மகரிஷியின் பதில் : வாழ்க்கைச் சிக்கல்கள் மூன்று காரணங்களால் ஏற்படுகின்றன.
1) ஆகாமியம்.
2) பிராரப்தம்.
3) சஞ்சிதம்.
சஞ்சிதம் என்பது முன்னோர்களின் செயல் பதிவுகள். தலைமுறை தலைமுறையாக கருவழியே தொடரும் பாவப் பதிவுகளாகும். அதை அனுபவித்து தீர்க்கவே உடல் எடுத்து வந்துள்ளோம். அவரவர் வாழ்வில் தவறு செய்திராவிட்டாலும் முன் வினையின் காரணமாக துன்பம் அனுபவிக்க வேண்டிவரும். "இப்பிறவி" என்பது உயிரின் பரிணாமத்தில் ஒரு சிறு பகுதியே. எதிர்பாராது வரும் சிக்கல்களுக்கு இம்முன் வினைகளே காரணம். தவமும் அறமும் இணைந்த அருள் வாழ்வு மூலம்தான் இதனை மாற்ற இயலும்.,
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக