Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

வியாழன், 10 ஏப்ரல், 2014

மனவளக்கலைப் பயிற்சி

பொருளியல் அறிவோடு 'உயிரியல் அறிவும்' வேண்டும். அப்போதுதான் மனிதனுடைய அறிவு சமநிலை ஆகும். இல்லையானால் ஒரு பக்கம் மட்டும் பளு சேர்ந்த மாதிரி (one sided load) பொருள் வயப்பட்ட அறிவிலே மாத்திரம் இருக்கும்போது உணர்ச்சி வயப்பட்ட செயல்களாகவே இருக்கும். ஆராய்ச்சி வயப்பட்ட செயல்களோ, விளக்கத்தின் வழியே செய்யும் செயல்களோ இருக்க முடியாது. எனவே, இந்தப் போக்கிலிருந்து தன்னை மாற்றிக் கொள்ள வேண்டும். அதற்கு ம...ுதலில் மனதைப் பழக்க வேண்டும். ஏனென்றால் வாழ்க்கையிலே புலன்கள் மூலமாகப் பொருட்களோடு தொடர்பு கொண்டு அது ஒரு வடிவம் ஆகின்றது; அதிலே ஒரு குணமாகின்றது (Taking of shape and Image) இப்படியே வடிவமும், குணமும் மனநிலையில் எடுத்துப் பழகிக் கொண்டு உள்ளோம். அதேதான் திருப்பித் திருப்பி வரும். அதிலிருந்து தன்னை மாற்றி, உயிர்வயப்பட்டு உயிராகவே நினைக்க வேண்டும் என்று சொன்னால், புலன் வயப்பட்ட அறிவிலிருந்து தன்னை விடுவித்து உயிருக்குக் கொண்டுவர வேண்டும்.
மனதை அவ்விதத்தில் 'மனவளக்கலை' பயிற்சியாகிய 'குண்டலினியோகத்தில் பழக்க வேண்டும். நமது மனவளக்கலை பயிற்சி நான்கு அங்கங்களைக் கொண்டது. தவம் (Meditation), தற்சோதனை அல்லது அகத்தாய்வு (Introspection), குணநலப் பேறு (Sublimation), முழுமைப்பேறு (Perfection) என்பதாகும். தவத்தினால் (Meditation) உயிரின் படர்கைநிலை கழிந்து அடக்கநிலை கிடைக்கிறது; உயிரிலேயே ஒன்றி நிற்கிறோம். விவகாரங்களிலிருந்து விடுபட்டு நிற்க மனத்திற்குத் திறமை கிடைக்கிறது; மன வலிமை (Will Power) கிடைக்கிறது.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக