மனதிற்கு இரண்டடுக்குப் பதிவுகள் உள்ளன. ஒன்று கருவமைப்பினால் பெற்றோர்களை அடிப்படையாகக் கொண்டு வந்தது. மற்றது பிறந்தது முதல் என்னென்ன நினைத்தோமோ, என்னென்ன செய்தோமோ அவை அனைத்தும் பதிவாகியுள்ளது. இந்த இரண்டும் சேர்ந்து தான் ஒரு மனிதனுடைய தன்மையாக உருவாகிறது. முன்பு மனதை இயக்கிப் பதிவுகளைப் பெற்று ஒரு தன்மையை நாம் கொண்டுள்ளோம். அதை மாற்றி மனத்தை நம்முடைய விருப்பப்படி நடத்தி நாம் அடைய வேண்டிய எல்லா இலட்சியங்களையும் அடைய அதற்கென ஒரு பயிற்சி வேண்டும். பழக்கத்திற்கும், விளக்கத்திற்கும் இடையே போராடிக் கொண்டிருக்கக்கூடிய மனதின் பழக்கத்தை முறையாக மாற்றிக் கொண்டு விளக்கத்தை நல் விளக்கமாக பெற்று அதன் வழியே வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும். கருமையத்தின் களங்கத்தைப் போக்க மன இயக்கத்தைத்தான் சீர் செய்ய வேண்டும். செயல்களில் ஒழுக்கத்தை நடைமுறைப்படுத்தினால் தான், மன இயக்கம் ஒழுங்குறும். இதன் மூலம் தான் மனிதன் மனத்தாலும், குணத்தாலும், சீர்மை பெற்று இயற்கை வழிநின்று அறவாழ்வு பின்பற்றி அமைதியோடும், மகிழ்ச்சியோடும் வாழமுடியும். இத்தகைய மனவளம் பெற நிச்சயமான செயல் வழி வாழ்க்கை வள விஞ்ஞானம் தான் "மனவளக்கலை".
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக