Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

ஞாயிறு, 2 நவம்பர், 2014

அருட்தந்தை அவர்களே..!! தமிழ்நாட்டில்தான் சித்தர்கள் அதிகம் வாழ்ந்ததாக கூறப்படுகின்றது..? அப்படியானால் மற்ற நாடுகளில் சித்தர்களே இல்லையா..??

சித்தம் என்றால் உயிர். அந்த உயிரை உணர்வதற்கு அகத்தவம் வேண்டும். முறையாக பயில்வதற்கு குருவின் வழிகாட்டுதலோடு, சூழ்நிலையும் அமைய வேண்டும். தட்ப வெப்ப நிலையும் ஆண்டு முழுவதும் சீராகவும், உடலுக்கு ஏற்றதாகவும் இருக்க வேண்டும்.
கடும் குளிரிலும், கடும் வெப்பத்திலும் உயிர்ச்செலவு அதிகமாகிவிடும். அகத்தவம் பயிலமுடியாது.
.
.
உலகில் உள்ள மற்ற எல்லா நாடுகளையும் விட இந்திய நாட்டில், குறிப்பாக தமிழ்நாட்டில்தான் ஆண்டுமுழுவதும் கடும் குளிரோ, கடும் வெப்பமோ இன்றி, சமமான தட்ப வெப்பநிலை உள்ளது.
.
.
இந்த சூழ்நிலை இங்கு அமைந்ததால்தான் அகத்தவம் செய்வதற்கு மிக உன்னதமான இடமாக இருக்கின்றது.

.
அதன் காரணமாக மேல்நாட்டவர்கள் தமிழ்நாட்டிற்கு வந்து அகத்தவம் பயின்றார்கள்.
.
.
தமிழ்நாட்டில் ‘அகத்தியர்’ என்று ஒரு சித்தர் பெயர் கூறுகிறோம்.அவர் ‘அகஸ்டஸ்’ என்ற மேலைநாட்டவர். தமிழ்நாட்டில் அகத்தவம் பயின்று இங்கு வாழ்ந்து அகத்தியர் என்ற பெயர் கொண்டார்.
.

அதேபோல் ‘டைகர்’ என்ற ஆராய்ச்சியாளர் தமிழ்நாட்டிற்கு வந்து தங்கி, யோகம் பயின்று நிறைவடைந்தார். அவரைத்தான் நாம் ‘புலிப்பாணி சித்தர்’ என்கிறோம்.
.

‘போகர்’ என்ற பெயர்கொண்ட சித்தர் சீனாவிலிருந்து வந்தவர்.
.
.

இவ்வாறு பல நாட்டிலிருந்தும் இன்கு வந்து தவம் பயின்று, முழுமை பெற்று, இங்கிருந்த வாழ்க்கை நெறியுடன் இணைந்து வாழ்ந்து, தமிழ்நாட்டுச் சித்தர்கள் வாயிலாக கற்றவற்றையெல்லாம் உலகிற்கு மேல்நாட்டு அறிஞர்கள் பரப்பியுள்ளார்கள்..
.
.
.
இவ்வாறு அவர்கள் கற்றுக்கொண்டு சென்றதெல்லாம் வாழ்க்கைப் பண்பாடாக மக்களிடம் பரவவில்லை. ஒருசில குறிப்பிட்ட பயிற்சி, பழக்க வழக்கம் இவைமட்டும் தான் ஆங்காங்கே உலகம் முழுவதும் இருக்கக் காண்கிறோம்.
.
.
உதாரணமாக நம்நாட்டுச்சித்தர்கள் ‘வர்மக்கலை’ என்று ஒரு கலை வைத்திருந்தார்கள்.அவர்கள் வெளியிடத்திலும், காடுகளிலும் அமர்ந்து தவம் செய்யும்பொழுது முரடர்கள் துன்பம் தர ஆரம்பித்தார்கள். ஆயுதம் இல்லாது தங்களை காத்துக்கொள்வதற்கு ஒரு முறையான பயிற்சி அவசியம் என்பதை அறிந்து, இவர்கள் கண்டுபிடித்ததுதான் வர்மக்கலை.
.

.
நரம்பை சில இடங்களில் தட்டினால் போதும் ஆள் விழுந்துவிடுவான். எந்த இடத்தி எந்த நரம்பிற்கு ஆற்றல் அதிகம் என்பதை தெரிந்து எதிரிகளிடமிருந்து தங்களை காத்துக்கொள்ளும் கலைக்கு ‘வர்மக்கலை’ என்று பெயர்.
.
சித்தர்கள் கற்ற இந்த வித்தையை சீனா , ஜப்பான் போன்ற வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள் கற்றுக்கொண்டு சென்றார்கள்.
.
.
அதே கலை இப்போது கராத்தே, ஜூடோ, தாய்ச்சி என்ற பெயரில் அவர்களிடமிருந்து நம்நாட்டிற்கு வந்துள்ளது.வர்மக்கலையில் உடலை வலுடையதாக வைத்துக்கொள்ள உடற்பயிற்சியும் சேர்ந்திருப்பதால் எல்லா நாடுகளிலும் பல பெயர்களில் பரவியுள்ளது.
.
.

சித்தர்களின் ’பிராணாயாமப் பயிற்சி’ பல நாடுகளில் பலவித மூச்சுப்பயிற்சியாகப் பரவி இருப்பதை நாம் காண்கிறோம்.. இந்தப்பயிற்சியை செய்பவர்களையெல்லாம் சித்தர்கள் என்று சொல்லிவிடமுடியாது.
.
.
.
உயிரை உணர்ந்து, அந்த கருத்தை அடிப்படையாகக் கொண்டு, வாழ்வை நடத்தக்கூடிய ஒரு பண்பாடு உடையவர்களைத்தான் சித்தர்கள் என்கிறோம். அத்தகைய பண்பாடு உடையவர்கள் எந்த நாட்டில் இருந்தாலும் அவர்கள் சித்தர்களே..!!

.

வாழ்க வளமுடன்
.
-வேதாத்திரி மகரிஷி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக