நிருவிகற்ப நிலை என்றால் என்ன?
யோகத்தின் இறுதி நிலையாகிய சமாதி நிலையில் பல்வேறு நிலைகள் இருப்பதாக மகான்கள் கூறுகின்றனர். அதில் ஒரு நிலை நிருவிகற்ப சமாதி நிலை. இதனை,
“நேசநிருவிகற்ப நிஷ்டையல்லால் உன்னடிமைக்கு ஆசை உண்டோ நீ அறியாதது
அன்றே பராபரமே”என்கிறார் தாயுமானவர்.
இதனை உறக்கமற்ற உறக்கநிலை என்பர்.
இந்த நிலையில் உறக்கத்தில் தான் என்ற உணர்வும், தன்னைச் சூழ்ந்துள்ள உலகைப்
பற்றிய நினைவுகளும் இல்லாமல் இருக்கும். இந்த நிலையை அடைந்தவன் அனைத்து
சுக போகங்களிலிருந்து விடுபட்டு பூரணப் பொலிவுடன் விளங்குவான்.
ஆசையும் துன்பமும் அவனை அணுகாது. இந்த நிலையையே வேதாத்திரி மகரிஷி அவர்கள்
“நிருவகற்ப நிலை” என்கிறார்.
வாழ்க வளமுடன் !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக