எந்தெந்தப் புலன்கள் மூலமாக செயல்கள் செய்து அனுபோகம், அனுபவம் பெறுகிறோமோ அவையெல்லாம் அந்தந்த உறுப்புகளில் பதிவாகி திரும்பத் திரும்ப மீண்டும் அந்த எண்ணம்; நினைவு வரும் பொழுது அதே நினைவு, அதே காட்சி இவை மூலமாக எண்ணம் வந்து விடுகிறது. எண்ணமும் செயலும் தேவையாக, பழக்கமாக, சூழ்நிலைக் கவர்ச்சியாக மாறி அடிக்கடி மனிதனிடம் செயல்படுகின்றது. இது போன்றே நாம் பேசும் பேச்சுக்களும் பதிவாகின்றன. நாவில் இயக்கப் பதிவாக, உடல் முழுவதும் ஒலியலை அதிர்வுப் பதிவாக, மூலையில் நினைவுப் பதிவாக, வித்தில் தரப்பதிவாக, பிரபஞ்ச உயிரிலும், பிற உயிர்களிலும் பிரதிபலிப்புப் பதிவாக அமைகின்றன. இந்த விளக்கத்தைக் கொண்டு ஓர் எண்ணம், ஒரு செயல் எவ்வாறு பதிவு, பிரதிபலிப்பு, செயலால் இன்ப துன்ப விளைவுகள் என்ற நான்காக மாற்றம் பெறுகிறது என்பதை உணரலாம். இந்த உண்மையை உணர வேண்டும். இதற்குப் படிப்பு ஒன்றும் பயன்படாது. எந்த விஞ்ஞான கருவியும் கூட பயன்படாது. நம்முடைய மனம், நம்முடைய வாழ்க்கை முறை, நம்முடைய இன்ப துன்ப உணர்வுகள், நம் சிந்தனை இதனைக் கொண்டு உட்கார்ந்து அதற்கு உரிய முறையில் ஆராய்ச்சி செய்து அவரவர்களே தெரிந்து கொள்ள வேண்டியது தான்.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக