அவையாவன:-
1) கடவுளைத் தேடிகொண்டேயிருந்தும் காண முடியாத குறை.
2) வறுமை என்னும் ப...ற்றாக்குறை.
3) விளைவை அறியாமலோ, விளைவை அறிந்தும் அதை அலட்சியம் செய்தோ அவமதித்தோ செயலாற்றி அதன் பயனாகத் துன்பம் அனுபவிக்கும் குறை.
4) மனிதன் சிறப்பறியாமல் பிறர்மீது அச்சமும், பகையும் கொண்டு துன்புறுத்தியும், தான் துன்புற்றும் அல்லலுறும் குறை.

இந்த நான்கு குறைபாடுகள் ஒன்றோடு ஒன்று இணைந்துவிட்டன. வாழ்க்கையில் பலவிதமான சிக்கல்களாகி அவற்றை எளிதில் தீர்த்து விடுதலை பெறமுடியாமல் - வழி காணாமல் மனிதன் தவிக்கிறான். வாழ்வின் நலமிழந்து தான் வருந்தியும் - பிறரை வருத்தியும் வாழ்கிறான். தெரிந்தோ தெரியாமலோ இக்குறைகளிலிருந்து விடுதலை பெற மனிதன் முயல்கிறான். குறை நீங்கி முழுமை பெற வேண்டும் என்ற ஆர்வம் ஒவ்வொருவரிடத்தும் ததும்பிக் கொண்டிருக்கிறது. அதற்கேற்ப சிந்திக்கிறான்; முயற்சி செய்கிறான்; உணர்ந்த அளவிலே செயல்களில் இறங்கி அதன்படி விளைவுகளைக் காண்கின்றான்.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக