வேதாத்திரிய மெய்விளக்கம் 04-11-2019 உலக அமைதி நாள் 04-11-0034
அக உணர்வு மலர்த்தும் மகத்தான சீவகாந்தம்
"சீவகாந்தம்" என்பது, இருப்புநிலை - இயக்க அலை என்ற இரண்டு தத்துவங்கள் கூட்டாகச் செயல்படும் பேராற்றலாகும்.
உடலுக்குள்ளாகக் காற்று இரத்தம் சீவகாந்தம் இவை எப்போதும் ஓடிக் கொண்டேயிருப்பதால் ஓரளவு உரசல்கள் இயற்கையாக ஏற்படுகின்றன.
இத்தகைய உரசல்கள் உடல் இயக்கம் மற்றும் மன இயக்கங்களுக்கு ஆக்க முறையில் அளவோடு இருக்கும்போது மனம் இந்த உணர்வுகளைச் சமநிலை உணர்வாக, அமைதி நிலையாக அனுபவிக்கின்றது.
எந்த விதமான உரசல் ஆனாலும் அந்த அளவிலே "சீவகாந்தம்" அழுத்தமாக, ஒலியாக, ஒளியாக, சுவையாக, மணமாகத் தன்மாற்றம் பெறுகிறது.
"சீவகாந்தம்" அவ்வாறு மாற்றம் பெறுவதையும் அதனால் ஏற்படும் ஆற்றல் செலவையும் மனம் (Mind), உணர்வாகப் பெறுகின்றது என்பதை இயற்கையின் நியதியாக மனதில் கொள்ள வேண்டும்.
தினசரி வாழ்வின் நிகழ்ச்சிகளாக இந்த உண்மையினை மனித மனம் உணர்ந்து கொண்டேதான் இருக்கிறது.
எனினும், "ஆறாவது அறிவுநிலை" போதிய வளர்ச்சி பெற்றுப் புற உணர்வோடு - அக உணர்வும் மலரும் போதுதான், உணர்ச்சிகளை அனுபவிக்கும் போது தான் உணர்பவனையும் அறியமுடிகிறது.
அணுவே எல்லாம்
அற்புதம்! அற்புதம்! அணுதான் முதல்காந்த நிலையமாம்!
அகில தோற்றங்களும் அதனின் இயக்கமே; அகம் நோக்கி,
தற்பதங்கண்டபின் தான்ஒரே சக்தியாய் பெருவெளியாய்
தன்அசைவு அணுவானதன்மையும் உணர்கிறோம்., தத்துவமே.
அகில தோற்றங்களும் அதனின் இயக்கமே; அகம் நோக்கி,
தற்பதங்கண்டபின் தான்ஒரே சக்தியாய் பெருவெளியாய்
தன்அசைவு அணுவானதன்மையும் உணர்கிறோம்., தத்துவமே.
(ஞானக்களஞ்சியம் கவி: 1026)
அணுவைவிடப் பெரியதுமில்லை, சிறியதுமில்லை
மனிதனே! அணுவதனை மிகச் சிறிதென்று உரைக்கின்றாய்.,
மறந்தனை நீ, அதனைவிடப் பெரிதுஎது? எனஅறிய!
மறந்தனை நீ, அதனைவிடப் பெரிதுஎது? எனஅறிய!
(ஞானக்களஞ்சியம் கவி: 1025)
அறிவின் அளவு
அண்டமனைத்தும் ஓர் அடியால் அளக்கலாம்.,
அணுக்குள் அடக்கலாம், அவ் அறிவின் அளவையறி!
அணுக்குள் அடக்கலாம், அவ் அறிவின் அளவையறி!
(ஞானக்களஞ்சியம் கவி: 1194)
வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!
தத்துவஞானி வேதாத்திரி மகரிசி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக