Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

புதன், 29 அக்டோபர், 2014

சுவாமி ஜி ! ஒரு தம்பதிக்கு மூன்று குழந்தைகள் இருக்கின்றன. மூன்றும் மூன்று விதமாக இருக்க காரணம் என்ன..?


 .
.
இதில் ஒரு விஞ்ஞான உண்மை புதைந்து இருக்கிறது. முதல் க...ுழந்தை உருவாகும் போது தாய், தந்தையரின் மனநிலை, வயது, உடல்நிலை, செல்வம் ,அறிவு இவைகளை பொறுத்தும், இப்பிரபஞ்சத்தில் அக்கால கட்டத்தில் கோள்களின் சஞ்சார நிலை, பஞ்சபூதங்களில் ஏற்படும் இரசாயன மாற்றம் இவற்றைப்பொறுத்தும் அக்குழந்தையின் உருவ அமைப்பு, குணம் முதலியன ஏற்படுகின்றன.
.
.
பின் மூன்று அல்லது நான்கு வருடம் கழித்தபின்பு தாய் தந்தையரின் மனம், உடல், கோள்கள், பஞ்சபூதங்கள் இவற்றின் நிலையில் எத்தனையோ மாறுதல்கள் ஏற்பட்டு இருக்கும்.இந்நிலைக்கு ஏற்றவாறு அடுத்த குழந்தையின் உருவ அமைப்பு, குணம் முதலியன வேறுபடும்.
.
.
எனவே, இந்நிலையில் முதல் குழந்தைக்கும், அடுத்த குழந்தைக்கும் மாறுதல்கள் இருக்கத்தான் செய்யும்.
.
.
ஒரு மனிதன் வேறொரு மனிதனிடமிருந்து கருவமைப்பு முதலிய 16 காரணங்களினால் வேறுபடுகின்றன. அவை:-
.
1. கருவமைப்பு, 2. உணவு வகை, 3. காலம், 4.தேசம், 5.கல்வி, 6.தொழில், 7. அரசாங்கம், 8.கலை, 9.முயற்சி, 10.பருவம், 11.நட்பு, 12.சந்தர்ப்பம், 13.ஆராய்ச்சி, 14.பழக்கம், 15.வழக்கம், 16.ஒழுக்கம்.
.
.
இவற்றிற்கேற்ப..
.
.
1.உருவ அமைப்பு, 2.குணம், 3.அறிவின் உயர்வு, 4.கீர்த்தி, 5.உடல்வலிவு, 6.உடல்நலம், 7.செல்வம்
.
மேற்கண்ட 16 காரணிகளால்.. ஒவ்வொருவருக்கும் தனித்தனியே அவ்வப்போது உருவமைப்பு முதலான ஏழு வேறுபாடுகள் வருகின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக