Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

சனி, 26 அக்டோபர், 2013

என் வீடு :



மெய் விளக்கம் என்பது மனிதனுக்கு ஒரு முழுமையான மன மாற்றம் [Transcendental state of Consciousness ] ஆகும். மெய்ப்பொருளைப் பற்றி இன்னது என விளங்கிக் கொண்டால் மட்டுமே போதாது; "நான் பிரம்மம், நானே பிரம்மம்," என்று பிறர் காதுக்கு எட்டுமாறு கூறிக்கொண்டே இருப்பதும், இவ்வாக்கியங்களையே மந்திரமாக செபித்துக் கொண்டிருப்பதோ மட்டும் போதாது....அந்த விளக்கத்தில் தோய்வு பெற்று வாழ்வில் அறநெறி ஒழுகி மெய்ப்பொருளே தானாக இருக்கும் பேரறிவில் நிலைத்து மனமாற்றம் பெற்று நிற்க வேண்டும்.

உதாரணம் : ஒரு பெண் திருமணம் ஆகும் வரையில் தந்தையார் குடும்பத்தவளாகவே தன்னைக் கருதிக் கொண்டிருக்கிறாள். அவள் திருமணம் செய்து கொண்டு கணவன் வீடு சென்று அக்குடும்பப் பொறுப்பில் தோய்ந்த பின் கணவன் குடும்பத்தவளாகவே அறிவிலும் பொறுப்பிலும் மாற்றமடைகிறாள். "மாமியார் வீடு" என முன்னர் அவள் கருதியது "என் வீடு" என்றாகிறது; "என் வீடு" என முன்னர் இருந்தது "தாயார் வீடு" என்றாகிவிட்டது! அதுபோல தவத்தில் மெய்ப்பொருளோடு ஒன்றிக் கலந்து நிலைத்து நிலைத்துப் பழகி அதுவே தானுமாக இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளும்போது ஒரு உயர்ந்த நிலைக்கு மனமாற்றம் உண்டாகின்றது. வேதாந்தங்களைப் படித்ததாலோ மற்றவர்கள் விளக்கக் கேட்டுப் புரிந்து கொண்டதாலோ மாத்திரம் இத்தகைய முழு மனமாற்றம் உண்டாவது அரிது. தன்முனைப்பை அடியோடு ஒழித்துப் பேராதாரப் பேரறிவோடு கலந்து உறைவதற்குப் பயிற்சியால் தான் இயலும்.
                                                                                                            -வேதாத்திரி மகரிஷி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக