Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

செவ்வாய், 31 டிசம்பர், 2019

❓ *கேள்வி: சுவாமிஜி! இன்றைய அரசியல், பொருளாதார நிலைகளில் உள்ள சீர்கேடுகள் எவ்வாறு நீங்கும்?*


 *பதில்:* உழைக்காமல் இருக்கக் கூடாது என்று கடமைகளை வலியுறுத்தவும், கடமையின் மேன்மை பற்றி உணர்த்தவும் வகுக்கப்பட்ட நெறிமுறைகள் தான் பிற்காலத்தில் பொருளாதாரம் என்ற துறையாகியது. பொருட்கள் ஈட்டல், காத்தல், உய்த்தல், பிறர்க்களித்தல் என்ற கூட்டுறவை உணர்த்த வகுக்கப்பட்ட சமுதாய நெறிமுறைகள் அரசியல்துறையாகியது. கடமைகளைச் செய்வதிலும் பொருள்துறையிலும் ஒருவருக்கொருவர் துன்பப்படுத்தாமல் இருக்க உணர்த்திய நெறிமுறைகள் மதங்கள் என்றாயிற்று. என்றாலும் இப்பொறுப்பில் உள்ள மனிதர்கள் பொருள், புகழ், செல்வாக்கு புலனின்பத்திற்கு அடிமையாகி இன்னும் வேண்டும் இன்னும் வேண்டும் என்று பேராசை கொண்டு வாழும் நிலையால் தான் இத்தனை சீர்கேடுகளும் ஏற்பட்டுள்ளன.
பொருளாதாரம், அரசியல், மதம் என்ற மூன்று துறைகளும் ஒன்றுக்குள் ஒன்றாக பின்னிப் பிணைந்துள்ளன. இந்த மூன்று துறைகளிலும் பொறுப்பிலுள்ளவர்களுடன் சமுதாய நலத்தொண்டில் ஈடுபட்டுள்ளவர்களும் கூடி, தன்னல நோக்கமின்றி விஞ்ஞான அடிப்படையில் திட்டமிட்டுச் செயல்பட்டுத்தான் இச்சீர்கேடுகளைப் போக்க வேண்டும்.
வாழ்க வளமுடன்!!
*அருள்தந்தை தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி*

வெள்ளி, 20 டிசம்பர், 2019

❓ கேள்வி: சுவாமிஜி! தாங்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவர்?


 பதில்: நான் எந்த மதத்தையும் சேர்ந்தவன் அல்ல. உலகப் பொது அருள்நெறி சமயத்தைச் சேர்ந்தவன். கர்மயோக நெறியே அதன் வேதமாகும். மனிதன் உடல் நலம், மன நலம் காத்து செயல் விளைவை மதித்து எவ்வுயிர்க்கும் துன்பம் இழைக்காமல் வாழ்வதே கர்மயோக நெறியாகும். இந்து மதத்திலுள்ள நம்பிக்கை, இஸ்லாமிய மதத்தில் உள்ள தொழுகை முறை, கிறிஸ்துவ மதத்தில் உள்ள தொண்டு, புத்த மதத்தில் உள்ள ஆராய்ச்சி, ஜைன மதத்தில் உள்ள ஜீவகாருண்யம் இவை எல்லாம் எனக்குப் பிடிக்கும்.
வாழ்க வளமுடன்!!
அருள்தந்தை தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

சனி, 23 நவம்பர், 2019

பிழைப்பு ஓர் சிந்தனை



அன்று ஒரு நாள் ஈரோடு மன்றத்திலே வாழ்க்கை தத்துவம் குறித்து மகரிஷி அவர்களின் அற்புத அருளுரை.

கேள்வி நேரத்தில் ஒரு அன்பரின் கேள்வி : வாழ்க்கையை ஏன் பிழைப்பு என்று கூறுகிறோம்?

நான் கூட நினைத்தேன், இது என்ன கேள்வி என்று. வெறும் வழக்கு சொல்தானே பிழைப்பு,,

ஆனால் ஸ்வாமிஜி அவர்கள் அழகாக விளக்கம் சொன்னார்கள் பாருங்கள் எல்லோரும் அசந்து விட்டோம்.

நீண்ட பதில். இங்கு எளிமையாக உட்கருத்தை மட்டும் பதிவிடுகிறேன்.

உலகம் சுழல்கின்ற வேகத்தால் அதன் விளிம்பில் மையத்தை விட்டு விலக்கும் அல்லது தள்ளும் சக்தி உண்டாகிறது. இதனால் உடலில் இருந்து கோடிக்கணக்கான நுண்ணியக்கத் துகள்கள் உடலை விட்டு தொடர்ந்து வெளிநடப்பு செய்கின்றன.

அதே போல பூமியின் மைய ஈர்ப்பு ஆற்றலால் முதிர்வுற்ற கோடிக்கணக்கான செல்களை தினமும் உடல் இழந்து கொண்டிருக்கிறது.

இந்த இழைப்பை ஈடு செய்ய புதிய சக்தி மிக்க செல்கள் உணவிலிருந்தும் காற்றிலிருந்தும் கோள்களிளருந்தும் நீரிலிருந்தும் பெறுவதால் உடலை நாம் புதுப்பித்துக் கொள்கிறோம்.

இவ்வாறு உடலின் ஆற்றல் இழப்பிற்கும், சேர்க்கைக்கும் இடையில் நாள்தோறும் மனிதன் சாவிலிருந்து தப்பி பிழைத்துக் கொண்டேயிருக்கிறான். இதனால் தான் வாழ்க்கைக்கு பிழைப்பு என்ற பெயர் வந்தது.

எங்கு தேடினாலும் கிடைக்காத
விளக்கம். அவர் ஒருஞானச் சுரங்கம்.

குருவே சரணம்,,
வாழ்க வளமுடன்,,

புதன், 20 நவம்பர், 2019

*Practice and Proficiency*

*Daily A Noble Thought - Nov 20*


Six temperaments (Greed, anger, miserliness, immoral sexual passion, vanity and vengeance) blossoming as sinful actions, just not only taints life and mind.  They taint the physical body too.

Streamlining six temperaments to six good qualities, is the important part of introspection, second stage of SKY Yoga. Just rate how were you when indulging in six temperaments?  Rate as well how have you improved after learning SKY Yoga now.  Try further. Succeed in it.

Practice Introspection regularly. Can do once a week, on Sunday. Can do once a month, on full moon day. Can do whenever convenient to you. Allocate atleast one hour then. Meditate for half an hour. Analyse well in Thuriyam stage.  Analyse the thoughts. Analyse six temperaments one by one. Find the deficiencies of you.  Analyse the ways to clear it. 

Take the strong auto-suggestions to clear the deficiencies. Mental strength obtained through meditation, Clarity obtained through introspection would help to you keep in awareness, protect by rescuing from the influence of six temperaments and sinful acts.

Analyse all the sinful acts committed in the past, one by one. If you can do any remedies for them now, plan to do it immediately.  If you cannot do any remedial action now, seek forgiveness in mind, from the affected. Bless them wholeheartedly that they come out of the sufferings created by you and lead good life.

Don't hold the guilty consciousness in mind. Guilty consciousness would spoil our life. Can correct the correctable mistakes. There is no use in fusing (worrying) that 'alas, I have committed mistake!'.  Do introspection.  Be proficient in maneuvering six temperaments.

*- Vethathiri Maharishi*

வெள்ளி, 15 நவம்பர், 2019

Spiritual Service

Daily A Noble Thought -Nov 14


Even while my physical body is operating, the consciousness emanated and expanded from it, functions worldwide as fountain of love. At some specific times, it spreads whole universe and overflows in great calmness.

Peace enjoying consciousness on expanding, after realizing all three layers of knowledge (attached knowledge, learnt knowledge and ultimate wisdom), while it is operating conditioned to any object or living, the evolving properties are compassion, love, morality, duty and sacrifice.

Same consciousness while expanded but before attaining peace, conditioned to objects, shapes as six temperaments and sinful acts causing miseries.  Thus considering the long term continuous history of consciousness, the responsibility increases in life and activities.

I’m overflown with your flood of love, along with the light of consciousness and special responsibility of experiences, penetrating in you.  All of you are joined in my spiritual service on this life link and oneness of consciousness. 

- Vethathiri Maharishi

Silence Period

*Daily A Noble Thought - Nov 15*

*Silence Period*

By practicing SILENCE only, we can win over the thoughts. Life would improve once we record and implement the good thoughts available in silence and the imprints of the previous good deeds.

You may notice all these in experience.  We are at emotional state when we speak. (During that state) We would get the thoughts of all those emotional people from universal magnetism.  They would mingle with our brain and come as our thoughts.

But, in silence once we reach calm state, quietly analyse, realize almighty and connect with it; all those saints who realized this, their powers and thoughts would come as our thoughts. We can experience all those things.  Ideal time to experience the same is silence period.

How long we can practice Silence?

You can be silent for a day.  There may be two days. But, record in mind all those benefits realized in silence period. Utilize all those in life.

Over a period, even one hour silence is fine.  But, even that one hour would be successful.  You can hold the mind instead of running here and there.

Let’s assume that we are used to do so.  Whatever we do, those things gets recorded as imprints and comes as thoughts at times, isn’t it?  Similarly, the silent imprints acquired in divine state during silence, would come even in normal period and take your mind to calm state. 

*- Vethathiri Maharishi*

செவ்வாய், 12 நவம்பர், 2019

People’s Intellectual Growth

The world is slowly changing in its habit of people considering someone as an Intellectual, Great Gentleman, Political leader, Saint, Laureate etc., who put the innocent people in more illusion and lead the life through it.
People’s intellect is growing day by day to compare and analyse on any thought whom-so-ever say it, with nature, mankind history, forefather thoughts, current trend in the world, one’s own knowledge and science.
The innocent darkness of spending useless time in praising one individual man or his thoughts and render himself as useless, is fading away from people on self-analysis.
Resultantly it is certain that in the short time frame, around the entire world, the environment would be setting-in for the man to understand his own value and lead life as a man.
- Vethathiri Maharishi

ஞாயிறு, 10 நவம்பர், 2019

❓ கேள்வி: சுவாமிஜி! முக்கியமான காரியங்களைத் தொடங்கும்போது வாரம், நட்சத்திரம், திதி, யோகம், கரணம் என்ற பஞ்ச அங்கங்களையும் பார்க்க வேண்டும் என்று சொல்கிறார்களே இது ஏன்?


 பதில்: மனிதன் எடுக்கின்ற காரியத்தை வெற்றிகரமாக முடிக்க இயற்கையின் துணையை நாடுதல் என்பது பழக்கத்திலிருந்து வருகிறது. தமக்கு ஏற்ற கோள்களின் நிலைகளிலிருந்து நன்மையே கிடைக்கின்ற காலத்தைக் கணிக்கவே வாரம், நட்சத்திரம், திதி, யோகம், கரணம், என்ற ஐந்தையும் பார்க்கின்ற பழக்கத்தை வைத்துள்ளார்கள். இந்த விஞ்ஞான காலத்தில் இவ்வளவையும் பொருத்திப் பார்க்கவே முடியாது.
வாழ்க வளமுடன்!
அருள்தந்தை தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

காந்த தத்துவம் – PHILOSOPHY OF MAGNETISM



2. மனத்தூய்மை

பொருள், புகழ், செல்வாக்கு, புலன், இன்பம் நான்கிலே
புகுந்தழுத்தி மனித மனம் புண்ணாய் வருந்துவோர்
இருள்நீங்கி இன்பமுற என் விளக்கம் கூறுவேன்
இறைநிலையே எங்கெதிலும் இருப்பாய் அமர்ந்தாற்றிடும்
அருள் நடனக் காட்சியை அகத்துணர்வாய்க் கொள்ளுவீர்,
அப்போதும் எப்போதும் அறிவு விரிவாகியே
மருள்நிலையில் ஏற்ற ஆசை மற்றும் பழிச் செயலெல்லாம்
மாறிவிடும் மெய்ஞ்ஞானம் மலரும் உள்ளொளி என.

விரிவுரை

உலகில் வாழும் உயிரினங்கள் அனைத்திலும் உடல் அமைப்பாலும் ஆளும் அறிவு நிலையாலும் மனிதன்தான் சிறந்தவன். எனினும் மனிதப் பிறவியின் நோக்கத்திற்கே பொருந்தாத வினைப்பதிவுகள் அவனிடம் கரு அமைப்பு மூலம் அடங்கியுள்ளன.

மனித உருவம் தோன்றுவதற்கு முன்னம் ஈரறிவிலிருந்து ஐயறிவு வரையில் பிற உயிரைக் கொன்று அவற்றின் உடலையே உணவாகக் கொண்டு வாழ்ந்த பதிவுகள் பல்லாயிரம் தலைமுறைகளாகத் தொடர்ந்து வந்தன.

மனிதனாகப் பிறந்தும் ஆறாம் நிலையறிவு விரிவடைந்து சிந்தனையாற்றல் தோன்றிய வரையில் கரு அமைப்பு பதிவுகளாகிய சஞ்சித கர்மத் தொடராக விலங்கின வாழ்க்கை முறையிலே வாழ்ந்து விட்டான்.

பிற உயிரின் பிறப்புரிமையையும், சுதந்திரத்தையும் பறிப்பதாகிய, வருத்தியும் கொன்றும் வாழும் விலங்கினச் செயல் பதிவுகளிலிருந்து விடுதலை பெற மனத் தூய்மையும் வினைத்தூய்மையும் எங்கோ ஒருவர் விழிப்புணர்வால் பெற்று விட்டார். உலகில் பெரும்பாலான மக்களுக்கு இந்த அருள் விளக்கம் ஏற்படவில்லை.

இயற்கை வளங்களை வாழ்வின் வளங்களாக அறிவாலும் செயலாலும் மாற்றி, ஒருவருக்கொருவர் உதவியும் ஒத்தும் வாழவேண்டிய சமுதாய அன்புநெறிதான் மனிதனுக்கு அவசியம்.

இது மனித அறிவுக்கும் வாழ்வுக்கும் பொருத்தமான வாழ்க்கை முறை.

இதற்குப் பயிற்சியால் மனத்தூய்மையும் வினைத்தூய்மையும் பெற வேண்டும். அதன் பயனாக அறிவு விரிவடைந்து குறுகிய எண்ணங்களிலிருந்தும் செயல்களிலிருந்தும் மனிதன் விடுதலை பெற்று அறிவு விரிந்து இயற்கை நியதிகளோடும் இறைநிலையோடும் கலந்து அமைதியும் இன்பமும் பெறுவான்.

அறிவை இறைநிலையோடு இணைத்து அறவாழ்வில் பழகிக் கொள்ளாதவர்களுக்கு அவர்களுக்குள் சஞ்சித வினையாக அமைந்திருக்கும் விலங்கினப் பதிவுகளாகிய பறித்துண்டு வாழும் தன்மை பிறரிடமிருந்து பொருள், புகழ், அதிகாரம், புலன் இன்பம் இவற்றைக் கவர்ந்து கொள்ளும் ஆசையாகப் பெருகி இந்த நாலும் எவ்வளவு இருந்தபோதிலும், இன்னும் வேண்டும், இன்னும் வேண்டும் என்ற பேராசையாகி அதற்கேற்ற செயல்களால் உடல் கெட்டு, உள்ளம் கெட்டு, மனித உறவில் இனிமை கெட்டு, தனது செயல்களைத் தொடரவும் முடியாமல், நிறுத்தவும் முடியாமல் தேக்கம் கொண்டு மனம் புண்ணாகி வருந்திக் கொண்டிருக்கிறார்கள்.

மனம் புண்பட்டு இந்த நிலையிலே அமைதியிழந்து தவிப்போருக்கு நான் எனது அனுபவங்களைக் கொண்ட விளக்கம் கூறுகின்றேன்.

மறைபொருள் காந்தமானது பேரியக்க மண்டலம் முழுவதும் நிரம்பியிருக்கிறது. அதற்கு உட்பொருளாக இறைநிலை அமர்ந்து அழுத்தம் என்ற கவர்ச்சியாற்றலாக பேரியக்க மண்டல நிகழ்ச்சிகள் அனைத்தையும் நடத்தி வருகிறது. மனத்தால் விரிந்து அந்த இறைநிலையுணர்வோடு விழிப்பாய் இருங்கள்.

மேலும் அந்த இறைநிலையின் நுண்பகுதி விண்ணாகி விண்துகள்கள் இணைந்த பஞ்ச பூதங்களாகி சூரியன் முதலிய கோள்களாகி உலகமாகிய பரிணாம நியதியினை நினைந்து பாருங்கள். உலகில் ஓரறிவான தாவரங்களிலிருந்து ஈரறிவு, மூவறிவு, நாலறிவு, ஐயறிவு என பலகோடி உயிரினங்கள் தோன்றி அவற்றின் தொடராக நாம் தோன்றி இப்போது இங்கே மனித உருவமாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்ற உண்மையை நினைத்துப் பாருங்கள். மனம் எவ்வளவு விரிவடைந்து எல்லை கட்டிய உணர்வுகளிலிருந்து விடுபட முடிகிறது என்ற அனுபவத்தில் காணுங்கள். மேலும் உயிர்கள் தோன்றுகின்றன, வாழ்கின்றன, முடிகின்றன. மனிதனும் இவ்வாறேதான் இயற்கை நியதி என்ற வெள்ளத்தில் மிதந்து கொண்டிருக்கிறான். பிறப்பதற்கு முன்னம் எப்படியிருந்தேன், இறந்த பின் எப்படியிருப்பேன், பொருள், புகழ், அதிகாரம், புலன் இன்பத்திற்காக பிறர் வளம் பறித்து எவ்வளவு காலம் தான் வாழ முடியும்? இந்தச் செயல்களால் மனித குலத்தில் துன்பங்கள் அல்லவா பெருகிக் கொண்டிருக்கின்றன. இதே குற்றச் செயல்களையும் பழிச்செயல்களையும் நானும் செய்து கொண்டுதான் வாழ வேண்டுமா? என்று எண்ணி எண்ணி சிந்தியுங்கள். உலக ஆசைகளிலிருந்து எந்த அளவு அறிவு விடுபடுகிறதோ அந்த அளவிற்கு விரிந்த இறைநிலையோடு இணைந்து நிற்கும். மனம் அமைதி பெறும். வினைத்தூய்மையும் மனத்தூய்மையும் இயல்பாக உண்டாகும். இறையுணர்வு என்ற மனம் விரிந்த அகக்காட்சியால் பொருள், மக்கள் பற்றுக்கள் தேவைக்கு ஏற்ற அளவில் துய்க்கவும், கடமைக்கே வாழவும் ஏற்ற மனிதப் பண்பாடு ஓங்கும். மனதை விரிய விடுங்கள், விடுதலை பெறுங்கள். இந்த விடுதலைதான் பாவச் செயல்களிலிருந்து விடுதலை. இதுவே அறிவிற்கு முழுமைப் பேறாகிய முக்தி.

அன்புமிக்க அருள் விளக்கத் தொண்டன்
- வேதாத்திரி

சனி, 9 நவம்பர், 2019

திருக்குறள் உட்பொருள்

♨திருக்குறள் உட்பொருள்♨

"கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி எல்லா உயிரும் தொழும் "

இந்த குறளுக்கு விளக்கம் அளித்தவர்கள் எல்லோரும்;
பிற உயிர்களை கொல்லாமல்; உணவுக்கு புலால் வேண்டாம் என்று மறுத்தவர்களை மற்ற எல்லா உயிர்களும் கை கூப்பித் தொழும் என்று விளக்கம் அளித்துள்ளார்கள்.

அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்களின் விளக்கம் :-

மற்ற உயிர்களைவிட மனிதனிடம் அமைந்துள்ள  ஆறாம் அறிவின் சிறப்பு யாதெனில்; மனம், உயிர், மெய் எனும் மூன்று மறை பொருட்களையும் அறியும் திறமே ஆறாம் அறிவு.இந்த நுண்ணறிவால் பிற உயிர் உணர்தலாக பெறும் இன்பத்தின் அல்லது  துன்பத்தின் அளவை யூகித்து உணர்ந்து கொள்கிறான்.துன்பம் கண்ட உயிர்களிடத்தில் இரக்கம் கொண்டு தக்க உதவி செய்து அவ்வுயிர் படும் துன்பத்தைப்
போக்குகிறான்.இது சிந்தனையாற்றல் உயர்ந்த நிலையில் ;பழக்கத்தை விளக்கத்தின் வழியில் வாழும்போது அந்த  முரண்பாடு நீங்கிவிடுகிறது.

இந்த நிலையில்  ஒரு நண்பர் இல்லத்திற்கு விருந்தினராக போகிறார்.அங்கு அவருக்கு மாமிச புலால் உணவை அன்போடு படைக்கும் போது; எனக்கு புலால் உணவு வேண்டாம் என்று கூறுகிறார். மீண்டும் விருந்து படைத்த அன்பரோ அன்பின் மிகுதியால் அவரை உண்ணும்படி வேண்டுகிறார்.உடனே விருந்தாளி இரு கைகளையும் கூப்பி புலாலை மறுத்து தனது உறுதிப் பாட்டை விளக்குகிறார்.
கைகூப்பி மறுத்த பிறகு மீண்டும் வற்புறுத்த மாட்டார்கள்.

கைகூப்பி மறுக்கும் செயல் புலால் உண்ணாமையில் அவன் கொண்டுள்ள உறுதிப்பாட்டை
விளக்குகிறது. அந்த  உறுதிப்பாடே உயிர்களிடத்தில் அவன் கொண்டுள்ள கருணயால்,அன்பால் விளைந்தது.அத்தகைய கருணை உள்ளம் கொண்டவரிடம் எல்லா உயிர்களும் அன்பு பாராட்டும்.தஞ்சமடையும்.

இந்த குறளில் சரியான கருத்து விளங்க வேண்டுமானால்;கைகூப்பி  என்ற சொல்லை மறுத்தானை என்ற சொல்லுக்கு முன் வைத்துப் பார்க்க வேண்டும்.

"கொல்லான் புலாலை கைகூப்பி மறுத்தானை
எல்லா உயிரும் தொழும்"

என்ற விளக்கம் கிடைக்கும்.

'கைகூப்பி எல்லா உயிரும் தொழும்' என்றால் கருத்து பொருந்தாது. 'கைகூப்பி மறுத்தானை எல்லா உயிரும் தொழும்' என்றால் அந்த அன்புள்ளத்திலிருந்து எழும் மன அலைச்சுழல் எல்லா உயிர்களையும் வசீகரிக்கிறது, நட்பு கொள்ளச் செய்கிறது என்று கொள்ள வேண்டும்.

-அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி

இந்த உட்கருத்தில்தான் திருவள்ளுவர் என்ற முனிவன் இந்த குறளை இயற்றியிருக்கிறார் என்பதை மகரிஷி அவர்கள்; திருவள்ளுவர் இந்தக் குறளை எழுதும் போது எந்த மன அலைச்சுழலில் இருந்து  எழுதினாரோ அதே அலைச்சுழலுக்கு சென்றுதான் இந்த விளக்கத்தை அளித்திருக்கிறார்கள் என்பது புலானாகிறது.

குரு மகானின் அலைச்சுழலில் இணைவோம்!

ஓங்கி ஒலிப்போம்
வேதாத்திரியம்.

வாழ்க வளமுடன்

வெள்ளி, 8 நவம்பர், 2019

❓ கேள்வி: ஐயா, காந்தக் களத்தில் எவ்வாறு பதிவுகள் ஏற்படுகின்றன?

 பதில்: எந்தச் செயல் செய்தாலும் அது அலை வடிவத்தில் பதிவாகிறது. கையை இந்த நாற்காலியில் ஊன்றி வைத்தால் அங்கு அழுத்துகிறதல்லவா? அது தான் ஜீவனுடைய பதிவு.
நம் உடலில் உள்ள ஜீவகாந்த ஆற்றல் வெப்ப ஓட்டத்தில் சேரும் போது ஒளி உணர்வாக மாற்றம் பெறுகிறது. அதற்குரிய கருவியாகிய கண்கள் மூலம் வெளியில் ஒளி அலையாகச் சென்று கொண்டிருக்கிறது. நமக்கு முன்னால் ஒரு பசு நிற்கிறது என்று வைத்துக் கொள்வோம். 4 அடி நீளம் 2 அடி உயரமுள்ள பசு உருவத்தின் மீது நம் கண்களிலிருந்து வெளியேறும் ஒளி அலையானது மோதி, தடை ஏற்பட்டதால் அலையியக்கத் தத்துவத்தின்படி திரும்பவும் நமது கண்களுக்கு வந்து சேர்கிறது. இறையாற்றலின் தன்னிருக்கச் சூழ்ந்தழுத்தும் பேராற்றலால் சுருங்கி நமது கண் கருவிழிகளில் படும்போது அவ்வளவு பெரிய பசு கொசுவை விடச் சிறிதாக ஆனால் உருவத்தில் எந்தக் குறையும் இன்றி பதிவாகி பார்வை நரம்புகள் வழியே மூளைக்குச் சென்று இதற்கு மேல் சுருங்க முடியாது என்ற நிலையில் உடல் முழுவதும் பரவுகின்ற ஜீவகாந்தக் களத்தில் பதிவாகிறது. காந்தக் களம் உடல் முழுவதும் சுழன்று கொண்டு இருப்பதால் இப்பதிவுகள் உடல் முழுவதும் அமைகிறது.
வாழ்க வளமுடன்!!
அருள்தந்தை வேதாத்திரி மகரிஷி

புதன், 6 நவம்பர், 2019

Acuity & Integrity

In this vast Universe, mankind’s evolution birth, growth, action all are nature’s ultimate unique things. Mankind is nature’s ultimate speciality. Human mind is the repository having such special treasures of nation. For long, nature’s every wonder is compressed and stored in man’s genetic center.

By understanding universal magnetism and bio-magnetism, one can know all truths of life and all secrets of Universe. In sixth sense, two higher order skills of Acuity and Integrity, is present. Acuity prevails as Science and Integrity as Philosophy. Knowledge as magnetism develops both these skills.

Spiritual knowledge the foundation of human mind, can enrich fully. In this way, if one gets to know the Unified force, Life force, Magnetism which are required to be intuitively learnt, the scientific knowledge would grow in him, the divine properties the love & compassion would blossom; his life would be calm and pleasant.

- Vethathiri Maharishi

செவ்வாய், 5 நவம்பர், 2019

"தான்" என்ற அதிகாரப் பற்றும், "தனது" என்ற பொருள்பற்றும் (EGO)

ஓர் விசித்திரமான தம்பதிகள் - "தான்" என்ற அதிகாரப் பற்றும், "தனது" என்ற பொருள்பற்றும் (EGO)
மனித உடலில் சீவகாந்தம் என்றும், பேரியக்க மண்டலத்தில் வான் காந்தம் என்றும் கூறப்படுவது எதுவோ, அதைப்பற்றி இன்னும் விஞ்ஞானம் தெளிவாகத் தெரிந்து கொள்ள முடியவில்லை.
மனிதன் இறைநிலையை உணராததால் பேரியக்க மண்டலத்தில் நடைபெறக்கூடிய நிகழ்ச்சியையும் அதன் நிர்வாகத்தையும்
தெரிந்து கொள்ள முடியவில்லை.
அதனால் அவன் செய்யக் கூடியவை சிறு செயலாக இருந்தாலும்,
நான் அதைச் செய்தேன், அதைச் சாதித்தேன் என்றும்,
நான் எத்தனை பட்டம் வாங்கியிருக்கிறேன் என்றும்,
எவ்வளவு செல்வம் வைத்திருக்கிறேன் என்றும் பூரிப்பு அடையும் பொழுது மனிதனிடம் தன்முனைப்பு (Ego) உண்டாகிறது.
அந்தத் தன்முனைப்பிலிருந்து இரு எண்ணக் கோடுகள் உண்டாகின்றன.
அது -"தான்" (Possessiveness) என்ற அதிகாரப் பற்றும்,
"தனது" (Aggressiveness) என்ற பொருள்பற்றும் ஆகும்.
இவை இரண்டும் ஒரு விசித்திரமான தம்பதிகள்.
இவர்களுக்குப் பிறந்த துடுக்குத்தனமான பிள்ளைகள்தான்
ஆறு பேர்கள் அவர்கள்
பேராசை, சினம், கடும்பற்று, முறையற்ற பால்கவர்ச்சி, உயர்வு தாழ்வு மனப்பான்மை, வஞ்சம் எனும் ஆறுகுணங்கள்.
இவற்றை, காம, குரோத, லோப மோக, மத, மாச்சரியம் என்று வடமொழியில் கூறுவார்கள்.
இந்த அறுகுண வயப்பட்டு ஒரு மனிதன் எந்தச் செயல் செய்தாலும்
அது நேர்மையாகவும் இருக்காது. நல்ல பயனையும் தராது.
இந்த ஆறுகுண வயப்பட்ட மனநிலையில் மனிதன் செயல்படும் பொழுது
ஐந்து பெரும் பழிச் செயல்களான பொய், சூது, கொலை, களவு, கற்புநெறி பிறழ்தல் ஆகிய செயல்களைச் செய்கிறான்.
உயிரை உணராததனால் உணர்ச்சி வயப்பட்ட (Emotional Mood) எண்ணங்களான சினம், பொறாமை, தோன்றி உயிராற்றலை ( Life Force ) மனிதன் இழக்கின்றான்.
வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!!
தத்துவஞானி வேதாத்திரி மகரிசி

திங்கள், 4 நவம்பர், 2019

அக உணர்வு மலர்த்தும் மகத்தான சீவகாந்தம்

வேதாத்திரிய மெய்விளக்கம் 04-11-2019 உலக அமைதி நாள் 04-11-0034
Image may contain: 1 person, smiling, beardஅக உணர்வு மலர்த்தும் மகத்தான சீவகாந்தம்
"சீவகாந்தம்" என்பது, இருப்புநிலை - இயக்க அலை என்ற இரண்டு தத்துவங்கள் கூட்டாகச் செயல்படும் பேராற்றலாகும்.
உடலுக்குள்ளாகக் காற்று இரத்தம் சீவகாந்தம் இவை எப்போதும் ஓடிக் கொண்டேயிருப்பதால் ஓரளவு உரசல்கள் இயற்கையாக ஏற்படுகின்றன.
இத்தகைய உரசல்கள் உடல் இயக்கம் மற்றும் மன இயக்கங்களுக்கு ஆக்க முறையில் அளவோடு இருக்கும்போது மனம் இந்த உணர்வுகளைச் சமநிலை உணர்வாக, அமைதி நிலையாக அனுபவிக்கின்றது.
எந்த விதமான உரசல் ஆனாலும் அந்த அளவிலே "சீவகாந்தம்" அழுத்தமாக, ஒலியாக, ஒளியாக, சுவையாக, மணமாகத் தன்மாற்றம் பெறுகிறது.
"சீவகாந்தம்" அவ்வாறு மாற்றம் பெறுவதையும் அதனால் ஏற்படும் ஆற்றல் செலவையும் மனம் (Mind), உணர்வாகப் பெறுகின்றது என்பதை இயற்கையின் நியதியாக மனதில் கொள்ள வேண்டும்.
தினசரி வாழ்வின் நிகழ்ச்சிகளாக இந்த உண்மையினை மனித மனம் உணர்ந்து கொண்டேதான் இருக்கிறது.
எனினும், "ஆறாவது அறிவுநிலை" போதிய வளர்ச்சி பெற்றுப் புற உணர்வோடு - அக உணர்வும் மலரும் போதுதான், உணர்ச்சிகளை அனுபவிக்கும் போது தான் உணர்பவனையும் அறியமுடிகிறது.
அணுவே எல்லாம்
அற்புதம்! அற்புதம்! அணுதான் முதல்காந்த நிலையமாம்!
அகில தோற்றங்களும் அதனின் இயக்கமே; அகம் நோக்கி,
தற்பதங்கண்டபின் தான்ஒரே சக்தியாய் பெருவெளியாய்
தன்அசைவு அணுவானதன்மையும் உணர்கிறோம்., தத்துவமே.
(ஞானக்களஞ்சியம் கவி: 1026)
அணுவைவிடப் பெரியதுமில்லை, சிறியதுமில்லை
மனிதனே! அணுவதனை மிகச் சிறிதென்று உரைக்கின்றாய்.,
மறந்தனை நீ, அதனைவிடப் பெரிதுஎது? எனஅறிய!
(ஞானக்களஞ்சியம் கவி: 1025)
அறிவின் அளவு
அண்டமனைத்தும் ஓர் அடியால் அளக்கலாம்.,
அணுக்குள் அடக்கலாம், அவ் அறிவின் அளவையறி!
(ஞானக்களஞ்சியம் கவி: 1194)
வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!
தத்துவஞானி வேதாத்திரி மகரிசி

ஞாயிறு, 3 நவம்பர், 2019

வேதாத்திரிய மெய்விளக்கம் ‌03-11-2019 ‌ உலக அமைதி நாள் 03-11-0034


அன்பர்களே.. நீங்கள் உட்கார்ந்திருக்கிறீர்கள், கொஞ்ச நேரம் கண்ணை மூடிக் கொண்டிருந்தால் எத்தனை எண்ணங்கள் வருகின்றன? எங்கிருந்து வருகின்றன? அவ்வளவும் எங்கே அடங்கியிருக்கின்றன? எப்படி வருகின்றன?
மூன்று வயது முதல் இன்று வரையில் நடந்த எல்லா நிகழ்ச்சிகளும் ஒவ்வொன்றாக நினைவிற்கு வந்து கொண்டே இருக்கும்.
நாம் செய்வது எல்லாவற்றையும், இறைநிலை (Static State, Unified Force, The Source of all the Forces) கருமையத்தில் பதிய வைக்கிறது.
மனம் என்பது அலை. இறையாற்றல் என்பது நிலை. நிலை அசையும்போது படர்க்கை நிலையிலே மனமாக இயங்கிக் கொண்டிருக்கிறது.
நமக்குள்ளாக நாம் என்னென்ன செய்கிறோமோ, அவற்றை இறைநிலை கருமையத்தில் இருப்புக் கட்டி வைக்கிறது.
கருமையம் (Genetic Center) என்பது - இறைநிலை, வித்துக்குழம்பு, உயிர்ச்சக்தி என்ற மூன்றும் சேர்ந்து எந்த உயிருக்கும் அதன் உடலின் மையத்திலே ஓர் இடத்தை எடுத்துக்கொண்டு அங்கே இயங்கிக் கொண்டிருப்பது.
எந்தப் பொருள் சுழன்றாலும் மையத்தில் அழுத்தமான இடம் ஏற்படும். உடலில் ஜீவகாந்த சக்தி சுழலும் போது மையம் கொண்டு விடுகிறது. உயிர்களின் மையத்தில் அழுத்தம் உண்டாகிறது. அதைதான் கருமையம் என்று சொல்கிறோம்.
அந்த மையத்தில், நாம் பார்ப்பது, கேட்பது எல்லாவற்றையும் இறைநிலை இறுக்கி சுருக்கி இருப்புக் கட்டிக் கொள்கிறது. மீண்டும் அந்தந்த மன அலைச்சுழல் (mind frequency) வருகிற போது இருப்பில் இருக்கக்கூடியதை மூளையின் செல்கள் விரித்துக் காட்டுகின்றன.
அதுதான் எண்ணம். சுருங்கியது விரிந்து எண்ணமாக உண்டானது. எண்ணம் உண்டானதால் உடலில் உள்ள எல்லாச் செல்களும் சேர்ந்து அந்த எண்ணத்தைப் பூர்த்தி செய்வதற்கு, செயலும் உண்டாகிறது.
செயலினால் இன்பமோ துன்பமோ அமைதியோ பேரின்பமோ உண்டாகிறது.
எண்ணம், செயல், விளைவு, இன்ப துன்ப உணர்வுகள் அத்தனையும் மீண்டும் நமக்குள்ளாக நமது தன்மைகளாகப் பதிவாகின்றன.
இப்படியே பதிந்து பதிந்து, எத்தனையோ கோடிப் பதிவுகளை நாம் வைத்திருக்கிறோம். அத்தனையும் சேர்ந்து நம் அறிவாட்சித்தரமாக (Personality) உள்ளது.


அறிவறியும் தவம்
இரு விழிகள் மூக்கு முனை குறிப்பாய்நிற்க
எண்ணத்தைப் புருவங்களிடை நிறுத்தி,
ஒருமையுடன் குருநெறியில் பழகும் போது,
உள்ளொளியே பூரித்து மூலமான
கருவுக்கு மேனோக்கு வேக மூட்டும்;
கருத்துக்கு இந் நிகழ்ச்சி உணர்வாய்த் தோன்றும்;
அருவ நிலையாம் ஆதி உருவாய் வந்த
அத்துவித ரகசியமும் விளக்கமாகும்.
(ஞானக் களஞ்சியம் கல்வி: 1466)


காந்த ஆற்றலின் பெருமை
அறிவே தான் "நான்" என்று ஐயமின்றி தேர்ந்தால்
அதுவேதான் படர்க்கையிலே அலைமனம் என்றறிவோம்!
அறிவதனின் இருப்பிடமோ, அடுத்த மறை பொருளாம்
‌ அதிநுண்ணிய பரம அணு; அதன்மையம் ஆகும்.
அறிவுக்கு மூலநிலை அகன்ற இறைவெளியே
அதனை வான்காந்த மென்றும், அப்பாலுக்காப்பால்
அறிவே தான் தெய்வமென்ற அகன்ற பரம்பொருளாம்;
‌ அறிவறிந்தால் அனைத்தறிவோம் அகம்தெய்வம் தானாம்.
(ஞானக்களஞ்சியம் கவி:1225)
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
தத்துவஞானி வேதாத்திரி மகரிசி

வெள்ளி, 1 நவம்பர், 2019

கருமையத்தூய்மை


காந்த நிலையறியாமல் கடவுள்நிலை அறிவதோ,
கருமையம் அறியாமல் அறிவினை அறிவதோ,
மாந்தராக வாழுகின்ற மாண்புடைய எவருக்கும்
மாற்றுவழி தத்துவத்தில் விஞ்ஞானத்தில் இல்லையே!
காந்தஆற்றல் உட்பொருள், கருமையத்துட் பொருள்,
கடவுளெனும் இறைவெளியே! இயக்க ஆற்ற லும்இதே!
காந்தமெனும் நிழல்விண்கள் தன்மாத்திரை ஐந்துமாய்,
கடைநிலையில் மனமுமாய்க் கலந்துளது வெளியோடு.
(ஞானக்களஞ்சியம் கவி: 1806)
உண்மைப் பொருளாகி உணர்ந்து விளக்கினேன்
காந்த நிலை உணர்ந்திடில், கடவுள் மனம் அதனிலே,
கண்டிடலாம் அதன் மாயத் திருநடனக் காட்சியாய்.,
மாந்தருக்குள் ஊறு, ஓசை, மணம், ஒளி, சுவை, மனம்
மற்றும் இன்பம் துன்பம் யாவும் மாயகாந்த விளைவுகள்.
சாந்தமான மனநிலையில் சலனமின்றி ஆய்ந்திட,
சந்தேகம் சிக்கலின்றி, சாட்சி கூறும் உன்உளம்.
வேந்தருக்கும் வேதருக்கும் வணிகருக்கும் பொதுஇது.,
விரிந்தறிவில் இறையுணர விளக்கினேன் விளங்கியே!
(ஞானக்களஞ்சியம் கவி: 1658)
தத்துவஞானி வேதாத்திரி மகரிசி
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்!!

புதன், 30 அக்டோபர், 2019

Spiritual Education

Suddenly the water flow increases in the river. No rains in the distance of many miles. Then how the water comes? If you know the reason for this, you can know how suddenly war comes in any nation? There is good rain at a place miles far away. That’s on high place. Rain water flows towards sea. Same water, is seen as flood in the dry river. Similarly innumerable hardships exists in the life of people across the world.
Cause for all miseries are the errors committed by people without knowing the value of people. How? To lead the virtual life, there is not a formal ‘spiritual education’; no training too. Hence, majority of people over indulge in Object, Fame, Power & Sensory pleasure; and go on increasing their desires. In reality, Objects and Sensory-pleasure are essential for humans.
Even then, to get that one need to gave sincere effort and labour. The desire to get the things and pleasure without work, is only in fame and power. Due to this, mankind in entire world have unending desire to have more and more, gets stuck in quadruple Objects, Fame, Power & Sensory pleasure, without getting fulfillment in anything. Once attain the wisdom (Brahma Gyan - Divine knowledge), the aforesaid four greed would vanish; mind would be fulfilled.
- Vethathiri Maharishi

செவ்வாய், 29 அக்டோபர், 2019

ஆசை! ஆசை! ஆசை! - ஆசையைப்பற்றி அருள்தந்தை!!


"தேவையைக் காரணமாகக் கொண்டு எழுந்த ஆசை தேவை நிறைவோடு நின்றுவிட வேண்டும்.
பசி தாகம் முதலிய இயற்கைத் துன்பத்தைப் போக்கிக்கொள்ள எழுந்த ஆசை துன்பத்தைப் போக்குவதோடு நின்றாக வேண்டும்.
உயிராற்றல் செலவைச் சரி செய்ய எழுந்த ஆசை அப்படிச் சரி செய்வதோடு நின்றாக வேண்டும்.
ஆனால் பொதுவாக அப்படி நிற்பதில்லை. தேவை நிறைவின்போது ஏற்பட்ட திருப்தியின் மீது அல்லது இன்பத்தின் மீது உயிர் மயங்கிவிடுகிறது.
.
எந்தக் காரியம் இன்பத்தைத் தந்ததோ, அந்தக் காரியத்தைத் தேவையில்லாமலே செய்ய விழைகிறது !.
அதாவது உண்மையான தேவை இல்லாமலேயே ஆசை எழுகிறது.
எழுகிற துன்பத்தைத் தீர்க்கும் வகையில் ஆசை தோன்றியதுபோக, இன்பத்தைச் செயற்கையாகத் தேடும் முயற்சியிலே இப்போது ஆசை எழுகிறது.
இந்த ஆசையைத் தான் கட்டுப்படுத்த வேண்டும்.
எழாமலேயே காக்கவும் வேண்டும்.
உண்மையான உயர்வான தேவையின் காரணமாக அல்லாமல் ஏற்படும் ஆசைகளெல்லாம் அறிவின் மயக்கத்தால் தோன்றுவன.
அவை துன்பத்தைத்தான் தரும்.
.
தகுந்த காரணத்தாலேயே ஏற்பட்ட இச்சைகளானாலும், அவ்வாசைகளை நிறைவு செய்யும் முயற்சியில் தனக்கோ பிறர்க்கோ எதிர்கால விளைவாக துன்பம் தோன்றுமானால், அவ்வாசைகளும் தடுக்கப்பட வேண்டியவையே.
ஆசையை அடக்கினால் அடங்காது.
உணர்ந்து ஆராய்ந்து அதனைப் பிறந்த இடத்திலேயே ஒடுங்கச் செய்ய வேண்டும்.
தேவையா? வசதி இருக்கிறதா? பின் விளைவு என்ன? என்று ஆராயும்போது நிறைவு செய்யக்கூடாத தீய ஆசைகள் அப்போதே அமைதிபெறும்.
பிறந்த இடத்திலேயே அதாவது மனதிலேயே தானாகவே மாய்ந்துவிடும்.
.
எழுந்த ஆசை செயலானால் அதன் காரணமாக விளையும் நன்மை, தீமை பற்றிய சிந்தனையின்றி, ஆராய்ச்சி, தெளிவு, திடசங்கற்பமின்றி, ஆசையை அதன் இயக்கத்திற்கு விட்டுவிட்டால், அனுபோகத்தைப் பெறாதவரை அதற்கும் மனதிற்கும் அமைதி இல்லை.
எனவே நமது "மனவளக்கலை" ஆகிய குண்டலினியோக (Simplified Kundalini Yoga) பயிற்சியின் முக்கிய அம்சம் "தற்சோதனை" (Introspection) .
தற்சோதனை பயிற்சியில் உள்ள கோட்பாடுகளுக்கு உட்பட்ட பிறகும் மிச்சப்படும் ஆசை ஒன்றுக்கு மேல் இருக்குமேயானால், அதை ஒவ்வொன்றாக எடுத்து செயல்படுத்தினால் வெற்றி நிச்சயம்".
.
தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!!

வியாழன், 24 அக்டோபர், 2019

❓ கேள்வி: சுவாமிஜி! ஒருவர் சமுதாயத்தை முன்னேற்றுவதற்காகப் பாடுபடுகிறார். அதற்காகத் தனி ஆசிரமத்தில் தங்கி அதற்கான பணிகளைச் செய்து வருகிறார். அவருடைய இறப்பிற்குப் பின் அவருடைய உயிரின் நிலை என்ன?


 பதில்: எந்தச் சேவையைச் செய்தாலும் ஒருவர் எல்லை கட்டிய நிலையிலேயே தன் மனதைப் பழக்கியிருந்தால், உயிர்விட்ட பிறகும் அது இந்த உலகத்தையொட்டியே (Earth bound) இருக்கும். அது வாழும் மனிதரோடு இணைந்து செயல்படும்.
பூவுலகத்தின் புவியீர்ப்பு களத்தைத் தாண்டிச் செல்ல வேண்டுமானால் மனம் பரந்து விரிந்து பிரபஞ்ச நிலையிலிருக்கப் பழகியிருக்க வேண்டும். உயிரிலுள்ள ஆணவம், கன்மம், மாயை என்ற முக்களங்கங்களும் நீங்கும் வரை அது இறைநிலையை அடைய முடியாது.
வாழ்க வளமுடன்!!
அருள்தந்தை தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

ஞாயிறு, 20 அக்டோபர், 2019

நிருவிகற்ப நிலை

நிருவிகற்ப நிலை என்றால் என்ன?
யோகத்தின் இறுதி நிலையாகிய சமாதி நிலையில் பல்வேறு நிலைகள் இருப்பதாக மகான்கள் கூறுகின்றனர். அதில் ஒரு நிலை நிருவிகற்ப சமாதி நிலை. இதனை, 
“நேசநிருவிகற்ப நிஷ்டையல்லால் உன்னடிமைக்கு ஆசை உண்டோ நீ அறியாதது
அன்றே பராபரமே”என்கிறார் தாயுமானவர்.
இதனை உறக்கமற்ற உறக்கநிலை என்பர்.
இந்த நிலையில் உறக்கத்தில் தான் என்ற உணர்வும், தன்னைச் சூழ்ந்துள்ள உலகைப்
பற்றிய நினைவுகளும் இல்லாமல் இருக்கும். இந்த நிலையை அடைந்தவன் அனைத்து
சுக போகங்களிலிருந்து விடுபட்டு பூரணப் பொலிவுடன் விளங்குவான்.
ஆசையும் துன்பமும் அவனை அணுகாது. இந்த நிலையையே வேதாத்திரி மகரிஷி அவர்கள்
“நிருவகற்ப நிலை” என்கிறார்.
வாழ்க வளமுடன் !

வழக்க பழக்கங்கள் விளக்கம்

வேதாத்திரிய மெய்விளக்கம் 20-10-2019 உலக அமைதி நாள் 20-10-0034
வழக்க பழக்கங்கள் விளக்கம்
'Image may contain: 1 person, beard
எந்தெந்தப் புலன்கள் மூலமாக செயல்கள் செய்து அனுபோகம், அனுபவம் பெறுகிறோமோ அவையெல்லாம் அந்தந்த உறுப்புகளில் பதிவாகி திரும்பத் திரும்ப மீண்டும் அந்த எண்ணம்; நினைவு வரும் பொழுது அதே நினைவு, அதே காட்சி இவை மூலமாக எண்ணம் வந்து விடுகிறது.
எண்ணமும் செயலும் தேவையாக, பழக்கமாக, சூழ்நிலைக் கவர்ச்சியாக மாறி அடிக்கடி மனிதனிடம் செயல்படுகின்றது. இது போன்றே நாம் பேசும் பேச்சுக்களும் பதிவாகின்றன.
நாவில் இயக்கப் பதிவாக, உடல் முழுவதும் ஒலியலை அதிர்வுப் பதிவாக, மூளையில் நினைவுப் பதிவாக, வித்தில் தரப்பதிவாக, பிரபஞ்ச உயிரிலும், பிற உயிர்களிலும் பிரதிபலிப்புப் பதிவாக அமைகின்றன.
இந்த விளக்கத்தைக் கொண்டு ஓர் எண்ணம், ஒரு செயல் எவ்வாறு பதிவு, பிரதிபலிப்பு, செயலால் இன்ப துன்ப விளைவுகள் என்ற நான்காக மாற்றம் பெறுகிறது என்பதை உணரலாம்.
இந்த உண்மையை உணர வேண்டும். இதற்குப் படிப்பு ஒன்றும் பயன்படாது. எந்த விஞ்ஞான கருவியும் கூட பயன்படாது.
நம்முடைய மனம், நம்முடைய வாழ்க்கை முறை, நம்முடைய இன்ப துன்ப உணர்வுகள், நம் சிந்தனை இதனைக் கொண்டு உட்கார்ந்து அதற்கு உரிய முறையில் ஆராய்ச்சி செய்து அவரவர்களே தெரிந்து கொள்ள வேண்டியது தான்.
நற்பழக்கம்
பழக்கத்திற்கும் கூர்ந்த விளக்கத்திற்கும் இடையே
பாருலகில் மனிதரெல்லாம் போராடு கின்றார்.
பழக்கத்தில் வளர்ந்தமக்கள் மாற்றுவது கடினம்
பாலர்களின் நற்பழக்கம் பலன்விளைக்கும் எளிது.
(ஞானக்களஞ்சியம் கவி: 634)
நல்லோர் தந்த பரிசு :
வாழ்வை வளப்படுத்தும்
வழக்க பழக்கங்கள் எனும்
ஒழுக்கங்கள் எல்லாம்
ஆழ்ந்த சிந்தனையாளர்
அன்பினால் உலகுக்கு
அளித்த பரிசு ஆகும்.
(ஞானக்களஞ்சியம் கவி: 638)
சிறந்த பண்பாடு
பழக்கமென்றும், பழமையென்றும், பகுத்தறிவுக்கு ஒவ்வா
பல செயல்களையே மாற்றிப் பண்பாட்டை வளர்ப்போம்.
ஒழுக்கமது துன்பம்எழா அளவு முறையோடு
உணர்ச்சிகளைச் சீர்செய்து வாழும் முறையே யாகும்;
அழுக்காறு அவாவெகுளி ஆகாது போக்கி,
அன்பிரக்கம், தொண்டு தவம், அறிவின் விழிப்பேற்போம்.
பழுத்தறிவு முழுமைபெறும்! பரஉணர்வு கிட்டும்!
பற்றறிந்து பலனுணர்ந்து பண்புடனே வாழ்வோம்.
(ஞானக்களஞ்சியம் கவி: 1595)
வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!!
தத்துவஞானி வேதாத்திரி மகரிசி

புதன், 16 அக்டோபர், 2019

❓ கேள்வி: சுவாமிஜி! பகவதி கோவில்களில் பேய் பிடித்தவர்களை அடக்குகிறார்கள் என்று சொல்கிறார்கள். அது எப்படிச் சாத்தியமாகும்?


பதில்: அத்தகைய கோவில்களில் மகான் ஒருவருடைய உயிர் அடக்கமாகி இருக்கலாம் அல்லது அங்கே ஒர் எந்திரத்தை நிறுவி, அதற்கு மந்திரங்களைச் செபித்து, அங்கு ஓர் ஆற்றல் களத்தை (Energy Field) ஏற்படுத்தி வைத்திருப்பார்கள்.
அந்த ஆற்றல் களத்திற்குச் சென்றால் இணைந்த ஆவிக்கு ஒரு வேகமான உணர்ச்சி மிக்க இயக்கம் உண்டாகும். தானாகவே நடைபெற்றுக் கொண்டிருக்கக் கூடிய சொந்த ஆன்மா மயக்கநிலையில் (Trance State) இருக்கும். அந்தச் சமயம் இணைந்த ஆவி தானாகவே ஆடி ஆடி வெளியேறக் கூடிய அளவுக்கு வந்துவிடலாம்.
ஆனால், அது வெளியேறுவது என்பது இல்லை. தான் அடைக்கலமாக எந்த உயிருடன் சேர்ந்திருக்கிறதோ அந்த உயிருடனேயே கலந்து ஒன்றுபட்டுவிடும். இதுவரை பொருந்தாது தொல்லைகள் செய்து வந்த ஆவி இப்பொழுது அமைதி பெற்று விடும்.
சில பூசாரிகள் அவற்றிற்கு ஒவ்வொரு அம்மன் பெயர்களை வைத்து , அந்த அம்மன் மலையேறிவிட்டது என்பார்கள். பின் நன்மையே வரும்.
எவ்வாறென்றால், நம்மிடமுள்ள அந்த உயிரை வணங்குந்தோறும் நன்மையே அளிக்கும். எதிர்க்கும்தோறும் தீமையே தரும்.
வாழ்க வளமுடன்!
அருள்தந்தை வேதாத்திரி மகரிஷி

செவ்வாய், 8 அக்டோபர், 2019

Reason for spoiling friendship with Society?


War is not at all required now as people’s contemplating skills have risen. Any nation can live without fearing or antagonising other nation, by handing over the management of border security to the security council of United Nations (UN).
War can destroy all wealth of the society. War is a rough action, formed when the early generation of human beings, without thinking capabilities, were living like animals troubling other species. When we compare those generation with the current one, man’s thinking skills have grown manifold.
Man’s intelligence level has grown to travel to even moon, and to even apply computer equipments to daily life. Even now, war occurs in the human society. It’s a grave mistake that even now the war destroys the people. Everybody can easily understand, ‘ how many lifes are harmed on war? How many are destroyed? ‘ It’s a high time now to streamline the mankind’s life by constituting and managing the laws on economic rights, the social laws to prevent the strong to harm the weak.
Presently how many religious are found and functioning to make to realise the Almighty, educate the virtues, to protect the morality and culture? Then, where is the mistake if many lives are being harmed, killed and their properties are destroyed on war is continuing, even now. Is it not the cause, the irresponsibility in governance and lack of knowledge on Almighty?
- Vethathiri Maharishi

திங்கள், 7 அக்டோபர், 2019

ஆன்மீகத்தில் மூன்று ஓட்டைகள்

வேதாத்திரிய இரகசியங்கள்: அக்டோபர் - 07
ஆன்மீகத்தில் மூன்று ஓட்டைகள்
நமது நாட்டிலும் பிறநாட்டிலும் ஆன்மீகத் துறையில் ஒரு குறைபாட்டைக் காணலாம். ஒரு மகானுக்கும், இன்னொரு மகானுக்கும் கால இடைவெளியிருக்கும். ஒரு மகானைக் தொடர்ந்து அவர் கருத்தைப் பரப்ப இன்னொரு மகான் உடனடியாகத் தோன்றினார் என்று கிடையாது. கடைசியாக நாம் அறிந்த அத்தகு மகான் வள்ளலாராவார். அவர் மறைவுக்குப் பின் ஓரளவு இடைவெளிக்குப் பிறகே நம் வேதாத்திரி மகான் தோன்றியுள்ளார்.
இவருக்குப் பிறகும் மேற்கண்ட விதி குறுக்கிடுமா? மகரிஷியைத் தொடர்ந்து உடனடியாக அவருக்கு நிகரான மகான் தோன்றுவாரா? தோன்றி தொண்டினைத் தொடர்வாரா? இரு அன்பர்களுக்கிடையில் ஏற்பட்டது இந்தச் சர்ச்சை. மகரிஷிக்குப் பின் ஒருகால இடைவெளிக்கு பின்புதான் இன்னொரு மகான் தோன்றி இவரது பணியைத் தொடர்வார் என்று ஒருவர் கூறினார். மற்றவர் மறுத்தார். இதற்கான விடை மறுப்புத் தெரிவித்தவருக்கு மகரிஷியிடமிருந்து கிடைத்தது.
1977 ஏப்ரல் முதல் வாரத்தில் நீலகிரி சிறப்புப் பயிற்சியில் கலந்துகொண்ட அந்த அன்பர், ஓய்வு நேரத்தில் மகரிஷியிடம் இவ்வினாவை எழுப்பினார். “அதான் இருந்த ஓட்டைகள் மூன்றையும் நான் அடைத்துவிட்டேனே. அந்த மூன்று ஓட்டைகளால் தானே அப்படிக் கால இடைவெளி மகான்களுக்கிடையில் ஏற்பட்டது. அந்த மூன்று ஓட்டைகள் அடைபட்டுப் போகவே மகான்கள் என்றென்றும் ஒருவர் பின் ஒருவராகக் கால இடைவெளியின்றியும் ஒருவர் இருக்கும்போதே ஒருவராகவும் தோன்ற வேண்டியதுதானே” என்று பளிச்சென பதில் கூறினார்.
அந்த மூன்று ஓட்டைகள்:
1. இறைநிலையைப் பற்றிய தெளிவான விளக்கம் சொல்லப்பட்டு அது வெட்டவெளிதான் என்பது நிறுவப்படவில்லை. (மகரிஷி உறுதி செய்தார்.)
2. உயிரைப் பற்றி அறியாமலே மனதைக் கொண்டு இறைவனை அறிந்துவிடலாம் என்றிருந்த குறை. (மனதையும் இறைநிலையையும் இணைக்கும் உயிர் பற்றிய தெளிவை மகரிஷி அளித்துவிட்டார்.)
3. பிரம்மச்சர்யம் தான் ஆன்மீகத்திற்கு ஏற்றதென்ற தவறான கருத்து. இல்லறத்திலிருந்து கொண்டே குண்டலினி தவம் பயில மகரிஷி வழி வகுத்துள்ளார்.
அகத்தவத்தின் பொருள்கண்டு அதன்பெருமை யுணர்ந்திடுவீர்;
அகத்தவமோ உயிரினிலே அறிவை ஒடுக்கும் பயிற்சி;
அகத்தவத்தால் மேலும்உயிர் அம்மாகி மெய்ப்பொருளாம்;
அகத்தவத்தால் வீடுணர்ந்து அமைதி பெற்று இன்புறலாம்.
அகத்தவத்தால் ஐம்புலனை அடக்கி அறிவறிந்திடலாம்;
அகத்தவத்தால் ஆறுகுண ஆளுமைப் பேறடைந்திடலாம்;
அகத்தவத்தால் இல்லறத்தை அன்பகமாய் ஆற்றிடலாம்;
அகத்தவத்தால் அனைத்துயிர்கள் அரும்நட்பைப் பெற்றிடலாம்.
அகத்தவம் தீவினையகற்றும்; அருள் நெறியை இயல்பாக்கும்;
அகத்தவமே இறை வழிபாடனைத்திலும் ஓர் சிறந்த முறை;
அகத்தவமே உயிர் வழிபாடதனை விளக்கும் ஒளியாம்;
அகத்தவமே மதங்கள் எல்லாம் அடைய விரும்பும் முடிவு.
📚 ஞானக்களஞ்சியம் கவி: 1496 📚

ஞாயிறு, 6 அக்டோபர், 2019

உடல் நலம் பேணும் வழிமுறைகள்

Image may contain: 1 personஉடல் நலம் பேணும் வழிமுறைகள் உங்களுக்காக அருட்தந்தை அருளியது!
1. அணுக்களின் கொத்து இயக்க நிகழ்ச்சியே தூல உடல்.
அதனூடே பரமாணு நிலையில் ஊடுருவிச் ஓடிச் சுழன்று கொண்டேயிருப்பது உயிர்ச்சக்தி.
உயிர்ச்சக்தியின் ஓட்டத்தில் தடையுண்டானால் அதுவே உணர்ச்சியாகின்றது.
அந்த உணர்ச்சி ஒரு ஜீவன் தாங்கும் அளவிற்கும் தாங்கிப்பழகிய அளவிற்கும் மேலாக ஓங்கும்போது அது வல்லுணர்ச்சியாகி துன்பமாக, நோயாக உணரப்பெறுகின்றது.
அந்த தடை நீடித்து, அதன் விளைவாக உடலில் மின் சாரம், காற்று, இரத்தம், ஆகிய மூன்று சுழல்களும் தடைப்படுமானால் உடலுக்கு மூலமான வித்து, தாங்கும் அளவுக்கு மேல் கனல் கொண்டு, அதன் நாளங்களைத் தகர்த்து வெளியேறிவிடும்.
உணர்ச்சி என்ற அறிவோடு கூடிய உயிச்சக்தி தொடர்ந்து அந்த உடலில் சுழன்று இயங்க முடியாமல் உடலை விட்டு வெளியேறி விடும்.
இந்த நிகழ்ச்சியே மரணம் எனப்படுகிறது.
2. உயிர்ச்சக்தி உடலில் ஒழுங்காக ஓடிக்கொண்டிருப்பதே இன்ப உணர்வாகும்; உடல் நலமாகும். அதைப் பாதுகாக்க (1) உணவு, (2) உழைப்பு, (3) உறக்கம், (4) ஆண்-பெண் உடலுறவு, (5) எண்ணம் இந்த ஐந்து அம்சங்களில் தொடர்ந்த கவனம் தேவை.
இவை அளவுக்கு அதிகமானாலும் குறைந்தாலும் முறை தவறிக் கொள்ளப் பெற்றாலும் உயிர்ச்சக்தி ஓட்டம் பாதிக்கப்படும். நோய்கள் உண்டாகும்.
3. வாரத்திற்கு ஒரு முறை இரவில் உணவு கொள்ளாமல், இலேசாகப் பழ வகை உண்டோ, அல்லது சிறிது பால் அருந்தியோ உறங்குவது நோய்களை ஒரு அளவில் தடுக்க உதவும்.
உடல் ஜீரணிக்கத்தக்க அளவு உணவு உண்டால் அது நன்மை பயக்கும். அளவுக்கு மீறினால், அந்த உணவு உடலை ஜீரணிக்கும்.
4. கருவமைப்பு, எண்ணம், செய்கை, கோள்களின் சஞ்சாரத்தில் அமையும் நிலை, சந்தர்ப்ப மோதல் ஆகிய காரணங்களால் உடலில் இரசாயன வேறுபாடுகள் உண்டாகின்றன.
இத்தகைய வேறுபாடுகளால் உடலிலுள்ள அணு மூலகங்கள் அதற்கு ஏற்ப விரைவில் வேறுபடும். அதன் பயனாக உடலில் சுழன்றோடிக்கொண்டிருக்கும் காந்தம், மின்சாரம், இரத்தம், காற்று ஆகிய நால்வகையும் அவற்றின் விரைவில் ஏற்றத்தாழ்வுகளைப் பெறும்.
விளைவாக ஒவ்வொரு அவயங்களூடேயும் ஊடுருவிச் செல்லும் அவற்றின் ஓட்டத்தில் தடையும் உண்டாகும்.
இந்தத் தடை நோயாக உணரப்படுகிறது.
எந்த அவயத்தில் எந்த அளவு எந்தச் சக்தியின் ஓட்டத்தில் தடைப்படுகிறதோ அதற்கு ஏற்ப நோயின் வலுவும், பெயரும், அதற்குக் காலமும் நிர்ணயிக்கப்பெறுகின்றன.
5. நோய்களை நீக்கிக் கொள்ளும் சக்தி இயற்கையாக உடலில் அமைந்துள்ளது.ஒத்த முறையில் பத்தியம் காத்து ஓய்வும் எடுத்துக்கொண்டால் நோய்கள் மிகவும் விரைவாகத் தீர்ந்துவிடும்.
நோய் கடினமாக இருந்தால் தக்க மருந்து வகைகளை உபயோகிக்கலாம்.
6. நோயற்ற உடலில்தான் அறிவும் திறன்பட இயங்கும். இயற்கை இன்பங்களைத் துய்க்க இயலும். எனவே ஒவ்வொருவரும் நோயுற்று வாழ வழிகண்டு நின்று ஒழுகி வாழவேண்டும்.
7. மனத்தூய்மை, ஒழுங்கான உணவு, அளவான உழைப்பு இவற்றுடன் கூடிய வாழ்க்கை, நோய்கள் இல்லா உடல் நலத்தோடு இருக்க உதவும்.
பொறாமை, சினம், வஞ்சம், கவலை, காம எண்ணங்கள் இவை உடல் காந்த சக்தியினை அளவுக்கு மீறி அழித்து விடும்.
தவத்தாலும் ஆராய்ச்சியாலும் இந்த உணர்ச்சி நிலைகளை மாற்றி விடலாம். உணர்ந்தோரை அண்டி முயலுங்கள். வெற்றி நிச்சயம்.
8. உணவு உண்ட உடனே ஓட்டம், சைக்கிள் சவாரி, கடினமான வேலை, ஆண் பெண் உடலினைப்பு இவை கூடாது. அடுத்தடுத்து இச்செயல்களில் ஈடுபடுவோருக்கு வயிற்றுப்புண் உண்டாகிவிடும். அது குன்மம் (Peptic Ulser) நோயாக வழங்கப் பெறுகின்றது.
9. உடலிலிருந்து கழிவாகி வெளியேறும் எந்தப் பொருளும் உடலின் மீது தங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
அவை உடனே கிருமிகளாக மாறும் வாய்ப்பு இருக்கின்றது. ஒரு நாளைக்கு ஒரு முறையாகிலும் வெந்தநீரிலோ, தண்ணீரிலோ குளிக்க வேண்டியது அவசியம். மலபந்தம் (Constipation) அஜீரணம் இவை ஏற்படாமல் பாதுகாப்பது உடல் நலத்தைப் பேணும் வழிகளில் மிக முக்கியமானது.
10. எந்தக் காரணத்தைக் கொண்டும் பிறர் அணியும் செருப்பு, உடுத்தும் துணி, படுக்கும் பாய் இவற்றை மற்றவர் உபயோகிக்கக் கூடாது.
தவிர்க்க முடியாத சமயத்தில் பிறர் பாயின் மீது துணி விரித்துப் படுப்பது நல்லது. மக்கள் கூட்டமாக கூடும் இடங்களில் மூன்று அடிக்கு ஒருவர் மேல் நெருங்கி இருக்கக் கூடாது.
மூச்சு விடும்போது அவற்றில் வெளிவரும் சத்துக்கள் மிகவும் வேகமானவை. இருவர் மூச்சும் ஒன்று சேரும்போது உடனே கிருமிகளாக மாறும் தன்மையுடையன.
அத்தகைய காலங்களில் கிருமி நாசினிப் புகையோ அல்லது சாம்பிராணிப் புகையோ இடைவிடாமல் பரப்பிக் கொண்டே இருக்கவேண்டும்.
வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!!
தத்துவஞானி வேதாத்திரி மகரிசி

புதன், 2 அக்டோபர், 2019

ஒன்பதுமைய தவம்


❓ கேள்வி: சுவாமிஜி! முற்காலப் பெண்கள் குடும்பத்தில் பணம் தனியாகச் சேமிக்கும் பழக்கத்தைக் கைக்கொள்ளவில்லை. ஆனால் தற்காலப் பெண்கள் தனியாகச் சேமிக்கிறார்களே ஏன்?


பதில்: வரவுக்கு அதிகமாகச் செலவு செய்யும் குடும்பத்தில் குடும்பத்தலைவன் பொறுப்பில்லாமல் செலவு செய்து கொண்டே வந்தால் “பின்பு குழந்தைகளின் நலன், படிப்பு, பிற்கால வாழ்க்கை என்னாவது என்பதை மனதில் கொண்டு, நமக்குப் பொருள் வேண்டுமே” என்ற அக்கறையில் பெண்களுக்குப் பொருள் சேர்க்க வேண்டும் என்ற பொறுப்புணர்ச்சி வருகிறது.
அது தவறில்லை.
அந்தப் பொறுப்பு கணவனுக்கும் இருந்தால் இருவரும் சேர்ந்தே சேமிக்கலாம். இருவரும் தனித்தனியாக ஒருவருக்குத் தெரியாமல் மற்றவர் சேமிப்பதும், செலவு செய்வதும் குடும்ப அமைதியைக் கெடுக்கும்.
வாழ்க வளமுடன்!

திங்கள், 30 செப்டம்பர், 2019

வேதாத்திரிய மெய்விளக்கம் - 30-09-2019 உலக அமைதி நாள் 30-09-0034

வேதாத்திரிய மெய்விளக்கம் - 30-09-2019 உலக அமைதி நாள் 30-09-0034
அமைதியும் நிறைவும் பெற்றவன் தான் உண்மையான அமைதிக்கு*
வழிகாட்ட முடியும்.
மனிதனாக வந்த பிறகும் பேரமைதிக்கு உரிய ஆறாவது அறிவு
முதலிலேயே வளர்ச்சி பெறுவது இல்லை.
புலன் உணர்ச்சிகளிலேயே இச் சிறந்த நிலையான ஆறாவது அறிவு
முடக்கப் பெற்று இயற்கை வளங்களை உருமாற்றியும் நிலைமாற்றியும் அழகுபடுத்தியும் துய்க்கும் ஆற்றலாகச் செயல்படுகிறது.
மனித உருவின் நோக்கம் அறிவிற்கு எட்டாததாலும், புதிய புதிய பொருட்களை உற்பத்தி செய்தல் அனுபவித்தல் என்பதில் பெறும் உணர்ச்சி மயக்கத்தாலும், விளைவறியாது பல செயல்களைப் புரிந்து, அவை பழக்கப் பதிவுகளாகவும் எண்ணப் பதிவுகளாகவும் பரம்பரைக் குண அமைப்பாகவும், களங்கங்களை மனிதன் ஏற்படுத்திக் கொள்கிறான்.
மேலும் எந்த உணர்ச்சியையும் துய்க்கும்போது விழிப்பு நிலையின்றி
புலன் மயக்கில் இருப்பதால் அதே வித துய்ப்பில் ஆசை பெருகிக்கொண்டேயிருக்கும். இதனால் நிறைவு ஏற்படுவதில்லை.
இவ்வாறு, நிறைவுபெறாமை, பாவப் பதிவுகள், மனிதனாக வந்த நோக்கம் அறியாத மயக்கநிலை, இம்மூன்றும் மனித அறிவின் முதற்பகுதியில் உயிர்க் களங்கங்களாக அமைகின்றன.
துன்பங்களும் வாழ்க்கை சிக்கல்களும், சோர்வும் பெருகுகின்றன.
இங்குதான் மனிதன் சிந்திக்கிறான்.
இங்குதான் இயற்கைக்கும் அறிவிற்கும் உள்ள தொடர்பு சிறிது சிறிதாக விளங்குகிறது. விழிப்புணர்வு பெற்று உடலுக்கும் உயிருக்கும் அறிவிற்கும் உள்ள தொடர்பை உணர்கிறான்.
உடலை நன்கு நோயுராது பாதுகாக்கவும் மனதின் வளத்தைப் பெருக்கிக் கொள்ளவும் மன அமைதியினை பாதுக்காக்கவும் அக்கறை உண்டாகிறது. ஆற்றலும் பெருகுகிறது.
விழிப்பு நிலையில் உலக இன்பங்களைத் துய்த்து அறிவைப் பெருக்கி நிறைவு பெறுகிறான். பொருள் மயக்கத்திலிருந்து விடுபடுகிறான்.
இயற்கையோடு ஒத்து "தனக்கும் பிறர்க்கும் தற்காலத்துக்கும் பிற்காலத்துக்கும், உடலுக்கும், அறிவிற்கும் துன்பம் விளையாத
முறையிலும் அளவிலும் செயலாற்றி", பழிச் செயல்களை விளங்கிக் கொள்வதோடு மட்டுமின்றி முன்னம் அறியாமையால் அமைந்த
பழிச்செயல் பதிவுகளையும் மாற்றிக் கொள்கிறான்.
பொருள் மயக்கமும், பாவப் பதிவுகளும் போன பின் உயிரின் நிலையென்ன? தூய்மையடைந்து விட்டது என்பதுதான். பேரறிவு, ஒளிவிடத் தொடங்குகின்றது. இந்த அறிவின் ஒளியிலே தனது மூலமாகிய மெய்ப்பொருள் நிலையை உணர்ந்து கொள்கிறான்.
உணர உணர, உணர்ந்ததில் நிலைக்க நிலைக்க, அவனும் மெய்ப்பொருளாகவே விளங்குகிறான்.
"ஐயப்படாது அகத்தது உணர்வானைத் தெய்வத்துள் வைக்கப்படும்" என்ற வள்ளுவப் பேரறிஞரின் விளக்கம் இத்தகைய பேரறிவின் அமைதி நிலையினைத்தான் விளக்குகிறது. அமைதியும் நிறைவும் பெற்றவன் தான் உண்மையான அமைதிக்கு வழிகாட்ட முடியும்.
வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!!
தத்துவஞானி வேதாத்திரி மகரிசி

ஞாயிறு, 29 செப்டம்பர், 2019

கர்மநோய்

நாள்பட்ட கர்மநோய்  என்று ஒன்று சொல்வார்கள்.

அதாவது இதுதான் வியாதி என்று தீர்மானமாகத் தெரிந்துகொண்டாலும், அதற்கு நிச்சயமாக இதுதான் மருந்து என்று கண்டுபிடித்துக்கொடுத்தாலும், அந்த வியாதி தீராது. அதுதான் கர்மநோய்.

நீண்டகாலமாக இருந்து கொண்டே இருக்கும். அப்படிப்பட்ட , எவ்வளவு நாளாக இருந்து கொண்டு இருக்கக் கூடிய கர்ம நோயாக இருந்தாலும்கூட,  நீண்டகாலம், ஒருமாதம், இரண்டுமாதம், பலமாதங்கள், என்று தினந்தோறும் பல வேளை சாந்தியோகம் மட்டுமே செய்து வந்தால், மற்ற பத்திய நிமித்தங்களையும் கடைப் பிடித்துவரும் பட்சத்தில், அந்த நோய் மெல்லத் தீர்ந்து விடும்.

பைத்தியம் முதலிய மனநோய்கள் கூட சாந்தியோகமே செய்துவரும் அளவில் குறையும்.  காலத்தால் நீங்கும்.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

(இதை மனதில் வைத்து தேவையான இடத்தில் தேவையான அன்பர்களுக்கு பயன்பட வைப்போம். வாழ்க வளமுடன்)

வியாழன், 26 செப்டம்பர், 2019

வேதாத்திரிய மெய்விளக்கம் -நாள் 26-09-0034

Image may contain: one or more people, beard, outdoor and nature
மனிதன் எல்லாம் வல்லவன் எல்லாம் உள்ளவன் என்பதை உணர இயற்கையை உணர வேண்டும்!
நிலையாமையை நினைவிற்கொள் - பிறப்பு இறப்பு
நடுவே பூவுலக வாழ்வு; இதை மறக்கும்
நிலையில் உள்ள மதியின் போக்கே மாயை.
இந்த உலகத்தில் நூறு ஆண்டுகளுக்கு முன்னே வாழ்ந்தவர்களெல்லாம் இன்று இல்லை. இன்றைக்கு இருக்கக் கூடியவர்களெல்லாம் இன்னும் நூறு ஆண்டுகள் கழித்துப் பார்த்தால் இருக்க மாட்டார்கள்.
அப்படி எத்தனையோ நூற்றாண்டுகள் கழிந்த பின்னர்தான், இன்றைக்கு இருக்கக் கூடிய மக்கள் இருக்கிறார்கள்.
இவ்வாறு மனதை விரித்துப் பார்த்தால் பிரிவினை என்பது இருக்காது. ஒவ்வொரு மனிதனும் பிறக்கிறான்; வாழ்கிறான்; முடிந்து போகிறான். முடிந்து போகும் நாள் அவனுக்குத் தெரியவில்லை.
ஜீவகாந்த சக்தியில் பதிந்து இருக்கிறது. அது எந்த முடிச்சில் (Code) இருக்கிறது என்பதைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அதனால்தான் எவ்வளவோ காலம் இருக்கப் போகிறேன் என்று நினைக்கிறான். அப்படிப் பார்த்தோமேயானால் கொண்டு வந்ததும் இல்லை. கொண்டு போகப் போவதும் இல்லை.
இப்போது உலகம் முழுவதும் ஒன்றுகூடி விட்டது. ஒவ்வொரு நாட்டிலேயும் உள்ள மக்களில் பலர் பிற நாடுகளிலேயும் வாழ்கிறார்கள்.
இந்தக் காலத்தில் நான் அந்த ஜாதி, இந்த ஜாதி, அந்த நாடு, இந்த நாடு என்று வேறுபடுத்திக் கொண்டு, பிணக்கு வைத்துக் கொண்டு மனிதன் வாழும்போது துன்பத்தைத் தவிர இன்பத்தை அடைய முடியாது.
மனித இனம் தன்னுடைய மூலம், முடிவு இவற்றின் பெருமையை உணர்ந்து கொண்டால், இவ்வளவு பெருமைக்கு உரிய உலகத்தில் பிறந்து விட்டதனால் "நானும் ஓர் உரிமையாளன். எனக்கு எல்லா உரிமைகளும் இருக்கின்றன. எல்லா வசதிகளும் இருக்கின்றன" என்பது புரியும்.
நான் எப்படி வாழ வேண்டும்? என்று எண்ணிப் பார்த்தால், ஒவ்வொருவருக்கும் ஆயிரமாயிரம் இன்பங்களை அனுபவிக்க வேண்டிய அமைப்பு தான் இருக்கிறது. அதற்கு முரணில்லாமல், நான் செயல்பட வேண்டும். மற்றவர்களுக்குத் துன்பம் தராமல் வாழ வேண்டும்.
ஆனால், அதற்கு முரணாகச் செயல்பட்டு நாம் கெடுத்துக் கொள்கிறோம். ஒருவருக்கொருவர் தீங்கு செய்துதான் மனிதனாக வாழ வேண்டுமா?
இந்த உண்மையை உணர்ந்து கொண்டால் உலகத்தில் இன்பம், துன்பம், அமைதி, பேரின்பம் என்ற உணர்ச்சிகளோடு வாழக்கூடிய மனிதன் இயற்கை வளத்தை வாழ்வின் வளமாக மாற்றி செம்மையாகத் தானும் வாழலாம். பிறரையும் வாழ வைக்கலாம்.
உண்மையில் என்னிடத்தில், சமுதாயத்தில், இயற்கையில் எவ்வளவு உயர்வு இருக்கிறது என்பதைத் தெரிந்து கொண்டால் பயப்பட வேண்டியதே இல்லை. கவலைப்பட வேண்டியதே இல்லை. அது மாத்திரமன்று.
இன்னொருவரிடம் கையேந்த வேண்டியதில்லை. மனிதனிடம் மனிதன் கேட்டு வாங்குவதற்கோ, கையேந்துவதற்கோ தேவை இல்லை.
இயற்கையினுடைய அமைப்பு மனிதனை எல்லாம் வல்லவனாகவும், எல்லாம் உள்ளவனாகவும் வைத்து இருக்கிறது.
அதைத் தெரிந்து கொள்ள வேண்டுமானால் உள்ளதை உணர வேண்டும். இயற்கையை உணர வேண்டும்.
உயிருக்குள்ளாகத் தெய்வமே அறிவாக இருக்கிறது
என்று விளக்கிக் காட்டுவது தான் அகத்தவப்பயிற்சி.
துன்பங்கட்கு மூலம்
பிறந்து வாழ்ந்து பின் இறந்துபோகும் மனிதர்க்குப்
பேருலக இன்பங்கள் அனைத்துமே பொது உடைமை.
மறந்து மதிகுறுகி, மண்மீது எல்லைகட்டி,
மனிதர்கள் போராடும் மயக்கமே துன்பங்கள்!
(ஞானக்களஞ்சியம் கவி: 1258)
வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!!
தத்துவஞானி வேதாத்திரி மகரிசி

புதன், 25 செப்டம்பர், 2019

வேதாத்திரிய மெய்விளக்கம் 25-09-0034

வேதாத்திரிய மெய்விளக்கம் 25-09-2019 உலக அமைதி நாள் 25-09-0034
Image may contain: 1 person, sitting


வாழ்த்து - "வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்"

மிகவும் நுண்ணிய இயக்கத்திற்கு மனம் வந்தாலன்றி வாழ்த்தவே முடியாது,
அந்த அளவு நுண்ணிய இயக்கத்திற்கு மாறும்போது ஒரு வலுவு, ஒரு தெளிவு, அந்த அமைதி நிலை, அதை ஒட்டி நம்முடைய வியாபகம் விரிந்து பலரோடு ஊடுருவி நிறைந்து அந்த உயிர்க்கலப்பு ஏற்படக்கூடிய நிலை, இவை எல்லாம் அதிகமாகும்.
அந்த நுண்ணிய நிலையிலே நாம் வாழ்த்துக் கூறும்போது அவர்களுக்கும் நமக்கும் தெரியாமலேயே இரண்டுபேருடைய அடித்தளமான அந்த உயிர்நிலையில் ஒரு பரஸ்பர ஓட்டம் (interaction) ஏற்படுகின்றது; ஊடுருவிப் பாய்ந்து நிற்கின்றோம்.
இரண்டு தடவை, நாலு தடவை செய்யச் செய்ய நமக்கும் அவர்களுக்கும் ஒரு தொடர் இயக்கம் வந்து விட்டதானால், அது எப்பொழுதும் நமக்கு அலை வீசிக்கொண்டிருக்கும்,
அந்த அலை நாம் நினைத்தாலும் நினைக்காவிட்டாலும் முன்பே ஏற்படுத்திவிட்ட தொடர்புப்படி வந்து கொண்டும் போய்க்கொண்டும் இருக்கும்; அந்த தொடர் அறுபடாது இருக்கும்.
அதனால் அவருக்கு வேண்டியதை நாம் செய்ய வேண்டும் என்று நினைப்பது நமக்கு வேண்டியதை அவர்கள் செய்ய வேண்டும் என்று நினைப்பது, அவர்கள் நன்மைக்காக நாம் எண்ணுவது இவை எல்லாம் சாதாரண நிகழ்ச்சியாக மாறிவிடும்.
அப்படி வாழ்த்தி வாழ்த்தி எப்பேர்பட்டவர்களையும் கூட நண்பர்களாக மாற்றிவிட முடியும்; அவர்களுடைய செயல்களைத் திருத்திவிட முடியும்; எண்ணங்களை எல்லாம் ஒழுங்குபடுத்தி விட முடியும்; நல்லவர்களாக மாற்றிவிட முடியும்.
தவம் முடித்த பிறகு வாழ்த்துகிறோம். தவத்தில் இருக்கும்போதே நாம் சாதாரணமாக நுண்ணிய நிலையில் Alpha Wave க்கு வந்து விடுகிறோம். அந்த நிலையில் நுண்ணிய செல்கள் (Subtle cells) எல்லாம் மூளையில் இயக்கத்திற்கு வந்துவிடும். அந்த இடத்தோடு அங்கேயிருந்து அந்த அலையை நாம் வீசுகிறோம். "வாழ்க வளமுடன்" என்ற அந்த எண்ணத்திற்கு வலுவு அதிகம்.
உதாரணமாக ஒரு வில் இருக்கிறது அம்பு இருக்கிறது. அம்பு எய்வதற்கு ஓரளவு நாணைப் பின்னுக்கு இழுத்துவிடுவது ஒன்று, கடைசிவரைக்கும் இழுத்து அம்பு விடுவது என்பது ஒன்று.
எவ்வளவு தூரம் நாணை இழுக்கிறோமோ, அந்த அளவுக்கு அம்புக்கு வேகம்;
அதே போன்று நாம் எவ்வளவு அமைதிக்கு அறிவை, மனதைக் கொண்டு வருகிறோமோ அங்கேயிருந்து கொடுக்கக்கூடிய வாழ்த்துக்கு கூட வேகம் அதிகம், செயல்படும் வேகம் அதிகம்.
ஆகவே நாம் தவம் செய்யும் போது இன்னும் நுண்ணிய நிலையில் இருந்து அந்த நேரத்தில் நாம் சொல்லக்கூடிய சொல்லுக்கு, எண்ணக் கூடிய எண்ணத்திற்கு வலுவு அதிகம்; சீக்கிரமாகச் செயலுக்கும் வந்துவிடும்.
நமக்காக என்னென்ன வேண்டுமோ அதைச் செயல்படுத்துவதற்குச் சில நாட்களானாலும் சரி, பிறருக்காக நாம் வேண்டுதல் வெகு சீக்கிரமாக அதிக பயன் விளைவிக்கும்.
வாழ்க வளமுடன் என்று வாழ்த்தும் போது பிறர்
உள்ளத்திலே நமது கருத்து நலதொரு இனிய
நட்புறவை வளர்க்கிறது.
வாழ்த்தும் போது மனம் ஒரு நுண்ணிய நிலைக்கு
அமைதி நிலைக்கு வருகிறது. அதனால் மனதிற்கு
வலுவும் தெளிவும் ஏற்படுகிறது.
வாழ்த்து வீண் ஆகாது. "வாழ்க வளமுடன்"-
"வாழ்க வளமுடன்" என்று சொல்லச் சொல்ல
உடல், மனம் நன்றாக இருக்கும்.
வாழ்த்து எல்லா மந்திரங்களுக்கும் மேலான
திருமந்திரமாகும்.
தவமுறை அகவல் - வாழ்த்து
வாழ்க வாழ்கவென் வாழ்க்கைத் துணைவர்!
வாழ்க வாழ்கவென் குழந்தைகள் எல்லாம்!
வாழ்க வாழ்க என்னுடன் பிறந்தோர்கள்!
வாழ்க வாழ்கவென் நண்பர்கள் அனைவரும்!
வாழ்க வாழ்கவென் தொழில்துறை அனபர்கள்!
வாழ்க பகைவர்கள் வளமொடு திருந்தி!
வாழ்க இவ்வுலகில் வாழ் மக்களெல்லாம்!
வாழ்க வாழ்க இவ்வையகம் வாழ்க!
வாழ்க அறநெறி! வாழ்க மெய்ஞானம்!
(ஞானக்களஞ்சியம் கவி: 1500 -(8) )
வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!!
தத்துவஞானி வேதாத்திரி மகரிசி

சனி, 21 செப்டம்பர், 2019

கரு தவம்!!

*நிலத்திலிருந்து முளை எழுந்தபோது முரசொன்றும் முழங்கவில்லை*

 *பழம் பழுத்து பக்குவமடைந்த போது ஊதுகொம்பின் ஒலியில்லையே....!!!*

 *ஒளிதரும் ஞாயிறும், நிலவும்  எழுந்தபோது வீரமுழக்கமில்லையே.......!!!*

 *ஆனால், மனிதன் மட்டும் எச்செயலை செய்தாலும்......!!!*

 *ஒன்று முழக்கமிடுகிறான்*

 *அல்லது முழக்கதை மற்றவரிடமிருந்து எதிர்பார்த்துக் கொண்டே இருக்கிறான்.......!!!*

 *தான் என்னவோ உலகில் யாருமே, எதுவுமே  செய்யாததை செய்துவிட்டோம் என்றும்*

 *சாதித்து விட்டோம் என்றும் கூக்குரலிட்டு வீர முழக்கமிடுகிறான்*

 *அல்லது சித்து வேலை செய்வோரிடம் தஞ்சம் புகுகிறான்*

 *அன்றாடம் அவன் கண் முன்னே தாவரங்களும், இயற்கையும்*

 *இதைத் தானே மௌன நிலையில் செய்து கொண்டு என்பதையும் மறந்தே மயக்கமுற்று இருக்கிறான்*

 **என்று விலகுமோ இந்த மாயத் திரை........?!?*

 *கல்லும் மரமும் மௌன நிலையில் நின்று கடமை தவறாது பயன் ஆற்றும் போது சொல்லும், கருத்தும் உடைய மனிதன் மட்டும் ஏனோ...சுகங்கெட்டு சமூகத்தை மறக்க வேண்டும்.....???அல்லும் பகலும் ஆசையை அழிக்கவென்றே ஆசைதனை பேராசை ஆக்கிக் கொண்டு அல்லல்படும் அன்பர்களே சுருங்கச் சொல்வேன் சுய நிலையை அறிய கரு தவமே போதும்"*

 *தத்துவ ஞானி  வேதாத்திரி மகரிஷி*