✅ பதில்: அத்தகைய கோவில்களில் மகான் ஒருவருடைய உயிர் அடக்கமாகி இருக்கலாம் அல்லது அங்கே ஒர் எந்திரத்தை நிறுவி, அதற்கு மந்திரங்களைச் செபித்து, அங்கு ஓர் ஆற்றல் களத்தை (Energy Field) ஏற்படுத்தி வைத்திருப்பார்கள்.
அந்த ஆற்றல் களத்திற்குச் சென்றால் இணைந்த ஆவிக்கு ஒரு வேகமான உணர்ச்சி மிக்க இயக்கம் உண்டாகும். தானாகவே நடைபெற்றுக் கொண்டிருக்கக் கூடிய சொந்த ஆன்மா மயக்கநிலையில் (Trance State) இருக்கும். அந்தச் சமயம் இணைந்த ஆவி தானாகவே ஆடி ஆடி வெளியேறக் கூடிய அளவுக்கு வந்துவிடலாம்.
ஆனால், அது வெளியேறுவது என்பது இல்லை. தான் அடைக்கலமாக எந்த உயிருடன் சேர்ந்திருக்கிறதோ அந்த உயிருடனேயே கலந்து ஒன்றுபட்டுவிடும். இதுவரை பொருந்தாது தொல்லைகள் செய்து வந்த ஆவி இப்பொழுது அமைதி பெற்று விடும்.
சில பூசாரிகள் அவற்றிற்கு ஒவ்வொரு அம்மன் பெயர்களை வைத்து , அந்த அம்மன் மலையேறிவிட்டது என்பார்கள். பின் நன்மையே வரும்.
எவ்வாறென்றால், நம்மிடமுள்ள அந்த உயிரை வணங்குந்தோறும் நன்மையே அளிக்கும். எதிர்க்கும்தோறும் தீமையே தரும்.
வாழ்க வளமுடன்!
அருள்தந்தை வேதாத்திரி மகரிஷி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக