நான் தவறுகள் செய்கிறோம் . செய்த தவறுகளே துன்பமாக முளைக்கின்றன. இதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். இந்த அறிவு வந்த பின் இனித் துன்பம் வராமல் இருக்க வேண்டுமாளால் இனியேனும் தவறு செய்யாமல் இருக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு வர வேண்டும். பொதுவாக நாம் செய்யும் தவறுகள் நமக்குத் தெரிவதில்லை. பெரும்பாலும் பழக்கத்தின் காரணமாகவே தவறுகள் செய்யப்படுகின்றன.
சூழ்நிலை நிப்பந்தத்தால்ச...ெய்யப்படும் தவறுகளும் மிகுதியே. புலன் கவர்ச்சியிலே இருக்கும் போதும் சூழ்நிலைக் கவர்ச்சியிலே நிற்கும் போதும் , பழக்கத்தின் அழுத்தத்தால் உந்தப்பட்டுச் செயலாற்றும்போதும், தவறுகள் தெரிவதில்லை. அதனால் மேலும் மேலும் புலன் கவர்ச்சியில் சிக்கிக் கொள்கிறோம் . மேலும் மேலும் சூழ்நிலைக் கவர்ச்சிக்கு ஆளாகிறோம். மேலும் மேலும் தவறிழைத்து , மேலும் மேலும் துன்பத்தையே சந்தித்துக் கொண்டிருக்கிறோம்.
இதனால் வந்த வேலை பிறவியின் நோக்கம் மறந்து போகிறது. காமம், குரோதம் முதலான ஆறு தீய குணங்கள் வளர்ந்து கொண்டே போகின்றன. விளைவாக ஐந்து பெரும் பழிச்செயல்கள் நாளுக்கு நாள் பெருகிவருவதைப் பார்க்கிறோம். இறைவனைப் பற்றிய எண்ணம் மறைத்து வருகிறது. இந்நிலை மாற வேண்டுமானால்.தகுந்த மனோ பயிற்சியின்றி முடியவே முடியாது .
ஏனெனில் தவறிழைப்பதும் மனம் .இனித் தவறு செய்யக் கூடாது என்று தீர்மானிப்பதும் அதே மனம் தான். தவறு செய்யாத வழியைத் தேர்ந்து ஒழுக வேண்டியதும் மனமே. மனதைப் பழைய நிலையிலே வைத்துக் கொண்டு புதிய வழியில் செல்ல எப்படி முடியும் .
--அருள்தந்தை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக