Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

புதன், 5 நவம்பர், 2014

மகிழ்போகம் என்பது இல்லற வாழ்வை குறிக்கின்றதா..? அல்லது சித்தர்களுக்கே ஏற்றதா..?

போகம் என்றாலே இன்பத்தை அனுபவிப்பதுதான்....

மெய், வாய், கண், மூக்கு, செவி என்ற ஐந்து புலன்களினால் நாம் அழுத்தம், ஒலி, ஒளி, சுவை, மணமாக - எந்த பொருளோடு தொடர்பு கொள்வதன் மூலம்- இன்பத்தை அனுபவித்தாலும், அந்த அனுபோகம் தான் போகம்
.
போகம் என்பது இல்லறத்தார்க்கும், துறவறத்தார்க்கும் பொதுவான வாழ்க்கை மகிழ்ச்சி.
.
.
இல்லறம் என்பது பொருளீட்டி, காத்து, துய்த்து, பிறருக்குதவி வாழக்கூடிய நெறியாகும்.

துறவறம் என்பது பொருளீட்டுவதை மட்டும் நிறுத்தி, அறிவுத்துறையில் முழுமை பெற்று, அந்த முழுமைப்பேற்றை மக்களுக்கு வழங்கி, அவர்களை நல்வழிப்படுத்துதல். தன்னை சமுதாய நலனுக்கே அற்பணம் செய்து கொண்டு, விருப்பு, வெறுப்பின்றி, அறிவுத்துறையிலே தொண்டாற்றுதல் துறவறமாகும்.
.

இத்துறையில் வாழ்வதாலேயே துய்த்தலை நிறுத்திவிட முடியுமா?
.
மகிழ்போகம் அனைவருக்குமே வேண்டும். துறவில் உள்ளவர்களுக்கும் உணவு வேண்டும். அவர்களும் உணவு சாப்பிடும் பொழுது, உடல் ஏற்றுக் கொள்ளும் முறையில் உணவினை இனிமையாகவே அமைத்துக்கொள்வார்கள்
.

.
“எந்த சீவனுக்கும் உடலுக்கும், உயிருக்கும்

அந்த நேரத்தில் தேவையாய்ப் பொருத்தமாய்

வந்த அனுபோகம் இன்பமாம்”

என்ற வகையில் புலன்களைக் கொண்டு இன்பம் அடையும் போகம் என்பது எல்லோருக்கும் பொதுதான்.
.
வாழ்க வளமுடன்
-வேதாத்திரி மகரிஷி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக