Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

வியாழன், 6 நவம்பர், 2014

சுவாமிஜி..! சூரியனிலிருந்து ஒளி,வெப்பம் வரவில்லை அலைதான் வருகிறது என்று சொல்கிறீர்களே, எவ்வாறு??

சூரியனிலிருந்து அலைதான் வருகிறது. அந்த அலை பூமியிலுள்ள பொருள்களின் மீது மோதும்போது அந்த பொருட்களிலுள்ள தன்மைக்கேற்ப ஒளியும், வெப்பமும் உண்டாகின்றன....

உதாரணமாக,
இரும்பில் படும்போதும், கல்லில் படும்போதும், கண்ணாடியில் படும்போதும், தண்ணீரில் படும்போதும், தரையில் படும்போதும், அந்தந்த பொருட்களின் தன்மைக்கேற்ப ஒளியும், வெப்பமும் மாறுபடுகின்றன என்பதை நாம் அறிவோம்.
.
.
ஒளியினுடைய பிரதிபலிப்பு உண்டாகும் போது தானாகவே வெப்பமும் உண்டாகிறது.
.

எந்த பொருளிலிருந்து அலை கிளம்பினாலும் அது அந்த பொருளின் தன்மையை கொண்டிருக்கும். எந்த பொருளின் மீது மோதுகின்றதோ அந்த பொருளின் தன்மைக்கேற்ப மூலப்பொருளின் தன்மை இங்கே பிரதிபலிக்கும்.
.

சூரியனுடைய அலையில் சூரியனுடைய தன்மையான ஒளியும், வெப்பமும் அடங்கியுள்ளன.

உதாரணமாக..,

நாம் பூமியிலிருந்து ஒரு 50,000 அடிகளுக்கு மேலே சென்றால், அங்கேயே 0டிகிரி செல்சியஸ் அல்லது அதற்கு குறைவான வெப்ப நிலையும், இருட்டாகவும் இருப்பதை காணலாம்.

ஆனால் பூமியில் 35டிகிரி செல்சியஸ், 40 டிகிரி செல்சியஸ் கூட வெப்பநிலை இருக்கிறது.
சூரியனிலிருந்து வெப்பம் வருகிறதென்றால் வெளி மண்டலத்தில் வரும் வழியில் மத்தியில் குளிர்ந்து பிறகு சூடு அதிகரிக்குமா? நமக்கு கிடைக்கக்கூடிய வெப்பமெல்லாம் சூரிய அலை பூமியிலுள்ள பொருட்களின்மீது பட்டு இங்கு தூண்டப் பெற்று பிரதிபலிக்கக்கூடிய வெப்பமும், ஒளியும்தான்
.
.வாழ்க வளமுடன்

-வேதாத்திரி மகரிஷி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக