அன்று ஒரு நாள் ஈரோடு மன்றத்திலே வாழ்க்கை தத்துவம் குறித்து மகரிஷி அவர்களின் அற்புத அருளுரை.
கேள்வி நேரத்தில் ஒரு அன்பரின் கேள்வி : வாழ்க்கையை ஏன் பிழைப்பு என்று கூறுகிறோம்?
நான் கூட நினைத்தேன், இது என்ன கேள்வி என்று. வெறும் வழக்கு சொல்தானே பிழைப்பு,,
ஆனால் ஸ்வாமிஜி அவர்கள் அழகாக விளக்கம் சொன்னார்கள் பாருங்கள் எல்லோரும் அசந்து விட்டோம்.
நீண்ட பதில். இங்கு எளிமையாக உட்கருத்தை மட்டும் பதிவிடுகிறேன்.
உலகம் சுழல்கின்ற வேகத்தால் அதன் விளிம்பில் மையத்தை விட்டு விலக்கும் அல்லது தள்ளும் சக்தி உண்டாகிறது. இதனால் உடலில் இருந்து கோடிக்கணக்கான நுண்ணியக்கத் துகள்கள் உடலை விட்டு தொடர்ந்து வெளிநடப்பு செய்கின்றன.
அதே போல பூமியின் மைய ஈர்ப்பு ஆற்றலால் முதிர்வுற்ற கோடிக்கணக்கான செல்களை தினமும் உடல் இழந்து கொண்டிருக்கிறது.
இந்த இழைப்பை ஈடு செய்ய புதிய சக்தி மிக்க செல்கள் உணவிலிருந்தும் காற்றிலிருந்தும் கோள்களிளருந்தும் நீரிலிருந்தும் பெறுவதால் உடலை நாம் புதுப்பித்துக் கொள்கிறோம்.
இவ்வாறு உடலின் ஆற்றல் இழப்பிற்கும், சேர்க்கைக்கும் இடையில் நாள்தோறும் மனிதன் சாவிலிருந்து தப்பி பிழைத்துக் கொண்டேயிருக்கிறான். இதனால் தான் வாழ்க்கைக்கு பிழைப்பு என்ற பெயர் வந்தது.
எங்கு தேடினாலும் கிடைக்காத
விளக்கம். அவர் ஒருஞானச் சுரங்கம்.
குருவே சரணம்,,
வாழ்க வளமுடன்,,
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக