---------------------------------------------
மனிதன் மனதின் அலை விரைவைக் குறைத்து இறைநிலைக்கு வந்தால், அவனது கருமையத்தில் அடங்கியுள்ள அனைத்து உண்மைகளும், தானே இயங்கி, பதிவு பற்ற அனுபவங்களும் அகக்காட்சியாக விளங்கிவிடும். இந்த உண்மையினை "அதுவானால் அதுவே சொல்லும்" என்று முன்னோர்கள் கூறியுள்ளார்கள்.
...
இத்தகைய பெருமை வாய்ந்த கருமையத்தைப் பெற்ற மனிதன் இந்நிதியிலிருந்து எந்த எண்ணத்தை எடுத்துச் செயலுக்குக் கொண்டு வருகிறானோ அந்த அளவிற்கேற்ப அவனது வாழ்க்கை தரமும், வளமுடையதாக அமையும்.
"காந்த ஆற்றல் உட்பொருள், கருமையத் துட்பொருள்,
கடவுளெனும் இறைவெளியே! இயக்க ஆற்றலும் இதே!
காந்தமேனும் நிழல்விண்கள் தன்மாத்திரை ஐந்துமாய் ,
கடைநிலையில் மனமுமாய்க் கலந்துளது வெளியோடு "
--அருள் தந்தை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக