மனித வாழ்வில், எண்ணம், சொல், செயல் ஆகிய மூன்று வகைச் செயல்கள் உள்ளன. அவற்றிற்கேற்ற விளைவுகளும் உண்டு. மீண்டும் மீண்டும் அவற்றையே செய்ய எண்ணமும் செயல்களும் எழும். இவையாவும் பதிவுகளாகி அறிவாட்சித் தரமாக அமைந்து விடும். அறிவாட்சித் தரமே ஒருவர் வாழ்வில் இன்பம், துன்பம், அமைதி, பேரின்பம் ஆகிய அனைத்தையும் அளிக்கவல்லது. எனவே ஒவ்வொருவரும் தனது கருமையத்தைத் தூய்மையாக வைத்துக் கொள்ளவேண்டியது அவசியம். எண்ணம் ஆராய்தல், என்னும் தற்சோதனைப் பயிற்சி மூலமும், உடலில் உள்ள நோய்கள் மூலமும் கருமையத்திலுள்ள களங்கங்களை ஓரளவு தெரிந்து கொள்ளலாம். பிறகு அந்தக் களங்கங்களைத் தூய்மை செய்வதற்கு ஆசை சீரமைப்பு, சினம் தவிர்த்தல், கவலை யொழித்தல் ஆகிய பயிற்சிகளை மேற்கொண்டு, அப் பயிற்சிகளின் வழியே பெற்ற விளக்கத்தின் படியே வாழ்க்கையை நடத்திவரவும் வேண்டும். பொதுவான மனிதகுல நீதியான எவருக்கும் துன்பம் எழாத முறையில் செயல் புரிந்து ஒழுக்கமாக வாழ்வதோடு பிறர் துன்பங்களை முடிந்தவரை தனது உடல் பொருள் ஆற்றல் இவற்றைக் கொண்டு போக்கி வரவும் வேண்டும்
.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக