Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

திங்கள், 7 அக்டோபர், 2019

ஆன்மீகத்தில் மூன்று ஓட்டைகள்

வேதாத்திரிய இரகசியங்கள்: அக்டோபர் - 07
ஆன்மீகத்தில் மூன்று ஓட்டைகள்
நமது நாட்டிலும் பிறநாட்டிலும் ஆன்மீகத் துறையில் ஒரு குறைபாட்டைக் காணலாம். ஒரு மகானுக்கும், இன்னொரு மகானுக்கும் கால இடைவெளியிருக்கும். ஒரு மகானைக் தொடர்ந்து அவர் கருத்தைப் பரப்ப இன்னொரு மகான் உடனடியாகத் தோன்றினார் என்று கிடையாது. கடைசியாக நாம் அறிந்த அத்தகு மகான் வள்ளலாராவார். அவர் மறைவுக்குப் பின் ஓரளவு இடைவெளிக்குப் பிறகே நம் வேதாத்திரி மகான் தோன்றியுள்ளார்.
இவருக்குப் பிறகும் மேற்கண்ட விதி குறுக்கிடுமா? மகரிஷியைத் தொடர்ந்து உடனடியாக அவருக்கு நிகரான மகான் தோன்றுவாரா? தோன்றி தொண்டினைத் தொடர்வாரா? இரு அன்பர்களுக்கிடையில் ஏற்பட்டது இந்தச் சர்ச்சை. மகரிஷிக்குப் பின் ஒருகால இடைவெளிக்கு பின்புதான் இன்னொரு மகான் தோன்றி இவரது பணியைத் தொடர்வார் என்று ஒருவர் கூறினார். மற்றவர் மறுத்தார். இதற்கான விடை மறுப்புத் தெரிவித்தவருக்கு மகரிஷியிடமிருந்து கிடைத்தது.
1977 ஏப்ரல் முதல் வாரத்தில் நீலகிரி சிறப்புப் பயிற்சியில் கலந்துகொண்ட அந்த அன்பர், ஓய்வு நேரத்தில் மகரிஷியிடம் இவ்வினாவை எழுப்பினார். “அதான் இருந்த ஓட்டைகள் மூன்றையும் நான் அடைத்துவிட்டேனே. அந்த மூன்று ஓட்டைகளால் தானே அப்படிக் கால இடைவெளி மகான்களுக்கிடையில் ஏற்பட்டது. அந்த மூன்று ஓட்டைகள் அடைபட்டுப் போகவே மகான்கள் என்றென்றும் ஒருவர் பின் ஒருவராகக் கால இடைவெளியின்றியும் ஒருவர் இருக்கும்போதே ஒருவராகவும் தோன்ற வேண்டியதுதானே” என்று பளிச்சென பதில் கூறினார்.
அந்த மூன்று ஓட்டைகள்:
1. இறைநிலையைப் பற்றிய தெளிவான விளக்கம் சொல்லப்பட்டு அது வெட்டவெளிதான் என்பது நிறுவப்படவில்லை. (மகரிஷி உறுதி செய்தார்.)
2. உயிரைப் பற்றி அறியாமலே மனதைக் கொண்டு இறைவனை அறிந்துவிடலாம் என்றிருந்த குறை. (மனதையும் இறைநிலையையும் இணைக்கும் உயிர் பற்றிய தெளிவை மகரிஷி அளித்துவிட்டார்.)
3. பிரம்மச்சர்யம் தான் ஆன்மீகத்திற்கு ஏற்றதென்ற தவறான கருத்து. இல்லறத்திலிருந்து கொண்டே குண்டலினி தவம் பயில மகரிஷி வழி வகுத்துள்ளார்.
அகத்தவத்தின் பொருள்கண்டு அதன்பெருமை யுணர்ந்திடுவீர்;
அகத்தவமோ உயிரினிலே அறிவை ஒடுக்கும் பயிற்சி;
அகத்தவத்தால் மேலும்உயிர் அம்மாகி மெய்ப்பொருளாம்;
அகத்தவத்தால் வீடுணர்ந்து அமைதி பெற்று இன்புறலாம்.
அகத்தவத்தால் ஐம்புலனை அடக்கி அறிவறிந்திடலாம்;
அகத்தவத்தால் ஆறுகுண ஆளுமைப் பேறடைந்திடலாம்;
அகத்தவத்தால் இல்லறத்தை அன்பகமாய் ஆற்றிடலாம்;
அகத்தவத்தால் அனைத்துயிர்கள் அரும்நட்பைப் பெற்றிடலாம்.
அகத்தவம் தீவினையகற்றும்; அருள் நெறியை இயல்பாக்கும்;
அகத்தவமே இறை வழிபாடனைத்திலும் ஓர் சிறந்த முறை;
அகத்தவமே உயிர் வழிபாடதனை விளக்கும் ஒளியாம்;
அகத்தவமே மதங்கள் எல்லாம் அடைய விரும்பும் முடிவு.
📚 ஞானக்களஞ்சியம் கவி: 1496 📚

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக