பரு உடல், நுண்ணுடல் (சூக்கும உடல்), காந்த அலை என்ற மூன்றும் ஒன்றுக்குள் மற்றொன்றாக அடங்கிச் சிறந்த உறுப்புகளமைப்பும், ஆறாவது அறிவின் இயக்கச் சிறப்பும் உடையது மனித உடல். மனித அறிவு அதன் புறப்பகுதியில் மனமாக இயங்குகின்றது. மனம் என்பது சீவகாந்த அலையேயாகும். உடலுக்கும் சீவகாந்த அலை ஓட்டத்திற்கும் இடையே ஏற்படும் உரசலால் இந்தச் சீவகாந்த அலை அழுத்தம், ஒலி, ஒளி, சுவை, மணம் எனப் பஞ்சதன்மாத்திரைகளாக உடலில் செயல்பட்டுக் கொண்டேயிருக்கும் போது, ஆதிநிலையில் பேரறிவாக அடங்கியிருந்த அறிவே தான் தன்மாற்றங்களான தன்மாத்திரைகளை உணர்ந்து கொள்ளும் நிலையில் மனமாக மலர்கின்றது. ஐந்து புலன்களும் பரிணாமம் அடைந்த பின் மனம் எனும் காந்த அலையானது புலன்களைக் கடந்தும் இயக்கக் கூடிய ஆற்றலைப் பெறுகின்றது. இந்த நிலை தான் அறிவிற்கு ஆறாவது நிலையாகும். புலனறிவு என்பது புற அறிவாக மட்டுமே செயல்படக்கூடியது. புற அறிவிற்கு அடித்தளமாக, இருப்பு நிலையாக இருப்பது இறைநிலையே. இதனை அடிமனம் என்றும் மொழிவழக்கில் கூறுகின்றோம்.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக