நாம் எப்பொழுதும் எண்ணத்தில் நல்ல எண்ணம், செய்கையில் அளவு முறை கண்ட செய்கை, விழிப்போடு முன் அனுபவம், பின் விளைவு இந்த இரண்டையும் நினைத்துக் கொண்டு, தற்கால சூழ்நிலையோடு தொடர்பு கொள்ள முடியுமேயானால், இதுதான் மெய்யுணர்வு, திரிகால ஞானம், உண்மை உணர்ந்த வாழ்வு. இந்த உண்மை உணர்ந்த வாழ்வுக்கு 'அலை இயக்கம்' என்ற ஒரு நியதியை உணர்ந்து கொள்ள வேண்டும். எந்த பொருளும் அணுவினுடைய கூட்டு தான். ஒவ்வொரு அணுவும் இயங்கிக் கொண்டேயிருக்கிறது. அதிலிருந்து அலை வீசிக் கொண்டே இருக்கிறது. எதிர்படும் ஒவ்வொரு அலையிலும் பதிவாகிறது. அந்தப் பதிவு மீண்டும் மீண்டும் அதன் தன்மையாக (Character) மாறிவிடுகிறது. இதையெல்லாம் பார்க்கும்பொழுது நாம் எந்த செயல் செய்தாலும் எந்த எண்ணம் எண்ணினாலும் அது அலை இயக்கத்தின் மூலமாக நம் சொத்தாக பதிவாகி விடுகின்றது. நம்மிடம் எப்போதும் அலை இயக்கம் இருப்பதினாலே, அதையே செய்யும்படியாக தூண்டும். அதற்கேற்ப விளைவும் வருகிறது. ஒரு மனிதனை நினைத்து அவன் நல்லவன் நல்லவன் என்று எண்ணிக் கொண்டிருக்கிறீர்கள். அவனை வாழ்த்திக் கொண்டிருக்கிறீர்கள். அந்த அளவு நம் அலையே ஒரு நல்ல அலையாக மாறி, அது செல்லும் இடமெல்லாம் அதே அலைத் தன்மையை ஏற்படுத்துகிறது. எனவே நல்ல எண்ணம் நல்ல செயல் இரண்டும் வேண்டும். மனம், செயல் சரியாக வைத்துக் கொள்ள வேண்டும். இந்த இரண்டின் வழியேதான் மனிதன் வாழ்வாங்கு வாழ முடியும். பிறரையும் வாழ விட முடியும்.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக