இறைநிலையே எல்லா இடத்திலேயும் , எந்தச் செயகளிலேயும் அடங்கி மறைமுகமாக இருந்து கொண்டு , செயலுக்குப் பிறகு விளைவு, செயலிலிருந்து விளைவாக வருகிறது என்பதை தெரிந்து கொள்ளும் போது . இறைநிலையை எந்த நேரத்திலும் மறக்க முடியாது.
"மறைபொருளாக " புலன்களுக்கு எட்டாமல் எங்கும் எதிலும் ஊடுருவி நிறைந்திருக்கும் இறைநிலை, மனிதன் செய்யும் செயல்களின் செயலின் விளைவாகப் புலன்களுக்கு எட்டக் கூடிய நிலையில் வெளிப்பட்டு "விளைவாகக் " காட்சியளிக்கிறது.
மனிதன் ஆற்றும் செயல்கள் அவனது எல்லை கட்டிய அறிவின் ஆட்சிக்கு உட்பட்டவை. ஆனால் செயலுக்கு விளைவை தரக்கூடிய இறைநிலையோ எல்லையற்ற ஆற்றலுடையது. எந்தச் செயலும் இன்ப துன்ப விளைவுகளைத்தரும் என்ற இயற்கை நியதியை மறுக்க முடியாது . மறக்கவும் கூடாது .
இறைநிலையும் தானும் ஒன்றாக இருக்கக் கூடிய உண்மை நிலையை அறியாத முன்னம் செய்த தவறுகள் துன்பங்களை கொடுத்தன . ஆனால் இப்போது செயல் விளைவு நீதியை உணர்ந்த நிலையில் இறைநிலையே தானாகவும் இருக்கிறது என்ற விரிந்த நிலையிலே இனித் தவறுக்கு இடமில்லை. தவறுகளும் எழா .
-----அருள்தந்தை

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக