வேதாத்திரிய மெய்விளக்கம் 20-10-2019 உலக அமைதி நாள் 20-10-0034
வழக்க பழக்கங்கள் விளக்கம்
'
எந்தெந்தப் புலன்கள் மூலமாக செயல்கள் செய்து அனுபோகம், அனுபவம் பெறுகிறோமோ அவையெல்லாம் அந்தந்த உறுப்புகளில் பதிவாகி திரும்பத் திரும்ப மீண்டும் அந்த எண்ணம்; நினைவு வரும் பொழுது அதே நினைவு, அதே காட்சி இவை மூலமாக எண்ணம் வந்து விடுகிறது.
எண்ணமும் செயலும் தேவையாக, பழக்கமாக, சூழ்நிலைக் கவர்ச்சியாக மாறி அடிக்கடி மனிதனிடம் செயல்படுகின்றது. இது போன்றே நாம் பேசும் பேச்சுக்களும் பதிவாகின்றன.
நாவில் இயக்கப் பதிவாக, உடல் முழுவதும் ஒலியலை அதிர்வுப் பதிவாக, மூளையில் நினைவுப் பதிவாக, வித்தில் தரப்பதிவாக, பிரபஞ்ச உயிரிலும், பிற உயிர்களிலும் பிரதிபலிப்புப் பதிவாக அமைகின்றன.
இந்த விளக்கத்தைக் கொண்டு ஓர் எண்ணம், ஒரு செயல் எவ்வாறு பதிவு, பிரதிபலிப்பு, செயலால் இன்ப துன்ப விளைவுகள் என்ற நான்காக மாற்றம் பெறுகிறது என்பதை உணரலாம்.
இந்த உண்மையை உணர வேண்டும். இதற்குப் படிப்பு ஒன்றும் பயன்படாது. எந்த விஞ்ஞான கருவியும் கூட பயன்படாது.
நம்முடைய மனம், நம்முடைய வாழ்க்கை முறை, நம்முடைய இன்ப துன்ப உணர்வுகள், நம் சிந்தனை இதனைக் கொண்டு உட்கார்ந்து அதற்கு உரிய முறையில் ஆராய்ச்சி செய்து அவரவர்களே தெரிந்து கொள்ள வேண்டியது தான்.
நற்பழக்கம்
பழக்கத்திற்கும் கூர்ந்த விளக்கத்திற்கும் இடையே
பாருலகில் மனிதரெல்லாம் போராடு கின்றார்.
பழக்கத்தில் வளர்ந்தமக்கள் மாற்றுவது கடினம்
பாலர்களின் நற்பழக்கம் பலன்விளைக்கும் எளிது.
பாருலகில் மனிதரெல்லாம் போராடு கின்றார்.
பழக்கத்தில் வளர்ந்தமக்கள் மாற்றுவது கடினம்
பாலர்களின் நற்பழக்கம் பலன்விளைக்கும் எளிது.
(ஞானக்களஞ்சியம் கவி: 634)
நல்லோர் தந்த பரிசு :
வாழ்வை வளப்படுத்தும்
வழக்க பழக்கங்கள் எனும்
ஒழுக்கங்கள் எல்லாம்
ஆழ்ந்த சிந்தனையாளர்
அன்பினால் உலகுக்கு
அளித்த பரிசு ஆகும்.
வழக்க பழக்கங்கள் எனும்
ஒழுக்கங்கள் எல்லாம்
ஆழ்ந்த சிந்தனையாளர்
அன்பினால் உலகுக்கு
அளித்த பரிசு ஆகும்.
(ஞானக்களஞ்சியம் கவி: 638)
சிறந்த பண்பாடு
பழக்கமென்றும், பழமையென்றும், பகுத்தறிவுக்கு ஒவ்வா
பல செயல்களையே மாற்றிப் பண்பாட்டை வளர்ப்போம்.
ஒழுக்கமது துன்பம்எழா அளவு முறையோடு
உணர்ச்சிகளைச் சீர்செய்து வாழும் முறையே யாகும்;
அழுக்காறு அவாவெகுளி ஆகாது போக்கி,
அன்பிரக்கம், தொண்டு தவம், அறிவின் விழிப்பேற்போம்.
பழுத்தறிவு முழுமைபெறும்! பரஉணர்வு கிட்டும்!
பற்றறிந்து பலனுணர்ந்து பண்புடனே வாழ்வோம்.
பல செயல்களையே மாற்றிப் பண்பாட்டை வளர்ப்போம்.
ஒழுக்கமது துன்பம்எழா அளவு முறையோடு
உணர்ச்சிகளைச் சீர்செய்து வாழும் முறையே யாகும்;
அழுக்காறு அவாவெகுளி ஆகாது போக்கி,
அன்பிரக்கம், தொண்டு தவம், அறிவின் விழிப்பேற்போம்.
பழுத்தறிவு முழுமைபெறும்! பரஉணர்வு கிட்டும்!
பற்றறிந்து பலனுணர்ந்து பண்புடனே வாழ்வோம்.
(ஞானக்களஞ்சியம் கவி: 1595)
வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!!
தத்துவஞானி வேதாத்திரி மகரிசி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக