து தண்ணீர் வெளியேறுகிறது. இங்கு தொட்டியின் கொள்ளளவு (capacity) தான் தண்ணீரை ஏற்றுக் கொள்வதற்கும் தள்ளிவிடுவதற்கும் காரணம். இதே போலத் தான் தன்னிறுக்கச் சூழ்ந்தழுத்தும் ஆற்றல். அது போதிய செறிவு பெற்ற பின் தள்ளுவிசையாகிறது. அது அதனுடைய ஆற்றல் அழுத்தமாகத் தன்னையே நொறுக்கிக் கொண்டு இறைத்துகள்களாக மாற்றம் பெறுகின்றது. இறைநிலையின் இந்த தன்மாற்றம் நுண்ணிய துகள் பரமாணு என்ற பெயரால் வழகப்படுகின்றது. இதனை ஆங்கிலத்தில் ஈதர் (Ether) என்று கூறுகின்றார்கள்.

இதனால் பொதுவாக ஒரே ஆற்றல்தான் பேரியக்க மண்டலம் முழுவதும் ஈர்ப்பு விசையாகவும் தள்ளுவிசையாகவும் செயல்படுகின்றது. இந்த அழுத்தம் எனும் இறுக்கும் விசை எங்கும் எப்போதும் வேறுபடுவதில்லை. இறுக்கும் விசையான கூட்டு விசையும், விலக்கும் விசையான தள்ளு விசையும் பிறக்குமிடம் இறைவெளியே. தள்ளுவிசைதான் பலதரப்பட்ட ஏற்றத் தாழ்வுகளோடு செயல்படுகின்றது. வெளிச்சத்தைப் பல ஏற்றத் தாழ்வோடு பார்க்கிறோம். அங்கெல்லாம், இருட்டுக்கு ஏற்றத்தாழ்வு இல்லை. வெளிச்சத்தின் கனம் குறையக் குறைய இருட்டின் கனம் அதற்கேற்ற அளவில் அதிகமாக உணரப்படுகின்றது. இறைநிலையானது துகள்களாகி அவை இணைந்து அணுக்களாகி, அணுக்களின் செறிவு நிலைகளுக்கேற்ப பஞ்ச பூதங்களாகி, பஞ்ச பூதக் கலவையால் அண்டங்கள் பலவாகி வந்த தன்மாற்றத்தில் ஒன்றுதான் உலகம்.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக