ஒரு செயலின் விளைவிலிருந்து ஒரு போதும் தப்பமுடியாது என்ற இயற்கை நியதியை உணர்ந்து எப்போதும் விழிப்போடு செயலாற்றப் பழகிக்கொள்ள வேண்டும். எண்ணம், சொல், செயல், மூன்றிலும் விழிப்போடு இருக்கவேண்டும். இதற்கு தவமும் (Meditation) தற்சோதனையும் (Introspection) மிகவும் உதவியாகும். இவற்றால் அறிவு கூர்மையடைந்து கிரகிக்கும் சக்தி (Receptivity) அதிகப்படும். பிறரோடு ஒத்துவாழும் நிலையும், சந்தர்ப்ப சூழ்நிலைக்கேற்ப சகித்துப்போகும் நிலையும் (Adaptability) உண்டாகும். இதனால் தன்னலங்கருதாத தகைமையுணர்வு (Magnanimity) மேலோங்கும். இவற்றால் தீமை விளைவிக்கும் செயலில் ஈடுபடமுடியாத நிலை, ஆக்கச்செயலில் மட்டுமே ஈடுபடக்கூடிய தெளிவு (Creativity) தானே உண்டாகிவிடும். இவையே மன அமைதிக்கு அடிப்படையாகும். விரிவு, விளக்கம், விழிப்பு என்ற நிலைகளும் கூர்ந்துணர்தல், கிரகித்தல்,ஒத்துப்போதல், பெருந்தன்மை, ஆக்கச்செயல் ஈடுபாடு ஆகியனவும் வளர்க்கப்படும் அளவுக்கு மன அமைதியும் கைக்கூடும்.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக