பதில் : ஒரு இரயில் பெட்டியில் ஏறுகின்றீர்கள், முதல் வகுப்புப் பயணியிடம் கேட்கின்றீர்கள். எங்க போறீங்க? என்று. அவர் போகுமிடத்தின் பெயர் சொல்லுகின்றார். எங்கே இருந்து போறீங்க? அவர் கிளம்பிய இடத்தைச் சொல்கின்றார...். கடைசி வகுப்புப் பயணியிடம் போகின்றீர்கள். அவரிடமும் அதே கேள்வி, அவர் விடை சொல்ல வரும் போது, அவரிடம் போய், கடைசி வகுப்புல தான போற, உனக்கு கிளம்புமிடம், போகுமிடம் தெரிஞ்சா என்ன? தெரியாட்டி என்ன? என்று சொன்னால்? நமது சமுதாயத்தின் பெரும் பகுதி 19ஆம் நூற்றாண்டின் இறுதி வரை இப்படித்தான் இருந்தது. ஒரு பிராமணரிடம் போய், தங்கள் பிறவி எங்கு செல்கின்றது? என்று கேட்டால், அவர் சொல்வார் பிரம்மம் நோக்கி என்று. உங்கள் பிறவி எங்கே துவங்கியது என்று கேட்டால் மிகச் சரியாய்ச் சொல்வார். பிரம்மத்திலிருந்து என்று. கடைசி வகுப்புப் பயணியாம், ஒரு 19ஆம் நூற்றாண்டு சூத்திரரை எடுத்துக் கொள்ளுங்கள். அவரிடம் போய்க் கேட்டுப் பாருங்கள், உங்கள் பிறவி துவங்கியது எங்கு என்று? அவர் சொல்வார், அது தெரிஞ்சி என்ன செய்யப் போறேன் என்று. எங்கு போகின்றது உங்கள் பிறவி என்று கேட்டால், அது மட்டும் தெரிஞ்சி என்ன பண்ணப் போறேன் என்று தான் விடை வரும். பிரம்ம ஞானம் என்பது புனிதம் எனும் பெயரில் பஜனை பாடி, மந்திரம் ஓதி, மூச்சை விட்டு விட்டு வயமாய் இழுக்கும் ஒரு குழுவினருக்கு மட்டுமே சொந்தமாய்ப் போனது, சமுதாயத்தின் இழிவு.
Revolution என்று சொல்லக் கேள்விப் பட்டிருப்பீர்கள். வேதாத்திரியம் எனும் ஓர் Revolution அதை அனைவருக்கும் எளிமைப்படுத்தி பொதுவுடமையாக்கல் முறைக்கு உட்படுத்தியது. பொதுவுடமை ஆக்கி விட்டோம், எப்படி அச்செய்தியை வெளிக் கொணர்வது? மஹான் கண்டு பிடித்தார் ஒரு எளிய முறையை. யாரை எல்லாம், தாழ்ந்தோரில்லை என்று அழைக்க விரும்பினோமோ அவர்களை எல்லாம் காந்தி 'ஹரி சனம்' அழைத்தது போன்று, எவர்க்கெல்லாம் பிரம்ம ஞானம் மறுக்கப் பட்டிருந்ததோ, மறைக்கப் பட்டிருந்ததோ, அவர்களுக்கு பிரம்மத்தின் சுவை தந்து, அவர்களை 'பிரம்ம ஞானி' என்று வழங்கினார். பிரம்ம ஞானம் பொதுவுடமை என்று உணர்த்தவே நாம் எல்லாம் பிரம்ம ஞானி என்று அழைக்கப் படலானோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக