Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

வெள்ளி, 15 ஆகஸ்ட், 2014

வானியல்

வானியல்

இதுவரையில், பிரபஞ்ச தன்மாற்றத்தில் உயிரின உற்பத்தி செயல்பாடு வரையில் சிந்தித்தோம். இவ்வளவும் உலகம் என்ற மண் உருண்டை மீது நடந்த நிகழ்ச்சிகளே ஆகும். நிலவுலகத்தைச் சுற்றியும், அப்பாலும் பல வியத்தகு நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. அந்த நிகழ்ச்சிகளை வானியல் (Cosmology) என்ற சொல்லால் வழங்கி வருகிறோம்.

முதலில் விண்கோள்கள் (Planets) எவ்வாறு தோன்றுகின்றன என்பதைப் பற்றி அறிந்து கொள்வோம். பல அற்புதமான இயக்கங்கள் நம்மைச் சுற்றி, உலகைச் சுற்றி பிரபஞ்சத்தில் நிகழ்ந்து வருகின்றன. அவற்றைப் பற்றி நாம் நினைத்து பார்ப்பது கூட இல்லை. ஒரு உதாரணம் கூறுகிறேன். நாமெங்கே வாழ்கிறோம்? நில உலகின் மீது. நில உலகம் எங்கே இருக்கின்றது? ஆகாயத்தில் மிதந்து உருண்டு ஓடிக் கொண்டிருக்கிறது. நாம் அதை விட்டுவிட்டுத் தனியாகவா இருக்கிறோம்? உலகம் சுற்றும் வேகத்திலும், மிதக்கும் தன்மையிலும், உருளும் நிகழ்ச்சியிலும் நாமும் இணைந்துதான் இருக்கிறோம்.

இந்த உலகமோ சூரியனைச் சுற்றி வரும் வேகத்தில், ஒரு நாளைக்கு நாம் பூமியின் மேல் அமர்ந்து கொண்டு சூரியனை பதினைந்து லட்சத்து ஐம்பதாயிரம் மைல் வேகத்தில் சுற்றிக் கொண்டு பிரயாணம் செய்து கொண்டு இருக்கிறோம். இந்த அற்புத நிகழ்ச்சியை நாம் என்றாகிலும் நினைந்து பார்த்து வியந்திருக்கிறோமா? இல்லை. ஏனெனில், இதுவரையிலே நமது மனதைத் தினசரி உடல் தேவை பொருட்கள், அவற்றை அனுபவிப்பதில் கிடைக்கும் இன்பம், துன்பம் போன்றவற்றால் கட்டுப்படுத்திக் கொண்டோம்.

இப்பொழுது நாம் அந்த குறுகிய எல்லையைக் கடந்து இயற்கையில் நடைபெறும் வியத்தகு நிகழ்ச்சிகளை உணர்ந்து அந்த அளவுக்கு மனவிரிவு பெற்று வியப்பும், மகிழ்ச்சியும் அடைகிறோம். ஆகையால் மனித மனம் விரிவுபட இறைநிலை ஆற்றலை ஓரளவு அனுமானம் கொள்வதற்கு வானியல் என்ற தலைப்பில் சில உண்மைகளை அறிந்து கொள்ள வேண்டும்.

கோள்களின் தோற்றம்

விண் என்ற இறைத்துகள்களின் தொகுப்பு ஆகாயத்தில் எங்கும் நிறைந்திருக்கின்றன. அவைகளில் சில இறைவெளியின் சூழ்ந்தழுத்தத்தினால் ஒன்றுகூடி தொகுப்பாக இயங்க ஆரம்பிக்கிறது. இதே முறையில்தான் எந்த தோற்றப் பொருளும் உற்பத்தியாகின்றன. ஒரு கோளுக்கும், மற்றொரு கோளுக்கும் இடையே துல்லியமான இடைவெளி உண்டு. அது எவ்வாறு அமைகிறது என்று சிந்திப்போம்.

ஒவ்வொரு அணுவிலிருந்தும் இறைதுகள்கள் தற்சுழற்சி விரைவால் எப்பொழுதும் பிரிந்து ஓடிக் கொண்டே இருக்கின்றன என்பதை முன்னமே உணர்ந்தோம். அந்தத் துகள்கள் ஒவ்வொன்றும் குறிப்பிட்ட அளவு விலக்கு வேகம் கொண்டவையாகும். ஒரு கோளில் இவ்வாறு எத்தனை இறைத்துகள்கள் வெளியேறிக் கொண்டிருக்கின்றனவோ அவற்றின் மொத்த ஆற்றலின் தள்ளுவேகம் ஒவ்வொரு கோளுக்கும் உண்டு. சூரியனுக்கும், பூமிக்கும் இடையே கூட இந்த நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கிறது. இரண்டு கோள்களுக்கு இடையே ஓடிக் கொண்டிருக்கும் இறைத்துகளின் அலையாற்றல் ஒன்றை ஒன்று தள்ளிக் கொண்டே இருக்கும். சூரியன், பூமி இரண்டிலிருந்தும் வெளியாகும் தள்ளு ஆற்றலை ஒன்று கூட்டினால் வரும் விடையே இரண்டு கோள்களுக்கும் இடையே அமையும் தொலைவு ஆகும்.

இதுபோன்று வான்வெளியில் உலவும் எல்லா கோள்களுக்கும் இடையே அமையும் தொலைவு ஆகும். வான்வெளியே இறைத்துகள்களால் ஆன காந்த ஆற்றல் நிரம்பிய ஒரு களம்தான். ஆகவே பிரபஞ்சக்களம் காந்த ஆற்றலால் ஆக்கப்பட்டதனால் எப்பொழுதும் முழுவதுமாக தற்சுழற்சி இருந்து கொண்டேயிருக்கிறது. இந்த பிரபஞ்சக்கள தற்சுழற்சியினால் இயற்கை விதிப்படி ஒரு முழுமையான துல்லிய சமதளச் சீர்மை
(Specific Gravity) அமைகிறது.

இதனால் பிரபஞ்சத்தின் மையப் புள்ளியிலிருந்து ஒவ்வொரு விண்கோளும் எவ்வளவு தொலைவில் இருக்கின்றதோ, அதன் எடை எவ்வளவோ, அதற்கேற்றவாறு ஒவ்வொன்றும் பிரபஞ்சக் களத்தில் இடம் பெற்று மிதந்து, உருண்டு, ஓடி இயங்கிக் கொண்டிருக்கின்றது. இவை ஒருபோதும் மாறுவதில்லை. மாற்றம் இருந்தால் பிரபஞ்சத்திலுள்ள விண்கோள்கள் அளவிலும், எடையிலும், ஓட்டத்திலும் அமையும் வேறுபாடுகளே அத்தகைய மாற்றங்களுக்கு காரணமாகும்.

இவையனைத்தும் வானியலில் அடங்கிய இறைநிலையால் செயல்படுத்தப்படும் வியப்புறும் நிகழ்ச்சிகளே. இத்தகைய வானியல் விந்தைகளை, மண்ணுலக நிகழ்ச்சிகளில் நடைபெறும் விந்தைகளை, உடலில் நடைபெறும் உண்ணும் உணவே ஏழு தாதுக்களாக மாறும் உண்மைகளை, இறையாற்றலின் அற்புதமான விளையாட்டாக நாம் உணர்ந்தால் நமது அறிவு எவ்வளவு விரிவாக செயல்படத்தொடங்கும்!

ஆகையால், மேலே விளக்கிய இறைநிலையின் அற்புதமான விந்தைகளை அறியும் அளவுக்கே மனிதனுடைய நன்மைகளும், அறிவின் சிறப்புகளும் அமையும். அதனால் இத்தகைய இயற்கைவளக் கல்வி மனித இனத்துக்கு எவ்வளவு உயர்வானது, சிறப்பானது என்று கண்டு மன நிறைவு பெறுவோம்.


வேதாத்திரி மகரிஷி,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக