Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

ஞாயிறு, 30 நவம்பர், 2014

How is it that even Yogis and realised persons are afflicted with severe ailments? Where is the justice in the Law of Nature when it does not spare a man from dreadful diseases, Even though he has completely surrendered all his abilities and services for the spiritual benefit of humanity?



 


Yogiraj   Vethathiri  Maharishi : 

Generally diseases are caused by neglect  or excessive indulgence beyond the capacity of the body or improper indulgence in food , work, sleep and sexual  gratification.



Some diseases may arise by natural disasters ,climatic differences and by the  assault  of other living beings. Apart from these, certain diseases may also appear by hereditary imprints and by curse . Nature has ensured that all people  are having immunity against  diseases to a certain extent  and this provides protection  and brings about cure automatically. When, however,  the intensity of disturbance causing  the disease exceeds the strength of immunity, the disease gets  aggravated and causes pain or even death .



Yogis, philosophers, realised persons and men of moral Consciousness develop a stronger immunity than ordinary people against diseases by increasing will-power, developing self awareness and conserving life-energy from unnecessary  wastages. They also moralise their deeds so as not to cause disturbance in the physical structure.



However even for Yogis, there do exist hereditary imprints - that is imprints at the time of birth itself. Also before coming to the path of true realization or perfection, all men would have committed some wrong deeds without knowing the Law of Action and Result. Even though holy men have developed greater immunity against disease, when the strength of the cause for disease exceeds the strength of immunity developed, they also have to suffer from those diseases. Thus, it would be clear that the justice of nature never fails.



Whether one is a holy person or an ordinary individual he has to accept the due award or punishment under the Law of Nature. With this explanation in mind,  please study the biographies of saints and holy men and you would see for yourself that the theory is valid.

சனி, 29 நவம்பர், 2014

சுவாமிஜி! உடலைவிட்ட மனித உயிர்கள் மற்ற ஐந்தறிவு விலங்கினங்களிடம் இணைய முடியுமா?



மகரிஷி:
ஒவ்வொரு உயரினத்துக்கும் துல்லியமான பண்புகள் உண்டு. அந்தந்த உயிரினம் (Species) ஒரு தனிப்பட்ட இயக்கம் (Species Action) ஆகும். அவை தோன்றி வந்த பரி...ணாம வளர்ச்சியில் ஒவ்வொன்றும் தனித்தன்மையை அடைந்துள்ளன.

பரிணாம உயர்வில், மேம்பட்ட ஓர் உயிரினம் (Higher Species) தாழ்ந்த நிலைக்குப் (Lower Species) போகவே முடியாது. அதனால் உடலைவிட்ட மனித உயிர்கள் ஐந்தறிவு உள்ள உயிரினங்களுடன் இணைவது சாத்தியமில்லை. பரிணாம வளர்ச்சியில் ஒத்த நிலையிலுள்ள இரண்டு தனித்தன்மை வாய்ந்த உயிர்கள் கூட ஒன்றாக இனைய முடியாது.

இரண்டு கருவும் ஒன்று சேர்த்தாலும், ஒன்றுக்கொன்று ஏற்றுக்கொள்ளும் ஒத்த தன்மை இருந்தால்தான் அவ்விரு உயிரினமும் இணைந்து ஒரு புதிய இனமாக மாற்றம் பெற முடியும்.

மரம், செடி, கொடிகளில் சிறிது பேதம் இருந்தாலும் ஒத்துக்கொள்ளும். ஆனால் உயிர் சீவன்கள் என்று வரும்போது பரிணமாத் தொடர் இரண்டிற்கும் ஒத்து இருக்க வேண்டும். (Species) என்ற வார்த்தைக்குத் தனிப்பட்ட தன்மையுடையது (Specific Action) என்று பொருள்.
 

வெள்ளி, 28 நவம்பர், 2014

Swamiji, it is said “Even a particle cannot move without His presence. He is the force behind every- thing!” If this is so, is God not the reason behind all human frailties? Why then should man be punished?

If a mechanical fault results in the failure of an electric fan or light, electricity cannot be blamed. It has to be repaired. In the same way Man is an instrument that functions through the Divine Power, where it is not possible to find out this power and punish Him for the human errors.
Only the instrument that is the result of a transformation of the Divine Power can be corrected. Imprints are formed in the genetic centre as a consequence of the actions and they reflect again and again as thoughts, leading to a repetition of the same actions.
The process undertaken by the Consciousness to correct this is called as punishment.
Punishment imposed on any individual is an act under the laws designed by thinkers to set right anything done contradictory to the laws of Nature or where an action can result in pain or suffering to self or the others

வியாழன், 27 நவம்பர், 2014

Vethathiri Maharishi quotes

You must understand the simple fact that no-one can harm another according to his whims fancies. Sufferings come to you under the law of cause-and-effect; and the person who causes the suffering is only agent of this Law.
If god is everywhere he is the one giving problem through others and he is the one solves it through us.
In this perspective there is no complaints. If enough spiritual awareness and intelligence is there it can be understood as a cause & effect and it can be peacefully accepted . it clears the cause out of the karmic cycle. Without accepting if we try to resist and overreact to the effects it's going to be karmic chain reactions. 
According to the developed characters in the body and mind, whatever waves emerge from the deeds, thoughts and experiences which are conflicting with the natural functioning order within and without, those waves result contamination of the genetic center.
Such contaminated imprints create problems and pains in life. Once they are imprinted and stored, they will persist for a long time, over several generations.
These undesirable imprints can be selectively neutralized by expiation, super imposition and dissolution. Everyone has the potential to do this by proper practice and moral behavior.
Man's poverty of knowledge renders him incapable & inadequate to cope with the richness of materials available. Man's mind goes beyond the realities & floats in imagination, deviating from the realities of nature. Instead of his needs prompting the search for materials, comforts & environments, the profusion of available materials induces the needs nowadays in human society. Only imaginary expectations bring all the troubles in life.
We are able to control the flood by building dams and storing the water & use it properly. Like a flood, the physical & mental forces of mankind are flowing in chaos without control or streamlining. The results are disturbances, problems, pains & miseries. We have to build a reservoir to store the valuable labor forces & intellectual forces of mankind so as not to go waste or astray. Also we have to channel them by proper planning in a creative way. Then only the fields of religion, health, economics, politics & science will do good to the people, maintaining their serenity & purpose. 

The causes for the miseries of mankind are, 1. Ignorance of the mode of evolvement of pain & pleasure 2. Ignorance of the law of nature. 3. Ignorance of the
social set up.
Three ways of life without miseries are 1.Conscious status.2. Divine status. 3. Virtuousness.

Knowledge gained regarding these three would pave the way for life without miseries. Learning through experiences in life & adopting virtues would result in peaceful, happy & wonderful life. 
Giving alms is considered charity by many & people go in search of beggars to offer alms on holy days. This is fallacious. Charity is giving to the needy, those in pain & suffering. Pressure cookers are provided with safety valves, which allow the excess steam to escape & prevent explosions. It is not proper for anyone who earns millions to keep all his wealth for himself ; he is likely to explode like the cooker, when his earnings go beyond a certain point. It was for this reason that acts of charity, which released some of the wealth to the needy, was advised by the seers of old...
One must value his own physical strength, knowledge, economical status, education, potential and environment & disperse his duties accordingly. He should maintain himself & then do good to his family, relatives, townsmen & the world. 
Knowledge comes from knowing; and knowing comes from perception, in terms of Volume, Force, Time & Distance. These four parameters form the dimensions of all the things in the perceptible universe. In the absence of the above parameters, things remain imperceptible. When perceptions turn inward & the presence of the Divine Consciousness within become evident, knowledge transforms into wisdom.
A bride while taking leave of her house says 'I am going to mother in law's house. After a year or so that has become 'my home' for her now What is the change in the psychology of the girl. Likewise, while in meditation, we are in direct & conscious communion with the Absolute, & in the process of time, confirmation arises in us that we are the Absolute, the Truth Perseverance leads to transformation and the gains are consolidated at this stage.
Magnet means all the objects in the Universe are joined together & control their functioning as if in a net. Since the divinity itself a fluid the magnet which is the part & parcel of the divinity is also a fluid. Magnetism is present in all the objects in the Universe right from the dust particle, we can say that there is no object in the Universe without magnetism.
As the natural evolutionary process, the face of the earth was changed by earth quakes, volcanos & floods. The human families were scattered to several parts of the world. There is really only one family of the human race. Now we are forgetting our own society, getting conflicts, hatred & fighting with one another individually & as group, dividing ourselves on the name of the country, race, religion, language & caste.
Specific Gravity: After the combination two energy particles it will became an element . With the element some more energy particles will go on adding continuously. In every object which rotates at a high speed naturally the energy particles with lesser speed will tend to move towards the centre and the weightless energy particles will move towards the surface .This process is known as specific gravity

புதன், 26 நவம்பர், 2014

Vethathiri Maharishi (Swamiji's) lecture on the concluding of Silence retreat (30th Nov. 2003):

All of you have linked your thoughts with Divinity and observed silence for several days. I wholeheartedly bless all of you; May this experience remain with you throughout your lives. May your family members and friends live in contentment and happiness.
Each human being should realize the truth. You all observed silence. You may have had lots of experiences. In silence thoughts are not brought into action. All day and night one has thoughts and the genetic center is always acting accordingly. In our body, the dust (ether) emits as waves. That is, due to repulsion it emits from the life force particles as waves and this is called bio-magnetism. Outside the body it is universal magnetism.
We experience the outside world through our senses and understand every perception through our minds. What is the base for the mind? We see waves in the sea. Waves are only the movement of water. When there is no movement it is only the sea. Similarly, when the wavering of the mind stops it is consciousness.
What is it? It is Almighty, God, which is present everywhere. The consciousness attains its perfection only in the human being. The Space is the stock-force and when it starts functioning it becomes the Universe. Due to its own self-compression the space starts spinning as quantized dust and. again due to the surrounding compression it is forced to group to become energy particles and these emit the constituent dust as waves. This wave is called magnetism.
So the mind is the biomagnetic wave. As everything else, the biomagnetic system is always under the influence of surrounding compression. All the experiences are stored in the genetic centre and these come as thoughts. From the first sense living being up to the sixth sense human being all the experiences are compressed and stored in the genetic centre. So the potential of the human being is enormous. When we trace our antecedents, going back from our parents, 
we reach the animals, then the plants and finally the dust. Where did dust come from? It came from the Space. In this way we all came from the space.
When we sit quietly we get many thoughts. In silence we have the time to analyse them. When we are having good thoughts we are happy physically and mentally. We have to avoid bad thoughts. What do we want in life? We need everyone’s friendship. So our thoughts should be always pure. Good thoughts will improve the welfare of the society. Negative thoughts will spoil the genetic centre and the society. With good thoughts life will be peaceful, happy and prosperous. Only in that state we can realize who am I? In silence we analyse our thoughts and avoid diversion and loss of awareness. When we avoid anger and moralise our desires only good thoughts remain. We can analyse each desire by asking a question, ‘Is it necessary to fullfil this desire?’ List out the desires
and analyse them. We need food, clothes, houses, friendship, etc. We have practical methods to introspect and analyze our thoughts.
Therefore, now and then list your thoughts and analyse them. Thoughts come from the genetic centre as water springs from a source. It is the centre for the physical, astral and magnetic bodies. Thought will cease only when we die. The body will decay but the genetic centre(soul) will continue. Previously, I used to keep silence for one month every year. When we reduce the unwanted thoughts, we become one with Almighty, God.
We realize that Space itself transformed in to dust, energy particles, elements, the cosmos and finally from one sense living being to six sense human being. For identification different names have been given but remembering the truth we can see God in everything. Consider the food you consume every day. It gets transformed into seven kinds of tissues. Who is doing this? None of us can do it. Only the Divine power is doing it. This miracle is happening in each and every body, every day. Everything is going on perfectly by the grace of God. It is all because and by the work of Almighty. So we should respect nature and every living being.
In Bhagavad Gita, it is said: “Those who see Me in each and everything, I will never leave; They will be always with Me”. If we realize this we will not give pain to others. When we follow this two-fold principle we can live happily. When one person derives happiness at another person’s cost, then he has to take many years to purify himself. When we follow these moral principles, they become habits and finally established culture. But we must be aware that the same old negative
thoughts will flare up to induce the same actions from time to time, again and again. This experience in silence will give you more strength to avoid unwanted thoughts. I respect all of you and see you as God and bless all of you with good health, long life, happiness and peace.

செவ்வாய், 25 நவம்பர், 2014

What is disease?

It is the absence of ease, “dis-ease”. When does it get hold of us? When some wrong acts on our part are done either in emotion or out of ignorance, the cellular harmony of our physical system is disturbed or disarranged and there is short-circuit of electrical energy at a spot or over an extended area. Is this not an imprint of action? This imprint is even transmitted to progeny through the seed-cell. Our method of Yoga is actually a process of purification... from such imprints.
Therapy, as you know, is of two kinds: curative and preventive. The latter is superior and it calls for forethought and awareness. Modern medicine is curative in approach fro the most part and it is often invasive in nature, with the result that every drug has its contra-indications and after-effects or reactions. Symptomatic relief is aimed at to start with, because in a high-pressure social set-up, patients are as much in a hurry as the doctors, and follow-up is thought of only when its is unavoidable.

திங்கள், 24 நவம்பர், 2014

Method of living

Our method of living should not cause any suffering to the body or mind of any person.
The divine law is such that Nature is never the cause of suffering ; only man creates all pains and miseries. Only the injustices perpetrated by mankind are responsible for all the suffering now prevailing in the world. Therefore, if every person decides to abide by this principle of not causing pain to anyone else, would society not live in peace?
+ Vethathiri Maharishi

வெள்ளி, 21 நவம்பர், 2014

ஞானாசிரியர்கள் பணி

எனது அன்னையார் ஊருக்காகவே வாழ்ந்தவர்கள். ஊருக்காகவே உழைத்தவர்கள். உடல் தளர்ந்த முதிய வயதிலும் கூட ஊருக்கு உழைப்பதிலே அவர்கள் ஓய்ந்ததில்லை. இரவு பகலாக உழைப்பார்க...ள். அவர்களால் நன்மை அடைந்தவர்கள் நேரிலே வந்து அவர்களைப் புகழ்வதையும் அனுதாபப்படுவதையும் நான் கேட்டிருக்கிறேன்.
"இந்த வயதிலே கூட, இரவு பகலாகக் கண்விழித்துக் கொண்டு 'இந்த வீட்டிலே உடல் நலமில்லாம்மல் இருக்கிறார்கள்... அந்த வீட்டிலே பிரசவமாக வேண்டும்...' என்றெல்லாம் ஓடுகிறீர்களே! படும்பாட்டுக்குக் காலணாக் காசும் வாங்குவதில்லை. என்ன பிரயோஜனம்? இப்படி ஓடாக இளைத்து வேறு போகிறீர்களே! இப்படி ஊருக்காகவே ஓடி ஓடி உழைப்பதைக் கொஞ்சம் குறைத்துக் கொள்ளக்கூடாதா?" என்று வருவோரெல்லாம் கேட்கும்போது பதிலாக அவர்கள் என்ன சொல்வார்கள் தெரியுமா?
"கண்ணு! எமன் இந்த உடம்பை எடுத்துக்கொண்டு போக வரும்போது எடை போட்டுப் பார்த்து 'குறைகிறதே! ஏன்?' என்றா கேட்கப் போகிறான்? உழைப்பினாலே அது ஓடாகிப் போனதால் அவனே ஒன்றும் வருத்தப்படப் போவதில்லை. நாம் ஏன் நம் உடம்பைப் பற்றியெல்லாம் கவலைப்பட்டுக் கொண்டிருக்க வேண்டும்?"
இந்த சொற்களில் எவ்வளவு ஆழம் இருக்கிறது என்று ஞானாசிரியர்கள் சிந்துப் பார்க்க வேண்டும். இதுதான் ஞானம். இந்த அளவேலே தியாகம் செய்வதற்கு ஞானாசிரியர்கள்(SKY Masters) தயாராக இருக்க வேண்டும்.

- வேதாத்திரி மகரிஷி

வியாழன், 20 நவம்பர், 2014

ஐயா, சூழ்நிலை காரணமாக நமக்கு சினம் வரும்படி நண்பர்கள் தூண்டும்பொழுது, நாம் மனதை எவ்வாறு வைத்துக்கொள்ளவேண்டும்??

நம் மனதில் முன்னதாகவே ஒரு ஒத்திகை (Rehearsal) செய்து கொள்ள வேண்டும்.
...
“அவர்களோ அரியாதவர்கள், பயிற்சி செய்யாதவர்கள், அவர்கள் என்ன கூறினாலும், எவ்வாறு சினமூட்டினாலும் நான் சினப்படாமல், எதிர்த்து கூறாமல்,

‘என் வினைப்பதிவு தான் கழிகிறது’

என்று மனதால் ஏற்றுக்கொண்டு, அவர்களை வாழ்த்துவேன்”
.
என்ற தீர்மானத்தை மனதில் ஆழமாக, உறுதியாக வைத்துக்கொண்டால் , யார் என்ன கூறினாலும் அதைப் பற்றி மனம் வருந்தவேண்டிய அவசியமே வராது.
.
.
மனவளக்கலை மன்றங்களில் சினம் தவிர்ப்பதற்கென ஒரு தனிப்பயிற்சி முறை அளிக்கப்படுகிறது.அப்பயிற்சியில் கலந்துகொண்டு பயன்பெறலாம்.
.
-வேதாத்திரி மகரிஷி

புதன், 19 நவம்பர், 2014

சினம் தவிர்த்தல்

நான் பல நாடுகளுக்கு சென்றிருக்கிறேன். சில நாடுகளுக்கு நான் செல்லவில்லை என்றால் பல நாட்டு மக்களையும் பார்த்திருக்கிறேன். மனவளக்கலை பயிற்சியும் அளித்திருக்கிறேன்.
.
.
சினம் தவிர்த்தல் என்ற பயிற்சியும் கொடுத்திருக்கிறேன். அதில்,
...
“ உங்களுக்கு யார் மேல் அதிகமாக சினம் வருகிறது?” என்பது ஒரு கேள்வி.
.
.
ஒன்று, இரண்டு, மூன்று என்று வரிசையாக எழுத வேண்டும். எல்லோரும் வரிசையாக எழுதுவார்கள். வாங்கி பார்ப்பேன்.

”பட்டியலின் முதலில் இருக்கும் பெயர் யாருங்க ?” என்று கேட்பேன்
.
/
எழுதியவர் ஆணாக இருந்தால், “என்...மனைவிங்க...” என்று பதில் வரும்,
எழுதியவர் பெண்ணாக இருந்தால்..”என்...கணவருங்க..” என்று பதில் வரும்.
.
.
உலகம் முழுவதுமே பொதுவாக.... கணவன் மனைவிக்கும்,
மனைவி கணவனுக்கும் தருகிற முதல் இடம் அதுவாகத்தான் இருக்கிறது.

.
.
-வேதாத்திரி மகரிஷி

செவ்வாய், 18 நவம்பர், 2014

ஐயா தாங்கள் 50 ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய கவிகளில் என்ன எழுதியுள்ளீர்களோ அதையே தான் இன்றும் கூறுகிறீர்கள். ஆனால் பல ஞானியர்கள், முதலில் சொன்ன கருத்துக்கும், பிற்காலத்தில் சொன்ன கருத்துக்கும் வேறுபாடு உள்ளதே ஏன்?

 
நான் எழுத ஆரம்பித்ததே இறைநிலை உணர்ந்து தெளிவுபெற்றபின் தான்.
...
என் 35 வயதில் என் உள்ளத்தில் எழுந்த “கடவுள் என்றால் என்ன ? உயிர் என்றால் என்ன? வறுமை ஏன் ஏற்படுகிறது?” போன்ற அனைத்து கேள்விகளுக்கும் தீர்க்கமான விடை கண்டுகொண்டேன்.

.

அதன்பிறகே நான் எழுத ஆரம்பித்தாலும் என்னுடைய 50 ஆண்டு காலங்களில் எழுதிய சுமார் 4000 -த்திற்கும் மேற்பட்ட கவிகளில் முன்பு என்ன உணர்ந்தேனோ அதையே தான் எழுதி வருகிறேன்.

.
.

ஆனால் முதலில் பக்தி வழியில் இருந்துவிட்டுப் பிற்காலத்தில் ஞானம் பெற்ற பெரியோர்களுக்கு இளமைப்பருவத்தில் கருத்து மயக்கத்தில் வாழ்ந்த காலம் ஒன்று உண்டு.
அக்காலத்தில் அவர்கள் கூறிய கருத்து, பிற்காலத்தில் அறிவு விரியும்பொழுது மாற்றம் பெற்றிருப்பது இயல்பே
.

வாழ்க வளமுடன்.!

-வேதாத்திரி மகரிஷி
                                                                                                                                                                                  

திங்கள், 17 நவம்பர், 2014

சினம் தவிர்த்தல் பயிற்சி

மனவளக்கலையில் ”சினம் தவிர்த்தல்” என்பது முக்கியமான பயிற்சி. பயிற்சி கொடுப்பவருக்கு கோபம் வரக்கூடாது என்பது மிகவும் முக்கியம்.
.

சினம் தவிர்த்தவரே சினம் தவிர்த்தல் சொற்பொழிவை ஆற்ற தகுதியானவர் என்பது மகரிஷியின் கருத்து. 95 வயது வரை வாழ்ந்த அவர் தம் வாழ்க்கையில் இரண்டு முறை சினம் கொண்டார். அதன் விளைவு-இனி சினம் கொள்ளக்கூடாது என்ற முடிவை எடுத்தார்.
...
அன்பர்களுக்கும் சொல்லிக்கொடுத்தார். சினம் தவிர்த்தல் பயிற்சியை கொடுக்கிற மகரிஷி அவர்கள் அதற்கு ஓர் அன்பளிப்பை அன்பர்களிடம் எதிர்பார்ப்பதுண்டு....
.

.
“அன்பர்களே ! பயிற்சிகளை எடுத்துக்கொண்டுள்ளீர்கள். எனக்கு அன்பளிப்பு கொடுக்கவேண்டும் என்று நீங்கள் நினைப்பீர்கள்.
..
.
உங்களிடம் உள்ள சினத்தை என்னிடம் கொடுத்துவிடுங்கள்.இங்கிருந்து போகும்போது சினம் இல்லாமல் வீட்டுக்கு போங்கள்.

”இவ்வளவுநாள் நாம வச்சிருந்த கோபத்த இவர் இப்படி வாங்கிக்கிட்டாரே.......” என்கிற கோபம் கூட இல்லாமல் நீங்கள் வீட்டுக்குப் போக வேண்டும்
.
வாழ்க வளமுடன்
-வேதாத்திரி மகரிஷி

ஞாயிறு, 16 நவம்பர், 2014

ஒரு அன்பர் மகரிஷியிடம்...
.
.
“என் மனைவிக்கு பெரிய சந்தேகம்ங்க..”
....

“என்ன சந்தேகம் ?”
.
“சினம் தவிர்த்தல் பயிற்சி செய்த பிறகு இப்போது நீங்கள் கோபமே கொள்வதில்லை.... ரொம்ப மாறியிருக்கிறீர்கள்-என்கிறாள் என் மனைவி”
.
.
”அப்படியா ?”
.

.
“முன்னாடியெல்லாம் ரொம்ப கோவப்படுவீங்க.... அடிப்பீங்க... இவ்வளவு நல்ல மனிதர் இவ்வளவுநாளா எங்க இருந்தீங்க ? என்று கேட்கிறாள்.”
.
.
இவ்வளவு நாளாக அவங்களை என்ன பாடுபடுத்தியிருப்பீங்க - அப்படீங்கிறது எனக்கு இப்பத்தான் புரியுது.”
.

.
“இப்பல்லாம் கோவமே கொள்வதில்லை என்கிறா என் மனைவி”
.
.
“நீங்க சொல்றத நம்ப முடியாது..... இதை உங்கள் மனைவி சொல்ல வேண்டும்.”
.
.
“நாளைக்கே என் மனைவியை அழைச்சிட்டு வறேன் அவளையே சொல்ல வைக்கிறேன்.”
.
.
“வீட்டிலேயே அடித்து உதைத்து ‘மகரிஷியிடம் இப்படித்தான் சொல்லவேண்டும்’ என்று சொல்லி அழைத்து வருவீர்கள்.” (சிரிப்பு)
.

வாழ்க வளமுடன்

வெள்ளி, 14 நவம்பர், 2014

நித்யானந்த தவம் உருவான கதை:


அன்பர்கள் அழைப்பின் பெயரில் ஒருமுறை மகரிஷி அவர்கள் பூடான் சென்று இருந்தார்கள். அங்கு ஒரு புத்தர் கோவிலுக்கு மகரிஷியை அன்பர்கள் அழைத்...துச் சென்று இருந்தார்கள். அந்த கோவிலின் வாயிலில் "ஓம் மணி பத்மீ ஹம்" என்ற வாசகம் எழுதபட்டிருந்தது. அந்த மந்திர வாசகத்தின் பொருள் பற்றி அங்கிருந்தவர்களிடம் விசாரித்து தெரிந்து கொள்கிறார்.
"ஓம் மணி பத்மீ ஹம்" என்று சொல்லி கொண்டே மூலாதாரதிலிருந்து உச்சிக்கு செல்ல வேண்டும். "ஹம்" என்று சொல்லிக்கொண்டே மூலாதாரத்திற்கு வரவேண்டும். இப்பயிற்சி செய்ய செய்ய உடலுக்கு குளிரைத் தாங்கும் சக்தி உண்டாகும். கடும் குளிரில் இருக்கின்ற அம்மக்கள் பயிற்சியை செய்தே உடல் சூட்டை பாதுகாத்துக் கொள்கிறார்கள் என்பதை அறிந்தார்.
இத்தவதிற்கு "திபெத்திய தவம்" என்று பெயரிட்டு சிறப்பு பயிற்சிகளில் முன்பு மன்ற அன்பர்களுக்கு மகரிஷி அவர்கள் கற்றுக் கொடுத்துள்ளார்கள்.
எதிலும் ஆராய்ச்சி மிக்கவரான அருட்தந்தை அவர்கள் தமிழகத்திலுள்ள தட்பவெட்ப நிலைக்கு ஏற்ப எக்காலத்திற்கும் உகந்ததாக எளிமைபடுத்தி இதை வடிவமைத்தார்கள்.
மூச்சோடு மனதை மூலாதாரதிலிருந்து உச்சிவரை கொண்டு சென்று பிறகு அங்கிருந்து மூச்சை விட்டுக்கொண்டே உடல் முழுவதும் பரவட்செய்யும் முறையை கொண்டுவந்தார்கள். இது உடலுக்கு நிலைத்த ஆனந்தம் கொடுக்க கூடியதாகையால் இதற்கு "நித்யானந்த தவம்" என பெயரிட்டார்கள்.

வியாழன், 13 நவம்பர், 2014

வேதாத்திரி அய்யா! உங்களை எல்லாரும் ஏன் பாமர மக்களின் தத்துவஞானின்னு சொல்றாங்க?



...
எழுதப் படிக்கத் தெரியாதவங்க,
வசதி வாய்ப்பு இல்லாத கிராமத்து சனங்க,
நாகரீகமா ஆடை உடுத்த தெரியாதவங்க
போன்றவர்களைத்தான் “பாமரர்கள்” என்று நிறைய பேர் நினைச்சிகிட்டு இருக்காங்க!
ஆனா உண்மை என்னவென்றால்
வசதி வாய்ப்பு இருந்தும்,
எழுதப்படிக்க தெரிந்திருந்தும்,
நாகரீக ஆடை உடுத்திஇருந்தாலும்
யாரெல்லாம் சுயமாக சிந்தித்து தனக்கும் பிறருக்கும் துன்பம் தரமால் வாழத் தெரியவில்லையோ அவர்கள் அனைவருமே பாமரர்கள்தான்!
ஆக, தன்னையே படிக்காதவர்கள் யாராக இருந்தாலும் அனைவருமே பாமரர்கள்தான்!
தன்னை அறிய தனக்கு ஒரு கேடில்லை,
தன்னை அறியாமல் தானே கேடுகின்றான் இந்த மனிதன்!
தன்னை அறிந்தால் தலைவனையும் அறியலாம், முழுமையையும் உணரலாம், அப்படி எல்லோரும் உணர்றதுக்கு உதவி செய்வதுதான் நம்முடைய மனவளக்கலை பயிற்சியின் நோக்கம்!
(ஆழியார் (ஏப்ரல்-1998) ஆளுமைப்பேறு திறன் ஊக்கப் பயிற்சியின் போது அன்பர்களின் கேள்விக்கு அருள்தந்தையின் பதில்)

புதன், 12 நவம்பர், 2014

மஹரிஷியின் கல்விமுறை

புதிய மாதிரிக் கல்வி முறை
 • குழந்தைகள் ஒன்பது வயது முடிந்த பிறகு, பத்தாவது வயதில் ஆண்-பெண் இருபாலரும் இந்தப் பள்ளியில் சேரலாம்.
  • உறைவிட வசதியோடு, இரவும் பகலும் குழந்தைகள் பள்ளியிலேயே தங்கிப் படிக்கும் (Residential School) முறையில் இக்கல்வி நிலையம் செயல்பட வேண்டும்.
  • எழுத்தறிவு, தொழிலறிவு, இயற்கைத் தத்துவ அறிவு, ஒழுக்கபழக்கங்கள் என்ற நான்கு வாழ்க்கைக் கூறுகளும் இப்பள்ளியில் போதிக்கப்பட வேண்டும்.
  • ஆன்மிக அறிவு மேம்பாடு, சுகாதாரம், பொருளாதாரம், அரசியல், விஞ்ஞானம், சமையல் என்ற ஆறு துறைகளில் போதனைகள் நடைபெற வேண்டும்.
  • போதனை மொழிகள் அந்தந்த பகுதிகளில் வழங்கும் தாய்மொழி, நாட்டுக்குப் பொதுவான மொழி, உலகப் பொதுவான ஆங்கில மொழி ஆகிய மூன்று மொழிகளுக்கும் சம மதிப்பளித்து, போதனைகள் நடைபெற வேண்டும்.
  • முதல் ஆறு ஆண்டுகளுக்கு, எழுத்தறிவோடு வேளாண்மை, துணி நெசவு, வீடு கட்டுதல், விஞ்ஞானக் கருவிகள் செய்தல், சமையல் செய்தல் இவற்றில் அடிப்படைக் கல்வியும் பதினாறு முதல் இருபது வரையில் ஏதேனும் ஒரு துறையில் உயர்தரக் கல்வியும் (Degree Course) அளிக்க வேண்டும்.
  • மாணவர்களுக்கு உணவுக்கு வேண்டிய தானிய வகைகளை உற்பத்தி செய்து கொள்ள வசதியாக உள்ள அளவில் விவசாய நிலங்களும் ஒவ்வொரு பள்ளிக்கும் இருக்க வேண்டும்.பால் கறக்கும் மாடுகளும் போதிய அளவில் வைத்துக் கொள்ள வேண்டும்.
  • பதினொரு வயதிற்குமேல் ஆண்களும், பெண்களுக்கும் தனித்தனியே தாங்கும் வசதி கொடுக்க வேண்டும். எழுத்து, தொழில் போதனைகளின் பொது அனைவரும் ஒன்றாக இருக்கலாம்.
  • வாரத்திற்கு ஒருமுறை பெற்றோர்கள் வந்து தங்கள் குழந்தைகளைப் பார்த்து மகிழ வாய்ப்பும் வசதியும் அளிக்க வேண்டும். மூன்று மாதங்களுக்கொருமுறை சனி, ஞாயிறு இரு நாட்களில் குழந்தைகளைப் பெற்றோர் இல்லங்களுக்கு அனுப்பிவைக்கலாம்.
  • காலையில் புஞ்சை தானியத்திலான கஞ்சியும், பகலில் அரிசிச்சோறும், காய்கள்,பருப்பு இவையும்,மோர்/தயிர், நெய் இவையும் சேர்த்து எளிய உணவாக கொடுக்க வேண்டும். மென் முறையான விளையாட்டுகளில் அனைவருக்கும் கட்டாயப் பயிற்சி அளிக்க வேண்டும்.
  • இருபதுவயது முடியும்போது, கல்வியில் முழுத் தேர்ச்சி உள்ளவர்களாக ஏதேனும் தொழில் நிபுணராக ஒவ்வொருவரும் தயாராக வேண்டும். கல்வி முறையோடு நாட்டுக்கு ஏற்ற தொழில் முறியும் ஒத்தவாறு அமைய வேண்டும். தேவைக்கு வேண்டிய பொருட்களைப் பெருக்கவும், எல்லோருக்கும் வேலை கிடைக்கும் முறையிலும், தொழில் திட்டம் உருவாக்க வேண்டும். வேலையில்லாக் குறைபாடு ஏற்படும் இடங்களில்,உள்ள வேலையை அனைவருக்கும் பங்கிடும் முறையில் வேலை நேரத்தைக் குறைத்துக் கொள்ள வேண்டும்.
 • தேவையிருந்தும் தொழில் செய்யத் தெரிந்திருந்தும் வேலை கிடைக்கவில்லையெனில், அத்தகைய மனிதன் குற்ற வழியில்தான் வாழ முனைவான். இது சமுதாய வளத்திர்க்கே நச்சாகும்.
 • இத்தகைய கல்வி முறையால், அரசாங்கம் இன்று கல்விக்காகச் செலவலிக்கும் தொகையில் பெருமளவு குறைந்து விடும்.கல்விக்கூடமே தொழிற்சாலைகளாகவும் நேர்மையான வணிக நிலையங்களாகவும் மாற்றம் பெரும்.
  • முதலில் நாட்டளவில் சமுதாயத் தலைவர்களைக் கூட்டி, இத்திட்டத்தை முன்வைத்து ஆலோசனை செய்ய வேண்டும். பிறகு, முதலில் மாவட்டத்திற்கொன்றும், பிறகு வட்டத்திற்கொன்றுமாக இந்த மாதிரிப் பள்ளிகளை அமைத்து நலம் காண வேண்டும்.  “இதுவரையில் மனிதன் அடைந்துள்ள முன்னேற்றங்களில் இறுதி பயனாக இருக்க வேண்டியது உயர்தர முறையில் குழந்தைகளை வளர்ப்பதே ஆகும்” 

அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி

செவ்வாய், 11 நவம்பர், 2014

வினா: இன்றைக்கு தனிமனிதன், குடும்பம், நாடு, உலகத்தில் நிம்மதியில்லை. ஒரே குழப்பமாக இருக்கிறது. அதற்கு என்ன காரணம் என்று கேட்டால் ஒருவர் மேல் ஒருவர் கொள்ளும் சந்தேகம்தான் காரணம். அந்த சந்தேகம் போனால்தான் உலகம் அமைதியாக வாழ முடியும் இல்லையெனில் அமைதியாக வாழ முடியாது. இந்தக் கருத்தை எல்லோர் உள்ளத்திலும் பதியவைக்க என்ன செய்ய வேண்டும் என்பதை விளக்கமாக கூறும்படி கேட்டுக் கொள்கிறேன்



 மகரிஷியின் விடை:

மனிதனுடைய நிலைக்குத் தகுந்தவாறு அவ்வப்போது சில கருத்துக்கள் வரும். அப்படி ஏற்படக்கூடிய கருத்து எதுவானாலும் சரி நான்கு முகங்கள் உள்ளன.1.தேவையின நீதி (Justification of need)2.தேவையின் அளவு (Justification of Quality)3.தேவையின் தன்மை (Justification of quantity)4.தேவையின் காலம் (Justification of Time) எந்தக் கருத்தானாலும் அது தேவையை உணரக்கூடிய அடிப்படை ஒன்று. எவ்வளவு தேவை என்பது இரண்டு. எது மாதிரியாக அதனை அனுபவிக்க வேண்டுமென்பது மூன்று எப்பொழுது என்பது நான்கு. இந்த நான்கும் சேர்ந்ததுதான் ஒரு கருத்து.

ஒருவருக்கு இருக்கக்கூடிய கருத்து இன்னொருவருக்கு இருக்காது. இந்த நான்கு வகையிலும் கருத்து ஒருவருக்கொருவர் வித்தியாசப்படும். அது மனிதனை மனிதன் உணராததனால், என் கருத்துக்கு இசைந்துதான் அவர் நடக்க வேண்டும், என் கருத்தைத் தான் அவர் ஒத்துக் கொள்ள வேண்டும் என்று ஒரு (Ego) தன்முனைப்பு என்பது எல்லோருக்கும் உண்டு.

அந்த தன்முனைப்பு எதுவரைக்கும் உண்டு?

தன்னையறியும் வரைக்கும்.தேவைப்படக்கூடிய ஒன்றை அறியாத முன்னம், பொருள்,புகழ்,அதிகாரம்,புலனின்பம் இந்த நான்கிலே சிக்கிக் கொண்டு அங்கு தவிக்கிற பொழுது, அங்கு நான்தான் பெரியவன், எனக்கு வேண்டியதுதான் வேண்டும், நான் விரும்புவதுதான் சரி என்று இந்த நான்கில் இவன் எப்படி நினைக்கிறானோ அதேபோன்று மற்றவர்களும் நினைக்க வேண்டும் என்ற எண்ணம் வருவதனால் (Conflict) ஒருவருக்கொருவர் ஒரு பிணக்கு ஏற்படுகிறது. இந்தப் பிணக்குத்தான் இன்று எல்லா சங்கடங்களுக்கும் காரணமே தவிர, சந்தேகம் என்று ஒன்று இல்லை. இருந்தாலும் ஏன் என்றால் இங்குதான் கருத்தொடர் பதிவைப் பற்றி நாம் பின்னோக்கிச் செல்ல வேண்டும்.ஒரு மனித உருவம் எங்கிருந்து வந்திருக்க முடியும்? ஐயறிவு இனத்திலிருந்துதான் மனிதன் வடிவம் வந்திருக்க வேண்டும். இயல்பூக்கம் (Mutation) வழியாக வந்திருக்க வேண்டும். மனிதன் தோன்றி இதுநாள் வரையில் இந்தப் பதிவு எங்கிருந்து வந்தது. மனிதனுக்குத் தேவைதானா என்று எண்ணிய ஒரு மனிதன் விடுபட்டான். மற்றவர்கள் அங்கேயே அகப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆகையினால் ஒருவர் வாழ்வை ஒருவர் பறித்துண்ண வேண்டும் என்ற பழக்கமும் அந்த சிந்தனைற்ற செயலும்தான் சந்தேகத்திற்குக் காரணமே தவிர அந்த சந்தேகம் போக வேண்டுமானால் மனிதனுடைய பிறப்பை உணர வேண்டும், பிரபஞ்ச இயக்க நியதிகளை உணர வேண்டும்

திங்கள், 10 நவம்பர், 2014

மண்ணாசை

மண்ணாசை என்பது ஒரு மிகப்பெரிய அறியாமை.
இதை மக்கள் புரிந்துகொள்வதில்லை...
.
.
இரண்டு சகோதரர்கள் தம் தகப்பனார் விட்டுச்சென்ற நிலத்துக்காக சண்டைப் போடுகிறார்கள்....
.
.
அண்ணன்காரன், “இந்த பூமி எனக்கு சொந்தம்... இதில் காலை வைத்தல் வெட்டுவேன் !” என்கிறான்.
!
!
தம்பிக்காரன், “உனக்கு மட்டும்தான் வெட்ட தெரியுமா..?? இந்த பூமி எனக்குத்தான் சொந்தம்....நீ காலை வைத்தால் நான் வெட்டுவேன்” என்கிறான்.

~

~

இதில் வேடிக்கை என்னவென்றால், இவர்களின் விவாதத்தை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த பூமி சொன்னது :

அடேய்! நான் எவனுக்கும் சொந்தமில்லை. நீங்கள் இரண்டு பேரும்தான் எனக்கு சொந்தம்!”

:

:

மண்ணின் இந்த குரல் அந்த மனிதர்களின் காதில் விழுவதே இல்லை- என்பதுதான் பரிதாபம்!

-வேதாத்திரி மகரிஷி

ஞாயிறு, 9 நவம்பர், 2014

ஆன்மீக வாதிகள் தாடி வளர்ப்பது ஏன்..?




தாடிப்புராணம்.....??
 ^

“உண்மையான ஆன்மீகவாதிகளுக்கு வீட்டில் இடம் கிடையாது. வெளியில் போனவருக்கு முடி திருத்தும் வசதி கிடையாது;

இப்போது ரேசர் இருக்கிறது. இது அப்போது இல்லை. தாடி வளர்ந்து விடுகிறது. அதை பார்ப்பவர்கள் என்ன நினைக்கிறார்கள்..?/

^

‘ஓ !.... ஆன்மீகவாதி என்றால் தாடி ஓர் அடையாளம் போலிருக்கிறது.!’

^

இப்படி நினைத்துக்கொண்டு எல்லோரும் தாடி வளர்க்க ஆரம்பித்துவிட்டார்கள்.

^

ஆனால் தாடி வைத்துக்கொள்வதற்கு வேறு காரணமும் உண்டு.
/
/
குளிர் முகத்தை தாக்க கூடாது; தாக்கினால் முகவாதம் வந்துவிடும். அதை தவிர்ப்பதற்காக பலர் தாடி வைத்துக்கொண்டார்கள்,

.

குருகுல கல்வி கற்ற பிறகு திருமணம் செய்துகொள்ளாமல் சந்நியாசி ஆகிறவர்கள் மொட்டையுடன் இருப்பார்கள்.

இல்லறத்தார்கள் குடுமி மட்டும் வைத்துக்கொள்வார்கள்.

^

இல்லறத்தில் இருந்து கடமைகளெல்லாம் முடித்துவிட்டு, பின்னர் சந்நியாசி ஆகிறவர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா..?

தாடியும் வைத்துக்கொண்டார்கள். தலையில் குடுமியும் வைத்துக்கொண்டார்கள்.
.
.

தாடியும், குடுமியும் வந்த கதை இதுதான்.
.
.
-வேதாத்திரி மகரிஷி
 

சனி, 8 நவம்பர், 2014

சுவாமி ஜி அவர்களே! ஆன்மீகத்திற்கு மாமிச உணவை விட தாவர உணவே சிறந்தது என்கிறீர்கள். எந்தவகையில் உயர்ந்தது என்று விளக்க முடியுமா?

மாமிச உணவு அதிகமான உணர்ச்சிகளை தூண்டும். நோய்களை உண்டு பண்ணக்கூடியது.
....

உதாரணமாக ஒரு மாமிசத் துண்டையும், ஒரு கத்தரிக்காய் துண்டையும் எடுத்துக்கொள்ளுங்கள். அந்த இரண்டையும் தனித்தனியே மூடி வைத்துவிடுவோம்.

ஒரு வாரம் கழித்து திறந்து பார்த்தால் கத்தரிக்காயில் எந்த துர்நாற்றமும் வராது, ஒன்றிரண்டு புழுக்கள் இருக்கலாம்.

ஆனால் மாமிசத்துண்டு அத்தனையும் புழுக்களாக மாறி இருக்கும். துர்நாற்றம் தாங்க முடியாது. அந்த அளவுக்கு மாற்றம் பெற்று மாமிசம் நோயை உண்டு பண்ணக்கூடியது.

.

அத்துடன் மனிதன் மாமிச உணவை நாடும்போது..

1. உயிர்க்கொலை

2. அதன் உடலை உணவுக்காக திருடுதல்

3. அவ்வுயிரின் வாழும் உரிமையை பறித்தல் என்ற மூன்று குற்றங்களையும் செய்துவிடுகிறான்.
.
.
இந்த குற்றங்கள் தான் சமுதாயத்தில் மக்களிடையே பரவும் போது எல்லா வகையான் துன்பங்களுக்கும் காரணமாகின்றன.

.
இந்த மூன்று குற்றங்களே உலகில் உள்ள அனைத்து குற்றங்களுக்கும் அடிப்படை.
அங்கு அன்பும், கருணையும் எவ்வாறு மலரும் ??
.

-வேதாத்திரி மகரிஷி

வெள்ளி, 7 நவம்பர், 2014

மஞ்சள் துண்டின் மகிமை என்ன?

“பலர் கூடியிருக்கின்ற சபையில் நான் மஞ்சள் துண்டோடு இருப்பதால்....என்னைப் பார்த்தவுடன், ‘இவர்தான் சுவாமிஜி’ என்று தெரிந்துகொள்கிறார்கள்.

யாரோ ஒருவர் முதன் முதலாக எனக்கு துணி கொடுத்தபோது மஞ்சள் துண்டு வைத்து கொடுத்தார். போட்டுக்கொண்டேன். அடுத்து கொடுத்தவர்களும் மஞ்சள் துண்டையே வைத்துக்கொடுத்தார்கள்.
.
.
பிறகு யார் துணி கொடுத்தாலும் மஞ்சள் துண்டு வைத்துக்கொடுக்கிறார்கள்.

” இன்னும் யாருக்கும் வேறு நிறத்தில் துண்டு கொடுக்க துணிவு இல்லை

வியாழன், 6 நவம்பர், 2014

சுவாமிஜி..! சூரியனிலிருந்து ஒளி,வெப்பம் வரவில்லை அலைதான் வருகிறது என்று சொல்கிறீர்களே, எவ்வாறு??

சூரியனிலிருந்து அலைதான் வருகிறது. அந்த அலை பூமியிலுள்ள பொருள்களின் மீது மோதும்போது அந்த பொருட்களிலுள்ள தன்மைக்கேற்ப ஒளியும், வெப்பமும் உண்டாகின்றன....

உதாரணமாக,
இரும்பில் படும்போதும், கல்லில் படும்போதும், கண்ணாடியில் படும்போதும், தண்ணீரில் படும்போதும், தரையில் படும்போதும், அந்தந்த பொருட்களின் தன்மைக்கேற்ப ஒளியும், வெப்பமும் மாறுபடுகின்றன என்பதை நாம் அறிவோம்.
.
.
ஒளியினுடைய பிரதிபலிப்பு உண்டாகும் போது தானாகவே வெப்பமும் உண்டாகிறது.
.

எந்த பொருளிலிருந்து அலை கிளம்பினாலும் அது அந்த பொருளின் தன்மையை கொண்டிருக்கும். எந்த பொருளின் மீது மோதுகின்றதோ அந்த பொருளின் தன்மைக்கேற்ப மூலப்பொருளின் தன்மை இங்கே பிரதிபலிக்கும்.
.

சூரியனுடைய அலையில் சூரியனுடைய தன்மையான ஒளியும், வெப்பமும் அடங்கியுள்ளன.

உதாரணமாக..,

நாம் பூமியிலிருந்து ஒரு 50,000 அடிகளுக்கு மேலே சென்றால், அங்கேயே 0டிகிரி செல்சியஸ் அல்லது அதற்கு குறைவான வெப்ப நிலையும், இருட்டாகவும் இருப்பதை காணலாம்.

ஆனால் பூமியில் 35டிகிரி செல்சியஸ், 40 டிகிரி செல்சியஸ் கூட வெப்பநிலை இருக்கிறது.
சூரியனிலிருந்து வெப்பம் வருகிறதென்றால் வெளி மண்டலத்தில் வரும் வழியில் மத்தியில் குளிர்ந்து பிறகு சூடு அதிகரிக்குமா? நமக்கு கிடைக்கக்கூடிய வெப்பமெல்லாம் சூரிய அலை பூமியிலுள்ள பொருட்களின்மீது பட்டு இங்கு தூண்டப் பெற்று பிரதிபலிக்கக்கூடிய வெப்பமும், ஒளியும்தான்
.
.வாழ்க வளமுடன்

-வேதாத்திரி மகரிஷி

புதன், 5 நவம்பர், 2014

மகிழ்போகம் என்பது இல்லற வாழ்வை குறிக்கின்றதா..? அல்லது சித்தர்களுக்கே ஏற்றதா..?

போகம் என்றாலே இன்பத்தை அனுபவிப்பதுதான்....

மெய், வாய், கண், மூக்கு, செவி என்ற ஐந்து புலன்களினால் நாம் அழுத்தம், ஒலி, ஒளி, சுவை, மணமாக - எந்த பொருளோடு தொடர்பு கொள்வதன் மூலம்- இன்பத்தை அனுபவித்தாலும், அந்த அனுபோகம் தான் போகம்
.
போகம் என்பது இல்லறத்தார்க்கும், துறவறத்தார்க்கும் பொதுவான வாழ்க்கை மகிழ்ச்சி.
.
.
இல்லறம் என்பது பொருளீட்டி, காத்து, துய்த்து, பிறருக்குதவி வாழக்கூடிய நெறியாகும்.

துறவறம் என்பது பொருளீட்டுவதை மட்டும் நிறுத்தி, அறிவுத்துறையில் முழுமை பெற்று, அந்த முழுமைப்பேற்றை மக்களுக்கு வழங்கி, அவர்களை நல்வழிப்படுத்துதல். தன்னை சமுதாய நலனுக்கே அற்பணம் செய்து கொண்டு, விருப்பு, வெறுப்பின்றி, அறிவுத்துறையிலே தொண்டாற்றுதல் துறவறமாகும்.
.

இத்துறையில் வாழ்வதாலேயே துய்த்தலை நிறுத்திவிட முடியுமா?
.
மகிழ்போகம் அனைவருக்குமே வேண்டும். துறவில் உள்ளவர்களுக்கும் உணவு வேண்டும். அவர்களும் உணவு சாப்பிடும் பொழுது, உடல் ஏற்றுக் கொள்ளும் முறையில் உணவினை இனிமையாகவே அமைத்துக்கொள்வார்கள்
.

.
“எந்த சீவனுக்கும் உடலுக்கும், உயிருக்கும்

அந்த நேரத்தில் தேவையாய்ப் பொருத்தமாய்

வந்த அனுபோகம் இன்பமாம்”

என்ற வகையில் புலன்களைக் கொண்டு இன்பம் அடையும் போகம் என்பது எல்லோருக்கும் பொதுதான்.
.
வாழ்க வளமுடன்
-வேதாத்திரி மகரிஷி

செவ்வாய், 4 நவம்பர், 2014

அறிவுச்சோதனை...!

சீடர்கள் நான்கு பேர் உள்ள ஆசிரமத்தில் அவர்களின் அறிவுக்கூர்மையைச் சோதிப்பதற்காக குரு ஒரு பரீட்சை வைத்தார்....

சிறிது தூரத்தில் ஒரு பானையை கவிழ்த்து வைத்து விட்டார்.
.
.
முதலாமவனிடம் “ இந்த பானையில் என்ன இருக்கிறது..?” என்று கேட்டார்.,

பானை கவிழ்த்து வைக்கப்பட்டிருப்பதை பார்த்த அவன் “பானையில் ஒன்றும் இல்லை” என்றான்

அடுத்தவனிடம் அதே கேள்வியை கேட்டார்.

.
அந்த பானையில் ஏதோ இருக்கவேண்டும். அதனால் தான் முதலாமவன் கூற்றை குரு ஒத்துக்கொள்ளவில்லை, என்று எண்ணிய இரண்டாவது ஆள் பானையை நிமிர்த்திப் பார்த்து விட்டு “பானையில் ஒன்றுமில்லை” என்றான்.
.

மூன்றாவது சீடனிடம்.,”அந்த பானையில் என்ன இருக்கிறது?” என்று கேட்டார். அவனோ கையை விட்டு துழாவி பார்த்துவிட்டு “பானையில் ஒன்றுமில்லை” என்றான்..

.
.

நீங்கள் மூவர் சொல்வதும் தவறு. என்று கூறிவிட்டு,
.

நான்காவது ஆளைப்பார்த்து, “நீ என்ன சொல்கிறாய்?” பானைக்குள் என்ன இருக்கிறது? என்று கேட்டார். அவன் அதற்கு “பானை நிறைய காற்று இருக்கிறது என்றான்.
.
.
பிறகு குருவானவர் முதலாமவனைப்பார்த்து, “ அந்த பானையிலுள்ள காற்றை எடுத்துவிட வேண்டும் உன்னால் முடியுமா? ” என்று கேட்டார்

”அவன் முடியாது” என்றான்.

மற்ற இருவரும் அதே பதிலையே கூறினார்கள்.
.
.

நான்காமவன், “பானையிலுள்ள காற்றை எடுக்க முடியும்” என்றான்.

”எப்படி? எடுத்துக்காட்டு” என்றார், குரு.

பானையில் நிறைய நீரை ஊற்றினான். பிறகு குருவை பார்த்து “பானையிலுள்ள காற்றை எடுத்துவிட்டேன்” என்று கூறி பணிந்து நின்றான்.
.
.
அதுபோல் தீமையை அல்லது வேண்டாத ஒன்றை எடுத்துவிட முடியாது. ஆனால் நல்லதை நிரப்பினால் அது தன்னாலே மறைந்து விடும்.
.
.
இந்த தத்துவத்தை சீடர்களுக்கு உணர்த்தவே குரு மகான் அவ்வாறு செய்தார்...!!

அதேபோல் நாமெல்லாம் அது கெட்டது, இது கெட்டது என்று நினைத்துக்கொண்டும், சொல்லிக்கொண்டும் இருக்கிறோம்.

சமுதாய மக்கள் உறவிலே,...

கணவன் , மனைவி உறவிலே,

நண்பர்கள் உறவிலே எந்த தொடர்பில் ஆகட்டும், கெட்டது ஒன்றை மட்டும் எடுத்துக்கொண்டு, பத்து தடவை கெட்டது, கெட்டது என்று நினைத்தால், உள்ளத்தில் அவ்வளவும் கேடு என்ற முறையில் காந்த ஆற்றலை கெடுத்து விடும்.
.
.
அதை விட்டுவிட்டு, அவருக்கும் எனக்கும் உறவு ஏற்பட்ட பிறகு அவர் எனக்கு எத்தனை நன்மைகளை செய்தார் என்று எண்ணி எண்ணி அதையே பல தடவை நினைந்து நினைந்து உள்ளத்தில் நிரப்பிக்கொண்டு வந்தால், ஒரு சிறு தவறை அல்லது எங்கேயோ ஒரு மாற்றம் இருந்தால் கூடத் தெரியாது.
.

கணவன் மனைவி உறவிலே கூட திருமணத்தில் இருந்து இன்றுவரை அந்த அம்மா செய்த நன்மைகள் என்ன? என்று கணவன் எண்ணிப்பார்க்க வேண்டும்.

அதேபோல அவள் கணவன் அவளுக்கு செய்த நன்மைகள் என்ன? என்று எண்ணிப் பார்க்க வேண்டும்.
.
.
ஒருவர் மற்றவரைப்பார்த்து எண்ணிப்பார்த்தால் ஒவ்வொருநாளும் நன்மையை தான் பெற்றிருப்போம். நன்மைகளின் எண்னமே அழுத்த நினைவுகளாகும்.அப்படி நன்மையையே இனிமையான அனுபவங்களையே பெருக்கிக்கொண்டால், வெறுப்பு என்னும் தீமை நுழைய இடமே இல்லை.
.
.
.
ஜீவகாந்த சக்தி தெய்வீகமானது. அதனை வெறுப்புணர்ச்சியால் களங்கப்படுத்தினால், பழிச்செயல்கள் பலவும் உருவாக அது வழி செய்து விடும். அதனை தூய்மையாக வைத்துக்கொள்வோம்.
.

நீங்கள் எப்படி நினைக்கிறீர்களோ, என்ன செய்கிறீர்களோ அதே போன்ற தன்மை உடையதாக ஆகின்றது. வினைப்பதிவுகளின் கூட்டு மலர்ச்சியே மனிதன் என்ற தோற்றம்.
.

மனிதனுக்கு மனிதன் என்ன வித்தியாசம் என்றால், வினைப்பதிவிலான அவன் தன்மைகள் தான்..
உருவ அமைப்பு, குணம், அறிவிலுயர்வு, கீர்த்தி, உடல் வலிவு, சுகம், செல்வம்- இந்த ஏழில் தான் மனிதனுக்கு மனிதன் வேறுபட்டு இருப்போம்.
.
.
இந்த வேறுபாடு, 16 செயல்முறைகள் கூடி ஏற்படுகின்றன.அது உங்களுக்கு ஒரு அற்புதமான கணிப்பாக தெரியும்
.
.
“கருவமைப்பு, உணவுவகை, காலம், தேசம்
கல்வி, தொழில், அரசாங்கம், கலை, முயற்சி,

பருவம், நட்பு, சந்தர்ப்பம், பல ஆராய்ச்சி,
பழக்கம், வழக்கம், ஒழுக்கம் இவற்றிற்கேற்ப

உருவ அமைப்பு, குணம், அறிவின் உயர்வு, கீர்த்தி,
உடல் வலிவு, சுகம், செல்வம் மனிதர்க்குண்டாம்

தரும் இவற்றின் தன்மைகளின் அளவுக்கேற்ப
தனித்தினே அவ்வவற்றில் வேறுபாடு”.
.
.

கருவமைப்பு முதலான பதினாறு செயல்களுக்கேற்ப, சீவ காந்தம் ஒரு தன்மையைப் பெறுகிறது. உருவமைப்பு முதலாக ஏழு விளைவுகள் ஏற்படுகின்றன. இதனால தான்.,

“வினைப்பதிவே தேகம் கண்டாய்” என்று முன்னோர்கள் மொழிந்துள்ளனர்
.

வாழ்க வளமுடன்

-வேதாத்திரி மகரிஷி

திங்கள், 3 நவம்பர், 2014

சுவாமி ஜி ! உடலை விட்ட ஆன்மாக்கள் நம் உடலில் புகாது இருக்க(Immununity against Soul attachment) என்ன செய்ய வேண்டும்?

தவத்தின் மூலம் நம் உயிர் இயக்கத்தை, உயிரிலிருந்து எழக்கூடிய மன இயக்கத்தை, நுண்மையான அலை இயக்கத்திற்கு கொண்டுவர வேண்டும்....
.

.
Soul attachment என்று சொல்ல்க்கூடிய உடலைவிட்ட ஆவியின் தொடர்பெல்லாம் உணர்ச்சிவயப்பட்ட நிலையில் உள்ளவர்களிடம்தான் வந்து சேர முடியும். எனவே,
,

,
மனிதன் உணர்ச்சிவயப்படாத நிலையில் தன்னுடைய மன அலையின் நுண்மையிலே இருக்கப் பழக வேண்டும். அதற்கு குண்டலினியோகம் அல்லது வேறுவிதமான உளப்பயிற்சியின் மூலம் மன அலையை ஓரளவு குறைத்து நுண்மையிலேயே வைத்துக்கொண்டோமேயானால் எவ்விதமான உயிர்த்தொடர்பு வந்தாலும், இணையவிடாது அதை தடுத்துவிட முடியும். பிற உயிர் இணைய முடியாதிருக்க இதுதான் ஒரே வழி.
.
.
அதனுடன் மனத்திலே பயம் இருக்கக்கூடாது. பயமிருந்தால் நமது சூக்கும சரீரம் நமக்குத் தெரியாமலே வெளிப்படும். அப்போது வேறு ஆவி வந்து நம்மோடு தொடர்புகொள்ள வாய்ப்பு ஏற்பட்டுவிடும்.
.
.
நாம் இரவிலே கண்ணாடி பார்த்துக்கொண்டேயிருப்போமானால் நம்முடைய சூக்கும சரீரம் வெளிப்பட்டு உடல் விட்ட ஆவியுடன் தொடர்புகொள்ள வாய்ப்பிருக்கிறது.
.
.
அப்படித் தெரியாமலே தொடர்பு ஏற்பட்ட பின், நம் முகத்தை கண்ணாடியில் பார்த்தால், எந்த உயிர் நம்மோடு தொடர்புகொண்டிருக்கிறதோ அதனின்று பிரதிபலிக்கக்கூடியதொரு விகாரமான ஊருவம் நமக்கு கண்ணாடியில் தோன்றக்காண்போம்.
அதனால் தான் இரவிலே நீண்ட நேரம் கண்ணாடி பார்க்கக்கூடாது என்பார்கள்.
.
.
.
அதிகமான வாசனைத்திரவியங்களை இரவிலே நாம் பூசிக்கொண்டால் அதன்மூலமாக நமது சூக்கும சரீரம் வெளியேறுவதற்கு வழியுண்டு.
.
.
இது போன்றதொரு காரணத்தால்தான், இரவில் பூ வைத்துக்கொண்டு வெளியே போகக்கூடாது என்பார்கள். அவற்றையெல்லாம் நாம் கடைபிடித்துவந்தால் உடல்விட்ட வேறு ஆவிகள் நம்முடன் இணைவதைத் தவிர்க்கலாம்.
.
.
அப்படி ஏதேனும் ஒன்றிரண்டு ஆவிகள் இணைந்தாலும் அந்த ஆவிக்குறியவர்கள் நல்ல எண்ணமும் , தவ ஆற்றலும் உடையவராக இருந்து, அந்த நிலையிலேயே உயிர்விட்டவர்களாகவும் இருந்தால் தங்கள் ஆன்மீக மேம்பாட்டை பூர்த்திசெய்துகொள்வதற்காக அவர்கள் நம்முடன் இணைந்து நமக்கு நன்மையை தருவார்கள். அவர்களும் பூரணம் அடைவார்கள்.
.

.
ஆன்மீகத் துறையில் ஈடுபட்டு இவற்றையெல்லாம் அறிந்து, ஆய்ந்து உணர்ச்சிவயப்படாத நிலையில் இருந்தால் பிற ஆவிகளின் தொடர்பை தவிர்க்கலாம்.
.

வாழ்க வளமுடன்
.
-வேதாத்திரி மகரிஷி

ஞாயிறு, 2 நவம்பர், 2014

அருட்தந்தை அவர்களே..!! தமிழ்நாட்டில்தான் சித்தர்கள் அதிகம் வாழ்ந்ததாக கூறப்படுகின்றது..? அப்படியானால் மற்ற நாடுகளில் சித்தர்களே இல்லையா..??

சித்தம் என்றால் உயிர். அந்த உயிரை உணர்வதற்கு அகத்தவம் வேண்டும். முறையாக பயில்வதற்கு குருவின் வழிகாட்டுதலோடு, சூழ்நிலையும் அமைய வேண்டும். தட்ப வெப்ப நிலையும் ஆண்டு முழுவதும் சீராகவும், உடலுக்கு ஏற்றதாகவும் இருக்க வேண்டும்.
கடும் குளிரிலும், கடும் வெப்பத்திலும் உயிர்ச்செலவு அதிகமாகிவிடும். அகத்தவம் பயிலமுடியாது.
.
.
உலகில் உள்ள மற்ற எல்லா நாடுகளையும் விட இந்திய நாட்டில், குறிப்பாக தமிழ்நாட்டில்தான் ஆண்டுமுழுவதும் கடும் குளிரோ, கடும் வெப்பமோ இன்றி, சமமான தட்ப வெப்பநிலை உள்ளது.
.
.
இந்த சூழ்நிலை இங்கு அமைந்ததால்தான் அகத்தவம் செய்வதற்கு மிக உன்னதமான இடமாக இருக்கின்றது.

.
அதன் காரணமாக மேல்நாட்டவர்கள் தமிழ்நாட்டிற்கு வந்து அகத்தவம் பயின்றார்கள்.
.
.
தமிழ்நாட்டில் ‘அகத்தியர்’ என்று ஒரு சித்தர் பெயர் கூறுகிறோம்.அவர் ‘அகஸ்டஸ்’ என்ற மேலைநாட்டவர். தமிழ்நாட்டில் அகத்தவம் பயின்று இங்கு வாழ்ந்து அகத்தியர் என்ற பெயர் கொண்டார்.
.

அதேபோல் ‘டைகர்’ என்ற ஆராய்ச்சியாளர் தமிழ்நாட்டிற்கு வந்து தங்கி, யோகம் பயின்று நிறைவடைந்தார். அவரைத்தான் நாம் ‘புலிப்பாணி சித்தர்’ என்கிறோம்.
.

‘போகர்’ என்ற பெயர்கொண்ட சித்தர் சீனாவிலிருந்து வந்தவர்.
.
.

இவ்வாறு பல நாட்டிலிருந்தும் இன்கு வந்து தவம் பயின்று, முழுமை பெற்று, இங்கிருந்த வாழ்க்கை நெறியுடன் இணைந்து வாழ்ந்து, தமிழ்நாட்டுச் சித்தர்கள் வாயிலாக கற்றவற்றையெல்லாம் உலகிற்கு மேல்நாட்டு அறிஞர்கள் பரப்பியுள்ளார்கள்..
.
.
.
இவ்வாறு அவர்கள் கற்றுக்கொண்டு சென்றதெல்லாம் வாழ்க்கைப் பண்பாடாக மக்களிடம் பரவவில்லை. ஒருசில குறிப்பிட்ட பயிற்சி, பழக்க வழக்கம் இவைமட்டும் தான் ஆங்காங்கே உலகம் முழுவதும் இருக்கக் காண்கிறோம்.
.
.
உதாரணமாக நம்நாட்டுச்சித்தர்கள் ‘வர்மக்கலை’ என்று ஒரு கலை வைத்திருந்தார்கள்.அவர்கள் வெளியிடத்திலும், காடுகளிலும் அமர்ந்து தவம் செய்யும்பொழுது முரடர்கள் துன்பம் தர ஆரம்பித்தார்கள். ஆயுதம் இல்லாது தங்களை காத்துக்கொள்வதற்கு ஒரு முறையான பயிற்சி அவசியம் என்பதை அறிந்து, இவர்கள் கண்டுபிடித்ததுதான் வர்மக்கலை.
.

.
நரம்பை சில இடங்களில் தட்டினால் போதும் ஆள் விழுந்துவிடுவான். எந்த இடத்தி எந்த நரம்பிற்கு ஆற்றல் அதிகம் என்பதை தெரிந்து எதிரிகளிடமிருந்து தங்களை காத்துக்கொள்ளும் கலைக்கு ‘வர்மக்கலை’ என்று பெயர்.
.
சித்தர்கள் கற்ற இந்த வித்தையை சீனா , ஜப்பான் போன்ற வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள் கற்றுக்கொண்டு சென்றார்கள்.
.
.
அதே கலை இப்போது கராத்தே, ஜூடோ, தாய்ச்சி என்ற பெயரில் அவர்களிடமிருந்து நம்நாட்டிற்கு வந்துள்ளது.வர்மக்கலையில் உடலை வலுடையதாக வைத்துக்கொள்ள உடற்பயிற்சியும் சேர்ந்திருப்பதால் எல்லா நாடுகளிலும் பல பெயர்களில் பரவியுள்ளது.
.
.

சித்தர்களின் ’பிராணாயாமப் பயிற்சி’ பல நாடுகளில் பலவித மூச்சுப்பயிற்சியாகப் பரவி இருப்பதை நாம் காண்கிறோம்.. இந்தப்பயிற்சியை செய்பவர்களையெல்லாம் சித்தர்கள் என்று சொல்லிவிடமுடியாது.
.
.
.
உயிரை உணர்ந்து, அந்த கருத்தை அடிப்படையாகக் கொண்டு, வாழ்வை நடத்தக்கூடிய ஒரு பண்பாடு உடையவர்களைத்தான் சித்தர்கள் என்கிறோம். அத்தகைய பண்பாடு உடையவர்கள் எந்த நாட்டில் இருந்தாலும் அவர்கள் சித்தர்களே..!!

.

வாழ்க வளமுடன்
.
-வேதாத்திரி மகரிஷி

சனி, 1 நவம்பர், 2014

தற்கால விஞ்ஞானிகளால் இன்று கண்டுபிடிக்கப்படும் இயற்கை ரகசியங்களை, அன்று கருவி, ஆராய்ச்சிக்கூடம் இன்றி சித்தர்கள் எவ்வாறு உணர்ந்தார்கள் ??

இன்றுவரை கண்ட விஞ்ஞானம் அனைத்தும் மனித உடலுக்குள் நடைபெறும் அதிசயங்களுக்கு அப்பாற்பட்டதல்ல. சுத்தவெளியிலிருந்து பரமாணுக்கள் தோன்றின....

பரமாணுக்கள் சேர்க்கையால் பஞ்சபூதங்கள் ஏற்பட்டன. நிலம், நீர், நெருப்பு, காற்று என்ற நான்கு பூதங்களுடன் விண் என்ற ஐந்தாவது பூதமான உயிர்ச்சக்தி சுழலும்பொழுது, அதன் தடை உணர்தலாக உணர்ச்சிநிலை பெற்று, ஓரறிவு முதற்கொண்டு தொடங்கிய பரிணாமத்தின் உச்சமாக வந்த ஆறறிவு பெற்றவன் தான் மனிதன்.
.
.
இந்த மனித உடலிலே, உயிர், ஜீவகாந்தம், மனம் என்ற நான்கும் சேர்ந்து இயங்கும் போது ஏற்படக்கூடிய ரசாயன இயக்கம், மின்சார இயக்கம், காந்த இயக்கம் இவற்றை கடந்து இப்பிரபஞ்சம் முழுவதும் நடைபெறக்கூடிய இயக்கங்கள் வேறெதுவும் இல்லை.
.
.
இந்த உடலில் நடைபெறாத இரகசியத்தை இதுவரை எந்த விஞ்ஞானமும் கண்டுபிடிக்கவில்லை. கண்டுபிடிக்கவும் இயலாது.
.
.
.
அத்தகைய முறையில் பரிணாமத்தின் உச்சமாக உள்ள மனித உடலின் அற்புதமான அமைப்பையும், இயக்கத்தையும் அகத்தவச்சாதனையால் அறிந்தவர்கள் சித்தர்கள். “இந்த உடலிலுள்ள அணுக்கள், பேரணுக்கள், செல்கள் இவைகள் எவ்வாறு அடுக்கப்பட்டும், சேர்த்துப்பிடித்துக்கொள்ளப்பட்டும் இருக்கின்றன” என்பதையெல்லாம் அறிந்தவர்கள் சித்தர்கள்.
.
.

அப்படி செல்களாலான கட்டிடமாகிய உடலின் கட்டுமானத்திற்கும், கட்டுக்கோப்புக்கும், உறுதிக்கும், நீடிப்புக்கும் வேண்டிய காந்த சக்தியை எவ்வாறு பெற்று, எவ்வாறு அதை மின் சக்தியாக மாற்றி, ஆங்காங்கே பல ரசாயனங்களை தோற்றுவித்து இயக்கநியதியோடு உடல் என்ற அற்புதமான நிலையம் இயங்குகின்றது என்பதையெல்லாம் அறிந்தவர்கள் சித்தர்கள்.
.
.
“மனித உடலின் இயக்கங்களையெல்லாம் உணர்ந்துகொள்வதோடு, பிற உயிரில் ஏற்படும் இன்ப துன்பங்களையும், பிற பொருட்களின் இயக்கங்களையும் கூட அறிவு எவ்வாறு உள்நுழைந்து அறிந்து வருகிறது” என்றும் சிந்தித்துப்பார்த்தார்கள்.
.
.
ஒவ்வொரு பொருளிலிருந்தும் வருகின்ற அலைகள் மோதுதல், பிரதிபலித்தல்,சிதறுதல், ஊடுறுவுதல், இரண்டினிடையே முன் பின்னாக ஓடுதல் என்ற ஐந்து தன்மைகளைப் பெறுகின்றன. என்பதை சித்தர்கள் உணர்ந்தார்கள்.
.
.
இந்த அலைகள் பஞ்ச பூதங்களாலான பருப்பொருட்களில் மோதும்போது அழுத்தம், ஒலி. ஒளி, சுவை, மணம் அத்துடன் மனித உடலிலே புலன் கடந்த நிலையில் மனமாகவும் மார்ச்சி பெறுகின்றன என்பதையும் தங்கள் தவ வலிமையால் உணர்ந்துகொண்டார்கள்.
..

.
அந்த விரிந்த மனநிலையிலே பிரபஞ்ச உற்பத்தி இரகசியங்கள் எல்லாம் அவர்கள் உள்ளத்திலே நிறைந்திருக்கும்.
.
.
எல்லா வினாக்களுக்குமான விடைகளும் அவர்களுக்குள்ளாகவே இருக்கின்றன. எனவே அங்கிருந்தே தங்கள் உள் நோக்கால் எடுத்துக்கொண்டார்கள். சித்தர்களுக்கு தனியாக ஆராய்ச்சி சாலை எதுவும் தேவையில்லை.
.
.
ஆராய்ச்சி சாலை என்று வைத்தால் ஏதாவது ஒரு பொருளைப் பற்றித்தான் ஆராய இடமிருக்கிறது. இந்த உடலையே எடுத்துக்கொண்டு ஆராய்ந்தால் பிரபஞ்சத்தில் உள்ள எல்லா ரகசியங்களையும் பற்றி ஆராய முடியும்.
.
.
.

அந்த முறையில் உடல் விஞ்ஞானத்தை அறிந்தவர்கள் சித்தர்கள். நீங்களும் முயன்றால் ஒரு சித்தராக சிறப்புறலாம். அத்தகைய ஆற்றல் மனிதனாகப் பிறந்த எல்லோரிடத்திலுமே அடங்கியுள்ளது.
.
.
.வாழ்க வளமுடன்
-வேதாத்திரி மகரிஷி