Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

வியாழன், 14 ஆகஸ்ட், 2014

புவியியல்

 அண்டங்களின் உற்பத்தி

இறைநிலை விளக்கத்தில், இறைநிலையின் தன்மாற்றமே இறைத்துகளின் தொகுப்பான விண் என்ற அணுவரையில் தோற்றமாகி இயங்கிக் கொண்டிருக்கின்றன என்பதை உணர்ந்தோம். அவ்வாறு தோன்றிய அணுக்கள் எல்லாம் இப்பொழுது எங்கே இருக்கின்றன? இறைநிலை என்ற பெருவெளியை விட்டு வேறெங்கும் செல்ல முடிய...ாது.

ஆகவே, இறைநிலையின் சூழ்ந்தழுத்தத்தினாலே அணுக்கள் பல தொகுப்பாகக் கூடிக்கூடி இயங்குகின்றன, அவை இயங்கும்போது அத்தொகுப்புக்களுக்கு ஏற்படும் திணிவுநிலையையொட்டி, அவற்றை விண், காற்று, நெருப்பு, நீர், நிலம் என்ற ஐந்து வகையாக முன்னோர்கள் விளக்கியிருக்கின்றார்கள். இந்த ஐந்து நிலைகளைப் பௌதீகப் பிரிவுகள் என்ற கருத்தில் பஞ்ச பூதங்கள் என்று விண், காற்று, நெருப்பு, நீர், நிலம் இவற்றைக் கூறியுள்ளார்கள்.

அணுக்கள் கூட்டு இயக்கத்தை விஞ்ஞானிகள் பேரணு என்ற கருத்தில் “Element” என்று கூறி, அவ்வாறு உருவான கூட்டத்தில் எத்தனை அணுக்கள் அடங்கி இருக்கின்றனவோ அதற்குத் தக்கவாறு பெயரிட்டு மொத்தம் 92 பேரணுக்கள் (Elements) உள்ளன என்று கூறியுள்ளார்கள். நாம் பார்க்கும் எந்தத் தோற்றப் பொருளும், Elements என்னும் பேரணுக்கள் கூட்டமாகவோ, பஞ்ச பூதங்களின் இணைப்பு இயக்க நிலையாகவோ தான் இருக்கும். அணு எந்த நிலை அடந்தாலும் இறைநிலையின் சூழ்ந்தழுத்தத்தினால் அது தற்சுழற்சியோடு தான் இருக்கும். தற்சுழற்சி விரைவு உடைய இறைத்துகள்கள் கூடிய அணுவென்ற தொகுப்பு நிலையின் தற்சுழற்சி விரைவால், மேலும் மேலும் இறைத்துகள்களுக்கு விலக்கும் வேகம் கூடுகிறது.

அதனால் இறைத்துகள்கள் எப்பொழுதும் ஒரு அணுவை விட்டு வெளியேறிக் கொண்டே இருக்கும். அதே போன்று, தற்சுழற்சி விரைவில் மந்தம் ஏற்படும்போது மேலும்,மேலும் துகள்கள் கூடிக்கொண்டும் இருக்கும். இவ்வாறு எந்த அணுவும் தனது நிலையில் ஒரே மாதிரியாக தொடர்ந்து இருக்க முடியாது. இந்த நிகழ்ச்சி அணுக்களின் தொகுப்பான எல்லாத் தோற்றங்களுக்கும் பொதுவாகும்.

அணுக்களிலிருந்து வெளியேறும் இறைத்துகள் என்பது என்ன? காந்தம் தானே. ஆகவே எந்தப் பொருளிலும் காந்தம் என்பது பாய்மப் பொருளாக நிறைந்திருக்கிறது. இறுக்க ஆற்றலும், விலக்கும் ஆற்றலும் செயல்படும் நிலையில்தான் எந்தப் பொருளும் இயங்கிக் கொண்டிருக்கின்றன. ஆகவே சிறிய தோற்றப் பொருட்களிலும், பெரிய பெரிய அண்டங்களிலும் எப்பொழுதுமே காந்தமென்ற பேராற்றல் சுழன்று இயங்கிக் கொண்டே இருக்கும்.

இத்தகைய சிறப்பு ஆற்றல் சிறிய பொருளிலும் கூட, அது எந்த அளவில் நுண்மையானதாக இருந்தாலும், பொதுவான நிகழ்ச்சியாக நடந்து கொண்டிருக்கிறது. இறையாற்றலின் பெருமையால் காந்த ஆற்றல் எங்கிருந்தாலும் அதற்குத் துல்லிய சமதளச் சீர்மை (Specific Gravity) என்று வழங்கக்கூடிய ஒரு இயக்க நியதி ஏற்படுகின்றது. இதனால் காந்த ஆற்றல் எங்குச் சுழன்று கொண்டிருந்தாலும் Specific Gravity என்ற இறைநிலையின் இயக்க நியதியால் அந்தக் காந்த அலையின் மையத்தில் ஒரு திணிவு நிலை ஏற்பட்டுவிடும்.

இவ்வாறு ஒரு சிற்றுருவத்தில் எற்படும் காந்த ஆற்றலின் திணிவு நிலை “கருமையம்” என்ற ஒரு சிறப்பு நிலையாக உருவாகி, அதிலுள்ள எல்லா அணுக்களையும் சேர்த்துக் கொண்டு இயங்கும்போது இந்தக் கருமையமே ஐயுணர்வுகளுக்கும் மையப் பொருளாக இருந்து கொண்டு சிறப்படைகிறது. அது இயங்கும் தோற்ற உருவத்தை “சீவன்” என்ற சிறப்பு நிலைக்கு கொண்டு வருகிறது. எத்தகைய சிற்றுருவமானாலும் அதற்குக் கருமையம் அமைந்து விட்டால், அதற்கு முன்னம் சடப்பொருளாக இருந்த அந்த உருவம் சிறப்பு இயக்கம் பெற்றுச் சீவன் என்ற நிலைக்கு வருகிறது.

இவ்வாறான சிற்றுருவங்கள் கிருமிகள் என்றும், நுண்ணுயிர்கள் என்றும் பேசப்படுகின்றன. இத்தகைய உருவங்கள் சீவன் என்ற சிறப்புப் பெற்று ஆயிரம், லட்சம், கோடி என்ற கணக்கில் பெருகி இருக்கின்றன. எவ்வாறு இருந்தாலும், அனைத்துக் கிருமிகளும் காந்த ஆற்றலின் தன்மாற்றம் தானே! இந்தச் சீவகாந்த ஆற்றல் கலப்புறும்போது ஒவ்வொரு சிற்றுயிரும் தன்மையில் மாற்றம் அடைகிறது.

அம்மாற்றம் வித்தின் வழியே சந்ததி தொடர்பாக வளர்ச்சி அடைந்தும், பெருகியும் வரும்போது சிற்றுயிர்கள் எண்ணிறந்த கோடியாக பெருகிவிட்டன. இந்த நிலையில் ஒரு தாவரத்தின் பழத்தில், அதன் விதையில் உருவாகும் சிற்றுயிர்கள்தான் புழுக்கள் இன்ற பெயரோடு பெருகி உள்ளன.


எந்த தாவரத்திலிருந்து ஒரு புழு தோன்றினாலும், அது தனது முழு ஆற்றலான திரவ நிலையைக் கொண்டு ஒரு கூடு போன்ற அமைப்பை ஏற்படுத்திக் கொள்கிறது.

இத்தகைய கூடுகள், பல புழுக்கள் மீது அமைந்து இருப்பதைப் பார்க்கிறோம். உதாரணமாகக் கூறினால், பட்டுப் புழுக்கள் மீது அமையும் கூடுகளைப் (Cocoons) பார்க...்கிறோம். அந்தக் கூட்டுக்குள்ளாக குடியிருக்கும் புழு ஒரு தியானம் போன்ற முறையின் மூலம் மேலும் மேலும் வலுப் பெற்று, அதற்குப் பறக்கும் திறமையை அளிக்கும் இறக்கைகள் முளைத்துவிடும். இந்தப் பருவநிலையில் தனது கூட்டையே தன் வாயினால் கடித்துப் பொத்தல் செய்து கொண்டு அந்த உயிரினம் வெளியேறிவிடும்.

இப்பொழுது அதற்கு பறக்கும் திறமை வந்துவிட்டாலும், அதன் இறக்கைகள் போதிய வலுப்பெற்றவை அல்ல. இதனால் பெரும்பாலான சீவ இனங்கள் சிறிது காலம் பறந்து இறக்கைகளை இழந்துவிட்டு, பூமியில் விழுந்து ஊர்வனவாக வாழத் தொடங்கும்.

இந்த நிலையில் அதற்கு கால்கள் ஏற்பட்டு, எண்ணிக்கையில் பெருகி அந்த சீவ இனம் ஒன்றொடு மற்றது இன உறவு கொண்டு, வேறு உருவம் பெற்று இயங்கிக் கொண்டிருக்கும். இவ்வாறு எண்ணிக்கையில் பெருகி உள்ளவைதான் அனைத்து ஊர்வன சீவன்கள் ஆகும். சில சீவன்கள் இறக்கைகள் வலுப்பெற்று மேலும் மேலும் தொடர்ந்தியங்கி, அவை இனக்கலப்பால் பெருகி, வளர்ச்சி பெற்று, பல்வேறுபட்ட பறவை இனங்களாக விரிந்து வாழ்ந்து கொண்டிருக்கின்றன.

இதே போன்று நீரில் வாழும் உயிரினங்களும் பல எண்ணிக்கையில் பெருகிச் சிறப்புற்று வாழ்ந்து கொண்டிருக்கின்றன. இத்தகைய ஊர்வன பிராணிகள் தங்கள் பெருக்கத்தினால் பலவகையான நடப்பனவாகி, கால்களின் எண்ணிக்கை குறையக் குறைய இனங்கள் பலவாகி, கடைசியில் மனிதன் என்ற உருவத்திற்கு வந்துவிட்டன.

ஒரு சிற்றுயிரிலிருந்து மனிதன் வரையில் பெற்ற மாற்றங்கள் உடல் வரையில்தான் பேதப்படுகின்றன. ஆனால் சிற்றுயிரில் அமைந்த கருமையம் காந்தக் களம் ஆகையால், அந்த சீவன் எத்தனை உருவங்கள் மாறினாலும் அவற்றின் அனுபவங்கள் அனைத்தும் அலைவடிவில் சுருங்கிக் கருமையத்தில் தரமேன்மையாக அமைந்திருக்கின்றன. இந்த நிலையில் ஆழ்ந்து சிந்தித்தால் ஒரு சிற்றுயிரிலிருந்துதான் ஆயிரக்கணக்கான உருவ மாற்றங்கள் பெற்று வாழ்ந்து வருகின்றன.

அதற்கு ஏற்றமாதிரி கருமையம் அதன் அமைப்பில் தக்கபடி மாற்றம் பெற்று, கடைசியில் மனிதன் என்ற சிறப்பாக அமைந்து விளங்குகிறது. இதனால் ஒரு மனிதனிடம் அமைந்துள்ள கருமையத்தில் உலகில் தோன்றி வாழுகின்ற அனைத்து சீவராசிகளின் தன்மைகளும் குணங்களாக அமைந்துள்ளன. எனவே இறைநிலையானது சிற்றுயிரிலிருந்து தன்மாற்றமடைந்த கோடிக்கணக்கான சிறப்புகளில் ஏற்பட்ட இயக்கச் சிறப்புகள், மனத்தால் உணர்ந்த அறிவின் சிறப்புகள், அனைத்தும் மனிதனுடைய கருமையத்தில் சுருக்கமாக அமைந்துள்ளன.

எனவே மனிதனின் கருமையத்தில் பல்லாயிரம் சீவராசிகளின் குணங்களும் சுருக்கமாக அமைந்திருக்கின்றன. காந்த ஆற்றலுக்கு அது இயங்கும்போது ஏற்படும் சிறப்புநிலையை சுழல்விரைவு (Frequency) என்று கூறுகிறோம். மனித மனத்தின் சுழல் விரைவுகள் வேறுபடும்போது சிலசமயத்தில் கருமையத்தில் அமைந்துள்ள எந்த சீவ இனத்தின் குணங்களும் வெளிப்படலாம். மனிதனுடைய வாழ்க்கைத் தரமே மற்ற சீவன்களைவிடச் சிறப்பில் வேறுபட்டு இருப்பதால் அனைத்து சீவராசிகளின் குணங்களும் அடிக்கடி வெளிப்பட முடியாது. சில உயிர்களின் குணங்கள் மனித இன மனதுக்கு அதன் சூழ்நிலைகள் ஒத்து வரும்போது அந்தந்த சீவராசிகளின் குணங்களும், எண்ணங்களும் செயல்களாக வெளிப்பட்டுவிடும்.

மனிதன் இருப்பான்; சிலசமயம் பாம்பைப் போல் சீறுவான், சில சமயம் புலியைப் போல் பாய்ந்து பிறரைத் தாக்குவான். இவ்வாறு பல்வேறு மனநிலைகளிலும், செயல் முறைகளிலும் ஒவ்வொரு மனிதனும் அமைந்து, சுழ்நிலைகளுக்கு ஏற்ப மன, உடல் இயக்கங்கள் நடைபெறக் காண்கிறோம். இந்த இடத்தில் மீண்டும் சிந்திப்போம்.

மனிதன் திடீரென்று இயற்கையில் தோன்றிவிடவில்லை. இறைநிலையில் அமைந்திருக்கும் தவறில்லாத இயக்க முறையால் ஒரு சீவனிலிருந்து இன்னொரு சீவனாக மாற்றம் பெற எண்ணிறந்த ஆண்டுகள் சென்று விடுகின்றன. இவ்வாறு உலகில் உயிரினம் சிற்றுயிர்களாகத் தோன்றிப் பெருத்த உடலும், அதற்கு ஏற்ற செயல்களும் அமையும் பல்வேறு வியப்புறத் தக்க சீவ இனங்கள் உருவாகி அத்தனையும் இயற்கை வளத் தோடு, முறையாக இயங்கிக் கொண்டிருக்கும் உண்மையினை அறிவதே இறையுணர்வும், பிரபஞ்ச சரித்திரமும் ஆகும்.

எனவே, ஏதோ ஒரு ஆற்றல் உலகைப் படைத்து பாதுகாப்பும், பராமரிப்பும் அளித்து வருகிறது என்ற தெளிவை விட, இறைநிலையே தன்மாற்றம் பெற்று, பிரபஞ்சத்தில் காணும் பொருட்களாகவும், அண்டங்களாகவும், கோடி கோடியான உருவங்களாகவும் இயங்கிக் கொண்டிருக்கின்றது என்ற பேருண்மையை விளக்குவதே இந்தப் பரிணாமச் சரித்திரம்.

- வேதாத்திரி

 

புதன், 13 ஆகஸ்ட், 2014

விஞ்ஞானம்

விஞ்ஞானம்

அறிஞர் பெருமக்களே! உங்கள் அனைவரையும் வணங்கியும், வாழ்த்தியும் மனநிறைவு பெறுகிறேன். நாம் ஒரு பெரிய சமுதாய சேவையை இந்த நூல் மூலம் எழுதி முடித்து, உலக மக்களுக்கு அளிப்பதற்காக, நாம் முழுமுயற்சியும் எடுத்துக் கொண்டு இந்த புனிதமான செயலிலே ஈடுபட்டு இருக்கிறோம்.

இது...வரையில் நமது ஆராய்ச்சி மூலமாக இறைநிலையின் விளக்கம் அளித்திருக்கிறோம். இப்பொழுது அதே இறைநிலை தன்மாற்றம் அடைந்த வரிசையில் உலகம், மற்ற கோள்களின் தோற்றங்கள், உலகில் உயிரினங்களின் தோற்றங்கள் தொடங்கி மனித இனம் வரையில் எவ்வாறு வந்தன என்று இப்பொழுது சிந்திக்க இருக்கிறோம்.

இந்த இடத்தில் மீண்டும் ஒருமுறை இறைநிலையின் முறையான தன்மாற்ற விதிமுறைகளையும், அவற்றின் விளைவுகளையும் பற்றிச் சிறிது நேரம் சிந்தனைக்குக் கொண்டு வருவோம்.

வற்றாயிருப்பு, பேராற்றல், பேரறிவு, காலம் என்ற நால்வகைச் சிறப்புகளும் உடையதுதான் இறைநிலை என்று உணர்ந்து கொண்டோம். இறைநிலை என்பது சுத்தவெளிதான் என்றும், அதுவே பேராதாரப் பெருவெளியாக விளங்கும் சிறப்பையும் உணர்ந்தோம். ஆயினும், அது புலன்களுக்கு எட்டாத மறைபொருளாகையால் அதைப்பற்றி மொழியில் விளக்கமாக கூறவோ, மற்றவர்களுக்கு தெளிவாக அறிவிக்கவோ மிகவும் சிரமமாக இருக்கிறது.

இதனால்தான் லட்சக்கணக்கான ஆண்டுகள் மனித இனம் வாழ்ந்து பல வாழ்க்கை அனுபவங்களைப் பெற்றுள்ள போதிலும் இறைநிலையைப் பற்றி தெளிவாக உணரமுடியவில்லை. ஆறாவது அறிவின் உச்ச கட்டத்தில் அதற்கு நுண்மாண் நுழைபுலன் என்ற சிறப்பு உண்டாகிறது. நுண்ணிய பொருளாகவும், மதிப்புக்குறிய பொருளாகவும், புலன்களுக்கு எட்டாத மறைபொருளாகவும் இறைநிலை இருப்பதால், மனிதன் சிந்தனை ஆற்றல் உயர்ந்த நிலையில் அவனிடம் அமையும் நுண்மாண் நுழைபுலன் என்ற ஆறாவது அறிவின் சிறப்பால் மட்டுமே தெய்வநிலையைத் தெளிவாக உணரவும் முடியும், மற்றவர்களுக்கும் உணர்த்தவும் முடியும்.

இக்காரணங்களால் தான் தெய்வநிலை பற்றிய அறிவு மனித இனத்துக்கு இதுவரையில் தெளிவாகக் கிட்டவில்லை. இந்த இயலாமை காரணமாக ஒரு சில காலங்களில், இடங்களில் சில அறிஞர்கள் அவர்களுடைய கற்பனைத் திறனால் இறைநிலைக்கு விளக்கம் கொடுத்திருக்கிறார்கள். அவற்றுள் சில உண்மைக்குப் புறம்பானச் செய்திகளாக அமைந்து விட்டன. நம்பிக்கை வழியே ஒருவரிடம் மற்றவர் அறிவின் விளக்கத்தைக் கேட்டு வாழ்ந்த காலத்தில் உண்மைக்கு முரணான செய்திகள் பல வாழ்வில் மனித சமுதாயத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டன.

பிற்காலத்தில் அத்தகைய கற்பனையான கடவுள் நிலைகளுக்கு உண்மையான காரணங்களைச் சிலர் கண்டுபிடித்து, பக்தி வழியில் ஈடுபட்டிருக்கும் மக்களை, ஓரளவு திருத்தம் செய்திருக்கிறார்கள். பண்பாட்டையே உயர்த்தும் பண்பாட்டுச் சீர்திருத்தமாக அமைந்த போதிலும், பெரும்பாலோர் நம்பிக்கை வழியே கற்ற சிலை வழிபாடுகளை வாழ்வில் தொடர்ந்து பயின்று வருகிறார்கள். இதனால் மக்கள் குலத்திற்கு முழுமையான உண்மைநிலை விளக்கும் பேரறிவு மூலம், இறையுணர்வு இன்னமும் வந்து சேரவில்லை.

இத்தகைய சிக்கலான நிலையில்தான் இறைநிலையின் ஆராய்ச்சியை நாம் தொடங்கியிருக்கிறோம். இந்த ஆராய்ச்சியில், நான் கண்ட இவ்வுண்மைகளை, தற்காலத்தில் நிலவும் பேச்சு மொழியில் நாம் விளக்கி வந்தாலும், அதே நேரத்தில் நமது கருத்துக்கள் தொலைநோக்கு கொண்ட முற்கால தத்துவ ஞானிகள் கருத்துக்கும், தற்காலத்தில் சிறந்து உயர்ந்து கொண்டே வரும் அறிவியல் துறையான விஞ்ஞானத்திற்கும், எந்த விதத்தும் முரண்படாத அளவில் நமது சிந்தனையை முடிவான கருத்துக்களாக உருவாக்கி, மக்களுக்கு அளித்து வருவதின் தொடக்கம்தான் இந்த நூல்.

இந்த நூலைப் படிக்கும் பேரறிஞர்கள், அவர்கள் அறிவில் காணும் தெளிவான விளக்கங்களையும், இறைநிலை பற்றிய உண்மைகளைக் கூறும் வழிமுறைகளைப் பற்றியும் எனக்கு அன்போடு அறிவிக்கலாம். என்னோடு கலந்துரையாடி சிறந்த முடிவுகள் மனித இனப் பண்பாட்டின் சிறப்புக்கும், உயர்வுக்கும் அளித்து மகிழலாம்.

அறிஞர் பெருமக்களே! முதலில் இறைநிலையைப் பற்றி நாம் இதுவரையில் உணர்ந்த தெளிவுகளை மீண்டும் ஒரு முறை நினைவுக்கு கொண்டு வருவோம்.

1. வெட்டவெளியென்ற பேராதாரப் பெருவெளியே எல்லாம் வல்ல தெய்வநிலை.

2. அதற்கு இயல்பாக உள்ள ஆற்றல் தன்னிறுக்கமாகும். வேறு எவ்விதத்தும் செயல்பட முடியாதவாறு தன்னையே அது இறுக்கிக் கொள்ளுகிறது.

3. அவ்வாறான தன்னிறுக்கம் அதிகரித்து நுண்மையான துகள்நிலையாக, இறைநிலை தன்மாற்றம் அடைகிறது.

4. இவ்வாறு துகள்களான பிறகு அவை எங்கு போகும்? இறைவெளியைத் தவிர பிரபஞ்சத்தில் வேறு இடம் ஏது? அப்படி இறைநிலையிலேயே ஆழ்ந்துவிட்ட இறைதுகள்களைச் சுற்றி அமைந்திருப்பது இறைவெளிதானே? தன்னிறுக்கமாக இருந்த ஒரு பேராற்றல் இப்பொழுது தன்னிலே தோன்றிய இறைத்துகள்களைச் சுற்றி அழுத்திக் கொண்டிருக்கிறது. எல்லையற்ற இறைவெளியின் இறுக்க அழுத்தத்தால் ஒவ்வொரு இறைத்துகளும் விரைவாக சுழல ஆரம்பித்தது, இதனால் இறைத்துகள்கள் நுண்துகள் நிலையிலிருந்து அலைநிலையாக தன்மாற்றம் பெற்றுவிட்டது.

இறுக்க ஆற்றலால் நுண்ணிய துகளாக மாறிய இறைநிலை இப்பொழுது தன்மாற்றத்தில் இரண்டாவது வரிசையான இறைத்துகளாகி விட்டது. இதனால் இறைத்துகள் ஒவ்வொன்றும் அளக்க முடியாத விரைவில் தற்சுழற்சி பெற்றன. முன்னமே ஒரே தொடராக இருந்த இறைநிலை இப்பொழுது துகள் வடிவம் பெற்று தற்சுழல் விரைவு பெற்று விட்டதனால், அது தனது உருவநிலை இழந்து அலை நிலைக்கு தன்மாற்றம் பெற்றுவிட்டது.


இறைத்துகள் என்பது இப்பொழுது என்னவென்று நினைந்து கொள்வோம்? இறைநிலையின் நுண்பகுதியே தான்! அவை இருக்கும் இடமோ இறைநிலையே. அதன் இயக்க விரைவு என்ற பேராற்றல் இறைநிலையின் சூழ்ந்தழுத்தத்தினாலேயே ஆகும். இதனால் இடமாக இருப்பதும், பொருளாக இருப்பதும், இயக்கமாக இருப்பதும் மூன்றும் நமது மனதுக்கு ...தனித்தனியாக இருந்தாலும், அது ஒரே ஆற்றல்தான், இவ்வாறு மூன்று வழிகளிலும் சிறப்புபெற்ற இறைத்துகள்கள் பிரபஞ்சத்திலேயே எல்லாம் வல்ல பேராற்றலாகத் திகழ்கிறது. இதனைத்தான் “காந்தம்” என்ற சொல்லால் வழங்கி வருகிறோம். இதுவே காந்தம் என்ற பேராற்றலின் பிறப்பிடமாகும்.

ஆங்கிலத்தில் இந்த காந்த நிலையை “Magnet” என்று சொல்லுகிறார்கள். “Mag” என்றால் மகா என்னும் கருத்தை விளக்கும். “Net” என்றால் பிரபஞ்சம் முழுவதும் உள்ள எல்லாப் பொருட்களையும் ஒன்றிணைத்துக் கொண்டு, வலை போல் பின்னி ஒரே பொருளாக இறைத்துகளையும், அது தன்மாற்றம் பெற்ற எல்லாப் பொருட்களையும் இணைத்துக் கொண்டிருப்பதால் வலை என்று கூறப்படுகின்றது. Magnet என்பது பிரபஞ்சப் பொருட்கள் அனைத்தையும் வலைபோல் பின்னி, ஒன்றுபடுத்தி இயக்கிக் கொண்டிருப்பது என்பதுதான் பொருள். காந்தம் என்பது எங்கு உற்பத்தியாகிறது என்று விளங்கிக் கொண்டோம்.

அது தற்சுழல் விரைவுநிலையில் தனது நுண்ணுருவத்தை இழந்துவிட்டு பேராற்றல் பெற்ற அலைவடிவத்தில் பாய்மப் பொருளாகி எங்கும், எப்பொருளிலும் ஊடுருவி நிறைந்து சிறந்து விளங்குவதால் காந்தமில்லா இடமோ, பொருளோ பிரபஞ்சத்தில் இல்லவேயில்லை! எந்தப் பொருளை எடுத்தாலும் அணுக்களின் கூட்டாகக் காண்கிறோம். அணுவோ இறைத்துகளின் தொகுப்பு நிலையாகும். இறைத்துகளோ இறைநிலையின் நுண்பகுதி தானே.

இதனால் இறைநிலையின் இயக்க ஆற்றலான காந்தம் என்ற சிறப்பு நிலையில் அலைவடிவத்தில் இருந்தாலும், பிறப்பு நிலையில் இறைநிலையே ஆகும். இந்தக் காந்தத்தின் வியத்தகு சிறப்பியக்கம்தான் பிரபஞ்சத்தில் நாம் காணும் அனைத்து உருவங்களும், சிறப்பு இயக்கங்களும் ஆகும்.

இறைநிலை இடமாக அமைந்து, அதன் துகள்கள் இறைநிலையின் ஆற்றல்கள் எல்லாவற்றையும் அடக்கிக் கொண்டு, இறைநிலையின் சூழ்ந்தழுத்தத்தினாலேயே தொடர்ந்து இயங்கக் கூடிய தற்சுழற்சி விரைவாக மாறியது. இப்பொழுது நாம் எந்தப் பொருளிலும், இடத்திலும் இறைநிலை, இறைத்துகள், காந்தமென்ற அலைநிலையான பாய்மப்பொருள் இவற்றைத் தனிதனியே உணர முடியாது. ஒரு நிலையை உணரும்போது மற்ற சிறப்புகள் அனைத்துமே அதில் அடங்கியிருக்கும்.

- வேதாத்திரி

செவ்வாய், 12 ஆகஸ்ட், 2014

இறைநிலையின் விளக்கம்


 இவ்விளக்கம் உலகில் வாழும் மக்களில் சிந்திக்கும் ஆற்றல் உடைய அனைவருக்கும் தேவையானது. இந்த உண்மையை அறியாத குறைதான் மனிதருள் வாழ்வில் ஆங்காங்கு, அவ்வப்பொழுது நிகழ்ந்து கொண்டிருக்கும் துன்பநிகழ்ச்சிகளாகும்.

மனித இனம் தோன்றி பல தலைமுறைகள் சென்றன. வாழ்க்கையில் ஏற்பட்ட புலனுணர்ச்சி அனுபவங்களால் திறன்பெற்ற அறிவின் சிறப்பு நிலையில் தோன்றியதே இறைநிலை பற்றிய வினாவும், தேடலும், ஆராய்ச்சியும், பற்பல கற்பனையான முடிவுகளும் ஆ...கும். இறைநிலையானது புலன்களுக்கு எட்டாத மறைபொருள் ஆகும்.

ஆனால், இந்த இறைநிலையின் உண்மை அறியாமல் சிந்தனையாற்றல் மிக்க அறிஞர்பெருமக்கள் மிகவும் சோர்ந்து போயினர். இருப்பினும் அவர்களுடைய தேடுதல் விரைவு குறைந்தபாடில்லை. இத்தகைய உயர்ந்த, சிக்கலான மனநிலையில் அவ்வப்பொழுது சில அறிஞர்கள் கற்பனையாகக் கடவுள் நிலையைக் கருதினார்கள். அவையெல்லாம் மக்களிடையே பரவின.

இத்தகைய கற்பனையான தெய்வநிலை அறிவு பல சிந்தனையாளர்களைத் தூண்டி, அந்தக் கற்பனைக்கு மேலும் மேலும் கற்பனைகளை வளர்த்தன. இதனால் உண்மையான தெய்வநிலை மனிதனுக்கு எட்டாமல் சிதறுண்டு போயிற்று. ஒரே அருட்பேராற்றலாக உள்ள தெய்வத்திற்குப் பல பெயர்களும், பல கதைகளும் உண்டாயின.

எனினும், மனிதனுடைய தேடுதல் நிற்கவில்லை. அறிவின் உயர்நிலையில் உள்ளவர்கள் மனமும் இவ்வாறு வந்த விளக்கங்களைக் கொண்டு நிறைவு பெறவில்லை. அதே தொடரில்தான் நாமும் இறைநிலையைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருக்கிறோம். அதிர்ஷ்டவசமாக நாம் பெற்றுள்ள விளக்கங்கள் ஓரளவு மனித மனத்துக்கு நிறைவு தரக்கூடியதாகவும், உடல், மனம், வாழ்க்கை வளம் இவற்றிறுக்கு ஏற்ற பாதுகாப்பும், பராமரிப்பும் அளிப்பதாகவும் இருக்கிறது.

எவரொருவர் உலகில் மனிதருடைய தேடுதலில் ஒரு விளக்கம் கண்டாலும் அவ்விளக்கம் உலகில் உள்ள அனைவருக்குமே போய்ச் சேர வேண்டும். இது ஒரு மாற்றமுடியாத, தவிற்க முடியாத இறைநீதியாகும். அந்த நீதியின் அடிப்படையில் நமது மனமும் ஆழ்ந்து எடுத்த முடிவுகளை இங்கு அனைவருக்கும் முதலில் விளக்குவோம்.

பிறகு எவருக்கு என்ன ஐயம் ஏற்பட்டாலும் நான் உணர்ந்த நிலையில் அதற்கேற்ற பதிலளித்து உலகுக்கு அறிவின் மூலம் நமது கடமை ஆற்றுவோம். இங்கு நாம் கொடுக்கக்கூடிய விளக்கங்கள் எவரொருவரையும் குறைகூறவோ, அவர்களுடைய தத்துவங்களை அலட்சியப்படுத்தவோ அல்ல என்பதை முதலில் தெளிவு படுத்திக் கொள்கிறேன்.

நாம் உலகத்தைப் பார்க்கிறோம். அதிலுள்ள பொருட்களையும், உயிரினங்களையும் அறிகிறோம். ஒவ்வொரு தோற்றமும், இயக்கமும் தனிச்சிறப்பாகவும், வியப்பளிக்கத் தக்கதாகவும் உள்ளது. இந்த உண்மையை உணரும்போது ஏதோ ஒரு மகாசக்தி உலகையும், மற்ற உயிரினங்களையும் அறிவின் திறன் மிகுதியால் உற்பத்தி செய்து இயக்கிக் கொண்டிருக்கிறது என்ற கருத்து உருவாகிறது.

இந்த நிலையில்தான், மனிதனிடம் தோன்றிய இறைநிலைக் கருத்து படைப்புத் தத்துவமாக உருவானது. சிந்தனையாற்றல் மிகும்போது இந்தப் படைப்புத் தத்துவமே தவறு என்று புரிந்து கொள்கிறோம். ஏனெனில், பேராற்றலாக உள்ள தெய்வம் ஏதோ ஒன்றைப் படைக்கிறது என்று சொன்னால் அது, அதற்குத் தேவையென்று விளங்குகிறது. அதே இடத்தில் ஒரு மதிப்புக்குரிய வினாவும் எழுகிறது.

இறைநிலை என்ற பேராற்றலுக்கு ஏதேனும் தேவை இருக்குமா? அதற்கான படைக்கும் பொருள் எதைக் கொண்டு படைத்திருப்பார்? அந்தப் பேராற்றலான இறைநிலைக்கு அப்பால், எடுத்துப் படைப்பதற்கு பொருள் ஏது? இந்த வினாக்கள் எழுந்த பின் படைப்பு என்ற தத்துவம் நம்ப முடியாததாக ஆகிவிட்டது. மேலும், எத்தனையோ தத்துவங்கள் உலக தோற்றத்துக்காக வெளியாகி இருந்தாலும், அனைத்துமே கூர்ந்த அறிவின் ஆராய்ச்சிக்கு ஒத்துவரவில்லை.

ஒவ்வொரு பொருளின் அமைப்பும், அதன் இயக்கச்சிறப்புகளையும் கூர்ந்து அறியும்போது இதை யாரோ ஒருவர் படைத்திருப்பார் என்று எண்ணுவதற்கு இல்லை. இதனால் நான் கண்ட முடிவு, எல்லாம் வல்ல முழுமுதற்பொருளானது (1) வற்றாயிருப்பு (2) பேராற்றல் (3) பேரறிவு
(4) காலம் என்ற நான்கு வளங்களைக் கொண்டு பெருவெளியாக நிறைந்து, விரிந்து திகழ்கிறது என்பதாகும்.

இந்த நான்கு தன்மைகளும் கொண்டு இறைநிலையின் இயல்பூக்க விரைவு என்னும் அறிவாற்றலால் ஒவ்வொரு பொருளும் தோன்றியும், சிறப்பாகவும் ஒழுங்குமுறை தவறாமலும் இயங்கி, விளைவுகளை அளித்துக் கொண்டு இருக்கின்றது என்று தீர்மானிக்க வேண்டியுள்ளது. முதலில் நம் ஆராய்ச்சியில் எடுத்துக் கொள்ள வேண்டியது இறைநிலையின் சிறப்புத் தன்மைகள், அவை வற்றாயிருப்பு, பேராற்றல், பேரறிவு, காலம் என்ற நான்கு வளங்களும் ஒன்றிணைந்த ஒரு தத்துவமே இறைநிலையாகும்.


இந்த உண்மைகளை வைத்துக் கொண்டு நாம் ஆராய்ந்தால் எங்கும் நிறைந்து மறைபொருளாகவும், இயக்க மூலமாகவும் உள்ள ஒரு ...பேராற்றல் சுத்தவெளியே என்று உணர்கிறோம். சுத்தவெளியானது எல்லையற்றது. மறைபொருளாக உள்ளது. எல்லாப் பொருளுக்கும் அடிப்படை ஆற்றலாகவும், இயக்கச் சிறப்பான அறிவாகவும் அமைந்து விளங்குகிறது. இந்தப் பேராற்றலைவிட அதிகமான சக்தி உடைய மற்றொரு ஆற்றல் பிரபஞ்சத்தில் உலகில் இருக்க முடியுமா? நமது ஆராய்ச்சியில்,

(1) வற்றாயிருப்பு : எப்பொழுதேனும் சுத்தவெளி அளவில் குறையுமா?

(2) பேராற்றல் : உலகிலும், பிரபஞ்சத்திலும் காணும் பொருட்கள் அனைத்துமே சுத்தவெளியின் நுண்பகுதிதான். ஆகவே அதில் தோன்றிய விண் முதற்கொண்டு அண்டங்கள் அனைத்தும் லேசாக தன்னில் மிதக்க விட்டுக் கொண்டு இருக்கிறது. இக்கருத்துத்தான் பேராற்றலாகும்.

(3) பேரறிவு : எந்தப் பொருளும் அமைப்பு, இயக்கச் சிறப்பு, விளைவு இவற்றில் எப்பொழுதும் மாற்றம் பெறாமல் சிறப்பு அடைந்து கொண்டே இருப்பதும், அவை அனைத்தையும் தன்னிலே லேசாக மிதக்க விட்டுக் கொண்டிருப்பதும் சுத்தவெளியைவிட வேறொன்றுமில்லை. பிரபஞ்சத்திலுள்ள எல்லாப் பொருட்களும் முறை தவறாமல் இயக்கப்படுகின்றன.

(4) காலம் : இறைநிலைக்குத் தன்னிறுக்கமென்பதுதான் இயல்பான ஆற்றலாகும். இதனால் அது தன்னை இறுக்கிக் கொள்ளும்போது தானே உடைந்து நுண்துகளாகி அலை வடிவத்தில் அவை பிரபஞ்சம் முழுவதும் நிறைந்திருக்கிறது. அதே நேரத்தில் அத்தனைப் பொருட்களையும் லேசாகத் தன்னில் மிதக்க விட்டுக் கொண்டிருக்கிறது. தனது இறுக்க ஆற்றலாலும் அதுவே அதிகமான இடத்தில் விரிவடையும் போது விலக்கும் ஆற்றலாகவும் இருப்பதால் இறுக்கமும், விலக்கமும் சேர்ந்த ஒரு நிகழ்ச்சிக்கு நாம் கொடுத்திருக்கும் ஒரு பெயர்தான் காலம் என்பதாகும்.

ஆகவே இறைநிலையானது வற்றாயிருப்பு, பேராற்றல், பேரறிவு, காலம் என்ற நான்கும் உடைய பெருவெளியே என்று உறுதியாக மதிக்கலாம். முற்காலத்தில் புகழ்வாய்ந்த ஒரு பேரறிஞர் விளக்குகிறார்.

“அங்கிங் கெனாதபடி எங்கும் பிரகாசமாய்
ஆனந்த பூர்த்தியாகி
அருளொடு நிறைந்ததெது தன்னருள் வெளிக்குளே
அகிலாண்ட கோடியெல்லாம்
தங்கும்படிக்கிச்சை வைத்து உயிர்க்குயிராய்
தழைத்ததெது மன வாக்கினில்
தட்டாமல் நின்றதெது சமயகோடிகளெல்லாம்
தம்தெய்வம் எம்தெய்வம் என்று
எங்கும் தொடர்ந்து எதிர்வழக்கிடவும் நின்றதெது
எங்கெனும் பெருவழக்காய்
யாதினும் வல்லஒரு சித்தாகி இன்பமாய்
என்றைக்கும் உள்ளதெது மேல்
கங்குல் பகல் அறநின்ற எல்லை உளதெது அது
கருத்திற் கிசைந் ததுவே
கண்டனவெலா மோனவுரு வெளியதாகவே
கருதி யஞ்சலி செய்குவாம்.

அதுவேதான் பிரபஞ்ச பேராற்றலான தெய்வம் என்று கூறுகிறார்.

இவ்வாறு சுத்தவெளிதான் தெய்வம் என்று பல அறிஞர்கள் முன்னமே கூறியுள்ளார்கள். காலத்தால் இக் கருத்து மங்கிப் போய் இறைநிலை தேடுவதில் மேலும் மேலும் மக்களிடம் ஆர்வம் அதிகரித்தது. இந்த நிலைமைக்கு காரணம் இறைநிலையானது புலன்களுக்கு எட்டாத மறைபொருள். அதோடு சுத்தவெளியான அப்பரம்பொருள் ஒரு வல்லமை பொருந்திய பேராற்றல் என்பதை ஒப்புக்கொள்வதில் குழப்பம் இருந்தது. இப்பொழுது நமது ஆராய்ச்சியில் சுத்தவெளி ஒரு பேராற்றல் என்பதைத் தெளிவாக விளக்குகிறோம்.

நாம் எங்கே வாழ்கிறோம்? பூமி உருண்டை என்ற உலகின் மீது, இந்த பூவுலகின் எடை என்ன இருக்கும்? பல கோடி டன்கள் இருக்கலாம் அல்லவா? இதே உலகம் ஆண்டுக்கு ஒரு முறை சூரியனை வலம் வந்து கொண்டிருக்கிறது. இந்த சூரியனின் எடை எவ்வளவு இருக்கும்? பூமியைவிட சூரியன் 33.3 லட்சம் தடவை எடை அதிகமாக உள்ளது. இப்பொழுது யூகிப்போம். சூரியனும், பூமியும் சேர்ந்தால் மொத்த எடை எவ்வளவு இருக்கும்? நம்மால் சாதாரணமாக கணக்கிடவே முடியாது. எனினும், நமது யூகத்தால் ஓரளவு அனுமானம் கொள்ளலாம். சூரியனும், பூமியும் சேர்ந்து கணக்கிலடங்காத கோடி கோடி டன்கள் எடை இருக்கும் என்று நம்பலாம்.

அடுத்தபடியாக, சூரியனும் பூமியும் எங்கே இருக்கின்றன? இரண்டு கோள்களுமே சுத்தவெளியில்தான் லேசாக மிதந்து, உருண்டு ஓடிக் கொண்டிருக்கின்றன. இது மறுக்க முடியாத உண்மை. இப்பொழுது சிந்திப்போம். ஒரு பொருள் மீது இன்னொரு பொருள் மிதக்கிறது என்று சொன்னால் எந்தப் பொருள் வலிதாக இருக்கும்? மிதக்கும் பொருளா அல்லது அதை தாங்கும் பொருளா? இந்த சிந்தனைக்கு எவரும் எளிதாகப் பதில் தரலாம். மிதக்கும் பொருளைவிட தாங்கும் பொருள்தான் வல்லமை உடையதாக இருக்க வேண்டும்.

இந்தக் கருத்தை மனதால் கணித்துப் பார்த்தோமானால் சூரியன், பூமி இரண்டையும் விட சுத்தவெளி அதிக வல்லமை உடையதுதான் என்று ஐயமின்றி விளங்கிக் கொள்வோம். இதனால், சுத்தவெளி எந்த ஆற்றலுமில்லாத ஒரு வெற்றிடம் அல்லது சூன்யம் என்ற கருத்து மாறிவிடுகிறது. நமக்குத் தெரிந்த சூரியக் குடும்பத்தையும் மேலும் ஆகாய வெளியில் உலவும் கோடிக்கணக்கான சூரியக் குடும்பங்களையும் லேசாகத் தாங்கிக் கொண்டிருக்கும் சுத்தவெளியின் பேராற்றலும் அதன் வல்லமையும் இணையற்றது என்று விளங்கிக் கொள்கிறோம்.

உண்மை இவ்வாறு இருக்க, ஏன் மனிதகுலம் சுத்தவெளி எந்த சக்தியுமற்றது என்று எண்ணவேண்டும்?


பேராற்றலான சுத்தவெளி இயல்பாகத் தன்னிறுக்க ஆற்றல் உடையது. தன்னிறுக்கத்தால் தானே பொடிப்பொடியாகி நுண்துகளான அலைவடிவம் பெற்றுவிட்டது. ஒவ்வொரு துகளும் இறைவெளியின் சூழ்ந்தழுத்தத்தால் விரைவாகச் சுழன்று கொண்டிருக்கிறது. நிலையாக இருந்த எல்லாம் வல்ல பரம்பொருள், நுண்துகளாகி அவற்றின் அதிவேக த...ற்சுழற்சியினால் அலைநிலை அடைந்த போது அது ஒரு மாபெரும் ஆற்றலாக விளங்குகிறது.

இந்த ஆற்றலில் பொருளாக உள்ளது இறைநிலை. துகளாகி அலைநிலை பெற்றதும் அதே இறைநிலைதான். தற்சுழற்சி விரைவால் அலைநிலை பெற்றதும் அதே இறைநிலைதான். எனவே இடமாகவும், பொருளாகவும், இயக்கமாகவும் மூன்று நிலைகளும் ஒன்று சேர்ந்த நுண்நிலை பெற்ற பாய்மப் பொருளான இறைநிலையானது ஆங்கிலத்தில் “Fluid” என்ற பெயர் பெற்றது. இந்த நிலையைத் தமிழில் “பாய்மப் பொருள்” என்று கூறுகிறோம்.

இறைநிலை ஆதிநிலையில் அசைவற்று இருந்து அதன் அழுத்தத்தால் ஏற்பட்ட இயக்க நிலைகளில் அலைநிலையாகி இந்தப் பேரியக்க மண்டலமான பிரபஞ்சம் அனைத்திலும் ஊடுருவி நிறைந்து இப்பொழுது இயங்கிக் கொண்டிருக்கிறது. இடமாகவும், பொருளாகவும், இயக்கமாகவும் உள்ள இந்தப் பாய்மப் பொருள் பிரபஞ்சம் முழுவதும் இல்லாத இடமே இல்லை. அதன் நுண்பகுதியான இறைத்துகள் ஒவ்வொன்றிலும் இறைநிலையின் ஆற்றல் அனைத்தும் அடங்கியுள்ளன. இப்பொழுது இறைநிலை தனியாக இல்லை. பொருளாகவும், இயக்கமாகவும் பிரிக்க முடியாதபடி ஒரே ஆற்றலாக இயங்கிக் கொண்டிருக்கிறது. இத்தகைய சர்வ வல்லமையுடைய பேராற்றலைக் ”காந்தம்” என்று அழைக்கிறோம்.

இப்பொழுது காந்தத்தின் தன்மையைத் தெரிந்து கொள்வோம். அது ஆதிநிலையில் இயக்கமற்ற மறைபொருளாகவும், அதற்கு இயக்கம் வந்தபோது தன்னிறுக்க சூழ்ந்தழுத்தும் ஆற்றலால் இயக்கநிலைக்கும் வந்திருப்பதால், பேரியக்க மண்டலத்தில் காந்தம்தான் இணையற்ற பேராற்றலாக எங்கும் நிறைந்து ஊடுருவி இறைநிலையின் தன்மைகளையெல்லாம் வெளிப்படுத்துவதாக உள்ளது.

இத்தகைய புதிர் போன்ற பெரும் மாற்றத்தை, இறைநிலையின் சரித்திரப் பெருமையை, மனித மனத்தால் உணர முடியவில்லை. ஆயினும் அதே மனதை இறைநிலையின் ஆற்றலால் உருவாகிய காந்த ஆற்றலின் அழுத்தத்தின் மீது செலுத்திப் பழகிவரும் ஒரு பெருமையான நிகழ்ச்சியை அகத்தவம் என்றும், குண்டலினியோகம் என்றும் கூறுகிறோம். இயற்கையின் இயல்பான தன்மைகளில் ஒன்று பேரறிவு
(Omniscient Consciousness).

எல்லா இடங்களிலும், பொருட்களிலும் ஊடுருவி நிறைந்து இயங்கிக் கொண்டிருக்கும் இந்த தெய்வீகப் பாய்மப்பொருள் காந்த நிலையாக இருந்தாலும் அது இடத்திற்கு ஏற்ப, காலத்திற்கு ஏற்ப பல வடிவங்களும், குணங்களும் பெற்று, எதுவுமாகும் ஆற்றல் பெற்றதாக இருக்கிறது. இறைநிலையானது பிரபஞ்ச பொருட்கள் அனைத்துக்கும் மூல ஆற்றலாக இருப்பதால் அதனை ஒரு தெய்வீகத் தத்துவமாக மதிப்பு கொண்டு வணங்குகிறோம். இருப்பு நிலை ஆக இருந்த இறையாற்றல், சுத்தவெளி என்ற பெயரோடு இருந்தது.

அதே ஆற்றல் தன்னிறுக்கத்தால் துகள்களாகி தனது சூழ்ந்தழுத்தத்தினாலேயே அலைநிலை பெற்றுப் பாய்மப் பொருளாகிச் சுத்தவெளியாக உள்ள இறைநிலையோடு நீக்கமற நிறைந்து ஒரு இணையற்ற பேராற்றலாக இருக்கிறது. இந்த ஆற்றலைத்தான் தெய்வமென்று கூறுகிறோம். கடவுள் என்றும் இறைநிலை என்றும் வழங்குகிறோம். ஆதியும், அனாதியுமான முழுமுதற்பொருள் என மதிக்கிறோம். இந்தப் பேரறிவு “இறைநிலை விளக்கம்” எனப்படுகிறது. நாம் ஊணர்ந்தவற்றை வரிசைப்படுத்திப் பார்த்தால்,
1. இறைநிலை
2. இறைத்துகள்
3. காந்தம்
4. அணு.

இறைத்துகள்கள் இறைநிலையின் சூழ்ந்தழுதத்தினால் கூட்டம் கூட்டமாக சேர்ந்து இயங்கும்போது அந்தக் கூட்டு இயக்கம்தான் அணுவென்று கூறப்படுகிறது.

இறைநிலையிலிருந்து அணுநிலை வரைக்கும் புலன்களுக்கு எட்டாத தத்துவங்களாகும். இவற்றைப் பற்றிச் சிந்திப்பதும், தெளிவதும், பிறர்க்கு விளக்குவதும் “தத்துவ ஞானம்” ஆகும். அணுநிலைக்கு மேலாக, அதன் பின்னர் நடக்கும் இயக்கங்களையெல்லாம் புலன்களால் உணரமுடியும். அவற்றின் நிகழ்ச்சிகளை மொழியில் விளக்கமுடியும்.

இத்தகைய ஆற்றலைத்தான், விண்முதற்கொண்டு உள்ள இவ்வாற்றல் ஆன, விண் + ஞானம் = விஞ்ஞானம் என்று வழங்குகிறோம். எனவே மறைபொருளான இறைநிலை முதற்கொண்டு அணுநிலை வரைக்கும் “மெய்ஞ்ஞானம்” என்றும், அணுநிலைக்கு மேலாக நடைபெறும் இயக்கங்களை “விஞ்ஞானம் என்றும், கூர்ந்த அறிவின் ஆற்றலை இரண்டு விதமாக வழங்கி வருகிறோம். அடுத்தபடியாக இறைநிலையின் தன்மாற்ற விளைவுகளில் அணுமுதலாக உண்டாகும் இயக்கங்களைப் பற்றி ஆராய்வோம்.

- வேதாத்திரி


 

திங்கள், 11 ஆகஸ்ட், 2014

கொடுப்பதே திரும்பி வரும் :

"எதை கொடுக்கிறோமோ , அது தான் நமக்கு திரும்பி வருகிறது . துன்பத்தைக் கொடுத்தால் துன்பம் தான் வரும்.அன்பைக் கொடுத்தால் அன்பு வரும்.இந்த இறைநீதியை உணர்ந்து அதன் வழியே அறநெறி வாழ்க்கை வாழ்ந்தால் நாம் அமைதி, இன்பம் , ...பேரின்பம் அடையலாம்.

ஒருவர் மேல் குறையைச் சொல்வதை விட , அவர்களிடம் உள்ள நல்ல குணங்களையும் செயல்களையும் சுட்டிக் காட்டி அவர்களுக்கு பாராட்டும் நன்றியும் கூறும் பொழுது அவருக்கு மட்டுமல்ல நமக்கும் மன அமைதி வருகிறது . சந்தோஷமாகவும் இருக்கலாம்."

--அருள் தந்தை

ஞாயிறு, 10 ஆகஸ்ட், 2014

ஐயா, நல்லவர் செத்துப் போகிறார்கள். தீயவர் வாழ்கிறார்கள் ஏன் ?

இது என்ன? தீயவர்கள் மட்டும் சாவதில்லையா? நல்லவர்களாக இருந்தாலும், தீயவர்களாக இருந்தாலும், எல்லோருக்கும் மரணம் உண்டு. பிறந்து விட்டால் செத்து தான் ஆக வேண்டும். எப்படி வாழ்கிறோம் என்பதில் தான் வித்தியாசம் இருக்கிறது. வாழும் காலத்தில் என்ன செயல் செய்கிறோமோ அதற்குத் தகுந்தவாறு விளைவு உடனோ பின்னோ வருகிறது.

சனி, 9 ஆகஸ்ட், 2014

வினா: சுவாமிஜி, தர்மம் செய்வதும், தர்மம் வாங்குவதும், மற்றவருக்காக இறங்குவதும் மனிதனின் பலவீனத்தைத் தானே காட்டுகிறது ?

 
மகரிஷியின் விடை:
...
தர்மம் செய்வதும், பிறர் துன்பம் கண்டு இறங்குவதும் தான் மனிதன் இயல்பாகும். இது பலவீனம் அல்ல. ஆன்மாவின் பலமாகும். வாங்குவதை விட கொடுப்பது அதிகமாக இருக்க வேண்டும். தேவையுள்ள போது வாங்குவதில் தவறில்லை. கொடுப்பவரின் மனத்திருப்திக்காகவும் வாங்கலாம்.
ஒருவர் பிச்சை எடுக்கிறான் என்றால் அங்கு தான் ஏழ்மை மற்றும் பலவீனம்(Poverty and Weakness) வருகிறது. பட்டினி கிடப்பவனுக்கு உணவு அளிக்க வேண்டியது தான். ஆனால் நன்றாகச் சாப்பிட்டு விட்டு இருப்பவனுக்கும், வீட்டில் சென்று அறுசுவை உணவு உண்பவருக்கும் சாப்பாடு போடுவது தர்மம் ஆகாது.

வெள்ளி, 8 ஆகஸ்ட், 2014

இல்லற வாழ்க்கை சிறப்பாக அமைய வேண்டுமென்றால், அதற்கு என்ன வழி..?

மூன்று பண்புகள்

1. விட்டுக்கொடுப்பது

2. அனுசரித்துப்போவது...

3. பொறுத்துப்போவது

இவை மூன்றும் இல்லையென்றால் இல்லறம் இன்பமாக இருக்காது

இந்த இடத்தில் ஒரு பேராசிரியைக்கு ஒரு சந்தேகம்...., எழுந்து கேட்டார் அவர்...

“விட்டுக்கொடுப்பது என்று பொதுவாக சொல்கிறீர்கள்...யார் விட்டுக்கொடுப்பது ? கணவனா ? மனைவியா ? பிரச்சினையே அங்குதான் ஆரம்பம்..!!”

அதற்கு மகரிஷி...

“யாரிடம் அன்பு அதிகமாக இருக்கிறதோ,அறிவாளியோ.. அவர்கள்தான் விட்டுக்கொடுப்பார்கள். அவர்கள் தான் அனுசரித்துப்போவார்கள்”

வியாழன், 7 ஆகஸ்ட், 2014

சுத்தவெளி சுத்தவெளியாகவே இருந்திருக்கலாம் அல்லவா? அது ஏன் இயக்கம் பெற்று, பரிணாமம் பெற்று வளர்ந்தது? அதன் ரகசியம் என்ன?


மகரிஷி..
...
படுத்திருக்கிறீர்கள்..! நல்ல ஓய்வு அப்படியே படுத்திருக்க வேண்டியதுதானே ? ஏன் எழுந்தீர்கள்..?
உங்கள் உடலாற்றல் வேகம் தானாகவே எழச்செய்கிறது.
அதேபோல் சுத்தவெளி தன்னிறுக்க சூழ்ந்தழுத்தும் ஆற்றல் பெற்றது., அது எப்போதுமே தானாகவே விரிந்துகொண்டே இருக்கக்கூடியது. அதனால் அதிலிருந்து மற்றவை தோன்றித்தான் ஆகும்..!!

 

புதன், 6 ஆகஸ்ட், 2014

ஒருவர் இறைநிலையை அடைந்துவிட்டார் என்பதை எவ்வாறு அறிந்துகொள்வது ? பிறரால் அதை அறிய முடியுமா..?


“மனதில் களங்கம் இருக்காது; இன்னொருவர் பொருளை பறிக்கவேண்டுமென்ற எண்ணம் இருக்காது; இன்னொருவருக்குத் துன்பம் கொடுக்க விருப்பம் இருக்காது; “
இதைக்கொண்டு அவர் ”இறைநிலையை உணர்ந்து விட்டார்” என்று அறிந்துகொள்ளலாம்
இரண்டாவதாக இறைநிலையை உணர்ந்துவிட்டால் அவர் ரொம்பநாள் வாழவும் மாட்டார்...!
ஏன் வாழமாட்டார்...? என்றால் ஆசை இல்லை ஆசை இருக்கிற வரைக்கும் தான் வாழ்கிறார்
-வேதாத்திரி மகரிஷி
 

செவ்வாய், 5 ஆகஸ்ட், 2014

வெறுப்பின்மை :


வெறுப்பு என்பது சினம் என்னும் மனநிலையின் மறைமுகக் குறிப்பு ஆகும். வெறுப்புணர்ச்சியென்பது, பிறரை, பிறபொருளை நம் வாழ்விலிருந்து குறிப்பிட்ட காலத்துக்கு அல்லது வாழ்நாள் முழுவதும் ஒதுக்கிவிடும். இது வெறுப்புணர்ச்சியின் இளநிலையென்று கூறலாம். அதன் முதுநிலையானது பிறரை அல்லது பிறபொருளை துன்புறுத்தல் அல்லது அழித்தல் ஆகும்.
...
இவ்விரண்டு நிலைகளுமே மனித வாழ்வின் நலத்தையும், வளத்தையும் அளிக்க வல்லவை. இதனால் வெறுப்புணர்ச்சியற்ற மனநிலையை அடையவும், காக்கவும் பயிற்சி வேண்டும். வெறுப்பு ஒழிந்தால் மிச்சமிருப்பது என்ன நட்பு, அன்பு, கருணை இவைதானே.
வெறுப்பு ஒவ்வொரு நண்பரையும், குடும்ப உறுப்பினரையும் மற்றும் பொருட்களையும் ஒதுக்கி வைக்கும் அளவுக்கு நாம் ஒதுங்கி விடுகிறோம். நாம் வாழ்வதற்கு உலகம், சமுதாயம், உறவினர்கள், நண்பர்கள் குறைந்துவிடும். வாழ்வின் இன்பம் இழந்து, அமைதியிழந்து தனித்து நின்று துன்புற வேண்டியதே, மாக்கோல மதிவிருந்தில் ஒரு கவி இருக்கிறது. அது விருப்பத்தை ஒழித்துவிட முயலவேண்டாம். வெறுப்பை ஒழித்தால் அதுவே இனிமை நல்கும் என்பதாகும்.
ஆழ்ந்து சிந்தியுங்கள். உங்களுக்கு எந்த மனிதர் பேரில் எந்தப் பொருள் பேரில் வெறுப்பு இருக்கிறது என்று கண்டு அதைப் போக்கிக் கொள்ளுங்கள். துன்பம் தருவனவற்றை விட்டு ஒதுங்கியிருக்கலாம். உணர்ந்து தெளிவோடு வெறுப்புக் கொள்ளத் தேவையே இல்லை. நீங்கள் சிந்திக்க சிந்திக்க இக்கருத்து உங்கள் மன ஆழத்திற்குப் போய் ஒரு மதிப்புடைய நல் விளைவை வாழ்வில் உண்டாக்கும்.
வெறுப்பின்மைதான் சிரித்த முகத்தைக் கொடுக்கும். அந்த முகவே அன்பு ஒளிர் விளக்காகும்.
–தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

திங்கள், 4 ஆகஸ்ட், 2014

சுவாமிஜி, மொழிவெறி கூடாதா ?

மகரிஷியின் விடை:
மொழிவெறி மட்டுமல்ல. எதன் மீதும் வெறி கூடாது. அது உணர்ச்சிவயப்பட்ட நிலை. அது தனக்கும் சமுதாயத்திற்கும் துன்பத்தையே விளைவிக்கும்.
மதுவெறி ஜீரணமாகும் வரை இருக்கும். காமவெறி விந்து உற்பத்தி குறையும் வரை இருக்கும். மதவெறி அறிவின் விளக்கம் கிடைத்தால் தணிந்து விடும். புகழ் மற்றும் பணவெறி உடல் வலிவு உள்ளவரை நீடிக்கும். நாட்டுவெறி, மொழிவெறி அந்த நாடோ அல்லது மொழியோ அழியும் வரை இருக்கும்

ஞாயிறு, 3 ஆகஸ்ட், 2014

திருத்தமும் வருத்தமும்




பிறரிடம் உள்ள குறைகளுக்கு முழுக்க முழுக்க அவர்களே தான் காரணம் என்றாலும் கூட, அந்தக் குறைதான் நம் சினத்திற்கும் காரணம் என்றாலும் கூட, சி
னத்தினால் அவர்களை இதுவரை எவ்வளவு திருத்தியிருக்கிறோம் என்று பார்த்தால் ஓர் அங்குலம் கூட இருக்காது. அல்லது ஒரு வேளை அவர்கள் நமக்குப் பயந்து கொண்டிருக்கலாம். ஆனால், திருந்தி இருக்க மாட்டார்கள்.

"நானும் முதலில் கோபம் கொண்டதில்லை. தவறு செய்யும் போது நல்லவிதமாக எடுத்துச் சொல்லியிருக்கிறேன். ஆனால், அந்த முறை சரிப்பட்டு வரவில்லையே! இனி, கோபமும் கூடாதென்றால் அவர்களை எப்படித் தான் திருத்துவது?" என்று ஒருவர் கேட்பதாக வைத்துக் கொள்வோம். அவருக்குச் சொல்வதெல்லாம் சினத்தினால் திருத்தம் வரவே வராது. சினத்தினால் ஏதாவது வரும் என்றால் அது வருத்தமாகத் தான் இருக்கும். மாறாக, அன்பாய் முறையோடு பலமுறை கனிவாகக் கூறினோம் என்றால் அவர்கள் திருந்தவும் வழியிருக்கிறது.

முக்கியமாக, அவர்கள் மனம் புன்படும்படியாகக் கூறக்கூடாது. தவறு செய்யப்பட்ட கையோடு புத்தி சொல்லக் கூடாது. குத்திக் காட்டுவது போல் அறிவுரை இருக்கக் கூடாது. என், தவறைச் சுட்டிக் காட்டுவது போலவும் கூட இருக்கக் கூடாது. "அப்படிச் செய்ததை இப்படிச் செய்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்; இனிமேல் இந்தக் காரியத்தை இந்த விதமாகவே செய்து நன்மை அனுபவிப்போம்" என்ற விதமாகத் தான் அறிவுரை இருக்க வேண்டும். கூடவே, உங்கள் தவங்களில் அவர்கள் திருத்தத்திற்கான வாழ்த்தையும், சங்கர்பத்தையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.

இந்த முறையில் சிறிது கால நீடிப்பு ஏற்பட்டாலும் நிச்சயமாக வெற்றி கிடைக்கும். பலர் ஏற்கனவே இம்முறையால் வெற்றி கண்டாயிற்று. எனவே, பிறரைத் திருத்துவது எப்படி என்பது இங்கு முக்கியமில்லை. நமது திருத்தந்தான் முக்கியம்.


-* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
.
விழிப்பு நிலை சீவன்முக்தி:
"செயல்களால் சிந்தனையும் அதன் உயர்வும்
சிந்தனையால் செயல் பலவும் ஒன்றால் ஒன்றாம்
செயல் எண்ணப் பதிவுகளே மனிதன் தன்மை
சிந்திப்பீர் ! இதனைவிட வேறு நீயார்?
செயல் எண்ணம் பழக்கவழி ஓடும் மட்டும்
சிற்றறிவாய் துன்புற்று வருந்தும் சீவன்
செயல் எண்ணம் இரண்டினிலும் விழிப்பு கொண்டால்
சிவத்தன்மை சீவனில் பேரறிவாய் ஓங்கும்."
.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

வினா: சுவாமிஜி, நேரில் போய் ஒருவரை வாழ்த்தினால் அதைக் கேட்பவர்கள் நமது நல்லெண்ணத்தைப் புரிந்து கொள்ள வாய்ப்பாகுமல்லவா ?


மகரிஷியின் விடை:

உண்மை தான். எனினும் நம் வாழ்த்தினை அவர்கள் செவிமடுக்க வேண்டுமே! ஏற்பு நிலை இல்லாவிட்டால் நமது எண்ணத்துக்குள்ளாக வாழ்த்துவதே சிறந்தது. நேரில் வாழ்த்துவதைச் சிலர் விரும்பமாட்டார்கள். மனதால் நாம் வாழ்த்துவதைக் கட்டாயம் ஏற்றுக் கொள்வார்கள். உயிரற்ற பொருட்கள், செடிகளிடம் கூட வாழ்த்து பயனளிக்கிறது.

சனி, 2 ஆகஸ்ட், 2014

There is nothing can be wrong in the nature

 

There is nothing can be wrong in the nature. Our previous karma only determines and stands in front of our present karma. So lets change our present.

"Fraction demands, totality supplies"

-Vethathiri Maharishi

வெள்ளி, 1 ஆகஸ்ட், 2014

How to know the secrets of nature?

 

If we want to know the secrets of Nature, we need not go anywhere - neither to the forests, nor to the deserts; neither to the gleaming mountain-tops nor to the coral sea-beds. All the secrets of nature are locked up within us; they could be discovered within our own minds. If only we dive within ourselves, Nature will unveil its secrets without restraint or reserve. The more we understand the wonders of the Mind, the greater will be our happiness, satisfaction and peace.

-Vethathiri Maharishi

வியாழன், 31 ஜூலை, 2014

Only the spiritual development is lacking and is sorely needed by mankind

 

The sciences have been developed to impressive proportions and material prosperity is more than enough. Only the spiritual development is lacking and is sorely needed by mankind. I hope this suggestion of mine for spiritual education will touch the conscience of all brothers and sisters of the world who are social-minded and spiritually developed.

-Vethathiri Maharishi

புதன், 30 ஜூலை, 2014

Outcome of Karmas

 

One's life partner, one's child, one's friend and one's master – all are the outcome of one's Karmas, both inherited and added after birth.

-Vethathiri Maharishi

செவ்வாய், 29 ஜூலை, 2014

Anger has to be neutralized at the source itself

 

Anger harms you long before it hurts the other person and Anger has to be pre-empted. You must train yourself not to get Angry at all.

It would now be clear to you that Anger has to be neutralized at the source itself. When you succeed in this, see how the mind comes to tranquility and how well your Meditation progresses.

-Vethathiri Maharishi

திங்கள், 28 ஜூலை, 2014

Three virtues for the welfare of one and all in the society

 

For the welfare of one and all in the society, these three Virtues - Morality, Duty and Charity - are absolutely essential. An understanding of the values of these three Virtues and a due observance of the same in practice will result in the development and maintenance of the prosperity and peace of the society.

-Vethathiri Maharishi

ஞாயிறு, 27 ஜூலை, 2014

Man, society and nature all are interlinked with one another

 

Man, society and nature all are interlinked with one another. Man cannot be separated from this.

A living being is a joint function of life force and physical body. The life energy in a living being is the bio-magnetism which gets physical transformation and maintain the metabolic routine of the body and psychic functions.

Good thoughts, divine thoughts are even in the atmosphere, criss-crossing as waves: and when our mind become receptive, these thoughts are registered there.

-Vethathiri Maharishi

சனி, 26 ஜூலை, 2014

How bio-magnetism works?

 

Induced conversion and exhaustion of life current may be felt as a pleasurable sensation in the beginning. But when it exceeds the tolerance-limit of the senses or when the expenditure goes beyond a minimum critical level of stock of the life-force, the sensation becomes painful.

-Vethathiri Maharishi

வெள்ளி, 25 ஜூலை, 2014

What is pleasure and pain?

 

When the level of the conversion of the bio-magnetism does not adversely affect the molecular structure of the sense-organs and when the expenditure of the bio-magnetism is limited to exhausting the surplus, then the experience is harmonious and is felt as pleasure. When the conversion of the bio-magnetism increases more than the tolerance-limit of the sense-organs, or when the exhaustion of the bio-magnetism goes beyond the minimum critical level required for the maintenance of the body, such experience are uncomfortable felt as pain.

-Vethathiri Maharishi

வியாழன், 24 ஜூலை, 2014

The pain or pleasure is just a experience

 

The pain or pleasure is the experience of sensing the conversion-level and expending the force of life-current.
Fluctuation in the stock and the method and the level of conversion is the cause and source of pain and pleasure  sensations. The more one knows the secret, the more will be his responsibility in the maintenance of bio-current. The result will be harmony and peace in life through conscientious restriction of activities.

-Vethathiri Maharishi

புதன், 23 ஜூலை, 2014

நல்லன பயத்தல்

எந்த செயல் செய்தால் என்ன விளைவு உண்டாகும் என்று சிந்தித்து செயல் படுத்தல் அவசியம். எந்த செயல் செய்தாலும் நல்லதாக இருக்க முடியுமா என்றால் இருக்காது. அந்த செயலின் அளவு, முறை இரண்டையும் சரியாகக் கடைப்பிடித்தால் தான் அந்த செயல்... நல்ல விளைவைத் தரும்.

அளவு முறை மட்டுமல்லாது காலம், இடம், தொடர்பு கொள்ளும் பொருள் இவற்றுக் கேற்ப செய்கின்ற செயலில் என்ன விளையும் என்பதைக் கணித்துச் செய்யும் பொது நல்லது விளையும். இதுவே "நல்லன பயத்தல்" .

நல்லது விளையும் போது இன்பமும், அமைதியும் பெறுகிறோம் . இந்த அமைதி தான் படிப்படியாக மனிதனை நாளடைவில் இறை உணர்வுக்கு இட்டுச் செல்லும்."

--வேதாத்திரி மகரிஷி

செவ்வாய், 22 ஜூலை, 2014

வாழ்த்து :



தியானத்தின் பலனாக உங்களுடைய மனதில் அமைதி நிறைந்து விளங்கும். மனதில் ததும்பும் அமைதி உடல் முழுவதும் பரவி புத்துணர்ச்சியையும், புதுபலத்தையும் அளிக்கிறது.

அந்த சமயத்தில் நாம் பின்வருமாறு எண்ண வேண்டும். "ஆண்டவன் அருளால் எனது உடலில் புதுஉணர்வும், புதியபலமும் தோன்றி இருக்கின்றன. மனதில் அமைதி தவழ்கிறது. வாழ்வும் அமைதி நிறைந்ததாகக் காட்சி அளிக்கிறது. தொடர்ந்து இறைவன் அருளால் எனக்கு அமைதியான வாழ்க்கையும், நல்ல உடல்நலமும், நீண்ட ஆயுளும் கிடைக்கட்டும்.'' என்று நீங்களே உங்களுக்கு ஆசி அளித்துக் கொள்ள வேண்டும்.

நல்ல உள்ளத்துடனும் ஆரோக்கியமான உடல் நிலையுடனும் நீங்கள் சமுதாயத்திற்குப் பயன்படக்கூடியவராக இருக்கவேண்டும் என்றால் உங்களுக்குள் நீங்களே நல்ல சிந்தனைகளை சிந்திப்பது அவசியமாகும். இப்பயிற்சி உங்கள் மனப்பதிவிலும், உடலிலும் ஆழ்ந்த முத்திரைகளை உண்டாக்கும்.

முதலில் தனக்குத் தானே ஆசி அளித்துவிட்டு, பின்னர் மனைவி,குழந்தைகள், குடும்பம், சமுதாயம் என்று நம்மைச் சுற்றிலும் இருப்பவர்களின் நன்மைக்காகவும் தியானிக்க வேண்டும். இப்படி சிந்திப்பதன் மூலம் நல்ல குடும்பமும் சமுதாயமும் உருவாக வழிஉண்டாகிறது.

---அருள் தந்தை வேதாத்திரி மகரிஷி,

திங்கள், 21 ஜூலை, 2014

The span of life of man

 

The span of life of man is limited. If he spends most of the time in undergoing pains and miseries created by Will, the purpose of birth would not be fulfilled. So as to make life purposeful in order to enable him to enjoy happiness and success and to experience harmony and peace, man should maintain his thoughts and deeds in tune with three aspects concurrently and simultaneously.

The three aspects are :
  1. The creation of problems by Will should be reduced and stopped;
  2. the ability to solve the problems arising out of the Law of Nature should be developed;
  3. the opportunity for one and all in the society, to enjoy the birthright and freed of life,
Which will enable the man to reach the goal of perfection should be developed and maintained.

-Vethathiri Maharishi

ஞாயிறு, 20 ஜூலை, 2014

தவப்பயன் காப்பீர்


ஆன்மீகம் என்றாலே உயிர்ச்சக்தி, தவத்தைச் செய்து அமைதி நிலைக்கு வந்து பேரின்பம் எனும்
Ecstasy–ஐ அடைகிறோம். இந்தநிலை அடைந்து கொண்டிருக்கும் வேளையில் உணர்ச்சிவயப்பட்டோமேயானால் உயிர்ச்சக்தியானது அளவிலும் அழுத்தத்திலும் குறையும் உடலில் உள்ள அணு அடுக்கு அதிகமாகச் சீர்குலையும், அதேபோல் மூளையில் உள்ள அணு அடுக்கும் வெகுவாகச் சீர்குலையும். தவநிலையில் மனம் ஒன்றிப் பேரின்ப நிலையை அடைகின்றபோது சினம் கொள்ளாமலும், உணர்ச்சிவயப்படாமலும் பேராசை கொள்ளாமலும் இருக்க வேண்டியது அவச...ியம்.
சினம் கொள்ளாமல் இருப்பதற்கு எங்கேயோ செல்ல வேண்டியது இல்லை. நம்முடைய குடும்பத்திலேயே தாய், தந்தை, சகோதரி, சகோதரன் ஆகியவர்களிடையே சினம் கொள்ளாமல் இருக்கப் பழகிக் கொண்டால் போதும். எப்போதும் சகிப்புத்தன்மை, விட்டுக்கொடுத்தல், தியாகம் ஆகிய தன்மைகளை ஏற்றிருக்க வேண்டும்.
பிறருடைய தவறைத் தவறு செய்தவுடனேயே சுட்டிக்காட்டாமல் நேரம் வரும்போது பக்குவமாக எடுத்துச் சொல்ல வேண்டும். தவறு செய்த உடனேயே சுட்டிக்காட்டுவது என்பது வெந்த புண்ணில் ஊசியைச் செலுத்துவதுபோன்றது. ஏனென்றால் தவறு செய்தவர்களுக்கே தெரியும். நாம் இப்போது தவறு செய்து விட்டோம், என்று அப்போதே நாமும் தவறைச் சுட்டிக் காட்டினால் அவர்களுக்கு தவறைத் திருத்த வேண்டும் என்ற எண்ணம் இருப்பினும்கூட அந்த நேரத்திலே பொறுமையுடன் அமைதிகாத்துப் பின்னர் ஆக்கரீதியாகச் செயல்பட வேண்டும்.
–தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

சனி, 19 ஜூலை, 2014

மனித மனம் அமைதி பெற :



மனித மனம் விலங்கினப் பதிவின் காரணமாக புலன்கள் வழியே செயலாற்றும் போது தனது உண்மை நிலையை மறந்து மயங்கி விடுகிறது .

இதனால் தன்முனைப்பு கொண்டு உணர்ச்சிவயப்பட்டு , மனத்தின் அலைச்சுழல் அதிகமாகி விளைவறியாது செயலாற்றி அதன் விளைவாக வாழ்வில் சிக்கல்களும் , துன்பங்களும் பெருக்கிக் கொள்கின்றன....

உணர்ச்சிவயப்பட்ட நிலையில் செயலாற்றும் போது அச்சிக்கலில் இருந்து உடனடியாக விடுபட முடியாமல் , உணர்ச்சிவயமாகி தனக்கும் மற்றவர்களுக்கும் தீமை தரும் செயல்களை ஆற்றுகின்றன .இதனால் தீமை தரும் எண்ணங்களும் செயல்களுமான சினம், வெறுப்பு, பகை , வஞ்சம் என்ற அலைகளையே பரப்புகின்றன .

இயற்கையை அறியாத மன நிலையில் மனம் குறுகி நிற்கிறது. இந்த நிலையில் இருந்து விடுபட வேண்டுமானால் இயற்கையோடு அறிவை இணைந்து விரிந்து செயல்படும் போது மனித மனம் அமைதி அடைகிறது .

---அருள்தந்தை

வெள்ளி, 18 ஜூலை, 2014

பேரானந்தம் :



மனிதன் முதல் அனைத்து உயிர்களும் இன்பத்தையே தேடுகின்றன. ஆனால் மனிதன் மட்டும் தான் நிலைத்த இன்பம் கிடைப்பதில்லை. இன்பம், துன்பம் என்கிற சூழ்நிலையிலேயே மனித சமுதாயம் அல்லலுறுகிறது. இன்பம் துன்பம் என்கின்ற நிலையைத் தாண்டினால் தான் மனித சமுதாயம் அமைதிக்கு வர முடியும்.

அமைதிக்கு வந்து விட்டால் அமைதிக்கு அடுத்த நிலையான நான்காவது படியான பேரானந்த நிலையை ஒவ்வொரு மனிதனும் அடைய முடியும் . அவ்வ...ாறு அடையும் போது முழுமைப்பேறு என்ற பேரானந்தத்தை உணர முடியும்.

--அருள் தந்தை

வியாழன், 17 ஜூலை, 2014

மனிதன் துன்பத்திற்கு காரணம் இயற்கைக்கு மாறாக பழக்கமே:



இந்த இயற்கையின் ஒரு பின்னம் தான் மனிதன் . இயற்கை எல்லா உயிர்களிடத்தும் பொருள்களிடத்தும் அமைந்துள்ளது.
இயற்கையாக எல்லாம் வல்ல இறைநிலையே உள்ளது.
...
இறைநிலையே எல்லா பொருளிலும், உயிரிலும் ஊடுருவி அமைந்துள்ளது . அதுவே மனிதனிடம் மனமாகவும் வந்துள்ளது. இறைநிலையின் மறுமுனையே மனித மனமாக செயல்படுகிறது.

மனிதன் ஆறாவது அறிவை பெற்றிருந்த போதிலும் விலங்கினப் பழக்கத்தின் வழியாக செயல்படும் போது ஆறு தீயகுணங்களும் ஐந்து பழிச்செயல்களும் உருவாகின்றன.

எண்ணம் , சொல், செயலால் எவருக்கும் எப்பொழுதும் துன்பம் தராத முறையில் செயலாற்றும் பொழுது வாழ்வு இன்பமயமானதாக இருக்கும் .

மனிதன் பழக்கப் பதிவின் காரணமாக இயற்கைக்கு மாறாகச் செயல்பட்டு துன்பங்களைப் பெருக்கிக் கொள்கிறான் .
இன்பம் மட்டுமே வேண்டுமெனில் இயற்கையோடு ஒத்து வாழ வேண்டியது அவசியம் .

----அருள் தந்தை

செவ்வாய், 15 ஜூலை, 2014

மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு மகரிஷியின் கருத்துக்கள் :



1. பிரதிபலன் எதிர்பார்க்காமல் உங்களால் முடிந்த அளவு மற்றவர்களுக்கு உதவுங்கள்.

2. முடிந்த அளவு பிறரை புகழுங்கள் . பிறரை குறை கூறுவதை விட்டு விடுங்கள்....

3. பிறர் குறைகளை மன்னியுங்கள் . நீங்கள் பிறருக்கு செய்த நன்மைகளை மறந்து விடுங்கள்.

4. யாரைக் கண்டும் பயப்படாதீர்கள். நீங்கள் பிறர் பயப்படும்படி இருக்காதீர்கள்.

5.குறைவாக பேசுங்கள். நிறைய கேளுங்கள் .

6. உங்கள் கடமைகளைப் பற்றி நிறைய சிந்தியுங்கள் , உங்கள் உரிமைகளைப் பற்றி குறைவாக எண்ணுங்கள்.

7.உங்களுக்கு கொடுத்திருக்கும் ஆசிர்வாதங்களை எண்ணுங்கள் , உங்கள் பிரச்சனைகளை தூக்கி எறியுங்கள்.

8. பிறரிடம் இருந்து அன்பை எதிர்பார்க்காதீர்கள், நீங்கள் பிறரின் அன்பிற்குரியவர்களாக இருங்கள்.

9. ஒரு சிறந்த அறிவுடையவர் போல் நடந்து கொள்ளாமல் , பிறர் சிறப்பை அறியும் தன்மையை வளர்த்துக் கொள்ளுங்கள் `.

---அருள் தந்தை

திங்கள், 14 ஜூலை, 2014

விழிப்புநிலையால் உண்டாகும் பயன்கள் : ...

விழிப்பு நிலை :

மயக்கத்திலேயே வாழ்ந்து பழகிய மனித மனத்திற்கு முறையான பயிற்சினால் தான் விழிப்புநிலை கிட்டும் . பயிற்சியினாலன்றி கிட்டாது . அதற்கு உயிரை உணர்ந்து , உயிரின் இருப்புநிலை உணர்ந்து கொள்ள வேண்டும். அகத்தவமே எண்ணம், சொல், செயல் மூன்றிலும் விழிப்பு நிலையை அளிக்கவல்லது .

விழிப்புநிலையால் உண்டாகும் பயன்கள் : ...

1. விழிப்பு நிலையால் தனக்கும் பிற உயிர்களுக்கும் எவ்வகையிலும் ஊரு ஏற்படுத்தாத வகையில் செயலாற்ற வேண்டுமென்ற அருளுணர்வு ஏற்படுகிறது .

2. அறம் இயல்பாக மலர்கின்றது. அறப்பண்புகள் உயர் பண்புகளாகின்றன.

3. விழிப்பு நிலையால் உயிராற்றலின் வீண் செலவு குறையும் .

4. தன்முனைப்பு நீங்கி, ஆறுகுண எழுச்சிகள் அடங்கி சீர்மை பெரும். பழிச்செயல்கள் விளையா . மனதிற்கு அமைதி கிட்டும். அறிவு நாளுக்கு நாள் தெளிவடையும்.

5. தன்னையே ஆய்வு செய்வதும், தெளிவு பெறுவதும், நல்வினை ஆற்றுவதும் இயல்பாகிறது. இதுவே விழிப்புநிலையின் முழுமை .

6. விழிப்பு நிலையோடிருக்கும் போது மனிதன் பேரறிவாக இருக்கவும், இயங்கவும்,வாழ்க்கையில் சிக்கல்கள் துன்பங்கள் விளையாமல் காக்கவும், வந்தபின் முறையாகப் போக்கி கொள்ளவும் முடியும்.

7. மனதையும் வாழ்வையும் கேடுறாமல் காத்துத் தன்னை உயர்த்திக் கொள்ளலாம் . தெய்வநிலையை உணர்ந்தும் கொள்ளலாம்.

----அருள் தந்தை

ஞாயிறு, 13 ஜூலை, 2014

ஆன்மீக வாழ்வே நலம் தரும் வாழ்வு :



ஆன்மீக வாழ்வே தன்னையும் துய்மை செய்து கொண்டு பிறருக்கும் தூய்மை அளிக்கவல்லது . இயற்கையின் பேராற்றல் எங்கும் நிறைந்த தன்மை எல்லாவற்றையும் அறியும் பேருணர்வு, அழிவில்லாத தன்மை , நீயதிவழுவாதத் தன்மை, பெருங்கருணையை உணர்ந்து கொள்ளலாம்.

எல்லாமாகி நிற்பது இறைநிலையே . எல்லாருக்குள்ளும் இல்லமாக உள்ளமாக நிறைந்திருப்பதுவும் இறைநிலையே என்ற உணர்வு எட்டும் . அந்த உணர்வு நீங...்காத நிலையில் காணும் காட்சிகளெல்லாம் பரம்பொருள் சொரூபம் அன்றி வேறில்லை என்ற உண்மை அறிவிற்கு எட்டும்.

இப்போது யார் யாரிடம் குறைகாண முடியும்? குறை காண்பதற்கு ஏதுமில்லை என்பது விளங்கும் . வானறிந்து உயிர் விளங்கி வரை கடந்து நிற்கும் நிலையில் வாழ்வாங்கு வாழவும் , பிறரையும் வாழ வைக்கவும் தக்க அறிவும் ஆற்றலும் உண்டாகிவிடும். இத்தகைய நிலை தானாக மலர்ந்து விடும் .

---அருள் தந்தை

சனி, 12 ஜூலை, 2014

குறைகளை போக்கி நிறைவோடு வாழ்வோம் :



தற்சோதனையின் மூலம் முதலில் தனது குறைகளை உணர்ந்து கொள்ளலாம். பிறரிடம் குறைகாணும் பழக்கத்தை விட்டு விட்டு பிறரிடம் உள்ள நிறைகளைக் காண வேண்டும். அந்த நிறைகளைத் தானும் கைகொள்ள, கடைபிடிக்க என்னென்ன வழிகள் என்பதில் கவனம் செலுத்தி தனது குறைகளைக் களைவதனால் பிறரிடம் நட்பு ஓங்கும். நம்மீது பிறரும் பெரு மதிப்பு கொள்வர்.

இன்பம், துன்பம் , விருப்பு, வெறுப்பு, உயர்வு தாழ்...வு குறைவு , நிறைவு என்ற இவை அனைத்தையும் ஒருங்கே நிறைந்த ஒரு கலவை தான் மனிதன் . மனிதனுக்குக் கிடைத்திருக்கும் வாழ்க்கை காலமோ மிகவும் குறுகியது . இக்குறுகிய காலவாழ்வில் பிறந்தோர் எல்லாம் நிறைவோடு வாழ வேண்டும். அதுவும் குறைகளைப் போக்கி நிறைவோடு வாழ வேண்டும் .

---அருள்தந்தை

வெள்ளி, 11 ஜூலை, 2014

இறையோடு இணைந்த செயல் :


நாம் வாழ்த்தும் போது முதலாவது நமது மனம் இறை உணர்வோடு அதாவது அறிவின் இயக்கத்தில் நுண்ணிய பகுதியை அடைகிறது. "வாழ்க" என்று சொல்லும்போதே, குளிர்ச்சியாக நல்ல எண்ணத்தோடு சொல்லும்போது, நாமே முதலில் நம்மை வாழ்த்திக் கொள்ள வேண்டும்.

அந்த அலை எழும் போதும் அவர்களுக்கு உதவியாக இருக்கிறது. இப்படி வாழ்த்தி வாழ்த்திச் சிறிது காலத்தில் நீங்கள் தானாகவே இறை உணர்வில் கலந்திருக்கும் நிலை உரு...வாகும். இவ்வாறு வாழ்த்திப் பழகிக் கொண்டவர்களுக்கு எல்லாச் செயலும் அந்த இறையோடு இணைந்த செயலாக, நற்செயலாக இருக்க முடியும்.

அதே போல நீங்கள் ஒரு வாழ்த்துச் சொல்கிறீர்கள், பல தடவை சொல்கிறீர்கள். ஆயிரம் தடவை சொல்லும் போது ஒவ்வொரு சொல்லுக்கும், ஒவ்வொரு நினைவுக்கும் அந்த வாழ்த்துக்கும், ஆயிரம் தடவை வாழ்த்திவிட்ட பிறகு ஆயிரத்தோராவது தடவை வாழ்த்தினால் என்ன பலன் என்றால் ஆயிரத்தோரு தடவை வாழ்த்தினால் என்ன பலனோ அந்த அளவுக்கு அழுத்தம், பயன்பெறும். ஆகவே ஓய்வு இருக்கும் நேரத்தில் எல்லாம் வாழ்த்திக் கொண்டே இருக்க வேண்டும்.

தவம் செய்த பிறகு இருக்கும் நேரத்தில் என்ன செய்வது, அதற்கு எதாவது மந்திரங்கள் சொல்லிக் கொடுங்கள் என்று கேட்பார்கள். அதற்குத் தேவையே இல்லை, வாழ்த்து என்கிற மந்திரம் எப்பொழுதும் இருக்கிறது. உங்களுக்கு எத்தனை நண்பர்கள் இருக்கிறார்கள்? ஐம்பது பேர், நூறுபேர், என்று சொல்கிறீர்கள் அல்லவா? அதிலே ஒருவரை எடுத்துக் கொண்டு நூறு தடவை வாழ்த்துங்கள்.

பிறகு இன்னொருவரை நூறு தடவை வாழ்த்துங்கள். தீமை செய்தவரை முதலில் வாழ்த்துங்கள். நன்மை செய்தவரை பின்னால் வாழ்த்துங்கள். அதன் பிறகு நேரம் இருக்கிறதா என்று பார்த்தால் நேரமே இருக்காது. நீங்கள் வாழ்த்திக் கொண்டே இருக்க இருக்க, உயிர்க் கலப்பு வர வர தீமை செய்யக் கூடியவர்கள், தீமையான எண்ணம் உடையவர்கள் எல்லாம் நாம் நினைக்கும் போது அவர்களுக்கும் ஒரு திருப்பம் வந்து விடும். இவரோடு போராட்டம் செய்தேனே இவருக்குப் போய் தீமை செய்தோமே, தவறாக நினைத்தோமே என்ற எண்ணம் வரும். இந்த உயிரோட்டம் (interaction) அவர்கள் உள்ளத்திலே தானாகவே அவர்களுடைய நிலைமையை மாற்றி, குணத்தை மாற்றி நன்மையே செய்வதற்குப் பலன் கொடுக்கும்.

ஆகவே நல்லவர்களை வாழ்த்துவதனால் நன்றி தெரிவித்துக் கொள்கின்றீர்கள். பொல்லாதவர்களை வாழ்த்துவதனால் இரண்டு பலன் கிடைக்கிறது: தீமையை முதலில் விலக்கிக் கொள்கிறோம், அது மாத்திரம் இல்லை, அவனை வாழ்த்திக் கொண்டே இருக்க இருக்க அந்தத் தீமை செய்தது போக நன்மை செய்கிறான்.

---அருள் தந்தை


 * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
.
"வாழ்க வளமுடம்" என்ற வாழ்த்து -
எல்லா மந்திரங்கட்கும் மேலான திருமந்திரமாகும்".

.
"வாழ்க்கை என்பதே சிக்கல் நிறைந்த மனப்போராட்டம் ஆகும்.
உடலும், உயிரும் சேர்ந்ததே ஒரு சிக்கல் தான்".

.
"பிறர் நலமாக வாழ வேண்டும் என்ற கருத்தோடு எழும்
ஒரு ஒலியே வாழ்த்து என்ற வார்த்தையாகும்".

.
"வாழ்த்து வீண் ஆகாது. வாழ்க வளமுடன், வாழக் வளமுடன் -
என்று சொல்லச் சொல்ல உடல், மனம் நன்றாக இருக்கும்".

.
"வாழ்த்தும் பழக்கத்தினால் சினம் அடிக்கடி வருவதைத்
தவிர்க்கலாம்; பகையைக் கூட தவிர்க்கலாம்".

.
மனித மாண்பு :

"மனிதவுயிர் பிறவியதன் மதிப்புணர வேண்டும்
மனம் உயிர்மெய்மூன்றான மறைபொருட்களான
மனிதனுடைய ஆற்றல்களை மலரவைக்க வேண்டும் மறைந்திருக்கும் உட்பதிவாம் பலவினைகடம்மை
மனிதனேமாற்றி அறச்செயல் பதிவு செய்து
மனத்தூய்மை வினைத்தூய்மை பெற்று பரத்துரைந்து
மனிதனவன் உயர்மனிதனாக வாழச்செய்யும்
மனவளகலையிதனைப் பரப்பி நலம் காண்போம்."
.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

வியாழன், 10 ஜூலை, 2014

எண்ணம் பதியும் இடங்கள் :



நாம் எண்ணுகின்ற எண்ணம் நமது உடல் செல்களில், மூளை செல்களில் , சீவகாந்த களத்தில், உயிர் துகள்களில், கருமையத்தில், வான்காந்தத்தில் ஆகிய ஆறு இடங்களில் பதிகிறது .

எந்த ஒரு எண்ணம் எண்ணினாலும் அது நல்ல எண்ணமா என்ற ஆராய்ச்சி வேண்டும். இந்த பிரபஞ்ச நிகழ்ச்சிகள் அனைத்திற்கும் காரணம் அவரவர் எண்ணங்களே....

---அருள் தந்தை

புதன், 9 ஜூலை, 2014

தவறுகளும் திருத்தமும் :


நான் தவறுகள் செய்கிறோம் . செய்த தவறுகளே துன்பமாக முளைக்கின்றன. இதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். இந்த அறிவு வந்த பின் இனித் துன்பம் வராமல் இருக்க வேண்டுமாளால் இனியேனும் தவறு செய்யாமல் இருக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு வர வேண்டும். பொதுவாக நாம் செய்யும் தவறுகள் நமக்குத் தெரிவதில்லை. பெரும்பாலும் பழக்கத்தின் காரணமாகவே தவறுகள் செய்யப்படுகின்றன.

சூழ்நிலை நிப்பந்தத்தால்ச...ெய்யப்படும் தவறுகளும் மிகுதியே. புலன் கவர்ச்சியிலே இருக்கும் போதும் சூழ்நிலைக் கவர்ச்சியிலே நிற்கும் போதும் , பழக்கத்தின் அழுத்தத்தால் உந்தப்பட்டுச் செயலாற்றும்போதும், தவறுகள் தெரிவதில்லை. அதனால் மேலும் மேலும் புலன் கவர்ச்சியில் சிக்கிக் கொள்கிறோம் . மேலும் மேலும் சூழ்நிலைக் கவர்ச்சிக்கு ஆளாகிறோம். மேலும் மேலும் தவறிழைத்து , மேலும் மேலும் துன்பத்தையே சந்தித்துக் கொண்டிருக்கிறோம்.

இதனால் வந்த வேலை பிறவியின் நோக்கம் மறந்து போகிறது. காமம், குரோதம் முதலான ஆறு தீய குணங்கள் வளர்ந்து கொண்டே போகின்றன. விளைவாக ஐந்து பெரும் பழிச்செயல்கள் நாளுக்கு நாள் பெருகிவருவதைப் பார்க்கிறோம். இறைவனைப் பற்றிய எண்ணம் மறைத்து வருகிறது. இந்நிலை மாற வேண்டுமானால்.தகுந்த மனோ பயிற்சியின்றி முடியவே முடியாது .

ஏனெனில் தவறிழைப்பதும் மனம் .இனித் தவறு செய்யக் கூடாது என்று தீர்மானிப்பதும் அதே மனம் தான். தவறு செய்யாத வழியைத் தேர்ந்து ஒழுக வேண்டியதும் மனமே. மனதைப் பழைய நிலையிலே வைத்துக் கொண்டு புதிய வழியில் செல்ல எப்படி முடியும் .

--அருள்தந்தை

செவ்வாய், 8 ஜூலை, 2014

பதிந்த ஒவ்வொரு பதிவுக்கும் அது செயல்பட காலம் உண்டு

இயற்கையிலே எந்தத் தவறும் இருக்கமுடியாது. ஏற்கனவே ஒருவர் ஒரு தவறு செய்ய எண்ணியிருப்பார். அதைச் செயலிலே கொண்டுவர முடியவில்லை. அது அப்படியே பதிவாகி இருக்கிறது. காலத்தால் எண்ணிய எண்ணம் எப்படியும் செயல்பட வேண்டும். அவ்வாறு அவர் ஒருவருக்குத் தீங்கு செய்ய வேண்டும் என்று எண்ணிவிட்டால், அந்த எண்ணத்தை உணர்ந்து அழிக்கவில்லையென்றால் அதற்குரிய காலத...்திலே அந்தத் தீமை செய்தே ஆகவேண்டும். ஆகவே அவரது எண்ணம் செயலாக வேண்டும். அதே சமயம் இங்கே நம்மிடத்தே செயல் பதிவு நீங்கவும் வேண்டும். இரண்டையும் இணைத்து இயற்கை ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி அவர் மூலமாக நமக்கு ஒரு வருத்தத்தைத் தந்தது. இதை உணரும்போது நாம் அவரை வாழ்த்தவே வேண்டும். நாம் மகிழ்ச்சியடையவும் வேண்டும். ஏனென்றால் நம்மிடம் உள்ள பதிவு ஒன்று வெளியாகிவிட்டது, அது செயலாகி அப்பதிவு கழிந்துவிட்டது என்று.

ஒரு மனிதனிடத்திலே நூற்றுக்கணக்கான பதிவுகள் இருக்கலாம்.. ஒரு விதையிலே மரம் இருப்பதுபோன்று, அந்த விதையை நட்டவுடனேயே - பூ, காய், பழம் எல்லாம் உடனே வந்துவிடுவது இல்லை. விதையானது முதலிலே சிறு செடியாக வருகிறது. காலத்தாலே, பல வாரங்கள் கழித்தோ, மாதங்கள் கழித்தோ, ஆண்டுகள் கழித்தோ மரமாகிய பின் பூ, காய், பழம் வரலாம். அதுபோன்று பதிந்த ஒவ்வொரு பதிவுக்கும் செயலாக மலர அதற்கு தகுந்த காலம் என்று ஒன்று உண்டு. அந்த அந்தக் காலத்தால் முறையாக அது எழுச்சி அடைந்து இயங்கிச் செயல்படும். ஆகவே "இடுக்கண் வருங்கால் நகுக" என்றுதான் திருவள்ளுவர் கூறினாரே தவிர, அந்தத் துன்பத்தை ஏற்படுத்தியவரை வருத்தவேண்டும் என்று கூறவில்லை. எனவே எவ்வாறு நாம் துன்பம் வரும்போது நகை புரிய வேண்டும்? சிரிக்கவேண்டும்? என்றால்.. உண்மையிலேயே ஏற்கனவே இருந்த நம்முடைய சுமை அல்லது பாவப் பதிவு (sins and imprints) ஒன்று இன்று நம்மிடம் அப்பதிவு செயலாகி கழிந்துவிட்டது என்று எண்ணும்போது, அத் துன்பத்தை ஏற்றுக்கொள்ளக் கூடிய இன்பமான உணர்ச்சிதான் அகத்தவப் பயிற்சியினால் பக்குவப்பட்ட குண்டலினியோக சாதகனுக்கு ஏற்படவேண்டுமே அன்றி.. சினம் கொள்ளக் கூடாது..! சினத்திற்குப் பதிலாக அத்தகைய ஞானம் கொண்ட கர்மயோக நெறி தான் அகத்தவப் பயிற்சி (Kundalini Yoga Meditation) மேற்கொள்ளும் குண்டலினியோகிக்கு மலர வேண்டும்.


- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

திங்கள், 7 ஜூலை, 2014

தெய்வ நீதி வழிவாழ்தல்



மனிதன் உடற்கருவிகளைக் கொண்டும், ஐம்புலன்களைக் கொண்டும், மனஆற்றலின் தன்மைகளாக விறுப்பு வெறுப்புகளைக் கொண்டும், செய்யும் செயல்களெல்லாம் இயற்கை நியதிக்கு ஒத்திருக்க வேண்டும். ஏதேனும் முரணாகச் செயல் புரிந்தால், அதன் விளைவாக வருவதே வலி, நோய்கள் முதலான வாழ்க்கைச் சிக்கல்கள் ஆகும்.  இந்த இயற்கை நியதிகளை உணர்ந்து அதன் வழி வாழ்தலே தெய்வ நீதி வாழ்தல்.
- அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி - 

 
 

ஞாயிறு, 6 ஜூலை, 2014

மனதின் பழக்கத்தை முறையாக மாற்ற

மனத்திற்கு இரண்டடுக்குப் பதிவுகள் உள்ளன. ஒன்று கருவமைப்பினால் பெற்றோர்களை அடிப்படையாகக் கொண்டு வந்தது. மற்றது பிறந்தது முதல் என்னென்ன நினைத்தோமோ, என்னென்ன செய்தோமோ அவை அனைத்தும் பதிவாகியுள்ளது. இந்த இரண்டும் சேர்ந்து தான் ஒரு மனிதனுடைய தன்மையாக உருவாகிறது. முன்பு மனதை இயக்கிப் பதிவுகளைப் பெற்று ஒரு தன்மையை நாம் கொண்டுள்ளோம். அதை மாற்றி மனத்தை நம்முடைய விருப்பப்படி நடத்தி நாம் அடைய வேண்டிய எல்லா ...இலட்சியங்களையும் அடைய அதற்கென ஒரு பயிற்சி வேண்டும். பழக்கத்திற்கும், விளக்கத்திற்கும் இடையே போராடிக் கொண்டிருக்கக்கூடிய மனதின் பழக்கத்தை முறையாக மாற்றிக் கொண்டு விளக்கத்தை நல் விளக்கமாக பெற்று அதன் வழியே வாழ்க்கையை அமைத்துக் கொள்ள உள்ள முறையான பயிற்சியே 'உலக சமுதாய சேவா' சங்கத்தின் "மனவளக்கலை" பயிற்சியாகும்.


- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

சனி, 5 ஜூலை, 2014

கேள்வி : நம்மை சுவாமிஜி பிரம்மஞானி என்று அழைத்த போதிலும் நாம் அடக்கம் காரணமாக அதை நாம் நம் பெயர்களுக்கு முன்னே உபயோகிப்பதில்லை. உண்மையில் சுவாமிஜி பிரம்மஞானி என்ற பெயர் வழங்கிய காரணம் என்ன?


பதில் : ஒரு இரயில் பெட்டியில் ஏறுகின்றீர்கள், முதல் வகுப்புப் பயணியிடம் கேட்கின்றீர்கள். எங்க போறீங்க? என்று. அவர் போகுமிடத்தின் பெயர் சொல்லுகின்றார். எங்கே இருந்து போறீங்க? அவர் கிளம்பிய இடத்தைச் சொல்கின்றார...். கடைசி வகுப்புப் பயணியிடம் போகின்றீர்கள். அவரிடமும் அதே கேள்வி, அவர் விடை சொல்ல வரும் போது, அவரிடம் போய், கடைசி வகுப்புல தான போற, உனக்கு கிளம்புமிடம், போகுமிடம் தெரிஞ்சா என்ன? தெரியாட்டி என்ன? என்று சொன்னால்? நமது சமுதாயத்தின் பெரும் பகுதி 19ஆம் நூற்றாண்டின் இறுதி வரை இப்படித்தான் இருந்தது. ஒரு பிராமணரிடம் போய், தங்கள் பிறவி எங்கு செல்கின்றது? என்று கேட்டால், அவர் சொல்வார் பிரம்மம் நோக்கி என்று. உங்கள் பிறவி எங்கே துவங்கியது என்று கேட்டால் மிகச் சரியாய்ச் சொல்வார். பிரம்மத்திலிருந்து என்று. கடைசி வகுப்புப் பயணியாம், ஒரு 19ஆம் நூற்றாண்டு சூத்திரரை எடுத்துக் கொள்ளுங்கள். அவரிடம் போய்க் கேட்டுப் பாருங்கள், உங்கள் பிறவி துவங்கியது எங்கு என்று? அவர் சொல்வார், அது தெரிஞ்சி என்ன செய்யப் போறேன் என்று. எங்கு போகின்றது உங்கள் பிறவி என்று கேட்டால், அது மட்டும் தெரிஞ்சி என்ன பண்ணப் போறேன் என்று தான் விடை வரும். பிரம்ம ஞானம் என்பது புனிதம் எனும் பெயரில் பஜனை பாடி, மந்திரம் ஓதி, மூச்சை விட்டு விட்டு வயமாய் இழுக்கும் ஒரு குழுவினருக்கு மட்டுமே சொந்தமாய்ப் போனது, சமுதாயத்தின் இழிவு.

Revolution என்று சொல்லக் கேள்விப் பட்டிருப்பீர்கள். வேதாத்திரியம் எனும் ஓர் Revolution அதை அனைவருக்கும் எளிமைப்படுத்தி பொதுவுடமையாக்கல் முறைக்கு உட்படுத்தியது. பொதுவுடமை ஆக்கி விட்டோம், எப்படி அச்செய்தியை வெளிக் கொணர்வது? மஹான் கண்டு பிடித்தார் ஒரு எளிய முறையை. யாரை எல்லாம், தாழ்ந்தோரில்லை என்று அழைக்க விரும்பினோமோ அவர்களை எல்லாம் காந்தி 'ஹரி சனம்' அழைத்தது போன்று, எவர்க்கெல்லாம் பிரம்ம ஞானம் மறுக்கப் பட்டிருந்ததோ, மறைக்கப் பட்டிருந்ததோ, அவர்களுக்கு பிரம்மத்தின் சுவை தந்து, அவர்களை 'பிரம்ம ஞானி' என்று வழங்கினார். பிரம்ம ஞானம் பொதுவுடமை என்று உணர்த்தவே நாம் எல்லாம் பிரம்ம ஞானி என்று அழைக்கப் படலானோம்.

புதன், 2 ஜூலை, 2014

அன்புரைகள்


நீங்கள் உயிரறிவைப் பெற்று உண்மை விளக்க ஒளியில் விழிப்போடு வாழ வாழ்விலே ஒரு நல்லதோர் திருப்பத்தை ஏற்றிருக்கிறீர்கள். நீங்கள் மேன்மையுற வேண்டும். உங்களால், உங்கள் வாழ்வின் ஒழுக்கம் பின்பற்றி, மனிதகுலம் மேன்மையுற வேண்டும். உலகம் அமைதி பெற வேண்டும். [1] நுண்மாண் நுழைபுலன் [2] ஏற்பும் இணக்கமும் [3] தன்மை நலப்பேறு [4] தகைமை [5] ஆக்கம் எனும் ஐவகை குணநல உயர்வில் நீங்கள் அபார விழிப்புடன் வாழ வேண்டும்.

[1] ஆக்கினை [2] மூலாதாரம் [3] சகஸ்ராதாரம் [4] சக்தி களம் [5] சிவ களம் எனும் ஐவகைத் தவத்தாலும் அறிவை நுண்மை மிக்க தாயும் ஆற்றல் மிக்கதாயும் வளப்படுத்திக் கொள்ளுங்கள். [1] எண்ணங்களை ஆராய்தல் [2] ஆசை சீரமைப்பு [3] சினம் தவிர்த்தல் [4] கவலையொழித்தல் [5] மெய்ப்பொருள் உணர்தல் என்னும் ஐவகையான தற்சோதனைப் பயிற்சியினால் மனிதப் பிறவியின் மாண்பைச் சிறப்பித்துக் கொள்ளுங்கள். உங்களைப் பார்த்து இத்தகைய சீரிய வாழ்க்கை நெறியினை மற்றவர்களுக்கும் பின்பற்றும்படியாக உங்கள் வாழ்வை அமைத்துக் கொண்டு உயர்வு பெறுங்கள். இது நமக்கு மட்டுமன்று, மனிதகுலம் முழுமைக்கும் வாழ்க்கை நலத் தொண்டாக அமையும்.
உலகில்மனிதகுல வாழ்வில் எத்தனையோ மாற்றங்கள் இது வரையில் ஏற்பட்டன. மனவளம், உடல்நலமும், அமைதி வாழ்வும் அளிக்கக்கூடிய நமது குண்டலினியோக வாழ்வே மனித குலத்துக்கு எல்லா வகையிலும் நலம் பயக்கவல்லது. நீங்கள் ஒவ்வொருவரும் அமைதிப்படையின் உறுப்பினாராகத் திகழ வேண்டும்.


- அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி

"அறிவின் இருப்பிடம் இயல்பு இயக்கம்
அறிந்து ஒழுகுவோர் அறிஞர்கள் ஆவர்".
.
"மனம், மொழி, சொல், மூன்றின் ஆற்றலுக்கும் விளைவுண்டு;
இதை, மறைக்கவோ - மறுக்கவோ - மறப்பதோ முடியாது".
.
"அன்பிரக்கம் தொண்டு தவம் ஈகை இன்சொல்
ஆன்மிக நெறியாகும் போற்றிக்காக்க
துன்பங்கள் குறைந்துவரும் மேலும் தெய்வத்
துணைகிட்டும் வாழ்வில் புகழ் நிறைவு ஓங்கும்;
நன்முறையில் தனிமனிதன் வாழக்கற்றால்
நாட்டினிலும் வீட்டினிலும் அமைதி ஓங்கும்,
இன்பமயமே எங்கும், இந்த உண்மை
எளிதன்றோ கற்பதற்கும் வாழ்வதற்கும்."
.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

சனி, 28 ஜூன், 2014

புத்தர் கேள்விகள்:


ஏழ்மைக்கு மூலம் யார்? உயிர் தான் என்ன?
எந்த விதம் மரணம் நோய் முதுமை மூன்றும் வாழ்விலே தோன்றி பெருந்துன்பமாகும் வகையென்ன? என்றன்று புத்தர் கேட்டார்;
ஊழ்வினையால் தெய்வத்தால் இவைகள் எல்லாம் உண்டாகும் என்றமைச்சர் அவர்க்குச் சொன்னார்,
ஆழ்ந்த பல நாட்கள் சிந்தித்துப் பார்த்தார் அறிவிற்குப் பொருந்தவில்லை துறவு பூண்டார்.


- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

வெள்ளி, 27 ஜூன், 2014

இயற்கையை உணர வேண்டும்:



 "நிலையாமையை நினைவிற்கொள் - பிறப்பு இறப்பு
நடுவே பூவுலக வாழ்வு; இதை மறக்கும்
நிலையில் உள்ள மதியின் போக்கே மாயை"

இந்த உலகத்தில் நூறு ஆண்டுகளுக்கு முன்னே வாழ்ந்தவர்களெல்லாம் இன்று இல்லை. இன்றைக்கு இருக்கக் கூடியவர்களெல்லாம் இன்னும் நூறு ஆண்டுகள் கழித்துப் பார்த்தால் இருக்க மாட்டார்கள். அப்படி எத்தனையோ நூற்றாண்டுகள் கழிந்த பின்னர்தான், இன்றைக்கு இருக்கக் கூடிய மக்கள் இருக்கிறார்கள்.

இவ்வாறு மனதை விரித்துப் பார்த்தால் பிரிவினை என்பது இருக்காது. ஒவ்வொரு மனிதனும் பிறக்கிறான்; வாழ்கிறான்; முடிந்து போகிறான். முடிந்து போகும் நாள் அவனுக்குத் தெரியவில்லை. ஜீவகாந்த சக்தியில் பதிந்து இருக்கிறது. அது எந்த முடிச்சில் (Code) இருக்கிறது என்பதைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அதனால்தான் எவ்வளவோ காலம் இருக்கப் போகிறேன் என்று நினைக்கிறான். அப்படிப் பார்த்தோமேயானால், கொண்டு வந்தவும் இல்லை. கொண்டு போகப் போவதும் இல்லை.

இப்போது உலகம் முழுவதும் ஒன்றுகூடி விட்டது. ஒவ்வொரு நாட்டிலேயும் உள்ள மக்களில் பலர் பிற நாடுகளிலேயும் வாழ்கிறார்கள். இந்தக் காலத்தில் நான் அந்த ஜாதி, இந்த ஜாதி, அந்த நாடு, இந்த நாடு என்று வேறுபடுத்திக் கொண்டு, பிணக்கு வைத்துக் கொண்டு மனிதன் வாழும்போது துன்பத்தைத் தவிர இன்பத்தை அடைய முடியாது.

மனித இனம் தன்னுடைய மூலம், முடிவு இவற்றின் பெருமையை உணர்ந்து கொண்டால், இவ்வளவு பெருமைக்கு உரிய உலகத்தில் பிறந்து விட்டதனால் 'நானும் ஓர் உரிமையாளன். எனக்கு எல்லா உரிமைகளும் இருக்கின்றன. எல்லா வசதிகளும் இருக்கின்றன' என்பது புரியும். நான் எப்படி வாழ வேண்டும்? என்று எண்ணிப் பார்த்தால், ஒவ்வொருவருக்கும் ஆயிரமாயிரம் இன்பங்களை அனுபவிக்க வேண்டிய அமைப்பு தான் இருக்கிறது. அதற்கு முரணில்லாமல், நான் செயல்பட வேண்டும். மற்றவர்களுக்குத் துன்பம் தராமல் வாழ வேண்டும். ஆனால், அதற்கு முரணாகச் செயல்பட்டு நாம் கெடுத்துக் கொள்கிறோம். ஒருவருக்கொருவர் தீங்கு செய்துதான் மனிதனாக வாழ வேண்டுமா?

இந்த உண்மையை உணர்ந்து கொண்டால் உலகத்தில் இன்பம், துன்பம், அமைதி, பேரின்பம் என்ற உணர்ச்சிகளோடு வாழக்கூடிய மனிதன் இயற்கை வளத்தை வாழ்வின் வளமாக மாற்றி செம்மையாகத் தானும் வாழலாம். பிறரையும் வாழ வைக்கலாம்.

உண்மையில் என்னிடத்தில், சமுதாயத்தில், இயற்கையில் எவ்வளவு உயர்வு இருக்கிறது என்பதைத் தெரிந்து கொண்டால் பயப்பட வேண்டியதே இல்லை. கவலைப்பட வேண்டியதே இல்லை. அது மாத்திரமன்று. இன்னொருவரிடம் கையேந்த வேண்டியதில்லை. மனிதனிடம் மனிதன் கேட்டு வாங்குவதற்கோ, கையேந்துவதற்கோ தேவை இல்லை. இயற்கையினுடைய அமைப்பு மனிதனை எல்லாம் வல்லவனாகவும், எல்லாம் உள்ளவனாகவும் வைத்து இருக்கிறது. அதைத் தெரிந்து கொள்ள வேண்டுமானால் உள்ளதை உணர வேண்டும். இயற்கையை உணர வேண்டும்".

வியாழன், 26 ஜூன், 2014

விண் துகளின் 'ஈர்ப்பு சக்தியும்' (Attractive force) - 'தள்ளும் சக்தியும்' (Repulsive force)"



 "நில உலகையும், சூரியனையும் நினைத்துக் கொள்வோம். ஒவ்வொன்றும் விண்துகளால் ஆக்கப் பெற்றவைதான். அதனால் அவை சுழன்று கொண்டே இருக்கின்றன. பிரபஞ்சத்தின் எல்லா இயக்கச் சக்திகளுக்கும் மூலமாக இருக்கிற ஒரு காரண சக்திதான் ( The Source of all the Forces - called as The Divine Power) "இறைவெளி". அது பிரபஞ்சத்தின்... எல்லா இயக்கங்களுக்கும், ஆற்றலைத் தொடர்ந்து அளித்துக் கொண்டே இருக்கிறது. இதுவே ஈர்ப்பு ஆற்றலாகவும், எல்லாப் பொருள்களிலும் அமைந்திருக்கிறது. அதுவே உயிரினங்களின் கருமையத்திலும் அமைந்திருக்கிறது. இத்தகைய ஈர்ப்புச் சக்திக்கு ஈடுகொடுக்கவும், பிரபஞ்சத்தின் எல்லா இயக்கங்களையும் முடுக்கி விடவும் ஏற்ற எழுச்சியும், அதாவது தள்ளல் சக்தியும் விண் துகள்களிலே இருக்கிறது. விண் துகளின் ஈர்ப்பு மையமாக உள்ள அறிவானது, மிகச் சிறிய விண்துகள் முதல் மிகப் பெரிய சூரியன் வரை, ஒவ்வொரு இயக்கத்தின் ஊடேயும் இயக்க ஒழுங்காக (Pattern, Precision, Regularity) அமைந்து, ஒவ்வொரு இயக்கத்தையும் முறையாக நடத்துகிறது. அதுவே அறிவு (Consciousness) எனவும் மதிக்கப்படுகிறது".



- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

புதன், 25 ஜூன், 2014

தற்சோதனைக்கான ஐந்து பயிற்சிகள்



1) எண்ணம் ஆராய்தல்
2) ஆசைச் சீரமைத்தல்
3) சினம் தவிர்த்தல்
4) கவலை ஒழித்தல்
5) நான் யார்?

ஆறாவது அறிவைக் கொண்ட இந்த மனித வாழ்வின் நோக்கம், அறிவு முழுமை பெற வேண்டும். இயற்கையின் முழுமையை உணர வேண்டும், எந்தச் சக்தியிலிருந்து நாம் தோன்றி, வந்து, இயங்கிக் கொண்டிருக்கிறோமோ அந்த அடிப்படையை மனதால் உணர்ந்து அதோடு லயமாகி இணைந்து கொள்ள வேண்டும் என்பதேயாகும். இதுதான் பிற...வியின் நோக்கம் (This and this alone is the purpose of life). போனபோக்கிலே, பழக்கத்தின் வழியே நாம் சிக்கி, தேவை, பழக்கம், சூழ்நிலையின் கட்டாயம் (நிர்பந்தம்) இந்த மூன்றினாலும் உந்தப்பட்டுச் செயல் செய்து கொண்டிருக்கிறோம். இவற்றிலிருந்து விளக்கம் பெற்று, விளக்கத்தின் வழியே நாம் வாழ்க்கையை மாற்றி அமைக்க வேண்டுமானால் உடனடியாக விளக்கம் வராது, பழக்கத்திலிருந்து உடனடியாக மாறிவிடவும் முடியாது. அதற்குத்தான் பழக்கத்திலிருந்து மனதை மாற்றியமைக்க - தற்சோதனை (அகத்தாய்வு) குண்டலினியோகம் (தியானம்) என்கிற முறையான பயிற்சி வேண்டும்; விளக்கத்திலேயும் பயிற்சி வேண்டும். அப்படி விளங்கிக் கொண்டபிறகு நாம் எங்கே இருக்கிறோம், எங்கே போகவேண்டும், அதிலுள்ள வேறுபாடு, தூரம் என்ன என்பதை கணித்து, படிப்படியாக தன்னை மாற்றி உயர்த்தி அந்த இடத்தை அடைய வேண்டும். அப்படி உணர்ந்த வழியே திரும்பி உயர்ந்து அதுவாகவே மாறுவதும் தான் ஆன்மீக வாழ்வு.


- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

செவ்வாய், 24 ஜூன், 2014

Question : At the time of death, what is the best thought to keep in mind, so as not to disturb any individual or society after our own death, by attachment to people or individuals? Should we be praying for the welfare of all living beings, or try to go to "Thuriyatheeth (Samadhi)" state of meditation?



 Swamiji : One should try to go to 'Thuriyatheeth', become one with the Universal Being. To achieve this, one must practice detachment from all materials during the life-time; otherwise such thought will not come at the time of death. Such detachment will help the mind to expand easily. Unless there is detachment, the mind cannot expand and remain absorbed with the Universal Being.

திங்கள், 23 ஜூன், 2014

ஐயா, தங்களுடைய மனவளக்கலை புத்தகங்களைப் படித்தே தவம் செய்யலாமா

வேதாத்திரி மகரிஷி விடை:

செய்யக் கூடாது! தெளிந்த ஆசிரியரின் மூலமாக்த் தான் தவம் கற்றுக்கொள்ள வேண்டும். மேலும் நான் புத்தகங்களில் தவம் செய்யும் முறை பற்றி விலக்கவில்லையே! மனவளக்கலை மன்றங்களோடு தொடர்பு கொள்ளுங்கள், எளிதில் அகத்தவம் கற்றுக் கொடுப்பார்கள்.

ஞாயிறு, 22 ஜூன், 2014

மனையடி சாஸ்திரம் அவசியம்தானா?இதனுடைய தத்துவம் என்ன?"



மகரிஷியின் பதில்: " நான்கு சுவர்களை அமைக்கும்பொழுது அதற்குள் உண்டாகும் காந்தக்களம் மனிதனுக்கு நன்மை செய்வதாக அமைவதோ அல்லது தீமை விளைவிப்பதாக அமைவதோ உண்டு. என்ன நீள, அகல, உயரத்தில் அறை அமைந்தால் அதில் எவ்வாறு காந்தக்களம் அமையும், அந்தக் காந்தக் களத்தில் வாழும் மனிதர்களுக்கு என்னென்ன நன்மை, தீமைகள் எல்லாம் உண்டாகும் என்று கணக்கிட்டு அறிந்து கூறும் கலைதான் மனையடி சாஸ்திரம். அவ்வாறு நன்மை செய்யக்கூடிய ஒரு காந்தக் களத்தை அமைத்து அதில் வாழ்வது சிறப்பானதே".

சனி, 21 ஜூன், 2014

பஞ்சபூத நவகிரக தவம் பயன்கள்

1. எந்த பொருளுடனும், சக்தியோடும் இணைந்து பயன் பெறமுடிகிறது.
2. அந்த பொருள் சக்தியால் விளையக்கூடிய தீமைகளிலிருந்து காப்புப்பெற முடிகிறது.
3. அந்த பொருள், சக்தியை பற்றிய முழு விளக்கமும், தெளிவும் பெறமுடிகிறது.
4. உடலுக்கும், உயிருக்கும், ஊக்கமும் ஆக்கமும் நிறைவும் கிடைக்கிறது.
5. நவகிரகங்களிலிருந்து வீசும் கதிர்வீச்சுக்களினால் உண்டாகும் தீமையை பெரும்பாலும் குறைத்துக்கொள்ளலாம், தடுத்துக்கொள்ளவும் முடிகிறது.
6. தவத்தின் மூலம் இவற்றுடன் உயிர் கலப்பு பெறுவதால் மேன்மையே உண்டாகி வாழ்வில் எல்லா வளங்களும் நலன்களும், பயன்களும் பெற்று இனிமையுடன், வெற்றியுடனும், மகிழ்ச்சியுடனும் நிறைவுடனும் அமைதியுடனும் வாழ முடிகிறது.

- வேதாத்திரி மகரிஷி

வெள்ளி, 20 ஜூன், 2014

இயற்கையான காதல் என்பது எது?

அன்பர்களே ! நாம் சிந்தித்து பயன் பெற மகரிஷியின் விளக்கம்:

"காதல் காட்சிகளாகிய சினிமாப் படங்களை அடுத்தடுத்துப் பார்ப்பது கணவன் மனைவி உறவில் சலிப்பைத் தரும். காதல் காட்சியில் நடிக்கும் நட்சத்திரங்கள் இருவரும் பார்க்கும் ரசிகர்களுக்கு ஆணுக்குப் பெண்ணும், பெண்ணுக்கு ஆணும் உள்ளத்தில் மானசீகக் காதலர்களாக இடம் பெற்றுவிடுவார்கள். அடுத்தடுத்து அந்த மானசீகக் காதலியையோ, காதலனையோ பார்க்க வேண்டுமென்று அவர்களையும் அறியாமல் மனோவேகம் ரசிகர்களையும் இழுத்துச் செல்லும். பலர் உள்ளங்களைக் கவர்ந்து பணம் ஈட்ட வேண்டுமென்று பட அதிபர்கள் கூலிக்காக ஆண் பெண் இருவரையும் அமர்த்திக் கொள்ளுகிறார்கள்; நாணம் விட்டு நடிக்கச் செய்கிறார்கள். காதலர்களாக படக் காட்சியில் நடிக்கும் நடிகர்களுடைய கவர்ச்சியான உடைகளையும் நாணமற்ற முறைகளையும் அடிக்கடி பார்த்துப் பழகிக் கொண்ட குடும்பத்தவர்கள் தங்கள் வாழ்வில் இயல்பாக, உயர்வாக, ஒழுங்காக, அமைந்த காதல் இன்பத்தை விருப்பத்தோடு நுகர முடியாது. ஓட்டல்களில் தினமும் பலவிதமான ருசிகளையுடைய சிற்றுண்டிகளை உண்டு பழகி விட்டவர்கட்கு வீட்டுச் சிற்றுண்டி போதிய சுவை தருமா ? படக்காட்சிக் கவர்ச்சியிலும், மானசீகக் காதலர் உருவத்திலும் பல தடவை தன்னை மறந்து ஈடுபட்டு தன் உள்ளத்தில் வலுவேற்றிக் கொண்டவர்களுக்கு எவ்விதம் "இயற்கையான காதல்" நிறைவான இன்பத்தை அளிக்க முடியும் ?.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

வியாழன், 19 ஜூன், 2014

சைவ உணவு மனிதனுக்கு ஏற்றது என்கிறீர்கள். ஆனால் அசைவ உணவு உண்ணும் மேல்நாட்டு மனிதர்கள் தானே நம்மை விட மிகச் சிறந்த விஞ்ஞான ஆராச்சி எல்லாம் செய்கிறார்கள்?

மகரிஷியின் விடை:

ஆராய்ச்சி செய்து என்ன பயன் ? சைவ உணவு உண்ணும் இவர்கள் மெதுவாக மனிதர்களைக் கொன்றால் அசைவ உணவு உண்ணும் அவர்கள் ஒரே நேரத்தில் கோடிக் கணக்கில் மனிதர்களை கொல்ல ஆராய்ச்சி செய்கிறார்கள். அந்த விஞ்ஞான அறிவால் என்ன பயன் ...? அது மனித வாழ்விற்கான விஞ்ஞானம் இல்லையே. தானும் வாழவேண்டும் ; பிறரையும் வாழவிட வேண்டும் என்பது தான் மனிதனுக்கு ஏற்ற விஞ்ஞானமாகும். அது எங்கே வளர்ந்தது என்று பாருங்கள். அசைவ உணவு உண்ணும் மேலை நாடுகளின் சரித்திரத்தைப் பாருங்கள். அவ்வப் போது படை எடுத்து சிறிய நாடுகளை நசுக்கித் தன்னோடு சேர்த்துக் கொண்ட நாடுகள் தான் அவை. அவர்கள் பிறர் வாழப் பொறுக்க மாட்டார்கள். அதுவா மிகச் சிறந்த விஞ்ஞான ஆராய்ச்சி ?

புதன், 18 ஜூன், 2014

உயிர்ச் சக்தியின் பெருமை



உயிர்ச்சக்தியின் குறைவினாலேயே வலி, நோய், மரணம் ஆகியவை ஏற்படுகின்றன. ஆகவே, நாம் நலமாக இருக்க வேண்டுமானால் உயிர்ச்சக்தியை சரியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

உயிர்ச்சக்தி உடலிலே சரியாக இருக்க வேண்டுமானால், அதைத் தாங்கக் கூடிய சக்தி அதாவது வித்து சக்தியானது போதிய அளவிலேயும் போதிய அழுத்தத்துடனும் இருக்க வேண்டும். மின்சாரத்திற்கு மின்கலம் (battery) மாதிரி இருக்கக்கூடியது இந்த வித்து சக்தி. அதையே ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி சீவவித்துக்குழம்பு (sexual vital fluid) என்கிறோம். அதை நாம் எந்த அளவு பாதுகாத்து, எந்த அளவு சரியான முறையிலே நாம் வைத்துக் கொள்கிறோமோ அந்த அளவிலே உயிர்ச் சக்தியும் இருக்கும். (the quantity and quality of the life force is what the quantity and quality of sexual vital fluid).

உயிர்ச்சக்தியும், வித்துச் சக்தியும் எவ்வளவில் இருக்கின்றதோ, அது போலவே வாழ்க்கையின் உடல்நலம், மனநலம் அமையும்.

செவ்வாய், 17 ஜூன், 2014

மெய்யுணர்வு



Intuition என்பது நீ பேசாதபோது இறைவன் பேசிக்கொண்டிருக்கிறான் என்பார்கள். நீங்கள் வளவள என்று பேசிக் கொண்டே இருந்தால் அங்கே உள்ளேயிருந்து வரக் கூடிய நுண்மையான விளக்கமோ அல்லது அறிவிரையோ எப்படித் தெரியும்? டமாரம் அடிக்கிற சத்தம் கேட்டுக் கொண்டிருந்தால் ஒருவர் பேசுவது நமக்கு காது கேட்பதில்லையல்லவா? அது போல, ஐயுணர்வைக் கட்டுப்படுத்தி, ஒழுங்குபடுத்தி, முறைப்படுத்தி திட்டமிட்டு ஒரு அளவில் வைத்துக் கொள்வோமேயானால் அங்கு தான் மெய்யுணர்வு ஏற்படும்.

திங்கள், 16 ஜூன், 2014

தாலியின் தத்துவம்


தொடக்கத்தில் மனிதன் மலையிலேதான் வாழ்ந்து வந்தான். மலை கரைந்து காடாகி, காடு சமவெளியாகி, பயிரிடக் கூடிய நிலமாகியது. இப்படிக் குறிஞ்சி, முல்லை, மருதம் என்று முன்று நிலமாகியது. மலையில் வாழும் ஆண்மகன் திருமணம் செய்ய வேண்டுமென்றால் அந்தப் பெண்ணைப் பாதுகாக்கக்கூடிய உடல் வலிவு இருக்கிறதா என்று கண்டுபிடிக்க ஒருமுறை வைத்தார்கள். கொடிய விலங்கு ஒன்றை வென்று அதனுடைய 'பல்' ஒன்றைக் காண்பித்து சான்றிதழ் வாங்க வேண்டும். அவ்வாறு கொண்டு வந்து காண்பித்த பல்லிலே ஒரு கயிற்றைக் கட்டி, பெண்ணின் கழுத்தில் தாலியாகக் கட்டுவது என்றாகியது. இப்போது புலிப் பல் தேடும் காலம் போய் புலிப்பல்லைப் போலவே இரண்டு நாக்கு வைத்து தங்கத்தால் செய்த ஒரு சின்னத்தைக் கட்டலாயினர். இதைத் தான் இப்பொழுது தாலி என வழங்குகிறோம்.

வடநாட்டுத் தாலி எப்படி என்றால் யுத்தங்கள் அதிகமாக இருந்ததால் கலவரத்தில் பெண்களைச் சூறையாடும் வெறி இருந்தது. பெண்கள் தங்கள் உயிரை மாய்த்துக் கொள்ள வசதியாகத் தாலியின் உள்ளே 'விஷம்' வைத்து வாய்க்கு எட்டும் தூரத்தில் தொங்க விட்டார்கள். பிற்காலத்தில் கணவன் மனைவிக்குள் பிணக்கு சச்சரவு வரும் போது சாப்பிட ஆரம்பித்ததால், விஷம் நிறுத்தப் பட்டு, அரக்கு வைக்கப்படுகிறது.

இப்படி சடங்குகளை அலசிப் பார்க்கும் பொழுது ஒவ்வொரு கால கட்டத்தில் அவசியமானதென்று தெரிய வருகிறது. தற்காலத்திற்கு தேவையில்லையெனில் அவற்றை தள்ளிவிட்டு மனித சமுதாயம் முன்னேற வேண்டும். அதற்கு விரோத மனப்பான்மை எழாத விதத்திலே சமுதாயத்தோடு ஒத்தும் கலந்தும் இளைஞர்கள் செயலாற்ற வேண்டும்.

ஞாயிறு, 15 ஜூன், 2014

கேள்வி: சுவாமிஜி! பதினெட்டு மாதக் குழந்தையின் வயிற்றுக்குள் 9 மாதக் கரு இருந்ததாக செய்தி வந்தது. இது சாத்தியமாகுமா?


வேதாத்திரி மகரிஷி பதில்:
கருவுற்ற ஐந்து மாதத்திற்குப் பிறகு ஆண், பெண் உறவு கூடாது. இதைப் பற்றிய கல்வி பலருக்குத் தெரிவதில்லை. அதற்காக முற்காலத்தில் பெரியவர்கள் சில சடங்கு முறைகளை வைத்திருந்தார்கள். மனைவிக்கு ஐந்து மாத கர்ப்பம் என்றால் கணவன் தாடி வைத்துக் கொள்ள வேண்டும். பெண்ணைத் தாய்வீட்டிற்கு அழைத்துச் சென்று விடுவார்கள். அதாவது கணவனுக்கு அக்காலம் சன்னியாசம் ஆகும். இப்பொழுது தாடி வைத்துக் கொண்டு அலுவலகம் செல்ல முடியாது. எனவே அந்தப் பழக்கம் போய்விட்டது.
சமுதாயத்தில் பண்பாட்டு வழிவந்த உண்மை என்ன வென்றால், ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மேல் உடலுறவு கொண்டால் கருவிலுள்ள குழந்தைக்கு அதிர்ச்சி ஏற்படும். இதன் விளைவாக ஊனமுற்ற குழந்தை பிறக்கலாம். கர்ப்பப்பைக்குப் பலவீனம் ஏற்படும். விந்து சக்தி ஜீரணமாக முடியாது. அத்தகைய ஆற்றல் பெற்றது விந்தணுக்கள். அவை தாய் வயிற்றில் தேங்கியிருந்து கருவாகி, அக்கரு நகர்ந்து சென்று கருப்பையில் வளர்ந்து வரும் குழந்தையின் கருப்பைக்குள் தங்கிவிட்டால், அங்கு அது முளைத்துவிடும். அரிதாக இவ்வாறு நடந்து இருக்கும். எனவே பண்பாட்டு வழிவந்த ஆண், பெண் உறவுக்கல்வி அனைவருக்கும் வேண்டும் என்பது விளங்குகிறது.

கேள்வி : மகரிஷி அவர்களே! முன் ஏழு பிறவி, பின் ஏழு பிறவிகள் என்று சொல்கிறார்களே, அதன் பொருள் என்ன?


பதில் : பிறவிகள் ஏழு மட்டும் என்பதல்ல. அவை பெருங்கடலாக நீளும். செயல்பதிவு அல்லது வினைப்பதிவு என்பது ஒரு முறை நம்மிடம் பதிந்து விட்டதென்றால், அது மீண்டும் பிரதிபலிக்காமல் செயலிழக்கச் செய்ய ஏழு தலைமுறைகள் ஆகும்.
அதாவது, ஒரு தலைமுறை என்பது இருபது ஆண்டுகள் என்று வைத்துள்ளார்கள். ஒரு செயலின் பதிவுக்கு நூற்று நாற்பது ஆண்டுகள் வரை திரும்பத் திரும்பப் பிரதிலிக்கும் வேகம் உண்டு. ...அதன் பிறகு அது வான்காந்த ஆற்றலால் தானாகவே மறைந்துவிடும்.
இதில் எந்தத் தலைமுறையில் அந்தப் பதிவிற்குப் பிரதிபலிக்கும் வாய்ப்பைக் கொடுத்தாலும், அந்தப் பதிவைப் புதுப்பித்துக் கொண்டதாகும். அங்கிருந்து அது மேலும் ஏழு தலைமுறைகளுக்கு எழுச்சி வேகம் பெறும். அதனாலேயே, ஒரு செயலின் பதிவுக்கு ஏழு தலை முறைகளிலும் விளைவு வரும் என்பதை ஏழு பிறவிகள் என்று முன்னோர்கள் சொல்லி வைத் தார்கள்.
தனக்கு முன்பு தாய் தந்தை வழியாக ஏழு தலைமுறைகளில் பெற்ற பதிவை முன் ஏழு பிறவி என்றும், அப்பதிவுகள் புதுப்பிக்கப் பட்டாலோ அல்லது புதியன செய்தாலோ அவை மேலும் ஏழு தலை முறைகள் தொடரும் என்பதைப் பின் ஏழு பிறவிகள் என்றும் கொள்ள வேண்டும்.
அருள் தந்தை

சனி, 14 ஜூன், 2014

மனம் வெளுக்கும் மருந்து

நமது மனதின் பதிவுகளுக்குள்ளாக உள்ள நமக்குத் தேவையானது, தேவையில்லாதது எல்லாம் மௌனத்தில் ...உட்காரும் போது வெளியில் வரும். இதில் எது எது நமக்கு தேவையில்லாதது, துன்பம் செய்வது என்பதைத் தெரிந்து கொண்டு, அதயெல்லாம் குறித்துக் கொள்ளுங்கள்.
'இந்த இந்தச் செயலைத் திருத்திக் கொள்வேன், இவரது பேரில் விரோதம் இருக்கிறது, அது தேவைதானா? தேவையில்லை' எனக் கண்டு அவர்களை நினைக்கும் போதெல்லாம் வாழ்த்திக் கொண்டே இருந்தால் இரண்டு, மூன்று நாட்களுக்குள்ளாக அந்த விரோதமே இருக்காது.
அம்மாதிரியான எண்ணங்களால் ஏற்பட்டுள்ள பதிவுகள் எத்தனை வைத்திருக்கிறீர்களோ, அதை எல்லாம் எடுத்து வழித்து எரிந்து விட வேண்டும். அப்போது மனம் தூய்மையாக இருக்கும். மறுபடியும் அதே பதிவுகள் எண்ணத்தில் மேலோங்கி வந்தால், மறுபடியும் சங்கல்பங்களைப் போட்டு சரிப்படுத்திக் கொள்ளலாம்.
மனம் வெளுக்க மருந்து உண்டு :
வினைத்தூய்மை வேண்டும் என்று சொல்வார்கள். வினைத் தூய்மைக்கு முன்னதாக மனத்தூய்மை வேண்டும். மனதூய்மைக்கு மௌனத்தைவிட ஒரு சிறந்த பயிற்சி வேறு இல்லை.
எங்கே வேண்டுமானாலும் மழை பெய்யலாம். அந்த மழை எங்கே போய் நிற்கிறது என்று பாருங்கள். பள்ளம் எங்கே இருக்கிறதோ அங்கே போய்தான் அந்த மழை நீர் நிற்கும்.
மௌன காலங்களில் நாம் ஜீவகாந்தச் சக்தியை சேகரிக்கிறோம். செலவு செய்யாமல் மௌனத்தில் அப்படியே ஜீவகாந்த சக்தி சேருகிறது. அந்தச் சக்தி அழுத்தம் பெறும்போது உடலுக்குள்ளாகவே தேங்கி நிலைத்து நிற்கும்.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

 * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *

.
"அனைத்தையும் கற்பதற்கும், கற்றபடி வாழ்ந்து பயன்
பெறுவதற்கும் மனிதனிடம் போதியஅறிவு அமைந்துள்ளது".
.

"இயற்கையையும் கற்பனையையும்
சிந்தித்து அறிபவன் சிறப்பாக வாழ்வான்".
.

"வேண்டியதற்கு படிகட்டி, வேண்டாததை வடிகட்டும் எண்ணமே
உள்மன அமைதிக்கு உரம்".
.

மோனம்
விளக்கமும் - பழக்கமும் :

"பேசா நோன் பாற்றுங்கால் அறிவு தன்னைப்
பழக்கங்கள் எவ்வாறு வலுவாய் மோதி
பேசா நோன்பைக் களைத்துப் பேசவைக்கப்
பெரும் போரை நடத்துகின்றதென உணர்வோம்;
பேசா நோன்பு இயற்கைக்கும் உயிர்க்கும் உள்ள
பிணைப்பை நன்குணர்ந்திட ஓர் நல்வாய்ப்பாகும்;
பேசா நோன் பென்பது வாய் மூடல் அல்ல
பெரியமறை பொருள் மனதை அறியும் ஆய்வே".
.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

வெள்ளி, 13 ஜூன், 2014

வினா: சுவாமிஜி, தாங்கள் சித்தி பெற்று இருப்பது தங்களின் தவ வலிமை அல்லது ஊழ் அல்லாமல் வேறொன்றுமில்லை என்று கருதுகிறேன். மற்றவர்களும் தங்களைப் போல் சித்தி பெறுவது அரிதாகும் என்பது எனது தாழ்மையான எண்ணம்?

வேதாத்திரி மகரிஷியின் விடை:
அன்பரே, ஊழ் என்பது முன்பிறவியில் செய்த வினை அல்லது பழவினை என்பதாகும்.

தவவலிமை என்பது இப்பிறவியில் முயற்சி செய்து பெற்ற உயிர்த்தூய்மை என்பதாகும்.
தவ வலிமையால் நான் உயர்ந்துள்ளதாக நீங்கள் ஒப்புக் கொண்டால் இப்பிறவியில் நீங்கள் செய்யும் தவப்பயிற்சி வரும் பிறவியில் உங்கள் குழந்தைகளுக்கு ஊழ் வினையாக நலம் தராதா?
உங்கள் வினாவிலேயே விடையும் உள்ளதே!
 

புதன், 11 ஜூன், 2014

பழக்கத்தால் எண்ணம்



ஒரு செயலில் மனமானது பழகி விட்டால் மீண்டும் தேவை இல்லாதபோது கூட அதையே நாடுகிறது. இது பழக்கத்தால் தோன்றும் எண்ணம்.

தினசரி செய்தித்தாள் படிப்பது ஒரு பழக்கம். ஒரு நாள் செய்தித்தாள் வரத் தாமதமாகி விட்டால் மற்றப் பணிகளை மறந்து அதே நினைவாகச் செய்திதாளுக்காகக் காத்துக் கொண்டு இருப்பது பழக்கத்தால் தோன்றும் எண்ணமாகும்.

தேர்வுக்காகப் படிக்கும் காலங்களிலும் தொலைக்காட்சித் தொடரை விடாமல் பார்க்க வேண்டும் என்பதும் பழக்கத்தின் காரணமாகும்.

தினமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் உணவு உண்டு பழகியவர்கள் அந்தக் குறிப்பிட்ட நேரத்தில் தினமும் மணியைப் பார்த்தவுடனே பசி இல்லாவிட்டாலும் கூட சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் எழுவது பழக்கத்தின் காரணமாகும்.

இவற்றை அனுமதிக்கலாமா? நிறைவு செய்யலாமா? விளைவு என்னவாகும்? என்று ஆராய்ந்து பார்த்துச் சரியான முடிவு எடுக்க வேண்டும்.
                                                                                                                 -வேதாத்திரி மகரிஷி,

செவ்வாய், 10 ஜூன், 2014

கோள்களும் நமது உடலும்



 சூரியனிலிருந்து வருகின்ற அலை எலும்புகளோடும், புதன் தோல் மீதும், வெள்ளி சீவ வித்து சக்தியோடும், சந்திரன் ரத்த ஓட்டத்தோடும், செவ்வாய் எலும்பிலுள்ள மஜ்ஜையோடும், சனி மூளை செல்களோடும், சனி நரம்புகளோடும், இராகு-கேது மனத்தோடும் தொடர்பு கொள்கின்றன என்று முன்னோர்கள் கண்டுபிடித்துள்ளார்கள்.

இராகு, கேது காந்த அலை வீச்சால் சூரிய ஒளி, சந்திர ஒளி பாதிக்கப்படும் பொழுது நம் உடலில் உள்ள இரசாயனமும் வேறுபடும். அந்த மாறுதல் ஏற்படும் போது நமது உணவு செரிமானம் குறைவாக இருக்கிறது. அந்த நேரத்தில் தெய்விக நினைப்பு அல்லது வேறு ஏதாவது சங்கற்பம் செய்வதே நல்லது. அப்படி இல்லாமல் விருப்பம் போல் நடக்கின்ற போது உடலுறவு கொள்ள நேரிடும். அந்த நேரத்தில் உருவாகும் குழந்தை கேடுற்ற உடலுல், மனமும் உடையனவாக இருக்கக் கூடும் என்பதை நாமே யூகித்துக் கொள்ளலாம். ஆகவே இத்தகு விபத்துக்களைத் தடுப்பதற்காகவே அந்த நாட்களையும் நேரத்தையும் விரத நாட்களாக முன்னோர்கள் ஆக்கி வைத்திருக்கின்றார்கள்.

கிரகண நேரத்தில் சாப்பிடாமல் இருப்பது நல்லது. இதனால் உடலினுடைய சக்தி அழிவு இல்லாமல் நோய் எதிர்ப்புச் சக்தி (immunity) அப்படியே காப்பற்றப்படும். கிரகணம் முடிந்து குளிப்பது என்பது எப்பொழுதும் குளிப்பது போல தான். அப்பொழுது குளிக்காமல் போனால் ஒன்றும் கெடுதல் இல்லை. தூய்மை வேண்டும் என்று நினைக்கும்போது எதற்குமே குளித்து விட்டுச் செய்வது ஒரு சடங்கு தான்.                                                    -வேதாத்திரி மகரிஷி,

திங்கள், 9 ஜூன், 2014

கடமை உணர்வு



 நாம் பிறந்தோம். 15 ஆண்டுகள் வரையில் எப்படி வாழ்ந்தோம். சமுதாயத்திலிருந்து ஒரு பெருமளவு பொருளாதாரத்தைப் பெற்றுக் கொண்டு தான் வளர்ந்து வந்துள்ளோம். அவ்வாறு பெற்றுக் கொண்டதால் கடன்பட்டவர்கள் தானே நாம். இத்தனையும் அனுபவித்து அனுபோகித்த பிறகு ஏதேனும் திருப்பித் தந்தோமா? பிறந்த போது ஏதேனும் கொண்டு வந்தோமா கொடுப்பதற்கு? இல்லையே. ஆகவே சமுதாயம் தந்தது தான் எல்லாம். இந்த உடலும் உட்பட.
எனவே சமுதாயத்திற்கு நாம் கடன் பட்டிருக்கிறோம். இந்தக் கடனைத் தீர்ப்பது எப்படி?

உடல் வளர்ச்சி பெற்ற பின்னர், அறிவு வளர்ச்சி பெற்றபின் அதே அறிவைக் கொண்டு, வலுவைக் கொண்டு இந்த சமுதாய்த்திற்கு எந்தெந்த அளவிலே நன்மை செய்ய முடியமோ அதை உணர்ந்து நலம் தரத்தக்க வழியிலே செயல் படுத்த வேண்டுமென்று கடனைத் திருப்பித் தர வேண்டும் என்ற நீதி உணர்வு, அந்த நீதி உணர்வை ஒட்டிய செயல், அந்தச் செயலிலே வரக் கூடிய நல்விளைவு, சிந்தனை, அனுபவங்கள், இதைத்தான் 'கடமை உணர்வு' என்கிறோம்.                                                                           
                                                                                                              -வேதாத்திரி மகரிஷி,

ஞாயிறு, 8 ஜூன், 2014

குணங்கள்



 தேவையும் பழக்கமும் சூழ்நிலைகளும் உணர்ச்சிகளைத் தூண்டுகின்றன. அனுபவ நினைவுகளும் சிந்தனையும் தெளிவும் அளிக்கின்ற நல்ல முடிவைக் கொண்டு உணர்ச்சிகளை ஒழுங்குபடுத்திக் கொள்கின்ற திறனே 'அறிவு' எனப்படும்.

உணர்ச்சிகளால் அறிவு மயங்கித் தனது நிலை மறந்து செயலாற்றினால் அதனை 'மயக்கம்' அல்லது 'மாயை' என்கிறோம். இந்த நிலையில் தான் பொய், களவு, கொலை, சூது, கற்பழிப்பு என்ற ஐம்பெரும் பழிச்செயல்களும் பேராசை, சினம், கடும்பற்று, உயர்வு தாழ்வு மனப்பான்மை, முறையற்ற பால் கவர்ச்சி, வஞ்சம் ஆகிய ஆறுகுணங்களும் விளைகின்றன.

எனவே எண்ணத்தை அடிக்கடி ஆய்ந்து ஒழுங்குபடுத்துவது அவசியமானதாகும்.
                                                                                                                      -வேதாத்திரி மகரிஷி.

சனி, 7 ஜூன், 2014

அறநெறி



 மிருகங்களைப் போலல்லாது ஒவ்வொரு பொருளுக்கும் சில பல மாற்றங்களைச் செயற்கையாகக் கொடுத்தும், ஏன் கலையழகு கொடுத்தும்கூட, மனிதன் உபயோகிக்க கற்றுக் கொண்டான், பழகிக் கொண்டான். இந்நிலையில் குழப்பம் விளையாமல் இருக்கவும், தீமைகள் தோன்றாமலும், பெருகாமலும் இருக்கவும், மிருகங்களுக்குத் தேவைப்படாத ஒன்று மனிதனுக்குத் தேவைப்படுகிறது. அது தான் அறநெறி. அந்த அறநெறி தான் மனித குலத்தையே காத்து வருகிறது. இந்த அறநெறி அழியாமல் பாதுகாக்க எழுந்தவையே இன்று உலகிலுள்ள மதங்கள் எல்லாம். அவை (1) ஒழுக்கம் (2) கடமை (3) ஈகை என்பனவாகும்.
-வேதாத்திரி மகரிஷி

வெள்ளி, 6 ஜூன், 2014

பஞ்சாங்கம்


 பஞ்சாங்கம் மனிதன் எடுக்கின்ற காரியத்தை வெற்றிகரமாக முடிக்க இயற்கையின் துணையை நாடுதல், பழக்கத்திலிருந்து வருகிறது. தமக்கு ஏற்ற கோள்களின் நிலைகளிலிருந்து நன்மையே கிடைக்கின்ற காலத்தைக் கணிக்கவே, வாரம், நட்சத்திரம், திதி, யோகம், கிரகணம் என்ற பஞ்ச(ஐந்து) அங்கங்களையும் பார்க்கின்ற பழக்கத்தை வைத்தார்கள். இந்த விஞ்ஞான காலத்தில் இவ்வளவையும் பொருத்திப் பார்க்கவே முடியாது. கப்பலும், விமானமும், புகை வண்டியும் நாள், நேரம் பார்த்துப் புறப்பட முடியுமா? காலத்தால் இத்தகைய நம்பிக்கைகள் கரைந்து போகும்.
                                                                                                                        -வேதாத்திரி மகரிஷி,

வியாழன், 5 ஜூன், 2014

மனமும் எண்ணமும்



 மனம் என்கிறோம், எண்ணம் என்கிறோம், இரண்டும் ஒன்றே தான். ஆனால் ஏன் அதை எண்ணம் என்று சொல்கின்றோமென்றால் மனம் இயங்கும் போது நான்கு வகைக் கணிப்பாக இயங்குகின்றது - காலமாக, தூரமாக, பருமனாக, வேகமாக. எந்த இயக்கத்திலே, எந்தப் பொருளைப் பற்றி, நினைத்தாலும் காலம், தூரம், பருமன், வேகம் என்ற நான்கு பரிமாணத்திலே தான் மனம் இயங்குகின்றது. இந்த நான்கு பரிமாணத்தைக் கணக்கிடுவதாலே, *கணக்கிடுதல்* என்ற சொல் எண்ணுதல் என்று வந்து, அந்த எண்ணுதலிருந்து எண்ணம் என்பதாகவே வந்தது. ஆகையினாலே மனத்துக்கு எண்ணம் என்ற பெயரும் உண்டாயிற்று.
                                                                                                           -வேதாத்திரி மகரிஷி,

புதன், 4 ஜூன், 2014

மாசு நீங்கல்



மனம் மெய்ப்பொருள் தான். ஆதியும் மெய்ப்பொருள் தான். ஆனால் மெய்ப்பொருள் குளத்து நீர் என்றால், மனம் அதில் முகந்த ஒரு குவளை நீர். குவளை நீரில் மாசு படிந்து விடுகிறது. அதைக் குளத்தில் கொட்டி விடுகிறோம். அக்குளத்து நீருக்கு அதனால் மாசு வந்து விடுவதில்லை. அதே குளத்தில் இன்னொரு குவளை நீர் முகந்து கொள்கிறோம். அது போலவே யோகத்திலும் மனமாகிய மாசடைந்த மெய்ப்பொருளை அகண்டாகார மெய்ப்பொருளில் சேர்த்து விடுகிறோம். மனத்தின் மாசு சூனியத்தில் கலந்து சூன்யமாகி விடும். எவ்வளவு பூரணமாகச் சேர்க்கிறோம் என்பதில் தான் துரியாதீதத்தின் வெற்றியும் மன மாசு நீங்கலின் முழுமையும் இருக்கிறது.

                                                                                                                      -வேதாத்திரி மகரிஷி.

செவ்வாய், 3 ஜூன், 2014

மறைபொருள் நம் உள்ளே :


ஒரு பெரிய செல்வந்தர் புகைவண்டியில் முதல் வகுப்புப் பெட்டியில் பயணம் செய்வதற்குப் பதிவு செய்து இருந்தார். அவர் நிறையப் பணம் எடுத்துச் செல்வதை அறிந்த மற்றொருவர் (திருட வந்தவர்), அதே நாளில் அதே பெட்டிக்குப் பதிவு செய்து கொண்டார். அந்த நாளில் இருவரும் பயணம் செய்தார்கள். அப்பொழுது பணக்காரர் தன் பையில் இருந்த பணத்தை எடுத்து எண்ணிப் பார்த்தார். எதிரில் இருந்தவர், பணக்காரர் பணம் எண்ணுவதற்குத் தடையாக இருக்கக் கூடாது, எல்லாப் பணத்தையும் வெளியில் எடுத்து எண்ணட்...டும் என்று பாத்ரூமுக்குள் போய் இருந்து கொண்டார். அதன்பிறகு வந்தார். சிறிது நேரம் கழித்து பணத்தை எண்ணிய பணக்காரர் பாத்ரூம் போனார். அதன்பிறகு சிறிது நேரம் கழித்து பணக்காரர் பாத்ரூமிலிருந்து வந்தார். மீண்டும் மறுமுறை பணத்தை எடுத்து எண்ணினார். உடனே, மற்றவர் (திருட வந்தவர்) மீண்டும் உள்ளே போய் விட்டு பிறகு வந்தார். அதன் பின் மீண்டும் பணக்காரர் பாத்ரூம் போனார். உடனே, அந்த சமயம் பார்த்து வெளியில் இருந்தவர் (திருட வந்தவர்) பணக்காரருடைய பணத்தை, அவரது பெட்டி, அவரது தலையணை மற்றும் அவர் உடைமைகள் அனைத்திலும் தேடினார். எங்குமே கிடைக்கவேயில்லை. அப்போது பாத்ரூம் உள்ளே போயிருந்த பணக்காரர் மீண்டும் வெளியே வந்து தனது இருக்கையில் அமர்ந்தார். பொழுது விடிகின்ற நேரம், இருவரும் புறப்படும் சமயம், மறுபடியும் பணக்காரர் பணத்தை எடுத்து எண்ணிப்பார்த்தார்.
அதற்கு மற்றவர் (திருட வந்தவர்), "நீங்கள் பணத்தை எங்கு வைத்து இருந்தீர்கள்?" என்றார். ஏன் கேட்கிறீர்கள்? என்று கேட்டார் பணக்காரர். நீங்கள் பலமுறை பணத்தை எண்ணியதை பார்த்தேன். உண்மையில் நான் ஒரு திருடன். அதை எடுக்கத்தான் வந்தேன். நீங்கள் பாத்ரூம் உள்ளே போய் இருந்த பொழுது பணத்தைத் தேடிப் பார்த்தேன் கிடைக்கவே இல்லை" என்றார்.
அதற்கு அந்த பணக்காரர், உன்னைப் பற்றி எனக்கு நன்றாகத் தெரியும், நீ திருடன் என்று. அதனால் "என் தலையணைக்கு அடியில் வைத்தால் ஆபத்து என்று, பணத்தை உன் தலையணைக்குக் கீழே தான் வைத்திருந்தேன்" என்றார் பணக்காரர். அதே போல எல்லாமவல்ல "இறைநிலை" இரகசியமான பொருட்களை நமக்குள்ளேயே தான் வைத்திருக்கிறான்.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

திங்கள், 2 ஜூன், 2014

அமைதியும் இனிமையும் வெற்றியும் வாழ்க்கையில் கிட்ட

 
சீவகாந்தம் என்பதையும், கருமையம் என்பதையும் ஒருவர் நன்றாக விளங்கிக் கொண்டால், அவரால் ஆழ்ந்த மெய்யுணர்வு நிலைக்குச் செல்ல முடியும். அத்தகைய அறிவு விளக்கம் ஒருவருக்குக் கிட்டிவிடுமானால், வாழ்க்கைக்கு அடிப்படை நிதிகளாக உள்ள, உள்ளுணர்வு அனுபவங்களாகிய, பிரபஞ்ச ஒருங்கிணைப்பு ஆற்றல், உயிர்ச்சக்தி மற்றும் காந்த ஆற்றல் இவற்றைப் பற்றித் தெளிவாக அவரால் விளங்கிக் கொள்ள முடியும். தொடர்ந்து இடைவிடாத அகநோக்குப்... பயிற்சியாகிய மனப்பயிற்சி (kundalini yoga Meditation) மூலம் இவற்றைப் பற்றி ஒருவர் தனக்குள்ளேயே தெளிவாக் உணர்ந்து கொள்ள முடியும். அத்தகைய உணர்வு ஒருவருக்கு ஏற்படுமானால் புலன்கள் மூலமாக ஏற்படும் மயக்க நிலையை அவர் கடந்து விட முடியும். அப்போது உண்மையானதும், உயர்ந்ததும், தெய்வீகமானதுமான அன்பும், கருணையும் அவருடைய இயல்பான தன்மைகளாக மலரும். அதன் விளைவாக அமைதியும் இனிமையும் வெற்றியும் வாழ்க்கையில் கிட்டும்.

- தத்துவஞானி வேதத்திரி மகரிஷி.