✅ பதில்: எந்தச் சேவையைச் செய்தாலும் ஒருவர் எல்லை கட்டிய நிலையிலேயே தன் மனதைப் பழக்கியிருந்தால், உயிர்விட்ட பிறகும் அது இந்த உலகத்தையொட்டியே (Earth bound) இருக்கும். அது வாழும் மனிதரோடு இணைந்து செயல்படும்.
பூவுலகத்தின் புவியீர்ப்பு களத்தைத் தாண்டிச் செல்ல வேண்டுமானால் மனம் பரந்து விரிந்து பிரபஞ்ச நிலையிலிருக்கப் பழகியிருக்க வேண்டும். உயிரிலுள்ள ஆணவம், கன்மம், மாயை என்ற முக்களங்கங்களும் நீங்கும் வரை அது இறைநிலையை அடைய முடியாது.
வாழ்க வளமுடன்!!
அருள்தந்தை தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக