✅ *பதில்:* உழைக்காமல் இருக்கக் கூடாது என்று கடமைகளை வலியுறுத்தவும், கடமையின் மேன்மை பற்றி உணர்த்தவும் வகுக்கப்பட்ட நெறிமுறைகள் தான் பிற்காலத்தில் பொருளாதாரம் என்ற துறையாகியது. பொருட்கள் ஈட்டல், காத்தல், உய்த்தல், பிறர்க்களித்தல் என்ற கூட்டுறவை உணர்த்த வகுக்கப்பட்ட சமுதாய நெறிமுறைகள் அரசியல்துறையாகியது. கடமைகளைச் செய்வதிலும் பொருள்துறையிலும் ஒருவருக்கொருவர் துன்பப்படுத்தாமல் இருக்க உணர்த்திய நெறிமுறைகள் மதங்கள் என்றாயிற்று. என்றாலும் இப்பொறுப்பில் உள்ள மனிதர்கள் பொருள், புகழ், செல்வாக்கு புலனின்பத்திற்கு அடிமையாகி இன்னும் வேண்டும் இன்னும் வேண்டும் என்று பேராசை கொண்டு வாழும் நிலையால் தான் இத்தனை சீர்கேடுகளும் ஏற்பட்டுள்ளன.
பொருளாதாரம், அரசியல், மதம் என்ற மூன்று துறைகளும் ஒன்றுக்குள் ஒன்றாக பின்னிப் பிணைந்துள்ளன. இந்த மூன்று துறைகளிலும் பொறுப்பிலுள்ளவர்களுடன் சமுதாய நலத்தொண்டில் ஈடுபட்டுள்ளவர்களும் கூடி, தன்னல நோக்கமின்றி விஞ்ஞான அடிப்படையில் திட்டமிட்டுச் செயல்பட்டுத்தான் இச்சீர்கேடுகளைப் போக்க வேண்டும்.
வாழ்க வளமுடன்!!
*அருள்தந்தை தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக